உண்மையான தவ்பா நிச்சயமாக அனைத்துப் பாவங்களையும் அழித்துவிடும்.
நண்பா! நீயோ உன்போன்ற சிலரோ சிலவேளை இப் படி நினைக்கலாம். நான் கடந்த காலத்தில் செய்த அனை த்துப் பாவங்களுக்கும் தவ்பாச்செய்யத் தயாராக இருக்கி ன்றேன். ஆனால் அவற்றை அல்லாஹ் மன்னிப்பான் என்பதற்கு என்ன உத்தரவாதம். அப்படி மன்னிக்காவிட் டால் எனக்குத் தண்டனை உறுதி தானே! எனவே நான் ஒரேயடியாகத் திருந்தாமலேயே இருந்துவிடுகின்றேன் என்று எண்ணலாம். நிச்சயமாக இது சைத்தானின் தூண்டுதலால் ஏற்பட்ட எண்ணமாகும்.
இருப்பினும் நீநினைத்தது போன்றே ஸஹாபாக்களின் காலத்தில் குப்ரிலும் சிர்க்கிலும் பஞ்சமா பாதக பாவச் செயல்களிலும் புரண்டுவிட்டு திருந்தவிரும்பிய சிலரும் எண்ணியிருந்தார்கள்.
எனவே அப்படிப்பட்ட இருவரின் சம்பவங்களை இங்கு படித்துப்பார்!
அம்ருபின் ஆஸ் (றழி) இஸ்லாத்தை ஏற்ற சம்பவம்.
தனது சம்பவத்தை அவர்களே சொல்கின்றார்கள்..
நான் பல காலங்களாக வழிகேட்டிலேயே இருந்து விட்டேன். அல்லாஹ் என் இதயத்தில் இஸ்லாத்தைப் பற்றிய ஆர்வத்தைப் போட்டபோது நபிகளிடத்திலே வந்து நபியே! உங்கள் கையை நீட்டுங்கள். பைஅத்- உறுதிமொழி தருகின்றேன் என்று கூற நபியவர்களும் கையை நீட்டினார்கள்.அப்போது நான் திடீரென என் கையை இழுத்து மடக்கிக் கொண்டேன். உடனே நபிய வர்கள் அம்ரே! உனக்கென்ன நேர்ந்தது என்றார்கள். உடனே நான் ஒரு நிபந்தனை! என்றுகூற அதென்ன நிப ந்தனை? என்றார்கள். நானோ அல்லாஹ் எனது பாவங் களை மன்னிக்கவேண்டும். அதற்கு நீங்கள் உறுதியளிக்க வேண்டும், அது தான் நிபந்தனை என்றேன். அதற்கு நபியவர்கள் அம்ரே! உனக்குத் தெரியாதா? இஸ்லா த்தை ஏற்பது அதற்குமுன்னால் ஒருவர் செய்த பாவங்க ளை அழித்துவிடும், ஹிஜ்ரத் செய் தலும் அதற்குமுன்னர் அவர்செய்த பாவங்களை அழித்துவிடும். அவ்வாறே புனித ஹஜ் கடமையை நிறைவேற்றலும் அதற்கு முன்னர் அவர் செய்த பாவங்களை அழித்துவிடும் என்றார் கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
அடுத்த சம்பவம்:
நபியவர்களின் காலத்தில் பல கொலைகளும் விபச் சாரமும் செய்த ஒருமனிதர் இருந்தார். அவர் நபியவ ர்களிடத்தில் வந்து நீங்கள்சொல்லும் கடவுளும் உங்கள் கொள்கையும் நல்லவைதான். ஆனால் நான் பாவத்தி லேயே எனது காலத்தைக் கடத்திவிட்டேன். எனவே நான் இஸ்லாத்தை ஏற்பேன்.. ஆனால் நான் முன்செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் உண்டா? என்று வினவி னார். அப்போதுதான் பின்வரும் வசனம் இறங்கியது.
९९ தமக்குத்தாதே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே! அல்லாஹ்வின் றஹ்மத்தினை விட்டும் நீங்கள் நம்பிக்கையிழந்து நிராசையாகி விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். அவன் மிக்க மன்னிப்பவனும் கருனை யாளனுமாய் இருக்கின்றான் என்றவசனம் இறங்கியது.
அல்லாஹ் என்னையும் மன்னிப்பானா?
நண்பா! இந்தக் கவலை உனக்குத் தேவையற்றது, வல்ல அல்லாஹ்வைப் புறக்கணித்துவிட்டு விக்கிரகங்ளை வணங்கிய.. ஈஸா(அலை)வையும் மர்யத்தையும் வண ங்கிய, அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த காபிர்களையே அவர்கள் தவ்பாச்செய்யத் தயாராக இருந்தால் தானும் மன்னிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றானே. அல்லாஹ்வை நம்பாமல் முஸ்லிம்களைப்போல நடித் துக் கொண்டிருந்த முனாபிகீன்களைப் பார்த்தே நீங் கள் திருந்தத் தயாராக இருந்தால் நான் மன்னிக்கத் தயாராக இருக்கின்றேன் என்று கூறுகின்றானே. அப்படியான கருனையாளனான அல்லாஹ்வின் பார்வையில் உனது பாவங்களை மன்னிப்பது வெறும் தூசு போன்றது. அவ ன் எப்பேர்ப்பட்ட பாவியையும் மனந்திருந்தி வந்தால் மன்னிக்கத் தயார் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டான். எனவே நீயும் அப்படியானால் நானும் திருந்தி வாழத்தயார்! என்று அறிவிப்பாயா? அல்லாஹ் வின் பெயரால் அந்த உறுதிமொழியை எடுக்க நீ தயாரா?? அல்லாஹ் சொல்வதைப் பார்!.
لقَد كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ خَالِتْ ثَلَاقَةً وَمَا مِنْ إِلَيْوهِ إِلَهَّا إِلَيْوهِ إِلَهَّا لَّمۡ يَنتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ
أَفَلَا يَتُوبُونَ إِلَى اللَّهِ وَيَسْتَغْفِرُونَهُ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
நிச்சயமாகவே அல்லாஹ் மூன்றுபேர் என்று கூறிய (கிருஸ்த்த)வர்கள் நிச்சயமாகக் காபிராகி விட்டார்கள். ஒரேயொரு கட வுளைத் தவிர வேறுகடவுளே இல்லை. அவர்கள் இவர்களது அச்செயலிலிருந்து விலகிக்கொள் ளாவிடில் அவர்களில் காபிரானவர்களை நிச்சயமாக நரக நெருப்பு தீண்டும். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு திருந்திட மாட்டார்களா? அல் லாஹ் மிக்க மன்னிபவனாக இருக்கின்றான்.( அல் மாயிதா 73-74)
நயவஞ்சகர்கள் நரகத்தின் அடிப்பாகத்தில் கிடப்பார்கள். அவர்களுக்கு யாரும் உதவ முடியாது. இப்பினும் அவர் களின் தமது பாவத்தை உணர்ந்து திருந்தி தவ்பாச் செய்தவர்களை, மனதால் திருந்தியவர்களை, அல்லாஹ் வின் வழியைப் பற்றிப்பிடித்தவர்களை, தமது மார்க்க த்தை அல்லாஹ்வுக்கு மட்டுமென ஆக்கியவர்களைத் தவிர.. இவர்கள் இறை விசுவாசிகளுடன் இருப்பார்கள். (ஸூரா அந்நிஸாஃ 145,146)
வஹ்ஸியை மன்னித்தவன் உன்னை மன்னிக்க மாட்டானா?
இதுவும் மனந்திருந்தி மாமனிதனான ஒரு பாவி மனி தனின் சம்பவம்.. படித்துப் பார்..
எண்ணிலடங்காத பல கொலைகளையும் கற்பழிப்புக் களையும் மற்றும் பல பாவச்செயல்களையும் புரிந்த ஒரு மனிதன்.
நபியவர்களின் அன்புக்குரியவரான பாசமிகு சிறிய தந் தையான ஹம்ஸா(றழி)யைப் பின்னால் பதுங்கியிருந்து குத்திக்கொண்றவர். கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கத் தானே செய்யும். நபியவர்களிடத்தில் இவர் இஸ்லாத் தை ஏற்கும் எண்ணத்தில் வந்தார். அப்போது அவர் இஸ்லாம் நல்லதுதான் ஆனால் நானோ பாவங்கள்பல புரிந்திருக்கின்றேன் பலரை அநியாயமகக் கொலை செய்துள்ளேன். பல பெண்களைக் கற்பழித்துள்ளோன். இந்தப் பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பு உண்டா? என்று கேட்டார். உடனே நபியவர்கள் பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்..
'றஹ்மானின் நல்லடியார்கள் யாரெனில் அவர்கள் அல்லாஹ்வோடு வேறு எதையும் இணைகற்பிக்காது, அல்லாஹ் ஹராமாக்கிய உயிர்கள் எதையும் கொல் லாது, விபச்சாரமும் செய்யாதிருப்பார்கள். இவற்றை யார் செய்தார்களோ அவர்கள் அதற்கான தண்டணை யைப் பெறுவார்கள். இருப்பினும் அவர்களில் தவ்பாச் செய்து விசுவாசங்கொண்டு நல்லமல்களையும் புரிப வர்களைத் தவிர அல்லாஹ் இப்படியானவர்களின் பாவச்செயல்களை நற்செயல்களாக மாற்றுவான். அல் லாஹ் மிக்க மன்னிப்பவனும் இரக்கமுள்ளவனு மாவான்.
(..68-70)
என்ற வசனத்தை ஓதிக் காட்டியதும்..
இதைக்கேட்ட வஹ்ஸி இதென்ன இவ்வளவு நிபந்த னைகள்? விசுவாசங்கொண்டு, தவ்பாச்செய்து நல்ல மல்களெல்லாம் செய்தால்தான் மன்னிப்பா? என்னால் அப்படிச்செய்ய முடியாவிட்டால் மன்னிப்புக் கிடைக் காதா? என்றார். அதற்கு நபியவர்கள் பின்வரும் வசன த்தை ஓதிக் காட்டினார்கள். ..
நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு இணைவைக்கப் படுவதை மன்னிக்கவே மாட்டான்.அதல்லாதவற்றை தான் நாடியோருக்கு மன்னிப்பான்.என்ற வசனத்தைக்
கூறியதும் அதற்கு அவர் அல்லாஹ் தான் நாடியோருக் குத்தான் மன்னிப்பதாக சொல்கின்றான். அவன் என்னை மன்னிக்க விரும்பாவிட்டால் என்னசெய்வது என்று கேட் டார். அதற்குத்தான் நபியவர்கள் பின்வரும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்..
قُلْ يَنعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ الَّلَّهِ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
"தமக்குத்தாதே அநியாயம் செய்து கொண்ட எனது அடி யார்களே! அல்லாஹ்வின் றஹ்மத்தினை விட்டும் நீங் கள் நம்பிக்கையிழந்து நிராசையாகி விடாதீர்கள். நிச்ச யதாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப் பான். அவன் மிக்கமன்னிப்பவனும் கருனையாளனுமாய் இருக்கின்றான். (ஸூரா ஸூமர் 53).
இதைக்கேட்ட வஹ்சி இதற்குப்பின் என்னால் எப்படித் திருந்தாது இருக்கமுடியும்? எனக்கூறி அவ்விடத்திலே யே கலிமாவை மொழிந்து இஸ்லாத்தில் தன்னையும் இனைணத்துத் கொண்டார்.(பைஹகி, தாரீகுல் கபீர்.)
எனவே நண்பா! இவ்வளவு பாவங்கள் செய்து விட் டோமே இதற்கு மன்னிப்புண்டா? என நீ கலங்கவும் கூடாது. அதேவேளை நாமென்ன பெரிதாகப் பாவம் செய்துவிட்டோம் என உன்பாவங்களைத் துச்சமாக மதித்துவிடவும் கூடாது. ஏனெனில் அதிகபாவம் செய்த வனாயிலும் அதற்காக வருந்தினால் அல்லாஹ் மன்னி ப்பான். கொஞ்சம்பாவமே செய்திருப்பினும் இதெல்லாம் ஒருபாவமா? என துச்சமாக மதித்து தவ்பாச் செய்யாது நாளைக் கடத்துபவனை அல்லாஹ் கோபிக்கின்றான்.
எனவே இப்படிநினைப்பதே அல்லாஹ்வின் விசாலமாக கருனையின்மீது முழுமையான நம்பிக்கையின்மையினா லும் அவனது வல்லமை, அன்பு பற்றி சரியாக அறியாததாலும் அவன் மன்னிப்பானா? என்ற சந்தேகத்தாலும் தவ்பா எவ்வளவு சக்திமிக்கது என்பதைப் புரியாததா லும் ஏற்படுவதாகும்.
எனவே நீ பின்வரும் நான்கு இறைச்செய்திகளையும் சற்று உன்னிப்பாகக் கவனித்துப்பார்.
1- அல்லாஹ் சொல்கின்றான்....
" என் அருட்கொடை அனைத்து வஸ்த்துக்களையும் விட விசாலமானது." ( அல் அஃராப் 56)
2- அல்லாஹ் ஹதீஸ் குத்ஸியில் சொல்கின்றான்..
யார் நான் பாவங்களை நிச்சயம் மன்னிப்பேன் என
உறுதியாக நம்பியிருந்தாரோ அவரது பாவங்களை நான் மன்னிப்பேன். அவை எவ்வளவு அதிகமாயிருப்பினும் பொருட்படுத்த மாட்டேன். (ஸஹீஹூல் ஜாமிஉ 4330)
3- அல்லாஹ் கூறுகின்றான்..
"ஆதமின் மகனே! நீ எவ்வளவுதான் பாவங்கள் செய் திருந்தாலும் அதற்காக வருந்தி என்னிடம் பிரார்த்தித்து, நான் மன்னிப்பேன் என எதிர்பார்த்து இருப்பின் நான் அவற்றைப் பொருட்படுத்தாது மன்னித்து விடுவேன். ஆதமின் மகனே! உனது பாவச்சுமைகள் வானத்தின் எல்லையை எட்டுமளவுக்கு அதிகமாயிருப்பினும் என் னிடம் இதற்காக நீ தவ்பாச் செய்தால் அவற்றையெல் லாம் பெரிதுபடுத்தாமல் நான் மன்னித்து விடுவேன். ஆதமின் மகனே! நீ இப்பூமியவுக்கு பாவங்கள் செய் துவிட்டு பின் என்னை சந்திக்கும்வேளை இணை - சிர்க் மட்டும் வைக்காமல் வந்தால் நான் இப்பூமியளவுக்கு மன் னிப்பை உனக்குத் தரக் காத்திருக்கின்றேன்.
(திர்மிதி ஸ ஜாமிஉ 4338)
4-பாவத்திலிருந்து மன்னிப்புத்தேடியவன் பாவமே செய் யாதவனைப் போன்றவனாவான். ( இப்னுமாஜா: ஸ ஜாமிஉ 3008)
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!