அழகான மாளிகை🕍மண்ணறை வாழ்வு🏕
அழகான மாளிகை
மண்ணறை வாழ்வு என்று சொல்லப்படுவதால் புதைக்கப்பட்ட இடத்தில் தான் இறந்தவர்கள் இருப்பதாக எண்ணிவிடக் கூடாது. மரணிக்கும் மக்களில் அதிகமானோரை மண்ணில் புதைப்பதால் மண்ணறை வாழ்க்கை என்று நாம் அழைக்கின்றோம். கடலில் மூழ்கி மீனிற்கு இரையாகியவர்கள்; தீயில் கருகி சாம்பலானவர்கள்; மிருகங்களால் வேட்டையாடப்பட்டு உண்ணப்பட்டவர்கள் இவர்களுக் கெல்லாம் கப்ரு என்பது கிடையாது. ஆனால் மண்ணில் புதைக்கப் பட்டவர்கள் சந்திக்கும் மறைமுகமான வாழ்வை இவர்களும் கண்டிப்பாக சந்திப்பார்கள்.
இறந்து விட்ட நல்லடியார்களுக்கு அற்புதமான அழகான வீடு தயார் செய்து தரப்படும். அங்கே அவர்கள் மண்ணறை வாழ்வு என்ற மறைமுகமான வாழ்வை இன்பமாகக் கழித்துக் கொண்டிருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவின் போது நல்லவர்களுக்கு இப்படிப்பட்ட பாக்கியம் இருப்பதை உணர்ந்து கொண்டார்கள்.
பிறகு அவ்விருவரும் அம்மரத்தில் என்னை ஏற்றுக் கொண்டு போய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார் கள். நான் இதுவரை இப்படி ஓர் அழகான வீட்டைப் பார்த்ததே யில்லை. அதில் சில ஆண்களும், வயோதிகர்களும், இளைஞர் கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரும் இருந்தனர். பிறகு அவ்விருவரும் அங்கிருந்து என்னை அழைத்து மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசிக்கச் செய்தனர். அது மிகவும் அழகானதும், சிறப்பானதுமாக இருந்தது. அதில் வயோதிகர்களும், இளைஞர்களும் இருந்தனர். பிறகு நான் இருவரிடமும், "இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பித்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விபரங்களைச் சொல்லுங்கள்!" எனக் கேட்டேன். அதற்கு இருவரும், ''ஆம்! நீர் நுழைந்த முதல் மாளிகை சராசரி மூமின் களின் இருப்பிடம். அடுத்த மாளிகையோ உயிர் தியாகிகளின் இருப்பிடம். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயீல்" என்று கூறிவிட்டு, ''அப்போது உமது தலையை உயர்த்தும்!" என்றனர். நான் எனது தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம் போல் இருந்தது. அப்போது இருவரும் "இதுவே (மறுமை யில்)உமது இருப்பிடம்' என்றதும் நான், “எனது இருப்பிடத் தில் என்னை நுழைய விடுங்களேன்" என்றேன். அதற்கு இருவரும், 'உமது வாழ்நாள் இன்னும் மிச்சமிருக்கிறது; அதை நீர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே அதனை நீர் பூர்த்தி செய்ததும் நீர் உமது இருப்பிடம் வருவீர்' என்றனர்" என்று கூறினார்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி)
நூல்: புகாரி (1386)
சொர்க்கம் எடுத்துக்காட்டப்படும்
நல்லடியார் சந்தோஷமாக மண்ணறை வாழ்வை கழிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி அவருக்கு சொர்க்கம் காட்டப்படும். அதைப் பார்த்து அவர் சந்தோஷம் அடைந்து கொண்டே இருப்பார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக்காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாக வும், நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக்காட்டப்படும்.) மேலும், "அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்றவரை இதுவே (கப்றே) எனது தங்குமிடம்” என்றும் கூறப்படும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்:புகாரி (1379)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்லடியாருக்கு நரகத்தில் ஒரு வாசலைக் காட்டுங்கள் என்று கூறப்படும்.
நரகத்தின் ஒரு வாசல் அவருக்குக் காண்பிக்கப்பட்டு நீ அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்திருந் தால் இதுதான் உனது இடமாக ஆகியிருக்கும். (ஆனால் நீ மாறு செய்யவில்லை. எனவே இதிலிருந்து தப்பித்து விட்டாய்.) என்று கூறப்படும். அப்போது அவர் மிகவும் சந்தோஷமும், பரவசமும் அடைவார். பிறகு இவருக்கும் சொர்க்கத்தின் ஒரு வாசலைத் திறந்து விடுங்கள் என்று கூறப்படும். சொர்க்கத் தின் வாசல் அவருக்காக திறக்கப்பட்டு இதுதான் அல்லாஹ் உனக்கு ஏற்படுத்திய உனது இடமாகும் என்று கூறப்படும். அப்போது அவர் சந்தோஷமும், பரவசமும் அடைவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : தப்ரானீ (2680)
திருப்தியான வாழ்க்கை
உலக வாழ்வில் எவ்வளவுதான் இன்பங்களை மனிதன் அடைந் தாலும் திருப்தி அவனுக்குக் கிடைப்பதில்லை. இதனால் நிம்மதி யின்றி செல்வத்தைத் தேடிக் கொண்டே வாழ்நாளைக் கழித்து விடு கிறான். ஆனால் நல்லவர்களுக்கு மண்ணறை வாழ்க்கை என்பது திருப்திக்குரியதாகவும், சந்தோஷத்திற்குரியதாகவும் இருக்கும். சத்தியத்திற்காக உயிர் நீத்த நபித்தோழர்கள் இப்படிப்பட்ட நிலையை அடைந்துள்ளார்கள் என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
'பிஃரு மஊனா' (என்னுமிடத்தில் பிரச்சாரத்திற்காகச் சென்ற தமது) தோழர்களைக் கொன்றவர்களுக்குத் தீங்கு நேர - அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூசுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த) ரிஅல், தக்வான் மற்றும் உஸய்யா ஆகிய குலத்தினருக்கு கேடு நேர- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முப்பது காலை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தித்தார்கள். பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்களின் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்று அருளப்பட்டது. அதை நாங்கள் ஓதி வந்தோம். பின்னா ளில் அது (இறைவனால்) நீக்கப்பட்டு விட்டது. " 'நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தி அடைந்து விட்டான். நாங்கள் அவனைக் குறித்து திருப்தி அடைந்தோம்' என்று எங்கள் சமு தாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்" என்பதே அந்த வசனம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2814)
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!