தீயவர்களின் மண்ணறை வாழ்க்கை வேதனையின் ஆரம்பம்
தீயவர்களின் உயிர் வாங்கப்படும் போதே அவர்களுக்கு வேதனை ஆரம்பமாகி விடுகின்றது. இறைநிராகரிப்பாளர்களின் உயிர் வாங்கப்படும் போது அவர்களுக்குக் கொடுக்கப்படும் வேதனையைப் பற்றி பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது.
(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகு களிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது "சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!" என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!
அல்குர்ஆன் (8:50)
அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக் கும்? அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடியதை அவர்கள் பின்பற்றியதும், அவனது திருப்தியை வெறுத்த துமே இதற்குக் காரணம். எனவே அவர்களின் செயல்களை அவன் அழித்து விட்டான்.
அல்குர்ஆன் (47:27)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்
மலக்குகள் உயிரை வாங்கும்போது நாம் நல்லவனாக வாழ்ந் திருக்கக் கூடாதா? என்ற எண்ணம் கெட்டவனுக்கு ஏற்படுகிறது. அப்போது தான் ஒவ்வொரு பாவியும் தான் செய்த பாவங்களை நினைத்து வருத்தப்படுவான். நன்மையை செய்வதற்கு இன்னும் சிறிது காலம் அவகாசம் அளிக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டு வான். ஆனால் அவனுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்காது.
எனவே மரணம் சம்பவிப்பதற்கு முன்பே மறுமை வாழ்வுக்குத் தேவையான நற்காரியங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இறந்த பிறகு இறைவனிடம் மன்றாட வேண்டி வரும். அப்போது எவ்வளவு மன்றாடினாலும் அதற்கு எந்தப் பயனும் இல்லை.
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! "இறைவா! குறைந்த காலம்வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே" என்று அப்போது (மனிதன்) கூறுவான். அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் (63:10)
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!" என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
அல்குர்ஆன் (23:100)
பாவமன்னிப்பின் வாசல் அடைக்கப்படும்
மலக்குகள் உயிரை கைப்பற்றுவதற்காக வருவதற்கு முன்பே தாம் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டும். இறுதி நேரத்தில் கையேந்தினால் அந்த பிரர்த்தனைக்கு மதிப்பு இருக்காது. எனவே ஒவ்வொருவரும் மரண வேளையை அடைவதற்கு முன்பே பாவமன்னிப்புத் தேடிக்கொள்ள வேண்டும்.
அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் "நான் இப்போது மன்னிப்க் கேட்கிறேன்” எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தவருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
அல்குர்ஆன் (4:17)
(முஹம்மதே!) வானவர்கள் அவர்களிடம் வருவதை, அல்லது உமது இறைவன் வருவதை, அல்லது உமது இறை வனின் சில சான்றுகள் வருவதைத்தான் அவர்கள் எதிர் பார்க்கிறார்களா? உமது இறைவனின் சில சான்றுகள் வரும் நாளில் ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்களையும், நம்பிக்கை யோடு நல்லறங்கள் செய்தவர்களையும் தவிர எவருக்கும் அவரது நம்பிக்கை பயன்தராது. "நீங்களும் எதிர்பாருங்கள்! நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் (6:158)
ஃபிர்ஆவ்ன் என்ற கொடிய அரசன் மரணிக்கும் தருவாயில் ஈமான் கொண்டு விட்டதாகக் கூறினான். மரணம் சம்பவிக்கும் போது இவ்வாறு அவன் கூறுவதால் அல்லாஹ் அவனுடைய நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையால் அவன் மண்ணறையிலும், மறுமையிலும் தண்டிக்கப்படுகிறான்.
இஸ்ராயீலின் மக்களை கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் வேர்களைப் பின்தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது "இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்" என்று கூறினான். இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய் (என்று கூறினோம்.)
அல்குர்ஆன் (10:90)
குற்றம் புரிபவர்கள் மரணிப்பதற்கு முன்பே பாவமன்னிப்புத் தேட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒப்பாரி வைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமைநாளில் தாரால் ஆன (கீல்) நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவ ளாக அவள் நிறுத்தப்படுவாள்.
அறிவிப்பவர்: அபூமாலிக் கஅப் பின் ஆஸிம்
நூல் : முஸ்லிம் (1700)
தீய வாழ்வைப் பற்றிய முன்னறிவிப்பு
மரணிக்கும் தறுவாயில் இருக்கும்போது நல்லவருக்கு சொர்க்கம் உண்டு என்றும் கெட்டவருக்கு வேதனை உண்டு என்றும் முன்னறிவிப்புச் செய்யப்படும். இந்த இறுதி நேரத்தில் தான் தன்னுடைய மண்ணறை வாழ்வு எப்படி அமையும் என்பதை இறக்கவிருப்பவர் அறிந்து கொள்வார்.
அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கி தமது கைகளை விரிப்பார்கள். ''உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றையதினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்” (எனக் கூறுவார்கள்).
அல்குர்ஆன் (6:93)அல்லாஹ்வின் தூர்தர் (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவரை சந்திக்க அல்லாஹ்வும் விரும்புவான். யார் அவ்வாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரை சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்" என்று சொன்னார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா (நீங்கள் சொல்கிறீர்கள்)? அவ்வாறாயின், (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அல்லாஹ்வைச் சந்திப்பது என்பதற்கு பொருள்) அது வல்ல. மாறாக இறை நம்பிக்கையாளருக்கு (மரண வேளை யில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவனைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புவார். அல்லாஹ் வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறைமறுப்பாளருக்கு (மரண வேளை நெருங்கும் போது) அல்லாஹ் வழங்கவிருக் கும் வேதனை குறித்தும் அல்லாஹ் கோபம் கொண்டிருப்பது குறித்தும் அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான்" என்று (விளக்கம்) சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (5208)
புலம்பலும் சந்தோஷமும்
தனக்குக் கிடைத்துள்ள கஷ்டமான வாழ்வை நினைத்து கெட்டவர் அலறிக் கொண்டிருப்பார். தனக்குக் கிடைத்துள்ள இன்ப மான வாழ்வை எதிர்பார்த்தவராக நல்லவர் காத்துக் கொண்டிருப்பார். மரணித்த உடனே தீயவர்களின் புலம்பலும் நல்லவர்களின் சந்தோஷமும் ஆரம்பித்து விடுகிறது. இருவரில் யாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்? சிறிது நேரம் சிந்தித்துப் பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அந்த பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்; என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்" என்று கூறும்; அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், "கைசேதமே! என்னை எங்கு கொண்டு செல்கிறீர்கள்" என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மணிதர்களைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி (1380)
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!