🌐 மொழியைத் தேர்ந்தெடுக்கவும் / Select Language
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்
Useful Islamic Sections & Site Guide

Posts

Loading...

நபி(ஸல்)அவர்களுடன் நடந்து கொள்ளும் முறை

 


நபி(ஸல்)அவர்களுடன் நடந்து கொள்ளும் முறை


நபி (ஸல்) அவர்களுடன் ஒரு முழுமையான ஒழுங்குடன் நடந்து கொள்வது தன் கடமை என்பதை ஒரு முஸ்லிம் மன தார உணர்ந்து கொள்ளவேண்டும். இதற்குக் காரணம் இது தான் :


இவ்வொழுங்கை அல்லாஹ்தான் முஃமினான ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாக்கி இருக்கின்றான் அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களே! அல்லாஹ் மற்றும் அவன் தூதரின் முன்னிலையில் முந்தாதீர்கள். (49:1)




"இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்க ளை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும் ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசிக்கொள்வதைப் போல் நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். இதனால் நீங்கள் செய்த செயல்கள் வீணாகிவிடும்;நீங்கள் அதனை அறியாத நிலையில்! (49:2)


] அவர்களுக்குக் கட்டுப்படுவதையும் அவர்களை நேசிப்ப தையும் அல்லாஹ்வே முஃமின்களுக்கு கடமையாக்கியுள் ளான்.


நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள். அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.(47:32)


இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுக்கிறாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதனை விட்டு விலகி இருங்கள் . (59:7)


(நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ் வை நேசிப்பவர்களாய் இருந்தால் என்னைப் பின்பற்றுங் கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குப் வனும் பெருங்கருணையுடையவனுமாவான்.(3:31)


தன்னுடைய தந்தை,தன்னுடைய பிள்ளை இன்னும் பிற மக்கள் யாவரையும் விட ஒருவருக்கு நான் மிகப் பிரிய மானவராக ஆகாத வரை உங்களில் யாரும் நம்பிக்கை கொண்டவராக ஆக மாட்டார் என நபி (ஸல் ) அவர்கள் கூறி யதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


நூல்: புகாரி, முஸ்லிம்)


என்றாலும் அவர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு எப்படி இருக்க வேண்டும்? அது எந்த வகையில் அமைய வேண்டும்?


அது, அவர்களுக்கு கீழ்ப்படிவதன் மூலமாக, மார்க்க மற் றும் உலகக் காரியங்கள் அனைத்திலும் அவர்களைப் பின் பற்றி நடப்பதன் மூலமாக அமைய வேண்டும்.


அவர்களை நேசிப்பது, கண்ணியப்படுத்துவது, மதிப்பது ஆகியவற்றை விட வேறு யாருடைய நேசத்திற்கும் கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் முன்னுரிமை வழங்கக் கூடாது.


அவர்கள் நேசிக்கின்றவர்ளை இவனும் நேசிக்க வேண்டும். அவர்கள் பகைக்கின்றவர்களை இவனும் பகைக்க வேண் டும். மேலும் அவர்கள் எதை விரும்புகின்றார்களோ அதை இவனும் விரும்பவேண்டும். அவர்கள் எதை வெறுக்கின்றார்களோ அதை இவனும் வெறுக்கவேண்டும்.


அவர்கள் கூறிய மார்க்க விஷயங்கள், உலகக் காரியங் கள் மற்றும் இம்மை, மறுமை பற்றிய மறைவான விஷயங் கள் ஆகியவற்றில் அவர்களை நம்பவேண்டும்.


அவர்களைப் பற்றிக் கூறப்படும்போது அவர்களைக் கண்ணியப்படுத்தும் முகமாக அவர்கள் மீது ஸலாத்தும் ஸலா மும் சொல்ல வேண்டும் .


அவர்களுடைய வழிமுறையை, மார்க்கத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். மேலும் அவர்களுடைய பிரச்சாரத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுடைய அறிவுரை களை எடுத்துநடக்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்