மறுமையின் வீட்டை நோக்கிய பயணம்.(பகுதி இரண்டு )
அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
முன்சென்றவர்களும் பின்வந்தவர்களுமாக, அல்லாஹ் மாத்திரம் அறிந்து வைத்திருக்கும் எண்ணிக்கையை கொண்ட அனைத்துப் படைப்புகளுடனும் நீ நின்று கொண்டிருக்கும் போது உனது பெயர் கூறி அழைக்கப் படும் நேரத்தைச் சற்று கற்பனை செய்து பார்.
அல்லாஹ்வின் முன்னிலையில் உன்னை எடுத்துக் காட்டப்படுவதற்காக, இன்னா ருடைய மகன் இன்னார் எங்கே? என அழைக்கப்பட்டால், உனது புயங்கள் நடுங்க நீ எழுந்து நிற்பாய், கடுமையான பயத்தினால் சக்தியற்று உனது கால்களும் மற்றும் ஏனைய உருப்புக்களும் நடுங்கும், உனது நிறம் மாறி விடும், அப்போது உன்னை சூழ்ந்து கொள்ளும் கவலையையும், தடுமாற்றத்தை யும், பயத்தையும் அல்லாஹ்வே அறிவான்.
அந்நேரத்தில் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்த அல்லாஹ்வின் முன்னிலை யில் நிற்பதை நீ கற்பனை செய்து பார். அப்போது அப்போது நீ பீதியடைந்தவனாகவும் கவலை தோய்ந்த வனாகவும் காணப்படுவாய், உனது பார்வை கீழ் நோக்கியிருக்கும், உனது பட்டோலையை நீ பிடித்துக் கொண்டிருப்பாய், அதிலே நுற்பமான, மற்றும் பெரிய செயல்கள் யாவும் (எழுதப்பட்டு) இருக்கும். நித்தமும் நீ செய்த (தவறான)வைகளை மறைத்துக் கொண்டு உனக்கு நன்மை செய்து கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு முன்னால் நீ வெட்கித்து தலை குனிந்தவனாகமனமுடைந்து மெதுவாக அதை வாசித்துப் பார்க்கும் சந்தர்ப்பத்தை கற்பனை செய்து பார்!
அல்லாஹ்வுக்காக உன்னிடம் கேட்கிறேன்.
உனது தீய செயல்களையும், நீ செய்த பெரும் பாவங்களையும் பற்றி உன்னிடத்தில் விசாரனை செய்யும் போது எந்த நாவினால் அவனுக்குப் பதில் அளிக்கப் போகிறாய்? நாளை மறுமையில் எந்தக் கால்களினால் அவன் முன்னிலையில் நிற்கப் போகிறாய்? எந்தப் பார்வையினால் அவனை நீ பார்க்கப் போகிறாய்?! மகத்துவ மிக்க அவனுடைய பேச்சையும், கேள்விகளையும், கண்டிப்பையும் எந்த இதயத்தினால் சகித்துக் கொள்ளப் போகிறாய்?
முஸ்லிம் சகோதரா!
மகத்துவம், கண்ணியம், பெருமை போன்ற பூரணமான பண்புகளால் உனது செவி நிறையக் கேள்விப் பட்டிருக்கும் (அல்லாஹ்) ஒருவன் உன்னிடத்தில் கேள்வி கேட்பதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
நீ அவனுக்கு மாறு செய்ததையும், பாவங்கள் செய்ததையும், மேலும் அவன் உன்னை அவதானித்துக் கொண்டிருந்தும் கூட அவனுடைய விளக்கல்களில் கவனயீனமாக இருந்ததையும், உலகத்தில் அவனுக்கு வழிப்படாது அலட்சியப் படுத்தியதையும் உனக்கு நினைவு கூறப்பட்டால் எப்படியிருக்கும்?
உன்னிடத்தில் அல்லாஹ் பின்வருமாறு கேள்விகள் கேட்டால் நீ என்ன பதில் கூறப்போகிறாய்?
அடியானே! என்னை நீ கண்ணியப் படுத்தவில்லையே! ஏன் நீ எனக்கு முன்னால் வெட்கப்படவில்லை?
நீ என்னை அவதானிக்கவில்லையா?
நான் உன்னைப் பார்த்துக் கொண்டிரு 20/4தெ நீ ஏன் இலகுவாக மதிப்பிட்டாய்?
நான் உனக்கு நன்மை புரியவில்லையா?
நான் உனக்கு அருள் புரியவில்லையா?
என் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது?
உனது வாலிபத்தை எவ்வாறு கழித்தாய்?
உனது ஆயுலை எவ்வாறு செலவு செய்தாய்?
உனது பணத்தை எங்கிருந்து சம்பாதித்து, அதை எவ்வாறு செலவு செய்தாய்?
உனது அறிவினால் என்ன செய்தாய்?
முஸ்லிம் சகோதனே!
(அல்லாஹ்வை) நிராகரித்த ஒருவன், அவனுடைய அழிவு நிச்சயம் என உறுதியாக அறிந்த பின் அவனுக்கு நிகழும் துன்பங்களை சற்று கற்பனை செய்து பார். அனைத்து படைப்புகளுக்கும் மத்தியில் முகம் கருத்தவனாக அவன் நரகத்துக்கு இழுத்துச் செல்லப்படுவான், அந்நேரம் அவனது இடது கரத்தாலோ அல்லது முதுகுக்குப் பின்னாலோ பட்டோலையை ஏந்தியிருப்பான், எனக்குப் பிடித்த கேடே! நாசமே! என்றெல்லாம் அவன் சப்தமிடுவான். அப்போது அவனுடைய தோளைப் பிடித்திருக்கும் வானவர்; இவன் தான் இன்னாருடைய மகன் இன்னார், சந்தோசத்தை இழந்து நிறந்தரத் துர்பாக்கிய வனாக மாறிவிட்டான் என சப்தமிட்டுக் கூறுவார்கள்.
பலவீனமான அடியானே!
(ஜஹன்னம் எனும்) நரகத்துக்கு மேல் தொங்க விடப்பட்ட (ஸிராத் எனும்) பாலத்தையும் அதன் மெல்லிய தோற்றத்தையும் கண்கூடாகவே பார்த்ததும் உனக்கு எற்படும் பயத்தை சற்று நினைவு படுத்திப் பார், பின்னர் அந்தப் பாலத்துக்கு கீழ் உள்ள நரகத்தின் கருந் தோற்றத்தை நீ காண்பாய், அதன் கடும் இரைச்சலையும், கொந்தளிப்பையும் நீ செவிமடுப்பாய், உனது நிலை மிகவுமே பலவீனமுற்றிருக்கும், இதயம் பயந்து கொண்டிருக்கும், கால்களும் தடுமாறிக் கொண்டிருக்கும், (பாவச்) சுமைகளால் உன் முதுகு பாராமாக இருக்கும், அந்நேரத்தில் சாதாரண தரையில் நடப்பதையே சுமையாக காணும் உனக்கு ஸிராத் எனும் அந்தக் கூர்மையான பாலத்தைக் கடந்து செல்லும் படி கட்டளை யிடப்படும். அப்போது அதைக் கடந்து செல்ல நீ ஒரு காலை எடுத்து வைத்ததுமே அதன் கூர்மை உனக்கு விளங்கி விடும், அடுத்து மற்றைய காலையும் எடுத்து வைக்க நீ முயற்சித்ததும் உனக்கு முன்னால் (அல்லாஹ்வுக்கு மாறு செய்த) மனிதர்கள் அதில் வழுக்கியும் கால் இடரியும் விழும் காட்சிகளையும், (ஸபானியா எனும்) நரத்தின் காவலாளிகள் அவர்களை நரகத்தின் கொக்கிகளால் மாட்டி இழுத்து தலை கீழாகவும் கால்கள் மோலாகவும் முகங்குப்புரத் தள்ளிவிடும் அகோரமான காட்சிகளையும் நீ நினைவு படுத்திப்பார்.
இன்ஷாஅல்லாஹ் மூன்றாம் பகுதி மிக விரைவில் ...
படிப்பினை தரும் கட்டுரைகள். படியுங்கள் ! மற்றவர்களுக்கு பகிருங்கள் ! அல்ஹம்துலில்லாஹ் !
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!