மீடியாவும் பெண்கள் துஷ்பிரயோகங்களும்,
எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி.
இந்த நூற்றாண்டிலும் கடந்த நூற்றாண்டின் இறுதியிலும் அழுத்தமாகப் பேசப்பட்ட விடயங்களில் சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகங்களும் அதனை தடுப் பதற்கான வழிகளும் என்ற விடயமுமாகும்.
அறிவியல் வளர்ந்து செல்லும் காலமெல்லாம் மனிதனிடத்தில் அசிங்கங் களும் அனாச்சாரங்களும் நாகரீகத்தின் பெயரால் வளர்ந்து வந்திருக்கிறது என்ப தற்கு இந்த சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகங்கள் என்ற விடயம் ஒரு எடுத்துக் காட்டாகும்.
மனித சமுதாயம் ஆண்பெண் என்ற இருசாதியினரைக் கொண்டதாக ஆக்கப் பட்டிருக்கின்றது. ஆணின்றி பெண்ணோ, பெண்ணின்றி ஆணோ தனிமையில் முழுமையான வாழ்வை மேற்கொள்ள முடியாது. இவ்வாறான வாழ்வும் பூரணத்து வம் அடையாது.
சட்டப்பூர்வமாக ஆண்பெண் இணைந்த வாழ்வின் மூலம் மட்டும்தான் பூரணத்
துவமான சந்தோசமான வாழ்வை மேற்கொள்ள முடியும் சந்ததியை விருத்தி
செய்ய முடியும். இவ்வாறு விருத்தி செய்யப்படும் சந்ததியினரை வளமான
மக்களாகவும் மனிதாபிமானம் மிக்க, ஒழுக்கப் பண்புகளைக் கொண்ட மனிதர்
களாகவும் உருவாக்கக் கூடிய பொறுப்பின் பெரும் பகுதி பெண்களையே சாரும்.
இப்பொறுப்பை ஆண்களால் சுமக்க முடியாது. இவற்றுக்கு ஏற்றாற் போலவே
பெண்களின் சுபாவமும் அமைக்கப் பட்டிருக்கிறது.
எனவே, மனித சமுதாயத்தை உருவாக்குவதில் பெண்கள் பெரும்பங்காற்றி வருகின் றார்கள் என்று துணிந்து கூறலாம். என்றாலும் பெண்களுடைய இந்தப் பொறுப்பு சிதறடிக்கப் பட்டு சீரழிக்கப்பட்டு வருவதைக் காணமுடிகிறது. பெண்கள் பெண்களுக்குரிய பெண்மையை பெருமையைக் காப்பாற்றிக் கொள்ளாமல் தங்களது உடை நடை பாவனைகள் மூலம் நாசத்தை தேடிக்கொள்கிறார்கள்.
சுதந்திரம், சமத்துவம் நாகரீகம் என்ற பெயரில் வரம்புகளைக் கடந்து ஆடை களைக் குறைத்து, அங்கங்களைக் காட்டி பெண்கள் நடமாடும் போது நாசத்தைத் தவிர வேறெதனை யும் கண்டுகொள்ள முடியாது. அந்த நாசத்திற் குரிய செயல்களாகத்தான் 'பெண்கள் துஷ்பிரயோகம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.
சிறுமி, யுவதி, வயதான பெண் என்ற எவ்வித வேற்பாடுமின்றி இம்சை களுக்கும், துன்புறுத் தல்களுக்கும் பாலியல் ரீதியான பலாத்காரங் களுக்கும் நாள்தோறும் ஆளாகி வருகிறார்கள். இப் பலாத்காரம் வீட்டிற்குள்ளேயும், வெளியி லும் தாராளமாக நடந்து வருகிறது. சிலவேளைகளில் இந்தத் துஷ்பிர யோகங்கள், பலாத்காரங்களிலும் கொலை களிலும் முடிவடைந்து விடுகின்றன.
தற்போது இவங்கை தொலைக்காட்சிகளில் ( ITN மற்றும் சுவர்ணவாஹினி) ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் எகிலிசலகுன (FINGAR MARKS) 'யெஹெலிய (நண்பி)' என்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வாறு நிகழ்சிகளிலும் சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய விதமும், கொலை கொள்ளை விவகாரங்கள் நடந்ததற்கான காரணங்களும் காட்டப்படுகின்றன. இவ்வாறான குற்றங்கள் செய்து கைதாகி சிறைச்சாலைகளில் இருக்கும் குற்றவாளிகளின் வாக்குமூலங்களைப் பெற்று அதனை ஒரு நாடகமாகத் தயாரித்துக் காட்டுகிறார்கள். இதுபோன்ற செயல்களில் மக்கள் ஈடுபடக் கூடாது. அத்தோடு, இதுபோன்ற காரணிகள் உருவாகுவதை அடையாளம் கண்டால் விலகிச் செல்வதற்கும் தப்பித்துக் கொள்வதற்கும் வழிகாட்டு கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிகளில் பெரும்பகுதி பெண்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய விதம் பற்றியே காண்பிக்கப்படுகின்றன.
சமுதாயத்தில் பெண்கள் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துச் செல்வதற்குக் காரணம், பெண்கள் துஷ்பிரயோகம் என்றால் என்ன என்ற அடிப்படையான அறிவின் மையும், இதற்கெதிரான சட்டங்கள் வலுவானதாக இல்லாமையும் பிரதான மான காரணங்களாகும்.
பெண்கள் தங்களது பெண்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கை களில் ஆர்வம் காட்டாமை இரண்டாவது காரணம்.
மீடியாக்கள் பெண்களை அதிகளவு பயன்படுத்தி பெண்களை விளம்பரப் பொருட்களாகவும், காமப் பொருளாகவும், போதை தரும் மருந்தாகவும் சித்தரிக்கும் பாணியில் செல்வதும் மூன்றாவது காரணம்.
இம்மூன்று காரணங்களாலும் பெண்கள் அதிகளவு துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகுகிறார்கள். எனவே, சமுதாயக் கட்டுக்கோப்பை நிலை நிறுத்துவதற்கு இந்த துஷ்பிரயோகம் பற்றிய அறிவை, விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியாக வேண்டும்.
மீடியா என்றால் என்ன?
தகவல் தொடர்பு சாதனங்கள், ஊடகங்கள் வெகுஜன தொடர்பு சாதனங்கள் என்று பல பெயர்களில் இந்த மீடியாக்கள் அழைக்கப் படுகின்றன.
'தகவலை அனுப்புபவருக்கும் பெறுபவருக்குமிடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவது, அத்அதாடர்ப்பினை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் சாதனமே மீடியா' என்படும். மக்களுக்கு அறிவுறுத்துவது நல்வழியில் நடத்துவது என்ற தார்மீக கொள்கையில் செயற்படுவதே மீடியாவின் பிரதான நோக்கமாகும். ஆனால் இந்த பண்புகளை கடந்து ஒழுக்கச்சீரழிவுகளை அள்ளி வீசி பணம் சம்பாதிப்பதனை நோக்காகக் கொண்டு மீடியாக்கள் செயல்படுகின்றன.
பெண்கள் துஷ்பிரயோகம் என்றால் என்ன?
பெண்கள் துஷ்பிரயோகம் என்றால் பலரும் நினைப்பது அல்லது சொல்ல விளைவது பெண்களைக் கற்பழிப்பது, கற்பழிக்க முனைவது என்ற இரு காரணங் கள்தான்.
எனவே, ஒரு பெண்ணை ஒருவன் கற்பழித்து விட்டால் அல்லது அதற்கான முயற்சிகளை செய்துவிட்டால் அதுதான் பெண்கள் துஷ்பிரயோகம் என கருது கிறார்கள். அதுமட்டும் பெண்கள் துஷ்பிரயோகமல்ல. பெண்கள் துஷ்பிரயோகம் என்பது இரு வகைப்படும்.
முதலாவது:
வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்தல்.
இரண்டாவது :
செயல்களால் துஷ்பிரயோகம் செய்தல்.
வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்தல் :
அதாவது ஒரு பெண்ணிற்கு இருக்கக் கூடிய பெயரைக் கூறி அழைக்கும் போது அதில் நெழிவு சுழிவுகளைக் காட்டி ஒரு மாதிரியான முறையில் அழைத் தல். உதாரணமாகளு லதா என்பது ஒரு பெண்ணின் பெயர். லதா இங்கே வா என்று அழைத்தால் அது துஷ்பிரயோகமாகாது. மாறாக லதா... இங்கே... வாயேன் என்று அப்பெயரை நீட்டி சுருக்கி மயக்கம் கலந்த வார்த்தையில் அழைத்தால் அதுதான் துஷ்பிரயோகமாகும்.
அடேய்! அதோபார் வாவ்!! என்ன அழகு! என்ன பக்குவம்!! மல்லிகைப் பூவுக்கும் அவள் சிரிப்பிற்கும் வித்தியாசம் தெரியல் லையே!! என்ற மாதிரி பெண்களைப் பற்றிய வர்ணனைகள்.
இரட்டை அர்த்தத்துடனான பேச்சுக்கள்.
இரட்டை அர்த்தத்துடனான நகைச்சுவைகள்.
பாலியல் ரீதியான பேச்சுக்கள், சேட்டைகள்.
ஆபாசமான சந்தேக மொழிகள் மற்றும் வார்த்தை கள் என்பனவும் வார்த்தை ரீதியான துஷ் பிரயோகங்களாகும்..
செயல்களால் துஷ்பிரயோகம் :
ஒரு பெண்ணைப் பார்த்து கண்ணடித்தல், முறைத்துப்பார்த்தல்.
அங்கங்களை உரசுதல், பிடித்தல், தடாவுதல் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
> ஆபாசப் படங்களை அல்லது காட்சிகளைக் காட்டுதல்.
கற்பழித்தல்
கற்பழிக்க முயற்சித்தல். என்பன செயல் ரீதியான துஷ்பிரயோகங்களாகும். அ
ஆனாலும், பெரும்பாலும் பெண்கள் இந்த வரைவிலக்கணத்தை அறியாதவர் களாக இருக்கி றார்கள். எந்த ஆண்மகனாவது மேற்குறித்த ஏதோ ஒரு விதத்தில் நடந்து கொண்டால் அவனுக்கெதிரா கச் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க முடியும்.
பெண்கள் துஷ்பிரயோகம் உருவாகுவதற்கான காரணிகள்:
பெண்கள் துஷ்பிரயோகத்தின் விளக்கத்தைக் கவனித்தால் ஒவ்வொரு நிமி டமும் பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுகிறார்கள் என்று எல்லோரும் இப்போது ஏற்றுக்கொள்வார்கள். அப்படியாயின், ஏன் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை? அல்லது தடுத்து நிறுத்த முடியவில்லை? காரணம், பெண் களின் நடை, உடை பாவனையும் வெகுஜன தொடர்பு சாதனங்களும் (மீடியாக்கள்) தான்.
கற்பழித்தல் அல்லது கற்பழிப்பதற்கு முயற்சித்தல், பலவந்தப்படுத்தல் என்ப தை அசிங்க மான காரியம், கடுமையான குற்றம் என்பதை புரிந்து வைத்துள்ள அள விற்கு பெண்கள் துஷ்பிரயோகத்தின் ஏனைய அம்சங்களை சமுதாயம் புரிந்து கொள்ளவில்லை. பெண்கள் எதனை புரிந்துகொள்ளாமல் விட்டார்களோ அல்லது அக்கறை செலுத்தாமல் விட்டார்களோ அதனை மீடியாக்கள் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டன. அதனை ஒவ்வொன்றாக கவனிப்போம்.
சினிமா:
சினிமா என்பது மிகப்பெரிய ஊடகமாக கூறப்படுகிறது. இந்த சினிமா வில் கதாநாயகியின் தொப்புள் தெரியும் குரூப் டான்ஸ்,. ஆடையை உரித்துப் போடும் காட்சி.
தொப்புளில் கோலம் போடும் காட்சி,
காமெடி பெயரால் விரசம் கொட்டும் வசனங்கள், பாடல்கள்,
கற்பழிப்புக் காட்சி, படுக்கையறை காட்சி இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள்
என்று சினிமா பெண்களைப் பயன்படுத்துகிறது. பெண்கள் பணத்தை நோக் கமாகக் கொண்டு செயற்படுவதாலும் சினிமாவைப் பொழுதுபோக்கு அம்சமாகக் கருதுவதாலும் பெண்கள் துஷ்பிரயோகத்திற்கான வழிகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இன்னுமொரு வார்த்தையில் கூறுவதானால் இதனை தெய்வீக அம்சம் பொருந்திய கலையாக காண்பிக்க முனைகிறார்கள். இப் பாத்திரம் எடுத்து நடிப்பவர்கள் கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். இவர்கள் மகா நடிகர்கள் சமூகஆவலர்கள் என்று கூட அழைக்கப்படுகிறார்கள். வருடாந்தம் அவாட்கள் கூட வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறாரகள்.
பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியை எடுத்துக் கொண்டால், அங்கே விளம் பரத்துக்கு முக்கிய இடம் உண்டு. அந்த விளம்பரத்தில் பெண்ணின் உடம்பிற்கும் அதன் அங்கங்களுக்கும் தனி இடமுண்டு. பெண்கள் இல்லாமல் எந்தவொரு பொரு ளையும் விளம்பரப்படுத்த முடியாது என்ற நிலைக்கு விளம்பரம் போய் விட்டது.
சந்தைப்படுத்தும் பொருளுக்கும், அந்தப் பெண்ணுக்கும் எந்த சம்பந்தமு மில்லாவிட்டாலும் பெண்ணை குட்டைப் பாவாடையுடன் இடை, தொடை தெரியும் காட்சியுடன் விளம்பரப்படுத்துகிறார்கள்.
செருப்பு விற்பனைக்கும், டயர் விற்பனைக்குமான விளம்பரத்திற்கும் பெண் களை ஏன் அரை குறை ஆடையுடன் காட்சியளிக்கச் செய்கிறார்கள் என்பது புரிய வில்லை.
பத்திரிகையில் 'A' டைடலில் வெளிவரும் படங்களுக்கும் காட்சிகளோடு விளம்பரம் கொடுக் கிறார்கள். இராணுவத்தில் இளைஞர்களைச் சேர்ப்பதற்கும் இளம் பெண்கள் கூட்டத்தைக் காண்பிற்கிறார்கள். வாசனைப் பொருட்களை விற்பதற்கும் 'காமப்பார்வையுடன் பெண்ணைக் காட்டுகிறார்கள். மீடியாக்கள் பெண்களை ஏன் இப்படிக் காட்ட வேண்டும்? என்பதும் தெரியவில்லை. ஆனாலும், மாதர் சங்கங்கள் பெண்கள் அமைப்புக்கள் இது விடயத்தில் மௌனமாகவே இருக்கின்றன. அரசாங் கமும் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறது.
அழகுராணிப் போட்டி:
பெண்களின் அங்கங்களை ரசித்து, ருசித்து விலைபேசி பரிசு கொடுக்கும் போட்டியாக வக்கிரப்புத்தியுடைய ஆண்கள் உருவாக்கியது தான் அழகுராணிப் போட்டி..
பெண்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பற்றி பேசப்படும் நாடுகளில் இப்போட்டி நகைச்சுவை விருந்தாக உள்ளது. ஆண்களின் உள்ளங்களை குறிவைப் பதற்காக அரைகுறை ஆடையுடன் (அரை நிர்வாணத்துடன்) பெண்கள் அணி வகுத்து வரவேண்டும். அங்கங்களை கூடுதலாக காட்டுபவர்களுக்கு கிறீடம்| சூட்டு வோம் என்கிறார்கள்.
உண்மையில் இந்தப்போட்டி நிர்வாண அணிவகுப்பே தவிர வேறு எதுவு மில்லை. பெண்கள் துஷ்பிரயோகம் இடம்பெறுவதற்கான ஊற்றுவாய் இதுதான்.
ஓவியம்:
வரலாற்றுத் தொடக்கம் இன்றுவரை ஓவியத்திற்கு மக்கள் மத்தியில் மதிப் புண்டு. அந்த ஓவியங்களில் பெண்களை ரசனைப் பொருளாக வடிப்பதில் தனி இடமுண்டு. இந்த ஓவியங்கள், கல்வெட்டுக்கள் அழகுணர்ச்சியை மையமாகக் கொண்டு வரையப்பட்டு செதுக்கப்பட்டாலும் அது பெண்களைத் துஷ்பிரயோ கத்துக்கு உட்படுத்தப் பட்ட ஒரு காரணியாக இருந்தது என்பதில் ஐயமில்லை.
பௌத்த மதத்தில், இந்து மதத்தில் ஓவியத் திற்கு முக்கிய இடமுண்டு. அது மதத்தின் சின்னமாகவும் அடையாளப்படுத்துவதுமுண்டு. இம் மதங்களின் பெயரால் செதுக்கப்பட்ட ஓவியங்கள் அரை நிர்வாணத்துடன் உடலுறவுக் காட்சி களுடன்- வைக்கப்பட்டுள்ளன. அதுவும் அவர்களது ஆலயங்களில் வழிபாட்டு ஸ்தலங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இறைவனை வணங்குவதற்காக, வழிபடு வதற்காக கட்டப்பட்ட ஆலயங் களில் இந்த நிர்வாண ஓவியங்கள் எதற்காக? உடலுறவுச் சிற்பங்கள் எதற்காக? இறைவனை வணங்கு வதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
இளைஞர்களின் பாலுணர்வைத் தூண்டு வதற்கும், பெண்களைத் துஷ்பிரயோ கத்திற்கு உட்படுத்துவதற்கும் இதுவும் ஒரு காரணமாகும்.
இணையம்
பரந்து விரிந்த ஒரு சிறிய கிராமம் அளவிற்கு அடக்கி, தகவல் தொடர்பை மிக எளிமையாக்கிய அற்புதமான தொழில்நுட்பம் கம்பியூட்டர். அதில் ஒரு அங்கம் இணையம்.
இணையம் இன்றைய உலகின் அத்தியாவசியமான ஒரு தொழில் நுட்பம். 24 மணித் தியாலங்களிலும் உலக நிலவரங்களை அறிந்து கொள்ள முடியும். இந்த அற்புதமான சாதனத்தை மனித குலத்தின் கண்ணியத்தைக் குலைத்து சமுதாயத் தை அழிவில் வீழ்த்தி கலாசாரசீரழிவை ஏற்படுத்தும் கரு வியாக மாற்றி விட்டார்கள்.
இணையத்தினூடாக ஆபாசங்களை அள்ளிவீசி, பெண்களை துகிலுரித்துக் காட்டும் படங்களைப் புகுத்தி விட்டார்கள்.
வயதுவந்த ஆணும், பெண்ணும் கம்பியூட்டருக்கு முன்னால் இரவு வேளை களில் நின்றால் பெற்றார்கள் பயப்படுகிறார்கள். பிள்ளைகள் தவறான பக்கத்துக்குப் போய்விடுவார்கள் என்று! அண்மையில் தமிழ்நாட்டில் Dr.. பிரகாஷ் என்பவரும், இலங்கையில் இரத்தினபுரி எனும் பகுதியில் இளைஞன் ஒருவனும் இணையத் தைப் பயன்படுத்தி ஆபாசப்படங்களைப் புகுத்திய செய்தி பரபரப்பாக பேசப்பட்டதை யாவரும் அறிந்ததே!
அவ்வாறே FaceBook நவீன செல்போன்களும் இன்று விபசாரத்திற்கும், ஆபாசத்திற்கும் பயன்படுத் தப்பட்டு வருகிறன. பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாலியல் தொழிலுக்கும், துஷ்பிரயோகங்களுக்கும் ஈடுபடுத்தும் ஊடகமாக உரு மாறிவிட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!