மறுமையின் வீட்டை நோக்கிய பயணம்.(பகுதி ஒன்று )

 



மறுமையின் வீட்டை நோக்கிய பயணம்.(பகுதி  ஒன்று )

அல்லாஹ்வின் திருப்பெயரால் ..


உன்னைக் கடந்து செல்லவிருக்கும் மகத்தான இரண்டு நாட்களைப்பற்றி சிந்தித்துப் பார்த்தாயா?


இப்போது நாம் மிகவுமே ஆபத்தான இரண்டு காட்சிகளுக்கு முன்னால் இருக்கிறோம். அக்காட்சிகளைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.


ஒன்று; (இன்னும் ஒரு நாளைப்பயந்து கொள்ளுங்கள், அதில் நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் மீட்டப்படுவீர்கள்). அல்குரான்.)


இரண்டு;(பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும்


அது சம்பாதித்ததற்குறிய (கூலியான)தை பூரணமாகக் கொடுக்கப்படும். (அதில்) அவர்களோ அணியாயம் செய்யப்பட மாட்டார்கள்). அல்குரான் )


நிச்சயமாக இவ்வசனம் சிறியவர் பெரியவர் கண்ணியமானவர், அற்பமானவர் போன்ற வேறுபாடு களின்றி அனைவருக்குமே அல்லாஹ் கட்டாயப்படுத் தியுள்ள மகத்தான இரு நாட்களை நினைவு கூறுகின்றன. நிச்சியமாக அதுவே (இறைவனின்) முன்னால் நிறுத்தப்படும் நாள்! மேலும் அதுவே வாக்களிக்கப்பட்ட சந்திப்புமாகும்.


அத்தினம் வருவதற்கு ஒரு வினாடிக்கு முன் மனிதன் ஏமாற்றும் (உலக) வீட்டில் இருந்து சந்தோசங்கள் அல்லது தீமைகள் நிறைந்த (மருமை)வீட்டை நோக்கிப் பயணிக்கிறான். அந்த வீட்டை நோக்கிப் பயணிப்பதற்கு கட்டாயப் படுத்தப்பட்ட வினாடியே அது. அந்த வினாடியில் தான் அவன் தனது புதல்வர்களையும், புதல்விகளையும் சகோதர சகோதரிகளையும் இறுதியாகப் பார்க்கும் நேரம். ஏன் இந்த உலகத்தையே இறுதியாகப் பார்க்கும் வினாடியும் அதுவே. பின்னர் அவனுடைய முகத்தில் (சகராத் எனும்) மரண அவஸ்தையின் அடையாளங்கள் தோன்றும். அவனுடைய இதயத்தின் அடியிலிருந்து மூச்சுகள் வெளியேறும்.


ஆம்,(காபிர் எனும்) நிராகரிப்பவன் விசுவாசம் கொள்வதும், (பாஜிர் எனும்) தீயவன் உறுதியான நம்பிக்கை கொள்ளும் வினாடியும் அதுவே தான். அற்ப உலத்தைப் புரிந்துகொள்ளும் நேரமும் அதுவே தான்.


(மனிதன்) அல்லாஹ்வின் கடமையில் தான் தவரவிட்ட ஒவ்வொரு வினாடியையும் நினைத்துக் கவலைப் படக்கூடிய வினாடியும் அதுவே. அந்நேரத்தில் மனிதன் "இறைவா! என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்பு வாயாக!" என்று கூறுவான்.


(மலகுல் மவ்த் எனும்) உயிர்களைக் கைப்பற்றும் வானவர் மிக அன்மையிலிருந்து கொண்டு அழைப்பதற்கு ஆயத்தமாகும் தீர்க்கமான வினாடியும் அதுவே. அவ்வேளை அவர் என்னை சொர்க்கவாசி என அழைப்பாரா, அல்லது நரகவாசி என அழைப்பாரா என்று நான் அறிய முடியவிலையே!  உண்மையில் தனிமை என்பது (கபன் எனும்) வெண்ணிற ஆடையுடன் (லஹ்த் எனும்) புதைகுழியில் இருப்பதேயாகும்.


நீ உனது படுக்கை விரிப்பில் இருக்க, உனது குடும்பத்தினர் அவர்களுடைய கைகளால் உன்னை புரட்டுவதையும், உனது உயிர் கைப்பற்றப்படும்போது ஒவ்வொரு நரம்புகளிலிருந்தும் உயிர் பிரிக்கப்படுவதை யும் சிந்தித்துப் பார்த்தாயா? பிறகு என்ன நடக்கப் போகிறது?


உயிரைப்படைத்த இறைவனிடம் அது ஒப்படைக்கப்பட்டு விடும், மேலும் காலோடு கால் பின்னிக் கொள்ளும்.


பின்னர் குளிப்பாட்டுபவர் வருவார், உனது ஆடைகளைக் களைவார், உன்னைத் தனியாக ஒரு பலகையின் மீது போடுவார், உன் மீது தண்ணீரை ஊற்றி குளிப்பாட்டுவார். சுத்தமும் செய்து விடுவார், பிறகு உனது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் (கபன் எனும்) வெண்ணிற ஆடையைக் கொண்டு வரும்படி கேட்பார், பின்னர் எல்லோருமாக சேர்ந்து உன்னை (மிஹ்ராப் எனும்) மாடத்தின் முன் (தொழுகை நடாத்துவதற்காக ) வைப்பார்கள், பிறகு என்ன நடக்கப் போகிறது?!


தனியாகவே உன்னை மண்ணரையில் வைப்பார்கள்.


உன்னுடன் தங்குவதற்குத் தாயுமில்லை.


உன்னுடன் சேர்ந்திருக்க தந்தையுமில்லை,


உனக்கு ஆறுதல் கூற சகோதரனுமில்லை.


(பின் வருமாறு கவிஞர்) ஒருவர் கூறுவதைப் போல் நீ மாறி விடுவாய்.


எனது குடும்பத்தினர் பூமியின் வயிற்றில் என்னை ஒப்படைத்து விட்டுத் திரும்பிச் சென்று விட்டார்கள், எனக்கு ஏற்பட்ட தனிமையே?!


கஷ்டப்படும் ஏழையாக என்னை விட்டுச் சென்றார்கள், வெறும் அழுகை மாத்திரம் தான் என்னிடம் உள்ளது, நடந்து முடிந்த எதுவுமே நடக்காதது போல் இருக்கிறது, நான் எச்சரிக்கப்பட்ட யாவும் வந்து விட்டது.


அவை தான் புழுதியைப் போல் எனது (கபன் எனும்) வெண்ணிற ஆடையில் ஒட்டிக் கொண்ட சொத்துக்கள்.


தோழா! என்னையும் என் நிலையையும் கண்டால் நிச்சியமாக நீ அழுது விடுவாய்!


அங்கு, தான் ஒருவன் தனிமையின் வீட்டையும்,வியக்கத்தக்க பயங்கரமான தங்குமிடங்களையும் கண்டு கொள்வான். ஒரேயொரு வினாடியில் அவன் இழிவடைந்த (உலக) வீட்டிலிருந்து நிறந்தரமான சுவன வீட்டை நோக்கிப் பயணிக்கிறான்.


மேலும் அவன் ஒரே வினாடியில் உலகத்தின் கஷ்டங்களிலிருந்து விடுபட்டு மறுமையின் வசதியை நோக்கிப் பயணிக்கிறான், தீயவர்களுக்கு அன்மையி லிருந்து அடக்கியாளும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வின் பக்கம் பயணிக்கிறான்.

(உலகத்தின்) ஏமாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டு விட்டது, எனவே ஒரு அடியானுக்கு மறுமையில் எழுப்பப்படும் போதும், அல்லாஹ்வின் பக்கம் மீளும் போதும் ஏற்படும் கஷ்டங்கள் விளங்கிவிடும், (உலகத்தின்) கேளிக்கைகளும் ஏமாற்றங்களும் முடிந்து அவைகளுக்கான கூலிகள் காத்திருக்கின்றன.


உனது பட்டோலை சுருட்டப்படும் நேரம் எப்படி இருக்கும்? "வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை" நற்செயல்கள் மீதா? அல்லது தீய செயல்கள் மீதா (அவ்வாறு சுறுட்டப்படும்)?. அல்லாஹ் வையும் இறுதி நாளையும் அதிகமாக மறந்திருந்த அந்த நாட்களை எண்ணி எண்ணி நீ மிகவும் வருத்தப்படுவாய். இதோ இந்த உலகமும் அதிலுள்ளவைகளும் முடிந்து விட்டன. அதன் நாட்களும் விரைவாகக் கழிந்து விட்டன. உனக்கு முன்னால் இருக்கும் யதார்த்தமான மருமை வாழ்க்கையை நோக்கி பயணிக்கு முகமாக உனது உயிரைப் படைத்தவனித்தில் நீ ஒப்படைக்கிறாய், ஒரே வினாடியில் குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக (கூட) இருக்காத நிலைக்கு நீ மாறி விடுகிறாய். மருமையின் தங்குமிடங்களில் முதலாவது வீட்டை நீ சென்றடைந்து, ஒரு புது வாழ்க்கையை ஆரம்பித்தால் எப்படியிருக்கும்? -"வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை" - ஒன்றில் அது சந்தோசமான வாழ்க்கை யாகும் அல்லது அது துக்ககரமான வாழ்க்கையாகும்.


மண்ணரைவாசிகளின் நிலமை எப்படி யிருக்குமோ!!!


பாழடைந்த இடங்களிலும், இருண்ட குகைகளிலும் காணப்படும் எத்தனை மண்ணறைகள் அதிலுள்ள வர்களுக்கு சந்தோசத்தையும், பிரகாசத்தையும் நிறப்பி யிருக்கும். அதே நிலையில் ஒளியேற்றப்பட்டு மக்கள் சந்தோசமாக உலா வரும் இடங்களில் இருக்கும் எத்தனை மண்ணறைகள் நிரந்தரன வேதனையிலும் (ஜஹீம் எனும்) நரகமாகவும் இருக்கும்.


அடுத்தடுத்து மக்கள் நெருக்கமாகக் குடியிருக்கும் ஒரே மையவாடியில் வித்தியாசமான பரிபாலனம், "வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை" - ஒரு புறம் அல்லாஹ்வின் மகத்தான திருப்தியின் இன்பத்தில் ஒரு ஏழை மனிதன் புரள்கிறான், மறு புறம் (ஜஹூம்) எனும் நரகத்தின் அடித்தட்டிலும் நிலையான வேதனையிலும் சில மண்ணரைகள் காணப்படும். அதிலுள்ளவர்கள் சத்தமிட்டு அழைப்பார் கள் ஆனால் அவர்களுக்கு விடையளிக்க எவரும் இருக்கமாட்டார்கள், கூடவே இறங்கும்படி வேண்டுவார் கள் அதற்கும் விடையளிக்க எவரும் இருக்கமாட்டார்கள்.


இன்ஷாஅல்லாஹ் இரண்டாம் பகுதி விரைவில் .. 

இந்த கட்டுரையை அவசியம் படிக்கவேண்டும். 




நூலாசிரியர்


அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் பின் அப்துர்ரஹ்மான் அஸ்ஸுஹைபானி


தமிழாக்கம்.


மௌலவி: அப்துல் சத்தார் மதனி M.A


கருத்துகள்