மறுமையின் வீட்டை நோக்கிய பயணம்.(பகுதி மூன்று )

 


மறுமையின் வீட்டை நோக்கிய பயணம்.(பகுதி  மூன்று  )

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அல்லாஹ்வின் அடிமையே!


(ஸிராத் எனும்) பாலத்துக்கு மேலால் நீ ஒரு முறை நடந்தும் மறு முறை தவண்டும் பயணிக்கும் போது உனக்குக் கீழால் இருக்கும் இருண்ட (ஜஹன்னம் எனும்) நரகத்தின் நெருப்பு கொளுந்து விட்டு எரியும், அப்போது அதன் தீச்சுவாலை மேல் உயர்ந்து வருவதை நீ பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து பார்!!!


ஒரு கவிஞர் கூறினார்;


பாவமண்ணிப்புக் கோர எனது ஆத்மா மறுக்கிறது, அடியார்கள் அனைவரும் கண்ணிய மிக்க அல்லாஹ்வுக்கு முன் நிற்கும் போது தப்பிக்க வழியேது?


மலைகலைப் போன்ற பாவச் சுமைகளுடன் போதை வயப் பட்டோராக கப்ருகளிலிருந்து மனிதர்கள் எழுந்திருப்பார்கள்.


அவர்கள் கடந்து செல்வதற்காக தொங்க விடப்படும் (ஸிராத் எனும்) பாலத்தில் இடது பக்கத்தின் மீது தலை கீழாக விழுபவர்களும் உள்ளனர்.


(மேலும்) சுவன வீட்டை நோக்கிச் சென்றதும், மணப் பெண்கள் வரவேற்கக் கூடிய சிலரும் அவர்களில் உள்ளனர்.


பேரரசனாகிய அல்லாஹ் அவர்களை நோக்கி, எனது அடியானே! கவலைப்படாதே உனது பாவங்களை நான் மண்ணித்து விட்டேன் என்று கூறுவான்.


வேறு ஒரு கவிஞர் கூறுகிறார்;


(ஜஹீம் எனும்) நரகத்துக்கு மேல் (ஸிராத் எனும்) பாலம் தொங்க விடப்பட்டால், பாவிகள் மீது அது பாய்ந்து நீளமாகி விடும்.


ஒரு கூட்டத்தினர் (ஜஹீம் எனும்) நரகத்திலே அழிந்து கிடக்க, மற்றும் சிலர் சுவனங்களில் உறங்கிக் கொண்டிருப்பார்கள்.


திரையும் நீங்கி உண்மையும் தெளிவாகி விட்டது, கேடு நீடிக்க மரண ஓளங்கள் தொடர்கின்றன.


சகோதரனே! சங்கை மிக்க அல்லாவிடமிருந்து பெற்ற மகத்தான அடையாளமாக, நல்லறங்கள் செய்தவர்களின் கைகளும் முகங்களும் வெண்மையான நிலையில் அவர்கள் கப்றுகளிலிருந்து வெளியேறுவதை நினைவு கூர்ந்து பார். அவர்களுக்கு எவ்வளவு மகத்தான அந்தஸ்து? வானவர்கள் அவர்களைநோக்கி "இதுவே உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள்" (எனக் கூறியவர்களாக) எதிர் கொள்வார்கள்.


அடியானே! அந்த மகத்தான சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வை வணங்குவதற்காக விழித்தி ருந்த (உனது) கண்களையும், அவனுக்கு முன்னால் நீண்ட நேரம் நின்றிருந்த (உனது) கால்களையும் நீ பாராட்டுவாய்.


பின்னர் சாட்சியாளர்கள் எங்கே? எ9ன உன்னிடத்தில் கேட்கப்படும். அப்போது உன்னைச் சுமந்திருந்த பூமியும், உனக்கு நிழல் கொடுத்த வானமும் (உனக்கு சார்பாக) சாட்சி கூறும், உடனே அல்லாஹ் (அவைகளிடத்தில்) நீ உண்மை கூறிவிட்டாய் நன்மை செய்து விட்டாய் எனக் கூறிவிட்டு, எனது அடியானை இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளுக்கும், மகத்தான திருப்தியின் பாலும் அழைத்துச் செல்லுங்கள் எனக் கட்டளையிடுவான். அவனுடைய பட்டோலை வலக்கரத்தில் கிடைக்கப் பெற்ற (மகிழ்ச்சியால்) உலகத்தார் அனைவருக்கும் முன்னிலையில் "வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்" என்றும்,-எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - நான் திருப்தியான வாழ்க்கை யில் இருக்கிறேன் என்றும் சப்தமிட்டுக் கூறுவான். சுவர்க்கத்தின் எல்லாக் கதவுகளும் அவனுக்காக திறக்கப்படும், மேலும் ஹூருல் ஈன்களும், இளமை மாறாத சிறுவர்களும் அவர்கனைச் சுற்றி வருவார்கள், (முடிவாக) கஷ்டங்களும் களைப்பும் நீங்கி விடும். 


சங்கை மிக்க சகோதரனே!


மேலும் சிந்தித்துப்பார். அல்லாஹ்வின் அழைப்பாளர் அநீதி இழைத்த மனிதனை நோக்கி, "இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வின் முன் எடுத்துக்காட்டுவதற்காக எழுந்திருப்பாயாக" என அழைப்பு விடுத்து, அதிகமான பாவங்களைச் செய்த அவனுடைய இரவுகளைப் பற்றியும், வீணாகக் கழித்த பகல்களைப் பற்றியும் அதில் அவன் என்னென்ன தீமைகளைச் செயதான் என்றும் கேள்விகள் கேட்பதை சிந்தித்துப்பார். அல்லாஹ்வின் அழைப்பாளி பின்வருமாறு அவனிடத்தில் கேட்பார்;


நீ என்ன நன்மையை எதிர்பார்க்கிறாய்?


நீ என்ன நற்காரியத்தை முற்படுத்தி யிருக்கிறாய்?


அப்போது (அவனுடைய) கால்கள் பதில்கூறும்; (இறைவா!) ஹராமானவை களுக்கு மாத்திரமே நான் நடந்து சென்றேன், உனது கடமைகளில் நான் குறைவு செய்து அத்து மீறினேன்.


அவனுடைய கைகள் பேசும்; எவ்வளவு பாவங்களையும், தடுக்கப்பட்ட விடயங்களை செய்திருக்கிறேன்!


மேலும் அவனுடைய கண் சொல்லும் ; (இறைவா!) இவன் என்னை தடுக்கப் பட்டவைகளாலே சுகம் அனுபவிக்கச் செய்தான், மானக்கேடான விடயங்களிலும் பாவச்செயல் களிலும் என்னைக் கொண்டு அவனை அழகு படுத்திக் கொண்டான். அப்போது அவனுடைய மர்மஸ்தானங்களும் ஏனைய உறுப்புகளும் அவைகள் செய்த பாவங்களுக்காக சாட்சி கூறும், பின்னர் அவைகளுடைய முறைப்பாடுகளை அல்லாஹ்வின் முன் எடுத்துக் காட்டப்படும்.




இன்னும் அவனுடைய காதுகள் இறைவா! தடுக்கப் பட்டவைகளால் நான் சுகம் அனுபவித்தேன் எனக் கூறும்.


ஒவ்வொரு உறுப்புக்களும் செய்த பாவங்களுக்காக அங்கே சாட்சி கூறிய பின்னர் அவைகளுடைய இறைவனுக்கு முன்னால் அவர்கள் மானபங்கப் படுத்தப் படுவார்கள். இதைத்தான் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்;


‎‫وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ‬‎


அல்லாஹ்வுடைய எதிரிகளை நரகத்தின் பக்கம் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அதன் சமீபமாக வந்ததும்) அவர்கள் (விசாரணைக் காக நல்லோரில் இருந்து) பிரித்து நிறுத்தப் படுவார்கள்.


‎‫حَتَّىٰ إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمۡ وَجُلُوَدُهُمْ وَجُلُوَدُهُمْ يَعْمَلُونَ‬‎


அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவை களைப் பற்றி சாட்சி கூறும்.


‎‫وَقَالُوا لِجُلُودِهِمْ لِمَ شَهِدتُّمۡ عَلَيۡنَا قَالُوا أَنطَقَنَا اللَّهُ الَّذِي أَنَطَقَ وَهُوَ خَلَقَكُمْ أَوَّلَ مَرَّةٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ‬‎


அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, "எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?” என்று கேட்பார்கள். அதற்கு அவைகள், "எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக் கின்றீர்கள்" என்றும் அவை கூறும். (சக/ககூ- உக )


அந்நேரத்தில் அவனைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் கூறுவான்; "எனது வானவர்களே! அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! அவனை நரகத்தில் தள்ளுங்கள் என் விடயத்தில் வெட்கம் குறைந்த அவனுடன் எனது கோபம் அதிகரித்து விட்டது” அப்போது அந்த ஆத்மா மீண்டும் இவ்வுலகத்துக்கு திருப்பி அனுப்பப் பட்டால் அல்லாஹ்வின் கடமைகளை நல்ல முறையில் நிறைவேற்றுவதாக ஆசை வைக்கும். பின்னர், கொந்தளிப்புடனும் கடும் இரைச்சலுடனும் கொளுந்து விட்டு எரியும் நரக நெருப்பின் முன்னெ நிறுத்தப்பட்டும். உடனே அதன் தலை மற்றும் விலாப்புறமாக நரகத்தில் முகம் குப்புற தள்ளப்படும், அப்போது அது நரகத்தின் இருண்ட பாதாலங்களில் விழுந்து அதன் அடித் தளங்களில் புரளும்.


மனோ இச்சைகளும், வீ ண் விலையாட்டுக்களும் முடிவுற்று கண்ணியத் துடனும் சங்கையுடனும் வாழ்ந்த அந்த ஆத்மா இழிவடைந்து விட்டது.


நரகத்தில் இருக்கும் இவர்களுக்கும் சுவனத்தில் இருப்பவர் களுக்குமிடையில் எவ்வளவு பெரிய வித்தியாசம்!!! வணக்கத்துக்குறிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.



இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்...

கருத்துகள்