அந்த ஆற்றலின் பெயர் என்ன?


 அந்த ஆற்றலின் பெயர் என்ன?


நீ செய்யும் செயல்களுக்குத் துணை புரியும் ஆற்றலுக்கு அறிவு எனப் பெயரிட்டு, அழைக்கிறாய். அதே போல உன்னால் செய்ய இயலாதவற்றைச் செய்யும் அப்பெரும் ஆற்றலுக்கு இறைவன், படைத்தவன் போன்ற பெயர்களைக் கொண்டு அழைக்கிறாய். எவ்வாறு அறிவெனும் ஆற்றலுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறாயோ அதைவிட அதிகமாக இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடந்தாக வேண்டும்.


இறைவன்! அவன் தனித்தவன் யாதொரு இணை, துணையற்றவன் இன்னும் அவன் யாதொரு தேவையுமற்றவன்.


அவனே ஏக இறைவன், படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்கு பவன்;உருவம் அமைப்பவன் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை யாவும் அவனையே துதிக் கின்றன. அவனே மிகைத்தவன் ஞானம் மிக்கவன். (திருக்குர் ஆன் 59:24)


'அல்லாஹ்' என்ற உடனே என்னடா இன்னுமொரு கடவுளா என அதிர்ந்துவிடாதே! நீ நினைப்பதுபோல 'அல்லாஹ்' என்பது மற்றுமொரு கடவுளின் பெயரல்ல; அல்லாஹ் எனும் அரபுச் சொல்லுக்கு ஏக இறைவன் என்று பொருள் அந்த இறைவன் அரபு நாட்டுக் கடவுள் அல்ல; மனித குலம் அனைத்திற்கும் பொதுவான ஒரே கடவுள். மனித இனமேம்பாட்டிற்கு அடிப்படை இதுதான். காட் (The God) என்றால் அது அமெரிக்கா அல்லது பிரிட்டன் கடவுள் என்பாயோ! இல்லை; இல்லை; தமிழ் மொழியில் கடவுள், இறைவன் என்பாய் ஆம் அது இறைவனைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் அதேபோல அல்லாஹ் என்பது இறைவனைக் குறிக்கும் அரபுச்சொல் இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். இப்போது உண்மையை விளங்கிக் கொண்டாயா?


இறைவனை ஏன் வழிபட வேண்டும்?


உலகில் உன்னைப்போன்ற மனிதனிடம் சில நொடிகள் வாங்கி பயன்படுத்திவிட்டுத் திருப்பித் தரும் சாதாரணப் பொருட்களுக்கு எவ்வளவு மகிழ்வோடு நன்றி என்கிறாய்! உன் தாய் உன் மீது வைத்துள்ள அன்பை விட எழுபது மடங்கு அதிகமாக உன் மீது அன்பு பாராட்டி உனக்காக யாவற்றையும் படைத்துள்ளானே இறைவன்; அவனுக்கு நீ எவ்வளவு நன்றி செலுத்த வேண்டும் என்பதை ஒரு நிமிடம் எண்ணிப்பார்!


சிந்தனைசெய் மனமே! 


உன் பணிகளுக்காக அங்கும் இங்கும் விரைகிறாய்! உனக்கு மேலுள்ள அதிகாரிகளில் ஒருவரைக் கண்டுவிட்டால் கையை மேலே தூக்குகிறாய்! ஒரு நிமிடமும் தாமதம் கூடாதென தினமும் பணிக்கு விரைகிறாய்! உனக்கு மேலுள்ள அதிகாரிகளின் கட்டளை அனைத்தையும் செய்து முடிக்கிறாய்! உன் பணிகளுக்காக ஊதியம் பெறுகிறாய்!


ஐம்பது, நூறு என அச்சடிக்கப்பட்ட அற்பமான காகிதப் பணத் திற்காக உன்னையே நீ மறந்து உன்னைத் தாழ்த்திக் கொள்கிறாயே! உன்னையும், நீ உயிர் வாழ்வதற்கென எண்ணில் அடங்கா பல பொருட்களையும் படைத்தவன், நீ கேட்பதற்கு முன்பே இலவசமாக உனக்கு அளித்து உன் தேவை இனியும் என்ன கேளும், நான் தருகிறேன். மேலும், என்னிடம் மட்டுமே கேட்பவனை அன்பாகப் பார்க்கிறேன், அள்ளித் தருகிறேன். கேட்காதவனை வெறுக்கிறேன்; சபிக்கிறேன் கேட்பவனுக்கு அளிக்காததால் வெட்கமடைகிறேன். கேள் மனிதா! கேள்! என்னிடமே கேள்!" எனக் கூறுகிற இறைவனுக்கு நீ என்ன செய்தாலும், எவ்வளவு நன்றி செலுத் தினாலும் அவன் அளித்துள்ள அருட்கொடைகளுக்கு நிகராகுமா?


நீ பணிபுரியும் துறையில் சில தவறுகள் ஏற்படும்போது அதற்கேற்ற தண்டனை உனக்கு அளிக்கப்படுகிறது. அற்பமான ஊதியத்திற்காக நீ செய்யும் பணியில் சில பிழைகள் நேர்ந்துவிட்டால் சில மாதங்கள் சம்பளவெட்டு, பணி நீக்கம், சிறை வைப்பு போன்ற தண்டனைகளை உனக்கு மேலுள்ள அதிகாரிகள் உனக்கு வழங்கு கிறார்களே! எல்லோருக்கும் அதிகாரியான இறைவனிடம் நீ பெற்றவற்றுக்கு முறையாக பணியாற்றவில்லையெனில் அவனுடைய தண்டனை உன்னை வந்தடையாதா?


இறைவனின் தண்டனையின்றி அவனுடைய அருள் மட்டும் உனக்கு வேண்டுமெனில் நீ இறைவனின் கட்டளைகளை ஏற்று நடப்பது அவசியமல்லவா?


அதனால் என்ன பலன்?


இறைவனுக்கு அடிபணிவதால் நீ பெறவிருக்கும் பலன்களை இறைவேதம் குர்ஆன் கோடிட்டுக் காண்பிக்கிறது.


நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோருக்கு, கீழே சதா ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவர்க்கச் சோலைகள் நிச்சயமாக உள்ளன. (திருக்குர்ஆன் 2:25)தன் இரட்சகனின் முன்பாக நிற்பதை அஞ்சியவனுக்கு இரண்டு சோலைகள் உள்ளன. (திருக்குர்ஆன் 55:46)


அவ்விரண்டும் அடர்ந்த கிளைகளை உடையவை (திருக்குர் ஆன் 55:48)


அவ்விரண்டிலும், இரண்டு ஊற்றுகள் ஓடிக் கொண்டே இருக்கும்


(திருக்குர்ஆன் 55:50)


அவ்விரண்டில் ஒவ்வொரு கனியிலும் இரட்டை வகைகள்


உள்ளன. (திருக்குர்ஆன் 55:52)


அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாய் இருப்பார்கள்.


அவற்றின் உட்பகுதிகள் 'இஸ்தப்ரக்' என்னும் பட்டினால் உள்ளவை. மேலும், இரண்டு சோலைகளில் (பழங்கள் பறிப்பதற்கு நெருங்கி யிருக்கும். (திருக்குர்ஆன் 55:54)


அவற்றில் கீழ்நோக்கிய பார்வையுடைய சுன்னியர் உள்ளனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த


ஜின்னும் தீண்டியதில்லை. (திருக்குர் ஆன் 55:56)


அவர்கள் வெண் முத்தைப் போலவும், பவளத்தைப் போன்றும்


இருப்பார்கள். (திருக்குர்ஆன் 55:58)


நன்மைக்கு நன்மையைத் தவிர கூலி உண்டா? (திருக்குர்ஆன் 55:60)


தங்களின் இரட்சகளை மறுப்பவர்களுக்கு நரக வேதனையும் உண்டு; அது மிகக்கெட்ட மீளுமிடமாகும் (திருக்குர்ஆன் 67:6)


அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலையில் அருவருப்பான சப்தம் உண்டாவதைச் செவியுறுவர்.


(திருக்குர் ஆன் 67:7)


அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது. அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம் (அச்சுறுத்தி! எச்சரிப்பவர் உங்களிடம் வரவில்லையா?" என அதன் காவலாளிகள்


அவர்களைக் கேட்பார்கள். (திருக்குர்ஆன் 67:83


"நாங்கள் செவியுற்றோ, சிந்தித்தோ இருந்தால், நரகவாசிகளில்


இருக்க மாட்டோம்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.


(திருக்குர்ஆன் 67:10)


வினை விதைத்து விட்டுத் தினை அறுக்க முடியுமா நண்பா?


மரணத்திற்கு பின்பு உன் செயல்களுக்குத் தக்கவாறு உன்




இறைவன் வழங்கும் மாபெரும் வெகுமதிகள் இவைதாம்.உலகிலும் செயல்களுக்குத் தக்க சில வெகுமதிகள் கிடைத்து விடுகின்றன.


ஒன்றை உள்ளத்தில் ஊன்றிப் பதித்திடு, அதன்படி முழுமை


யாய்ச் செயல்படு!


காரிருள் சூழ்ந்த நேரத்தில் வெளிச்சமற்ற சாலையில் நீயும் உன் நண்பனும் நடந்து சென்று கொண்டிருக்கும்போது.


"நண்பா! இருள் அதிகமாக உள்ளது: வழியில் கற்கள் தம் பற்களை நீட்டிக் கொண்டிருக்கலாம். காலைத் தரையில் இழுத்து நடக்காமல் தூக்கி வைத்தே நடந்து வா" என்ற நண்பனின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் தீங்கேதும் நேராது. அதற்கு மாறாக கற்கள் தன்பற்களை நீட்டி இருப்பதை என் கண்கள் காணவில்லையே எனக் கூறி, உன் விருப்பப்படி நடந்தால் சில நொடிகளில் கல்லில் இடிபட்டு பூமியை முத்தமிட்டுப் பல்லுடைபடுவாய் அல்லவா? ஏன்தான் உனக்கு இந்நிலையோ? நண்பனின் நல்லுபதேசத்தை ஏற்றிருந்தால், கல் இருந்தாலும் இல்லாமற் போனாலும் நலமே


உனக்கு கிட்டியிருக்கும்.


சுவர்க்கமாவது, நரகமாவது? யார் சொன்னது? இவை எல்லாம்.


மூட நம்பிக்கை என்றா கூறுகிறாய்?


உன் கூற்றுப்படியே சுவர்க்கம் நரகம் எதுவும் மரணத்திற்குப்


பின்பு கிடையாது என வைத்துக்கொள்வோம் நாளை அவை இல்லையாயின் தப்பிவிடலாம். உண்மையிலே அவை இருக்கு மாயின் நீ அதை பொய்ப்பித்ததின் விளைவாக உனக்குக் கொடுக் கப்படும் தண்டனையிலிருந்து உன்னைக் காப்பாற்றுவது யார்? அவற்றை மறுப்பதால் உலகிலாவது ஏதேனும் பயன்கள் உண்டா?


அப்படியும் எதுவுமில்லையே!


ஆனால் அதை ஏற்றுக் கொள்வதனால் எவ்வித இழப்பும் கிடையாதே! அவை இருக்குமாயின் மெய்ப்பித்த பலனைப் பெற்றுவிடுவாயே! மரணத்திற்குப்பின் கிடைக்கும் சுவர்க்கம் நரகத்தைக்கூட விட்டுவிடு! உலகிலேயே அவற்றை ஏற்பதால் சுவர்க்கமும், ஏற்காததால் நரகமும் பெற்றுவிடுகிறாயே!


அதெப்படி? இதோ பார்!


உன் மண்டையை உடைத்து உதிரத்தை ஓடவிடு! வாளை எடுத்து உடலெங்கும் வெட்டிக்கொள்! உடலில் ஒரு புறம் ஈட்டியால் குத்தி மறுபுறம் எடுத்துக்கொள்! சாட்டையால் உடம்பெல்லாம் அடித்துக் கொள்! அக்கினியைக் ஏந்தி கைகளைச் சுட்டுக்கொள்! அக்கினியில் நடைபோடு! நடப்பதற்குப் பதிலாக உருண்டோடு. பாறாங்கல்லைச் சுமந்துசெல்! அப்போதுதான் நரகத்திலிருந்து தப்பி சுவர்க்கம் புகுவாய் என்றெல்லாம் கூறி உன்னை யாரும் அறிவிலியாக்க வில்லையே! இப்படிப்பட்ட துன்பங்களை எல்லாம் அனுபவித்தும் கூட சுவர்க்கம் கிடைக்கவில்லையே என வருந்துவதற்கு!


"மனிதா நீ மனிதானகவே இரு! மாறிவிடாதே! உதிரத்தைப் புசிக்காதே! உடலைக் கெடுக்காதே' தாவாகச் செத்தவற்றை உண்ணாதே! வியாதியை உடலுக்கு உறவினனாக்காதே!


மதுவை அருந்தாதே! மண்டைக் குழம்பாதே!


கழிவறையில் பேசினால் கிருமிகள் வாயுள் புகும்; அதனாலும் உடல் நலம் போகும்! ஒன்றாக இருவர் அங்கு அமர்ந்து பேசினால் வெட்கம் விலகிவிடும்.


நின்று கொண்டு சிறுநீர் கழித்தால் சில துளிகள் நின்றுவிடும்; அதனாலும் சிறு நீரகத்தில் கல்லடைப்பு நோய் வந்துவிடும்!


உன் இச்சையை உம் மனைவியரிடம் தவிர பிறரிடம் தீர்க்காதே! தீரா நோயை வரவழைக்காதே!


உடல், உடை, இடம், உள்ளம் போன்றவற்றைத் எப்போதும் தூய்மையாக வைத்திடு!


மனிதனை மதித்திடு! மனிதநேயம் காத்திடு!


இவை யாவும் என் கட்டளைகள், செவியுற்றிடு! இதயத்தில் பதித்திடு! இதன்படி செயலாற்றிடு! என்றுதானே இறைவன் கூறுகிறாள்.


இவைபோன்ற செயல்கள் உனக்கு நன்மை மட்டுமே பயக்கின்றன! அதோடு விடவில்லை. மேலும் எவ்வளவு உயர்வான வாழ்க்கை நெறி உனக்கு கற்பிக்கப்படுகிறது என்பதையும் பார்!


"ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்களே மனிதர்கள். இறைவனின் முன்னிலையில் அச்சமுடையோரைத் தவிர உங்களில் யாரும் யாரையும் விட சிறந்தவர் அல்லர் வல்ல இறைவனைத் தவிர யாரும் யாரையும் தரம் தாழ்த்த முடியாது.


இறைவனான என்னையே ஐவேளைத் தொழுதிடு! அதைக் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்திடு! தொழுகையில் தோளோடு




தோள் சேர்த்து நின்றிடு! ஆண்டான், அடிமை, கருப்பன், சிவப்பன் என்ற வேற்றுமை இல்லை; இல்லவே இல்லை என்பதை உலகிற்கு உணர்த்திடு! அளவை நிறுவையில் மோசடி செய்யாது வாழ்க! பிறரின் பொருட்களை எவ்வகையிலும் சுரண்டாதே! உன் உழைப்பு தான் உன்னை உயர்த்தும். நியாயமான வழிகளில் உழைத்துச் செல்வங்களைச் சேர்த்திடுக! செல்வம் மிகுதியாக இருக்கும்போது நூற்றுக்கு இரண்டரை சதவீதமென ஜகாத் எனும் ஏழைவரி கொடு! உன்னுடைய சொத்தைத் தூய்மைப் படுத்திடு! உன் மனித சமுதாயத்தை உயர்த்திடு! ஆண்டிற்கு ஒருமுறை முப்பது நாள்கள் நோன்பை நோற்றிடு! உடல் நோயை அகற்றிடு!


"தாயின் காலடியில்தான் சுவர்க்கம் இருக்கிறது"


எனவே, பெற்றோரை மதித்திடு! கற்றோரை மதித்திடு' பெரியோரை மதித்திடு!


அண்டை வீட்டாரிடம் அன்போடு பழகிடு! குழந்தைகளிடம் அன்பு வைத்திடு!


நீ மட்டும் உண்டால் போதாது; இருப்பதை இல்லாதோர்க்குப் பங்கிட்டுக் கொடுத்திடு!


பொறாமை கொள்ளாதிருந்திடு! பெருமையை அடியோடழித்திடு!" இவை இறைக் கட்டளைகள்! இறைவன் கூறுவது இதுதான்


குர்ஆனில் உள்ளது இதுதான். இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) வலியுறுத்தியதும் இதுதான்.


இஸ்லாம் என்றவுடன் பிற மதங்களைப் போல் ஏதோ ஒரு மதமென எண்ணிக் கொள்ளாதே!


சாந்தியின் இல்லம் இஸ்லாம். கண்ணியத்தின் இல்லம் இஸ்லாம். சுருங்கச் சொன்னால் Islam is a way of life- இஸ்லாம் ஒரு வாழ்க்கை வழிகாட்டியாகும்.


மனிதனை வழிநடத்திச் செல்லும் சீரான வழியில் அவன் சென்று இறைவனின் சிறப்பான கட்டளைகளை ஏற்று நடப்பதால் ஒருவன் கெட்டுவிடுவான் என உன்னால் கூற முடியுமா?


ஆமாம். மனிதன் உயர்வடைவான் என்றால் அதை ஏற்று அதன் வழி செல்வது நல்லது தானே? அல்லது அதை மறுத்து வேறு வழியில் செல்வது நல்லதா?


நான் இதை உன் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

கருத்துகள்