எனது முஃமினான சகோதரியே! இறுதியாக உன் முன்னால் உயர்வான பதினோறு உபதேசங்களைக் கூறுகிறேன். அவற் றை நீ பற்றிப் பிடித்துக்கொள். அல்லாஹ் நாடினால் நிச்சய மாக நீ பாக்கிவதியாக வாழ்ந்து, புகழத்தக்க நிலையில் மர ணிப்பாய் . இவற்றை ஏற்று நடப்பதற்கு அல்லாஹ்விடம் உதவி தேடிக் கொள்.
1-சங்கைமிகு இறை வேதத்திலும் அவனது திருத்தூதரின் ந டைமுறையிலும் வணக்கங்களாக ஆக்கப்பட்டவற்றில் அல்லஹ் வை மட்டுமே நீ வணங்கி வரவேண்டும்.
2- நம்பிக்ைைகயிலும் வணக்கத்திலும் அல்லாஹ்விற்கு இணை வைப்பதை விட்டும் நீ தவிர்ந்து கொள்ளவேண்டும். ஏனெனில் இணைவைப்பது நற்செயல்களை அழித்து, நஷ்டத்தை ஏற்படு த்திவிடும்.
8- பித்அத்துகளைத் தவிர்ந்து கொள். அது வணக்க வழிபாடு களிலிருந்தாலும் அல்லது கொள்கைகளில் இருந்தாலும் சரி. ஏனெனில் பித்அத்கள் அனைத்தும் வழிகேடே. வழிகேடு உ டையவன் நரகத்திற்குச் செல்வான். பித்அத்தென்றால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத புதிதாக உண்டாக்கப்பட் டவை.
4-தொழுகையை முழுமையான பேணுதலுடன் கடைபிடித்து வா. நிச்சயமாக எவர்கள் தொழுகையைப் முறையாகப் பேணி வருகிறார்களோ அவர்கள் மற்றவற்றையும் மிகப் பேணுதலாக செய்து வருவார்கள். எவர்கள் தொழுகையை பாழாக்கிவிடுகி றார்களோ அவர்கள் மற்றதையும் மிகப் பாழ்படுத்துபவர்களா கிவிடுவார்கள்.
5-உனக்குக் கணவனிருந்தால் அவனுக்குக் கட்டுப்பட்டு நட ந்துகொள். அவன் விரும்புகின்ற எதையும் நீ மறுத்துவிடாதே. அவன் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்யாமல் ஏவுகின்ற அவனது ஏவல் விலக்கல்களுக்கு நீ மாறுசெய் யாதே.
6- உனது கணவன் ஊரிலிருக்கும்போதும் இல்லாதபோதும் உனது கர்ப்பையும் அவனது பொருளையும் பாதுகாத்துக் கொள்.
7- உனது அண்டை வீட்டுப் பெண்களிடம் சொல்லிலும் செய லிலும் அழகிய முறையில் நடந்து கொள்.
8- அவசியத் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியேறாமல் வீட்டி லேயே இருப்பதைப் பற்றிப்பிடித்துக் கொள். நீ வெளியே செல் கிறபோது உன்னை முழுமையாக மூடி மறைத்துக் கொண்டு வெட்கத்துடன் சென்று வா.
9- உனது பெற்றோருக்கு உபகாரம் செய்வதன் மூலம் அவர்க ளிடம் நன்முறையில் நடந்துகொள். அவர்களுக்கு சொல்லால், செயலால் துன்பம் கொடுக்காதே! நன்மையான காரியங்களில் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள். நன்மையல்லாதவ ற்றை அவர்கள் ஏவினால் கட்டுப்படாதே. ஏனெனில் படைத்த வனுக்கு மாறுசெய்வதில் எந்தப் படைப்புக்கும் கட்டுப்படக் கூடாது.
10- உனக்குக் குழந்தைகளிருப்பின் பரிபூரணமான முறையில் பரிபாலித்து வளர்த்து வா. அதாவது உண்மை, ஆரோக்கியம், தூய்மையான சொல், செயல் இவைகளில் பழக்கி வரவேண்டு ம். அத்துடன் அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் அழகிய குணங்களையும் போதிக்கவேண்டும். ஏழு வயதை அடைந்தா ல் தொழும் படி ஏவவேண்டும்.
11- திக்ரு செய்வதையும் தர்மம் செய்வதையும் அதிகப்படுத்தி க்கொள். தர்மம் செய்வது உனக்கும் உனது கணவன், குழ ந்தைகளுக்கும் போக மீதமானதிலிருந்து செய்ய வேண்டும். அது குறைவாயிருப்பினும் சரி. ஏனெனில் நிச்சயமாக தர்மம் தீய விபத்துக்களை விட்டும் பாதுகாக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!