சுய விசாரணை செய்தல்
அல்லாஹ் கூறுகின்றான்;
"நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.” அல் ஹஷ்ர் கஅ.
செயல்கள் முடிந்ததும் (ஆத்மாவை) விசாரணைக்கு உட்படுத்துவதையே இத்திரு வசனம் குறிக்கிறது. ஆகவே தான் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்; (மறுமையில்) விசாரணைக்கு நிறுத்தப் படுவதற்கு முன்னர் நீங்களே சுய விசாரணை செய்துக் கொள்ளுங்கள். மேலும் ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; ஒரு இறை விசுவாசி தன் ஆத்மாவின் மீது வலிமைகொண்டவன். ஆகவே அதை விசாரணைக்கு உட்படுத்துவான். மேலும் அவர்கள் கூறினார்கள்; அவன் திடீரென ஒரு பொருளைக் கண்டு வியந்தால் அல்லாஹ் வின் மீது ஆணையாக உன்னை அடைய என்னிடம் எத்தகைய உபாயமும் இல்லை, உனக்கும் எனக்கு மிடையில் திரையிடப் பட்டுள்ளதால் என்னிடமிருந்து நீ விழகி நில். எனக் கூறி அப்பொருளை (ஆத்மாவுக்கு) முழுமையாக அநுபவிக்க விடமாட்டார். பிறகு அதை நோக்கி "நான் இதை நேசிக்கவில்லை,இதற்கும் எனக்கும் எத்தகைய் தொடர்பும் இல்லை? அல்லாஹ் வின் மீது ஆணையாக நான் இதற்கு ஒரு போதும் நெருங்கவும் மாட்டேன் எனக் கூறுவான்.
உண்மையில் இறைவிசுவாசிகள் திருக் குர்ஆனுடன் பிணைக்கப்பட்டவர்கள், அது அவர்களை அழிவுக்கு தள்ளிவிடமாட்டாது. மேலும் ஒரு இறை விசுவாசி உலகின் கைதியாவான் அது அவனை விடுதலை செய்யவே முயல்கிறது, மரணிக்கும் வரை அவன் எதற்கும் அஞ்சவே மாட்டான், அவனுடைய சகல உருப்புகளுக்கும் குறிப்பாக நாவு, பார்வை, கேள்விப்புலன் ஆகியவை களுக்கு (மறுமையில்) பதில் சொல்ல வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது.
ஒரு நாளின், அல்லது மாதத்தின் அல்லது வருடத்தின் இறுதியில் உலகில் உள்ள வியாபாரிகள் தங்கள் வியாபார நடவடிக்கை களுக்கு அவர்களுடைய பங்காளிகளிடம் விசாரணை செய்வார்கள். அடியானும் தன் ஆத்மாவுக்கு நிபந்தனைகள் விதிக்க அதிகாலையில் அவசியம் நேரம் ஒதுக்கிக் கொள்வதுடன், அவனுடைய ஆத்மா செய்த அனைத்து விடயங்கள் தொடர்பாக விசாரணை செய்ய மாலையிலும் சில மணி நேரங்களை ஒதுக்கக் கொள்வது கட்டாயமாகும்.
சுய விசாரணை என்பது வியாபார மூல தனத்தின் இலாபத்தையும் நஷ்டதையும் சரி பார்த்து கூடுதல் குறைவுகளை அறிந்து கொள்வது போல், சன் மார்க்கத்தின் மூல தனமான கடமையாக்கப் பட்ட வணக்கங்களையும் அதனுடைய இலாபமாகிய நல்லொழுக்கங்களையும், நபிலான வணக் கங்களையும், அதன் நஷ்டமாகிய பாவச் செயல்களையும் (விளங்கி) சரி பார்பார்த்துக் கொள்வதை குறிக்கும். (இதன் அடிப்படை யில் ஒரு அடியான்) முதலில் கணக்குப் பார்க்க வேண்டியது கடமையாக்கப் பட்ட வணக்கங்க ளிலாகும். ஒரு குற்றத்தை செய்திருந்தால் விடுபட்ட வணக்கங்களால் அதை ஈடு செய்வதன் மூலம் அந்த ஆத்மாவுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
அறுபதாவது வயதில் வாழ்ந்து கொண்டி ருந்த இப்னு ஸம்மா என்ற பெரியார் தன்னை ஒரு முறை சுய விசாரணைக்கு உட்படுத்தினார், அப்போது அவர் வாழ்ந்த ஆயுலின் நாட்களை கணக்கிட்டுப் பார்த்ததில் அவை இருபத்தோ ராயிரத்து ஐநூறு நாட்கள் என்பதை அறிந்ததுமே உறத்த குரலில் சப்தமிட்டார். "எங்களுடைய துக்கமே! இருபத்தோராயிரத்து ஐநூறு பாவங்களுடன் இறைவனை சந்திப்பதா!? அதுவும் தினசரி செய்தபத்தாயிரம் குற்றங்களுடனுமா?” எனக் கூறி விட்டு மயக்க முற்று விழுந்த அவர்களுடைய உயிர் அப்போதே பிரிந்து விட்டது, உடனே அங்கிருந்தவர்கள் "ஓரே பாய்ச்சலில் சுவனத் துக்கு சென்றவரே!” என்ற ஒரு அசரீரி சப்தத்தை செவிமடுத்தார்களாம். ஆகவே ஒவ்வொரு அடியானும் நாளாந்தம் அவன் சுவாசித்த மூச்சுகளினதும், ஒவ்வொரு மணி நேரங்களிலும் அவனுடைய இதயத்தாலும் பிற உறுப்புகளாலும் வெளியான தவறு களுக்காக (ஆத்மாவை) விசாரணைக்கு உட் படுத்த வேண்டும். உதாரணத்துக்கு ஒரு மனிதன் செய்யும் குற்றங்களின் எண்ணிக்கையளவு கற்களை அவனுடைய வீட்டுக்கு எறிந்து வந்தால் கூட குறுகிய காலத்தில் அந்த வீடே நிறைந்து விடும். ஆனால் மனிதர்கள் செய்யும் குற்றங்களை (அவர்கள் ஒரு போதும்) கணக்கிட்டுப் பார்ப்பதில்லை, (உண்மையில்) அவையனைத்தும் பதியப்படுகின்றன, அல்லாஹ் கூறுகின்றான்.
أَحْصَاهُ اللَّهُ وَنَسُوهُ .
அதை அல்லாஹ் கணக்கிட்டு வைத்துள்ளான்.
அவர்கள் அதை மறந்து விட்டனர். (அல்குரான் )
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!