பாவச்செயல்களை சாதாரணமாக் கருதுவதே!
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
மிகப்பெரும் பிரச்சினை..
ஒருவன் தன் பாவச்செயல்களிலிருந்து விடுபடாமலி ருப்பதற்கு காரணமே பாவச்செயல்களை அவன் பெரிது படுத்தாமல் அலட்சியமாகக் கருதுவதுதான். அப்பாவத் தைச் செய்யக்கூடாதென தடுத்த அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் இல்லாமைதான்..
ஆனால் அல்லாஹ் உன்மீது எவ்வளவு இரக்கமுள்ளவன் தெரியுமா?
நபியவர்கள் சொல்கின்றார்கள்..
"ஒருமனிதனின் இடதுபக்கத்தில் அமர்ந்துள்ள மலக்கு அவன் ஒரு தப்பைச் செய்துவிட்டால் அதை உடனேயே எழுதிவிடாமல் ஆறுமணிநேரம் - அவன் தவ்பாச் செய்ய ட்டும் என்பதற்காகக் தாமதிக்கின்றார். அவன் அதற்குள் பாவமன்னிப்புக் கேட்டு விட்டால் அதை அப்படியே தூக்கி வீசிவிடுகின்றார். இல்லாத பட்சத்தில் ஒரு தப்புச் செய்ததாகப் பதிவுசெய்கின்றார்.. (தபரானி, பைஹகி) அல்பானி (றஹ்)அவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால் மிகப்பெரிய முஸீபத்து என்னவெனில் உன் போன்ற இந்தகையவர்கள் அல்லாஹ்வின் பேச்சை மதிப்பதில்லை. அவனது தண்டனைகள் எப்படிப்பட்டவையென சற்றும் சிந்திப்பதில்லை. பலர் பெரும் பாவ ங்களைக்கூட சிறுபாவங்களாய் கருதி சர்வசாதா ரணமாக அவற்றை செய்கின்றனர். நேரிலோ, டிவியி லோ ஒரு அந்நிய பெண்ணை அலங்கோலமாகப் பார்ப்பதில் தப் பா? அவளை ரசிப்பது தப்பா? தொடுவது தப்பா? இப் படித்தான் சிந்திக்கின்றனர்.. இல்லையில்லை.. விரோதி யான இப்லீஸ் இப்படி சிந்திக்க வைக்கின்றான்.
இன்று குடும்பப்பத்திரிகை எனும் பெயரில் வெளிவரும் மஞ்சள்ப் பத்திரிகைகளை நாள்தவறாது வாசிக்கின்றாய் நீ.. சினிமா எனும்பெயரில் நாள்தவறாது மோசமான ஆபாசக் காட்சிகளைக் கண்டுரசிக்கின்றாய்.. சைத்தானிய காம அர்த்தங்கள் கொண்ட சினிமாப் பாடல்களை கேட் காவிட்டால் வேலை செய்ய முடியவில்லையே! என புலம்புகின்றாய்.. இதெல்லாம் கூடாது பாவம் என்று யாராவது சொன்னால் ஏன்கூடாது? என்ன பாவம்? பாவம் என்றால் எப்படிப்பட்ட பாவம்? எத்தனை கிலோ வரும் என்று கிண்டல் வேறு செய்கின்றாய்..
சினிமா எனும் சேற்றில் உன் உள்ளம் ஊறிப்போய் விட்டதால் ஹராமாக்கப்பட்ட அன்னியப் பெண்ணைப் பார்ப்பது, பேசுவது பழகுவது என்று.. காதல் என்ற பெயரில்.. காதல் செய்யாவிட்டால் அது அகௌரவம் என்று நீயே கற்பனை செய்து கொண்டு சைத்தானின் வாலைப் பிடித்துக் கொண்டு பேயைத் தேடி ஓடும் நாய் போன்று நீயும் நஜீஸைத் தேடி ஓடுகின்றாய்..
உனது இப்பேச்சை, செயலை உன்போன்ற மனிதர் களான.. நீ முஸ்லிமாக இருக்கவேண்டும் என்பதற்காக தம் உடலை உதிரத்தை உயிரை தியாகம் செய்த ஸஹா பாக்களின் பேச்சோடு சற்று ஒப்பிட்டுப் பார்!..
அனஸ் (றழி) அவர்கள் சொல்கின்றார்கள்..
"நீங்கள் சில பாவகாரியங்களை செய்யக் காண்கின் றேன். அவை உங்கள் பர்ாவையில் மயிரை விடவும் கேவலமாக அற்பமானதாக ஆகிவிட்டன.ஆனால் நாங் கள் நபியவர்களின் காலத்தில் அவற்றை நாசத்தை ஏற்படுத்தும் மிகப் பெரும்பாவ ங்களாகவே கணக்கிட்டு வந்தோம்.(ஸஹீஹூல் புகாரி)
இப்னு மஸ்ஊத்(றழி) அவர்கள் கூறுகின்றார்கள் ..
"ஒருவிசுவாசியின் உள்ளம் சிறியதொரு பாவத்தைச் செய்து விட்டாலும் தன்தலைமேல் ஒருமலைப் பாறை விழப்போவதைப் போல் அச்சமுறும். ஆனால் ஒரு பாவியானவன் ஒருபெரும்பாவத்தைச் செய்து விட்டு தன்முகத்தில் மொய்திதிருக்கும் கொசுவை விரட்டிடு வதுபோல் அலட்சியமாயிருப்பான் என்று கூறினார்கள்.
எனவே இவ்வாறு பாவச்செயல்களில் அலட்சியமாய் இருப்பவர்கள் பின்வரும் நபிமொழியைப் படித்துப் பார்த்தால் தனது செயலின் விபரீதம் தெரியவரும்.
நபியவர்கள் கூறுகின்றார்கள்..
"நீங்கள் அலட்சியமாகக்கருதும் சாதாரண பாவச்செய ல்களை உங்களுக்கு எச்சரிக்கின்றேன். பாவங்களை அலட்சியமாகக் கருதுவோருக்கு உதாரணம் ஒரு பயண க்கூட்டத்தைப் போன்றது. அவர்கள் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி சமைக்க ஆரம்பித்தனர். ஒருவர் ஒரு விறகுக் குச்சி பொறுக்கிவந்தார். மற்றவர் இன்னொரு குச்சியைக் கொண்டு வந்தார்.இப்படியே பெரும் தீமூட்டும் அளவுக்கு குச்சிகள் சேர்ந்து பெருநெருப்பாவிட்டது. (இப்படி த்தான் உன் பாவச்செயல்களும் உனக்குத் தெரியாம லேயே அளவுக்கதிகமாகி இறுதியில் உன்னை நரகில் தள்ளி விடும். (அஹ்மத் - ஸஹீஹூல் ஜாமிஉ 2686)
இந்த ஹதீஸின் அடிப்படையிலேதான் அறிஞர்கள் சிறு பாவங்களைத் தொடர்ச்சியாகச் செய்வதும் பெரும் பாவமாகவே கருதப்படும் என்று முடிவெடுத்துள்ளனர்.
எனவே பாவம் சிறியதா? பெரியதா? எனப் பார்க்காதே. அதை யாருக்கு எதிராகச் செய்கின்றாய். அதன்முலம் யாருக்கு மாறுசெய்கின்றாய், யாரின் கோபத்துக்கு ஆளாகப்போகின்றாய் என்று சிந்தித்துப் பார்..
நண்பா! உனக்கு பெரும்பாவங்கள் என்றால் என்ன? சிறுபாவங்கள் என்னவென்று தெரியவில்லை போலும். அதுதான் புகைத்தல் சினிமா, இசை,காதல் கெட்ட பெண்களின் நட்பு,பொய்,புறம், கோள்,ஏமாற்று, மோசடி, தொழுகையின்மை, நேரந்தவறித்தொழல், நோன்பின்மை, ஆணவம் பெற்றோர் மனைவி நிந்தனை போன்ற பெரு ம் பாவங்களையெல்லாம் நீ சர்வசாதாரணமாகச் செய்யத் துணிந்துவிட்டாய். எனவே பெரும்பாவமென்றால் என்ன? சிறு பாவமென்றால் என்ன வென்று நீ தெரிந்து கொள்வது அவசியமல்லவா..
நான் திருந்த வேண்டும் ..ஆனால் ..!?
இன்ஷாஅல்லாஹ் இன்னும் மலரும்.💐
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!