இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடை யில் உள்ள வேறுபாடுகள்.


 இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடை யில் உள்ள வேறுபாடுகள்.


இன்று சில முஸ்லிம்கள் செய்யும் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்ட தவறான செயல்களான, அநியாயம், பொய், சதிமோசம். இது போன்ற இஸ்லாம் மார்க்கமும், உண்மையான முஸ்லிம்களும் வெறுக்கும். எண்ணற்ற செயல்கள் உலகில் மழிந்து காணப் படுவதால், நீ இஸ்லாத்தில் நுழைவதனையீட்டு, சற்று யோசிக்கலாம் அல்லது பின்வாங்கலாம். எனினும் நீ அவ்வாறு செய்வதற்கு முன்னால், இஸ்லாத்தையும் இஸ்லாமிய பெயரில் வாழும் முஸ்லிம்களையும், பிரித்து நோக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாத்துக்கும் இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களுக்கும் இடை யில் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. இஸ்லாம் என்பது பரிசுத்தமான அல்லாஹ்விடமிருந்து வந்த மார்க்கமாகும். அது பூரணமானதும் கன்னியமிக்கது மாகும், ஆனால் முஸ்லிம்கள் என்ற பெயரில் அதனைப் பின்பற்றும் மனிதர்கள் தான். இஸ்லாத்தில் கூறப்பட்

டுள்ள நல்லவைகளையும் இஸ்லாத்துக்கு அப்பாற் பட்ட தவறுகளையும் செய்கின்றார்கள்.


எனவே அவர்கள் எப்போது இஸ்லாம் கூறும் நேர்மையான வழி முறைகளை ஏற்று, அவைகளை தமது வாழ்வில் அமுல்படுத்துகின்றார்களோ, அப்போது தான் அவர்கள் உண்மையாக இஸ்லாத்தை பின்பற்றும் உண்மையான முஸ்லிம்களாவார்கள். மாற்றமாக அவர் கள் அதனை வீட்டும் தூரமாகி, தான் நினைத்தவாறு தனது மனோ இச்சைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தால், அவர்களின் செயற்பாடுகளுக் கேட்பவே அவர்களுக்கு இஸ்லாமியத் தரம் தீர்மானிக்கப்படும்.


எனவே நீ இந்த மார்க்கத்தை அதனது அடிப்படை யுடனும், தெழிவான முறையிலும், அல்லாஹ் எந்த வடிவில் இறக்கி வைத்தானோ அதே தூய வடிவி லும் அறிய விரும்பினால், அல்லாஹ் இறக்கி வைத்த புனித வேதமான அல்குர்ஆன் மூலமும், அதனது விளக்கப் புத்தகங்களான (தப்ஸீர்கள்) மூலமும், எமக்கு நேர் வழிகாட்ட வந்த இருதித்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறைகள் மூலமும், அதே போன்று இஸ் லாத்தை உரிய முறையில் பின்பற்றிய உண்மையான முஸ்லிம்களின் வாழ்க்கை நெறி மூலமும், மேலும் தூய்மையான உள்ளம் கொண்ட முஸ்லிம்கள் தொகுத் தளித்த இஸ்லாமிய நூல்களைப் படித்து தெளிவு பெறுவது கொண்டும் உனக்கு தெறிந்து கொள்ளலாம்.


அவ்வாறு நீ மேற்கூறப்பட்டவைகளில் தேடி, உண் மையான மார்க்கமான இஸ்லாத்தை அறிந்து கொண்டால், நிச்சயமாக! நீ உண்மை மார்க்கமான இந்த இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவனாக அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவாய்   என எதிர்பார்க்கின்றோம்.


கருத்துகள்