பெரும்பாவம் என்றால் என்ன?


 பெரும்பாவம் என்றால் என்ன?

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


இஸ்லாமிய சட்டக்கலை சார் நிபுண அறிஞர்களின் கருத்துப்படி, பின்வரும் வரையறைக்குள் உள்ளக்கப்படும் பாவங்கள் அனைத்தும் பெரும்பாவங்களாகவே கருதப் படும்..


1-நபியவர்கள் அழித்துவிடும் பெரும்பாவங்கள் என்று சுட்டிக்காட்டிய பாவங்கள்..


உதாரணமாக..அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், சூனியம் செய்தல், கொலைசெய்தல், வட்டியைச் சாப்படுதல், அனாதையின் சொத்தைச் சாப்பிடல், யுத்தத்தில் புற முதுகு காட்டி ஓடுதல், அப்பாவிப் பெண்களை அவதூ றாகப் பேசுதல் ஆகிய ஏழு பாவங்களும்.. ( புகாரி)


பிறரைப்பற்றிக் கோள்சொல்லுதல்,சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாமல் இருத்தலும் பெரும்பாவவே..(புகாரி)


பெற்றோரைத் துன்புறுத்தல், ஒருவர் மீது வீண்பழி சுமத்துவதும் பெரும்பாவமாகும்.. (புகாரி)


பெற்றோரைத் திட்டுதல், ஏசுதல் பிறரின் பெற்றோரை இழித்துரைத்தல், உலக லாபத்துக்காக பொய்ச் சாட்சி சொல்லுதலஆகியவைகளும்பெரும்பாவங்களாகும். (புகாரி)


2- அதேபோல் எந்தெந்தப் பாவங்களைப் பற்றி அவை சுத்த ஹராம் என்றோ, அவற்றைச்செய்தால் சுவர்க்கம் ஹராம் என்றோ,நரகம் வாஜிப் என்றோ அவற்றைச் செய்தோரை அல்லாஹ்வோ நபியோ சபிக்கின்றனரென் றோ,அவர்களைப் பார்க்க மாட்டான்- பேச மாட்டான், பரிசுத்தப்படுத்த மாட்டான், அவர்களுக்குக் கடும் தண்ட னையுண்டு என்றோ, அல்லது அதற்கு உலகில் நிர்ண யிக்கப்பட்ட ஹத்து- தண்டனை கொடுக்கப்பட வேண்டு மென அல்குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழி களிலோ சொல்லப்பட்டிருக்கின்றனவோ அவைகளும் பெரும்பாவங்களாகும்.


இந்த வகையில்..


அகீதா- கொள்கை சார்ந்த குற்றங்களின் கீழ்..


வலிமார்களிடம் பிரார்த்தித்தல், உதவிதேடல் நோயைக் குணப்படுத்துமாறு கேட்டல், அவர்களின் கப்ருகளில் முத்தமிடல் சிரம்பணிதல் குழந்தைகளைப் போட்டு உறுட்டியெடுத்து பரக்கத் தேடல், அவர்களின் பெயர் கூறி அறுத்தல், அவர்களுக்காக நேர்ச்சைசெய்தல், அவர் களின் பெயரில் சத்தியம் செய்தல், அவர்களின் போட் டோக்களை வீடுகளில் மாட்டிவைத்து பரக்கத் பெறல், அவர்களின் பெயர் கூறி ஆரம்பித்தல், அவர்களது கப்ரில் சியாரம் கட்டுதல், சியாரத்தை தரிசிக்கச்செல்லல், அவர்களின் பெயரில் உணவுபடைத்தல், அவர்கள் சாதா ரண மனிதர்களால் அறியமுடியாதவற்றை அறிவார்கள் என்றோ மரணித்த பின்னும் அவர்களால் நமக்கு உதவ முடியுமென்றோ,அல்லாஹ்வின் அதிகாரத்தில் அவர்க ளுக்கு பங்குள்ளதென்றோ,அவர்களுக்கு பணிவிடை செய்யாவிடில் நமக்கு ஆபத்தை விளைவிப்பார்கள் என்றோ, அவர்களுக்கு நேர்ச்சைசெய்தால் காரியம் கைகூடும் என்றோ, அவர்கள் நினைத்தால் யாரையும் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்றோ நம்புவது அனைத்தும் இணைவைப்பை ஏற்படுத்தும்- நிரந்தர நரகுக்கு இட்டுச்செல்லும் பெரும்பாவங்களாகும்.


அவ்வாறே கழுத்தில் கைகால்களில் தகடுகள் தாய்த்துகள் இஸ்ம் அஸ்மாக்களை கட்டுதல் நூல் மந்திருத்துக் கட்டு தல், சாத்திரம் குறி கேட்டல் ஜோதிடம் பார்த்தல், அதை நம்புதல், சகுனம் பார்த்தல், பெரியோரின் கால்களில் விழுந்து மரியாதை செலுத்தல் இது போன்ற இன்னும் பல குற்றங் கள் - எம்மில் பலர் செய்து கொண்டிருக்கும் இவை போன்றசெயல்கள் பெரு ம்பாவங்கள் மாத்திரமி ன்றி சிர்க்கை-அல்லாஹ்வுக்கு இணை வைப்பதை ஏற்படுத்தும் மகா பயங்கர பாவங்களாகும்.


பாலியல், துர்நடத்தைக் குற்றங்களின் கீழ்..


விபச்சாரம் புரிதல், கள்ளத் தொடர்புபேணல், கற்பழிப்பு, ஓரினச் சேர்க்கை, முஸ்ட்டித்தனம் (கரப்பழக்கம் செய்தல்), ஆபாசப் படம்பார்த்தல் ஆபாசத்தைப்போதிக்கும் இன்றைய சாதாரண பத்திரிகை- சினிமாக்களைப் பார்த்தல், அன்னியப் பெண்களை அரைகுறை நிலையில் மறைக்க வேண்டியதை மறைக்காத நிலையில் பார்த்தல், அன்னியப் பெண்ணை முகம் பார்த்து ரசித்தல், இசை கேட்டல்,விரசப்பாடல்களை ரசித்தல், நடனம் நாட்டியம் டான்ஸ் ஆடுதல் பார்த்தல், ஆண் - பெண் நட்புமுறை, - காதல்- கடிதத்தொடர்புகள்,டீவி - ரேடியோக்களில் தேவையற்ற வகையில் அன்னிய ஆண்பெண் அரட்டை கள், ஆண் - பெண் வெளியில் செல்கையில் பார்வையைத் தாழ்த்தாது அலைய விடுதல், பொது வைபவங்கள் இடங்களில் ஆண்-பெண் சந்திக்கும், பார்க்க நேரும் வகையில் ஒன்று கூடுதல், அன்னிய ஆண் - பெண் தனித்திருத்தல், பெண்கள் தனியாகப் பயணம் செய்தல் (மஹ்ரமல்லாத நெருங்கியஉற வுக்காரர்களுடனாயினும் சரியே), பெண்கள் ஹிஜாப் இல்லாமல் வெளியில் செல்லல், அவர்களின் கைகால், இடுப்பு,வயிறு,நெஞ்சு போன்றவை வெளியில் தெரியும் வகையில் சாரி - சட்டை போன்ற ஆடைகளை அணிந்து வெளியில் செல்லுதல், உடம்புடன் ஒட்டிய வகையில் ஆடைஅணிதல், அங்கங் களை வெளிக்காட்டுமளவு மெல்லிய ஆடைகளை அணி தல், வெளியில் செல்லும் போது பெண்கள் மணம்பூசுதல், புருவங்களை வெட்டுதல் போலி சவரிமுடிகட்டுதல், நரைக்கு கருப்புச் சாயமிடல், அளவுக்கதிகம் அலங்கரி த்துக் கொண்டு வெளியில் செல்லல், மஹ்ரம் அல்லாத வர்களுடன் தேவையற்ற வகையில் பேசுதல், சிரித்தல், கேலிசெய்தல், ஒன்றாகக் கூடியிருத்தல், ஒன்றாகச் சாப்பிடல் இவைபோன்ற அனைத்துமே அல்லாஹ் வுக்குக் கோபத்தையூட்டும் அவனது தண்டனைக்கு இல க்காகும் கடுமையான பாவச் செயல்களாகும்.


சமூக விரோதக் குற்றங்களின் கீழ்..


மதுபானம் பாவித்தல், புகைப்பழக்கம், பீடி, பான்பரா க்கு, போதைப்பழக்கம், கஞ்சா,அபின் பாவனை, வட்டிக்கு கொடுத்தல் வாங்குதல்,சுதாட்டம்,லாட்டரி (லொத்தர்) சீட்டு விற்றல் வாங் குதல், லஞ்சம்,ஊழல் இன்னும்இவை போன்ற எத்தனையோ பாவங்களும்..


வாழ்வியல் குற்றங்களின் கீழ்..


ஆண்கள் கரண்டைக்காலுக்குக் கீழ் ஆடையை தொங்க விடல், தாடிவைக்காது முகச்சவரம் செய்தல், பெரிய மீசை வைத்திருத்தல், பெற்றோரைத் துண்புறுத் தல்,அவர்களை ஒதுக்கிவைத்தல், கணவன்மனைவி குடும்ப ரகசியங்களைப் பற்றி பிறரிடம் பேசுதல், மனைவி கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்காதிருத்தல், கணவன் தன் மனைவியை கடுமையாக நடத்துதல்,

பெற்றோர் குழந்தைகளுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டுதல் இன்னும் இவை போன்ற எத்தனையோ பாவங்களும்..


மனிதஉரிமை மீறல் குற்றங்களின் கீழ்..


புகைத்தல், கொலை, களவு, சூது, பொய், புறம்பேசல் ஏமாற்றுதல், மோசடி, வாக்கு மீறல், பொய்ச்சாட்சி, சூழ்ச்சி செய்தல் போன்ற இன்னும் பல பாவங்களும் பெரும்பாவங்களின்அடங்கிப் போகின்றன..


இப்போது சொல்!


நீ இவற்றில் அலட்சியமாகக் கருதிச் செய்யும் பாவங்கள் எத்தனை? இவை அல்லாஹ்வின் கோபத்தை ஏற்படுத்தி உன்னை சுவனம் செல்லாமல் தடுத்து நரகத்துக்கு இழுத்துச் செல்லும் பெரிய பாவங்களா இல்லையா? நீயே சொல்!


எனவே உன் நிலையை நீ இப்போதே மாற்றிக்கொள் ளாவிட்டால் மிகப் பயங்கரமிக்க இருண்ட எதிர் காலத்தை நோக்கி நீ நடக்கின்றாய் என்றே அர்த்தம். நீ உன் மறுமை வாழ்வைத் தொலைத்து நாசமாகி விடப் போகின்றாயா? பயங்கர வேதனை மிக்க நரகத்துக்குச் செல்வதுதான் உன் விருப்பமா? 



எனவேதான் சொல்கின்றேன் என் அன்பு நன்பா! நீ அனைத்துப் பாவங்களையும் விட்டுவிடு . இவற்றுக்குப் பரிகாரம் தேடிவிடு. அல்லாஹ்விடம் சரணாகதியாகி அவனிடத்தில் அனைத்துப் பாவங்களுக்கும் தவ்பாச் செய்துவிடு.


ஆம் நண்பா! தவ்பாச் செய்துவிடு. ஆனால் அது உண்மையான தவ்பாவாக இருக்க வேண்டும். இன்று தவ்பா. நாளைமறுபடி அதேபாவம் அடுத்தநாள் மீண் டும் தவ்பா இதற்குப்பெயர் அல்லாஹ்விடத்தில் தவ்பா கிடையாது. இது அல்லாஹ்வையே ஏமாற்ற முயற் சிக்கும் ஈனச் செயல்.. எனவே உன்மையான தவ்பா -பாவ விமோசனம் தேடல் என்றால் என்ன என்று நீஅறி ந்திட வேண்டுமல்லவா.. அதன்நிபந்தனைகள் என்ன வென்று நீ தெரிந்திடவேண்டுமல்லவா..எனவே தொட ர்ந்து இறுதிவரை இந்த கட்டுரையை  படி..



(நான் திருந்திட வேண்டும்.. ஆனால்.🔖.)

இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்...🎞

கருத்துகள்