மென்மையும் அமைதியும்
அல்லாஹுத் தஆலா கூறுகிறான்: (நபியே) உமது இறை வனின் வழியில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத் தகை கொண்டும் நீர்அழைப்பீராக! எது மிக அழகானதோ அதைக் கொண்டு வாதம் புரிவீராக (16:125). மேலும் கூறுகி றான் அல்லாஹ்வின் அருளின் காரணமாக (நபியே) நீர் அவர் களிடம் மென்மையாக நடந்து கொண்டீர் நீர் கடுகடுப்பான வராகவும்,கடின உள்ளமுடையவராகவும் இருந்திருந்தால் அவர்கள் உமது சமூகத்திலிருந்து ஓடிப் போயிருப்பார்கள் (3:159).
ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன் காரியங்கள் அனைத்திலும் அவன் மென்மையையே விரும்புகிறான்.(புகாரி.
முஸ்லிம்). அஷஜ்ஜு அப்துல் கைஸிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறினாார்கள்: நநிச்சயமாக உம்மிடம் பொறுமை, அமைதி என்ற இரு பண்புகள் உள்ளன. அவ்விரண்டையும் அல்லாஹ் விரும்புகிறான். மேலும் நபி (ஸல்) கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக மென்மையாக நடந்து கொள்ளக்கூடிய எல்லாக் காரியங்களும் அலங்காரமாக அமையும். அது இல்லாத எந்தக் காரியமும் குறைவானதாகவே இருக்கும் (முஸ்லிம்). நான் ரசூல் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன் என ஜரீருப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் யார் மென்மையான தன்மையைத் தடுத்துக்கொண்டானோ அவன் நன்மை அனைத் தும் தடுக்கப்பட்டவனாகிவிட்டான் (முஸ்லிம்).
பயன்கள்:
1.அல்லாஹ் மென்மையை விரும்புகிறாான் நிச்சயமாக மென்மை யாக நடந்து கொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
2.நிச்சயமாக மக்களிடத்தில் கொடுக்கல், வாங்கல் செய்வதில் மென்மையாக நடந்து கொள்வது சுவர்க்க வாசிகளின் பண் பாடாகும்.
அருள்✨️✨️✨️
அல்லாஹ் நபி (ஸல்) அவர்கள் பற்றிக் கூறுகிறான் முஃமின்களிடம் மிகக் கருணையுடையவராகவும் கிருபை உடையவராகவும் இருக்கிறார் (9:128). மேலும் முஃமின்கள் பற்றிக் கூறுகிறான்: தங்களுக்கிடையே கிருபையுள்ளவர்களாக
இருப்பார்கள் (48:29).
ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ்
(ரலி) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களுக்குக் கிருபை காட்டா
தவனுக்கு அல்லாஹ் கிருபை செய்யமாட்டான். (புகாரி. முஸ்லிம்).
உண்மையாளரும், உண்மைப்படுத்தப்பட்டவருமான அபுல்கா சிம் நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேள்விபட்டுள்ளேன் என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: யார் துாபாக்கி யமுடையவனோ அவனிடமிருந்துதாள் அருள் அகற்றப்படும். (அஹ்மது, திர்மதி).
பயன்கள்:
1- கிருபை காட்டுதல் முஃமின்களின் தன்மையில் உள்ளது.
2-மனிதர்கள், மனிதர்களுக்குக் கிருபை காட்டுவதென்பது அல்லாஹ்வின் கிருபையில் நுழைவிக்கும் காரணங்களிலுள்ள தாகும்.
3-ஒரு மனிதனின் உள்ளத்திலிருந்து கிருபை அகற்றப்பட்டு விடுவது அவன் துர்பாக்கிக்கியமுடையவன் எனபதற்கு அடையாளமாகும்.
அநியாயம் செய்யாதீர்.🎯
அல்லாஹ் கூறுகிறான்: அநியாயக்காரர்களுக்கு (மறுமை நாளில்) நெருங்கிய இரக்கம் காட்டும் நண்பனோ, ஏற்றுக் கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்க மாட்டான் (40:18). அல்லாஹ்வின் மூலம் நபி (ஸல்) அறிவிப்பதாக அபூதர் (ரலி ) அவர் கள் கூறினார்கள்: எனது அடியார்களே நிச்சயமாக நான் என் மீது அநியாயத்தை ஹராமாக்கிவிட்டேன்.அதை உங்களுக்கிடையிலும் ஹராமாக்கிவிட்டேன். எனவே நீங்கள் (ஒருவருக்கொருவர்) அநியாயம் செய்யாதீர்கள் (முஸ்லிம்). நிச்சயமாக ரசூல்(ஸல்) அவர்கள் கூறியதா. ஜாபிர் (ரலி)அவர்கள் கூறினார்கள்: அநியாயம் செய்வதைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அநியாயம் மறுமை நாளின் இருள்களாகும். மஆ துப்னு ஜபல் (ரலி)அவர்களை நபி (ஸல்) அவர்கள் யமனுக்கு அனுப்பியபோது ரசூல் (ஸல்)அவர்கள் கூறியதாக மஆத்(ரலி) கூறினார்கள் அநீதம் இழைக்கப்பட்டவனின் துஆவை நீ
பயந்துகொள்.
நிச்சயமாக அந்தத் துஆவிற்கும், அல்லாஹ் விற்குமிடையே எவ்வித திரையுமில்லை(புகாரி,முஸலிம்). நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: யாரேனும் ஒருவன் தனது சகோதரனை மானபங் கப்படுத்தியிருந்தால் அல்லது அவனது பொருள்களில் எதையே னும் ஒன்றை அநீதமாக எடுத்திருந்தால் தீனாரும் திர்ஹமுமில்லாமல் போவதற்கு (அதாவது மறுமை நாள் வருவ
தற்கு ) முன்னால் அதை அவன் கொடுத்துக் கொள்ளட்டும்.
அவனிடம் நல்ல செயலிருந்தால் அவன் செய்த அநியாயமளவிற்கு எடுக்கப்படும். அவனிடம் நன்மைகள் இல்லை
யெனில் அநீதமிழைக்கப்பட்டவனின் தீமைகள் இவன் மீது
சுமத்தப்படும் (புகாரி).
பயன்கள்
1-அநீதமிழைப்பது ஹராமாக்கப்பட்டுள்ளது.
2-அநியாயம் செய்தவனுக்கு இம்மையிலும், மறுமையிலும் கடும்
தண்டனை.
3-அநியாயம் செய்தவனுக்கு பாதகமாக அநியாயம் இழைக்கப்பட்டவன் செய்யும் துஆ ஏற்றுக்கொள்ளப்படும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!