தீயவர்களுக்கு மலக்குகளின் வரவேற்பு
கெட்டவன் மரணித்தவுடன் அவனது உயிரை வானவர்கள் எடுத்துச் செல்லும்போது அவன் இழிவையும் அவமானத்தையும் அடையும் விதத்தில் வானவர்கள் அவனுக்கு மோசமான வரவேற்பு கொடுப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைமறுப்பாளன் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து மறுமையை நோக்கியவனாக இருக்கும் போது கருப்பு முகங் களைக் கொண்ட வானவர்கள் வானத்திலிருந்து அவனிடம் வருவார்கள். (உயிரைக் கொண்டு செல்வதற்காக) அவர் களுடன் துணிகள் இருக்கும். அவனது பார்வை எட்டும் தூரம் வரை வானவர்கள் அமர்ந்திருப்பார்கள்.
பின்பு உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமருவார். கெட்ட ஆன்மாவே அல்லாஹ்வின் கோபத்துடனும், அதிருப்தியுடனும் நீ வெளியேறு என்று கூறுவார். அப்போதுதான் அவன் உடலிலிருந்து உயிர் பிரித் தெடுக்கப்படும். ஈரமான கம்பளியில் உள்ள ரோமத்தை பிடுங்கு பவரைப் போல் வானவர் உயிரை வாங்குவார். உயிரை வாங்கிய பிறகு கண் சிமிட்டும் நேரம் கூட தன் கையில் வைத்திருக்கா மல் உடனே அந்த துணிகளில் உயிரைச் சேர்த்து விடுவார்.
பூமியில் இறந்து அழுகிப்போன உடலிலிருந்து வெளி வரும் துர்நாற்றத்தைப் போன்ற கெட்ட வாடை அதிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும். இந்த (கெட்ட) உயிருடன் (வானில்) வானவர்கள் ஏறிச் செல்வார்கள். அந்த உயிருடன் வானவர் கூட்டத்தை அவர்கள் கடந்து செல்லும் போதெல்லாம் இந்த கெட்ட ஆன்மா யாருடையது? என்று வானவர்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள். உலகில் அவன் அழைக்கப் பட்டுக் கொண்டிருந்த கெட்ட பெயரைக் கூறி இன்னாருடைய மகன் இன்னார் தான் என்று கூறுவார்கள்.
இறுதியாக அவன் இறுதி வானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவனுக்காக கதவைத் திறக்குமாறு கேட்கப் படும். ஆனால் அவனுக்கு கதவு திறக்கப்படாது. அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த இடத்திலே) இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படமாட்டாது. ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளை தண்டிப்போம் (7:40) கடைசி யில் பூமியில் உள்ள சிஜ்ஜீன் என்ற ஏட்டில் இவனது கணக்கை பதிவு செய்யுங்கள் என்று சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் அப்போது கூறுவான்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல்: அஹ்மத் (17803)ஓர் இறைமறுப்பாளரின் உயிர் பிரியும் போது அந்த உயிரி லிருந்து துர்வாடை கிளம்பும். வானிலுள்ளோர் அதை சபிப்பார் கள். வானுலகவாசிகள், “ஒரு தீய ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது'' என்று கூறுவார்கள். அப்போது "இதை இறுதித் தஹ்ணை வரை கொண்டு செல்லுங்கள்" என்று கூறப்படும். இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகையில், தம்மிடமிருந்த மிருதுவான துணியை தமது மூக்குவரை "இப்படி" கொண்டு சென்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (5119)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறந்தவன் இறை மறுப்பாளனாக இருந்தால் வானவர்கள் அவனுடைய ஆத்மா வைத் துணியில் வைத்து வானத்தை நோக்கி கொண்டு செல்வார்கள். அப்போது (வானலோகத்தில் உள்ள) வானவர் கள் தங்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு கெட்ட ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது என்று கூறுவார்கள். வானவர் கள் அந்த ஆன்மாவுடன் மேலே ஏறிச் செல்வார்கள். அப்போது (கெட்ட ஆன்மாவே) அல்லாஹ்வின் வேதனையையும் இழிவையும் நற்செய்தியாகப் பெற்றுக் கொள் என்று கூறப்படும். பிறகு இறுதித் தவணை வரை கொண்டு செல்லுங்கள் என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி) நூல்: பைஹகீ (இஸ்பாது அதாபில் கப்ர்) (8)
தீயவர்களுக்கான விசாரணை
கெட்ட மனிதன் விசாரணைக்குச் செல்லும்போது அவனுக்கு பதட்டம் ஏற்படும். வானவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு அவன் சரியான எந்த பதிலையும் சொல்ல மாட்டான். பரீட்சையில் தோற்று விடுவான்.
கெட்ட மனிதன் நடுக்கத்துடனும் திடுக்கத்துடனும் மண்ணறையில் உட்கார வைக்கப்படுவான். எந்தக் கொள்கை யில் நீ இருந்தாய் என்று அவனிடத்தில் வினவப்படும். அதற்கு அவன் எனக்குத் தெரியாது என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா (4258)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் அடியானின் உடலை சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து "முஹம்மத் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?" எனக் கேட்பார். நிராகரிப்போனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், "எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்" என்பான். அப்போது அவனிடம் "நீயாக எதையும் அறிந்தது மில்லை; குர்ஆனை ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (1338)
பதில் கூறாதவனுக்கு தண்டனை
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான பதிலைக் கூறாத வனுக்கு சுத்தியலால் பலத்த அடி அவனுடைய பிடரியில் கொடுக்கப் படும். நெருப்பில் புரட்டப்படுவான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (கேள்வி கேட்ட) பிறகு இரும்பாலான சுத்தியால் (சரியான பதில் கூறாத) அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்:புகாரி (1338)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவனுக்கு நெருப்பா லான ஆடையை அணியக் கொடுங்கள். நெருப்பாலான விரிப்பைக் கொடுங்கள். நரகத்தின் வாசலை இவனை நோக்கி திறந்து விடுங்கள் என்று வானிலிருந்து ஒருவர் கூறுவார். நரகத்தின் சூடும், ஜூவாலையும் அவனிடத்தில் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடொன்று கோர்த்துக் கொள்ளும் அளவிற்கு மண் ணறை அவனை நெருக்கும். பிறகு கண்பார்வையற்ற வாய் பேசாத ஒருவர் அவனை (வேதனை செய்வதற்காக) நியமிக்கப் படுவார். அவருடன் இரும்பாலான சுத்தியல் இருக்கும். அதைக் கொண்டு மலையை அடித்தால் மலைகூட மண்ணாகி விடும். ஜின்களையும், மனிதர்களையும் தவிர கிழக்கிற்கும் மேற்கிற் கும் மத்தியில் உள்ள அனைத்தும் செவியேற்குமளவுக்கு அந்த சுத்தியலால் அவனை ஒரு அடி அடிப்பார். அவன் மண் ணாகி விடுவான். மீண்டும் அவனுக்கு ஆன்மா வழங்கப்படும்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல் : அபூதாவூத் (4127)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கெட்ட வாடையுடன் அசிங்கமான ஆடையுடன் கோரமான முகத்துடன் ஒருவர் (இறந்துவிட்ட கெட்ட) மனிதரிடம் வருவார். உனக்கு தீங்கு தரக் கூடியதை நற்செய்தியாகப் பெற்றுக்கொள். உனக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இதுதான் என்று கூறுவார். அதற்கு அவன் உன் முகமே மீண்டும் மீண்டும் தீய செய்தியைத் தரு கிறதே நீயார்? என்று கேட்பான். அதற்கு நான் தான் நீ செய்து வந்த தீமையான காரியங்கள் என்று பதில் கூறுவார். அவன் என் இறைவா மறுமை நாளை வரவழைத்து விடாதே என்று கூறுவான்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல்: அஹ்மத் (17803)
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!