மறுமையின் வீட்டை நோக்கிய பயணம்.(பகுதி இறுதி )
அல்லாஹ்வின் திருப்பெயரால் ..
தொடர்ச்சியைப் பார்ப்போம் ..
இது இறுதி பகுதி.
அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்;
انَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا
நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள் தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும்.
يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
(அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்)
ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்.
وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا
வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும்.
وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
மலைகள் (தம் இடம் விட்டுப்) பெயர்க்கப்பட்டு தூள் தூளாகி (பறந்து) விடும்.
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
لِلطَّاغِينَ مَآبًا
(பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே.
لَّا بِثِينَ فِيهَا أَحْقَابًا
அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள்.
لَا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தைத் தவிர அவர்கள் (வேறு யாதொரு) குடிப்பையும், மாட்டார்கள். குளிர்ச்சியையும் சுவைக்க
جَزَاءً وفَاقًا
இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும்.
إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا
ஏனென்றால்,
நிச்சயமாக அவர்கள்
(மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை.
وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا
அவர்கள் நம்முடைய வசனங்களை மிக்க அலட்சியமாகப் பொய் ஆக்கினார்கள்.
وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا
எனினும், இவை அனைத்தையும் நாம் (நம்முடைய குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்துகொண்டோம்.
فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்த மாட்டோம். ஆகவே, (இதனைச்) சுவைத்துப் பாருங்கள் (என்று கூறுவோம்). (ச0/கஎ-௩0)
இவர்கள் தான் நரகவாசிகளும் அவர்கள் இறுதியாகச் சென்றடையும் இடமுமாகும், ஆனால் சொர்க்கவாசிகளின் நிலைமையை பின்வருமாறு அல்லாஹ் விளக்குகிறான்;
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
ஆயினும், இறை அச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சுவர்க்கம் என்னும்) இடம் உண்டு.
حَدَائِقَ وَأَعْنَابًا
(அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு.
وَكَوَاعِبَ أَتْرَابًا
(மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகி களான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்,
وَكَأْسًا دِهَاقًا
(பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்).
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا
அங்கு அவர்கள் யாதொரு வீ ண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள்.
جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا
(இவைகளெல்லாம் இவர்களின் நன்மை களுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உங்களது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும்.
(ச0/ஙக -கூகூ)
அருமைச் சகோதர்களே!
மரணம் மிக அன்மையில் உள்ளது. எனவே நீங்கள் (எந்நேரமும்) அதற்குத் தயாராக இருங்கள், மாலையானால் காலையை எதிர் பார்க்க வேண்டாம், அவ்வாறே காலை யானால் மாலையை எதிர்பார்க்க வேண்டாம், சில சமயம் நீங்கள் உயிருள்ளவர்களுடன் காலையில் இருக்கலாம், ஆனால் மாலையானதும் மரணித்தவர்களுடன் இருப்பீர்கள், அவ்வாறே உயிருள்ளவர்க ளுடன் மாலையில் இருக்கலாம், ஆனால் காலையானதும் மரணித்தவர்களுடன் இருப்பீர்கள். எனவே அல்லாஹ்வை வணங்கு வதில் நாம் அதிக ஈடுபாடு காட்டுவதுடன், எவ்வளவு கஷ்டங்கள் நேர்ந்தாலும் அவைகளைப் பொறுப்படுத்தாது எங்களுடைய மார்க்கத்துக்குச் சேவை செய்ய வேண்டும்.ஏனென்றால் சுவர்க்கத்தின் பாதை முள் விரிப்பிலானது, உலகத்தில் நாம் கட்டாயம் நல்அமல் செய்தே ஆக வேண்டும், இன்றைய தினம் அமல் செய்வது மாத்திரம் தான் உள்ளது, (இங்கு) கேள்வி கணக்கு என்பது இல்லை. ஆனால் நாளைய தினம் கேள்வி கணக்கு மாத்திரம் தான் உள்ளது (அங்கு) அமல் செய்வதென்பதில்லை. எனவே கிருபையாளருக்கெல்லாம் கிருபையாளனும், சங்கையாளர்களுக்கெல்லாம் சங்கையாளனு மாகிய அல்லாஹ்வின் அறிவுறையை நாம் கேட்டு நடபோம்;
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَادٍَ وَ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை) நாளுக்காக, தான் எதனைத் தயார் படுத்தி வைக்கின்றான் என்பதைக் கவனித்து அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துக்கொள்ளவும். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (ருகூ/கஅ)
யா அல்லாஹ்! ஏழு வானங்கள் மற்றும் அவை நிழல் தந்தவற்றின் இரட்சகனே! இன்னும் ஏழு பூமகள் மற்றும் அவை சுமந்து கொண்டவற்றின் இறட்சகனே! சகல வஸ்துக்களின் இரட்சகனும் அவற்றின் உரிமையாளனுமே! வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவனே! கண்ணியமான வனே! பரிசுத்தமான திருநாமங்களுடை யவனே! உன்னுடைய எத்திருநாமத்தை கொண்டு பிரார்த்தனை செய்யப்பட்டால் அங்கீகரிப்பாயோ மகத்தான அத்திருநாமத் தைக் கொண்டு உன்னிடத்தில் நாங்கள் கேட்கிறோம். மரண அவஸ்தையின் போது எங்களுக்கு அருள்பாளிப்பாயாக, அல்லாஹ் வே நாங்கள் செய்யக்கூடிய அமல்களில் சிறந்ததை இறுதி நேரத்தில் செய்யக் கூடியவர்களாகவும், கழிக்கக்கூடிய ஆயுளில் சிறந்ததை இறுதி நேரத்தில் கழிக்கக் கூடியவர்களாகவும், எங்களுடைய நாட்களில் சிறந்ததை உன்னைத் தரிசிக்கக் கூடிய நாளாகவும் ஆக்கியருள்வாயாக. அல்லாஹ்வே அப்போது எங்களுடைய பயத்தை நீக்கி, மானங்களையும் மறைத்து, நாம் செய்த தவறுகளையும் மன்னித்து விடுவாயாக.
அல்லாஹ்வே! இருண்ட மண்ணரைகளுக்கும், வேதனைக் குறிய காட்சிகளுக்கும் நாம் சென்றடைய முன்னால் எங்களுடைய குற்றங்களை மண்ணித்து, மானங்களையும் மறைத்து,எங்களுக்கு அருள்பாளிப்பாயாக.
அல்லாஹ்வே! உன்னுடைய ஏகத்துவத்தையும் உனது நபியின் தூதையும் ஏற்றுக் கொண்டு சாட்சி கூறியவர்களாக மரணித்த அனைத்து முஸ்லிம்களுக்கும் அருள் பாளிப்பாயாக. மேலும் அவர்களுடைய பாவங்களைப் பொருத்தருள்வாயாக, அவர்களுக்கு அருளும் புரிவாயாக, சுகத்தையும் நல்குவாயாக, அவர்களை மன்னித்தும் விடுவாயாக, அவர்களுடைய தங்குதல்களை கண்ணியப் படுத்துவாயாக, அவர்களுடைய நுழை விடங்களை விஸ்தீரணப்படுத்து வாயாக, தண்ணீர், பனிக்கட்டி, ஆலங்கட்டி ஆகியவைகளைக் கொண்டு அவர்களைக் கழுவி விடுவாயாக, மிக்க வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து சுத்தம் செய்யப்படுவது போல் அவர்களைப் பாவங்களி லிருந்து பரிசுத்தப்படுத்துவாயாக.
கிருபையாளருக்கெல்லாம் கிருபையாளனே உன்னுடைய அருளைக் கொண்டு (எங்களுடைய பிரார்த்தனையை) ஏற்றுக் கொள்வாயாக.
கண்ணியத்தின் அதிபதியாகிய உமது இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன் (ஆகிவிட்டான்), மேலும் தூதர்அவர்கள் மீது ஸலாம் உண்டாகட்டும், இன்னும் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்து (உண்டாவதாக).
அல்ஹம்துலில்லாஹ் .
நன்றி இஸ்லாமிய பெட்டகம் .
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!