பிதற்றல் வேண்டாம்

 


பிதற்றல் வேண்டாம்


கடமையைச் செய்த கண்ணாடி, “நானே இன்னாரைத் திருத்தினேன். நான் இல்லை என்றால் அவரின் கதி என்ன ஆயிருக்கும் தெரியுமா" என பிதற்றுவதில்லை. நீங்கள் உங்களின் சகோதருக்குக் கண்ணாடி; உங்களின் சகோதரனுக்காக நீங்கள் செய்யவேண்டிய கடமையைச் செய்யுங்கள். நான்தான் காரணம் என பிதற்றாதீர்கள். இறைவன் நாடாமல் எதுவும் நடப்பதில்லை என்பதை முழுமையாக நம்புங்கள். ஒருவர் திருந்துவதற்கு நீங்கள் காரணமாய் இருந்தால் அதற்கான கூலியை இறைவன் உங்களுக்கு உறுதியாய் அளிக்கத்தான் போகிறான். பிதற்றித் திரிவதால் இறைவன் அளிக்கும் கூலியை நீங்கள் இழந்துவிடக் கூடாது. நீங்கள் செய்த எதையுமே சொல்லிக்காட்டாதீர்கள். இதனால் பிறருக்கு மன




வேதனை ஏற்படும். உங்கள் மீது அவர் வைத்துள்ள மரியாதையும் அன்பும் குறைந்துவிடும்.


இறைவழியில் தங்களின் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், (எவ்வ கையிலும்) நோவினைச் செய்யாமலும் இருப்போருக் குரிய நற்கூலி அவர்களின் இரட்சகனிடம் இருக்கிறது. அவர்களுக்கு எத்தகைய அச்சமுமில்லை; துக்கப்படவும் மாட்டார்கள்.


திருக்குர்ஆன் 2:262



கண்ணியம் காத்துக் கொள்ளுங்கள்


கண்ணாடி உங்களின் கண்ணியத்தைக் குறைப்பதில்லை. உங்களைச் சீரமைத்து கண்ணியத்தை மென்மேலும் அதிகப்படுத்துகிறது. நீங்கள் உங்கள் சகோதரரின் கண்ணியத்தை காயப்படுத்தாதீர்கள். கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவது இறைநம்பிக்கையாளனின் பண்பன்று. உங்களின் மூலம் உங்கள் சகோதரரின் கண்ணியம் மென்மேலும் அதிகரிக்க வேண்டும்.


'துல்ஹஜ்' மாதம் பத்தாம் நாள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உரை நிகழ்த்தி னார்கள். அப்போது,


“மக்களே! இது எந்நாள்?" எனக் கேட்டார்கள்.


"புனிதமிக்க தினம்" என மக்கள் கூறினார்கள்.


பிறகு, “இது எந்நகரம்?" என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்.


"புனிதமிக்க நகரம்" என மக்கள் கூறினர்.


பிறகு, “இது எம்மாதம்?" எனக் கேட்டார்கள்.


"புனிதமிக்க மாதம்!" என மக்கள் கூறினர்.


பிறகு, “நிச்சயமாய் இம்மாதத்தின் இந்நாள் எவ்வாறு உங்களுக்குப் புனிதம் பெற்றுள்ளதோ அவ்வாறே உங்கள் ஒவ்வொருவரின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவை!" என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல முறை கூறினார்கள்.


பிறகு தலையை உயர்த்தி, "இறைவா! நான் (உன் மார்க் கத்தை மக்களிடம்) சேர்த்துவிட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை மக்களிடம்) சேர்த்து விட்டேனா?” என்றும் கூறினார்கள்.


“என் உயிரைத் தன் கையில் கொண்டிருப்பவன் மீது ஆணையாக! இது அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்” இவ்வாறு அறிவிப் பாளர் குறிப்பிடுகிறார்.


பிறகு “இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! என் மரணத்திற்குப் பின் நீங்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு இறைமறுப்பாளர்களாய் ஆகி விட வேண்டாம்!" என்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்தார்கள்.


அறிவித்தவர்: இப்னு அப்பாஸ்(ரலி)


நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 1739, 1740



புறத்தைப் புறந்தள்ளுங்கள்


உங்களின் குறைகளை கண்ணாடி உங்களிடம் மட்டுமே சொல்கிறது. நேரடியாகவும், தன்மையாகவும், மென்மை யாகவும், தயக்கமின்றியும், நன்மையை நாடியதாகவும் உண்மையைச் சொல்கிறது. உங்களிடம் காணப்படும் குறையைப் பிறரிடம் சொல்லும் பழக்கம் கண்ணாடிக்கு இல்லை. நீங்கள் ஓர் இறைநம்பிக்கையாளர்; உங்களின் சகோதரருக்கு நீங்கள் கண்ணாடி. இதை எந்தச் சூழலிலும் மறந்துவிடாதீர்கள். உங்களின் சகோதரரிடம் காணப்படும் குறைகளை அவரிடம் நேரடியாகவும், தயக்கமின்றியும் சொல்லுங்கள். உண்மையைச் சொல் லுங்கள். நல்ல நோக்கத்துடன் சொல்லுங்கள்.


உங்களின் சகோதரர் குறித்த நல்ல விஷயங்களை நீங்கள் விரும்பினால் பிறரிடம் சொல்லுங்கள். அவரிடம் காணப்படும் குறையை பிறரிடம் சொல்லாதீர்கள். குறைசொல்லி புறம்பேசும் நபராய் ஒருபோதும் இருக் காதீர்கள். பிறரின் அன்பைப் பெறக்கூடியவராய் இருங்கள். வெறுப்புக்கு ஆளாகாதீர்கள். தனி நபர் விமர்சனத்தைத் தவிருங்கள்.


பிறர் புறம்பேசுவதைச் செவியுறாதீர்கள். புறம்பேசு வோரைக் கண்டால் கண்டியுங்கள். அது நல்ல பண்பல்ல என அறிவுறுத்துங்கள். புறம்பேசுவதை நீங்கள் ஆர்வ மாகச் செவியுறுவதால் புறம்பேசுவோருக்கு நீங்கள் துணைநிற்கிறீர்கள். தீமையில் உங்கள் ஆதரவைப் பெறு பவர் திருந்துவதற்கான வாய்ப்பை இழந்துவிடுகிறார்.


பிறர் குறித்த தவறான செய்திகளை நீங்கள் பரப்பு வதாலோ பிறர் பரப்புவதை ஆதரிப்பதாலோ உங்களுக்கு என்ன பலன் என்பதை ஒரு நிமிடம் சிந்தியுங்கள். உண்மையில் இதனால் உங்களின் நேரம் வீணாகும். உங்களுக்கு மன அழுத்தம்தான் ஏற்படும். இதனால் உங்களுக்கு உலகத்தில் சில அற்பமான ஆதாயங்கள் கிடைக்கலாம். காலப்போக்கில் உங்களின் சாயம் வெளுத்துவிடும். பிறர் உங்களின் மீது வைத்துள்ள நம்பகத் தன்மை தகர்ந்துவிடும். உங்களின் கண்ணியம் காற்றில் கரைந்த சாம்பலாகிவிடும். நீங்கள் இறை நம்பிக்கையாளர்; உங்களுக்கு மறுமை வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கிறது. அன்று உங்களின் ஒவ்வோர் அசைவுக்கும் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். இழிவைத் தொட்டு அழைக்காதீர்கள்.


கண்ணாடியின் நோக்கம் சீரமைப்பதாகவே இருக்க வேண்டும்; சீர்கெடுப்பதாய் இருக்கக்கூடாது. உங்களின் சகோதரரைச் சீரமைப்பதையே குறிக்கோளாகக் கொள்ளுங்கள். ஒருவரிடம் இருப்பதைத்தானே சொல் கிறோம்; இல்லாததையா சொல்லிவிட்டோம் என எண்ணாதீர்கள்.


“புறம் பேசுதல் என்றால் என்ன வென்று அறிவீர்களா?” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டாார்கள்.


"அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவர்” என நபித்தோழர்கள் பதிலளித்தார்கள்.


“உன் சகோதரன் குறித்து அவன் பிறரிடம் சொல்ல விரும்பாத ஒன்றை நீ பிறரிடம் சொல்வது” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


“நான் கூறுகிற குறை என் சகோதரனிடம் உண்மை யிலேயே காணப்பட்டாலுமா?" என ஒருவர் கேட்டார். "நீ அவனிடம் காணும் குறையைச் சொன்னால், புறங்கூறி யவனாவாய். அவனிடம் காணப்படாததைச் சொன்னால் அவன் மீது அவதூறு கற்பித்தவனாவாய்" என இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதிலளித்


தார்கள். அறிவித்தவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்


புறம்பேசுவதால் இம்மையின் இழிவைப் பாருங்கள்.


உங்களில் சிலர் சிலர் குறித்து புறம் பேசாதீர்கள். உங்களில் யாரேனும் இறந்த தம் சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை வெறுப்பீர்கள்! இன்னும், ஏக இறைவனை அஞ்சுங்கள்! நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை ஏக இறைவன் ஏற்பவன்; நிகரற்ற அன்பாளன்.


திருக்குர்ஆன் 49:12


புறம்பேசும் பழக்கம் உங்களை மிகவும் கோரப்படுத்தி யுள்ளது. புறம் பேசுதல் இறந்த சகோதரரின் மாமிசத் தைப் புசிப்பதற்குச் சமம் என இறைவன் எச்சரித் துள்ளான். நீங்களோ ஒருபடி மேலே சென்று இறந்து பல ஆண்டுகள் ஆன சகோதரர்களைக் கூட புறம்பேசி, ஏசி,அவதூறு கூறுகிறீர்கள். இறந்துபோன இஸ்லாமிய அறிஞர்களைக்கூட ஏளனம் செய்கிறீர்கள்.


"இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவற்றின்பால் சென்றுவிட்டார்கள்” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


அறிவித்தவர்: ஆயிஷா(ரலி)


நூல்: ஸஹீஹ் அல் புகாரீ ஹதீஸ் எண்: 1393


புறம்பேசுவதால் மறுமையில் எற்படும் இழிநிலை குறித்து இறைவன் கடுமையாய் எச்சரிக்கிறான்.


குறைகூறிப் புறம்பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் 'வய்ல்' என்னும் (கேடுகெட்ட) நரகம்தான். அவன், பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டும் இருக்கிறான்.


நிச்சயமாக தன் பொருள் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என அவன் எண்ணுகிறான்.  அவ்வாறல்ல; நிச்சயமாக அவன் 'ஹுதமாவில்' எறியப்படுவான்.


ஹுதமா என்னவென்பதை உமக்கு அறிவித்தது எது?


அது, ஏக இறைவனின் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நெருப்பாகும். அது அவர்களைச் சூழ்ந்தே மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (கட்டப்பட்டு) இருப்பார்கள்.


அது இதயங்களில் பாயும்.


திருக்குர்ஆன் 104:1-9


புறம்பேசுபவர்கள் மண்ணறையிலேயே தண்டிக்கப் படுவார்கள் என்பதையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்தார்கள்.


இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், இரண்டு மண்ணறைகளைக் கடந்து சென்றபோது, "(மண்ணறைகளிலுள்ள) இவ்விருவரும் வேதனை செய் யப்படுகிறார்கள். ஆனால் மிகப்பெரும் செயலுக்காக இருவரும் வேதனை செய்யப்படவில்லை. இதோ! இவர் (தம் வாழ்நாளில்) சிறுநீர் கழிக்கும்போது (தம் உடலை) மறைக்கமாட்டார். இதோ! இவர் புறம்பேசித் திரிந்தார்" என கூறினார்கள்...


அறிவித்தவர்: இப்னு அப்பாஸ்(ரலி)


நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 6052

கருத்துகள்