அல்லாஹ்வை அஞ்சுவதும், அவன் மீது ஆதரவு வைப்பதும்
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன, (ஸலாத்) எனும் கருணையும், (ஸலாம்) எனும் ஈடேற்றமும் இறைத் தூதர்களுக்கும் நபிமார் களுக்கும் இறுதியாக வந்துதித்த எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் கிழையார்கள் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
அல்லாஹ்வை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் தன் பிரயாணக் களைப்பை அகற்றிக் கொள்ளவும், பாதையில் இருக்கும் பல்வேறு ஆபத்துகளில் இருந்து தன்னைக் காத்து, நேரான பாதையை அறிந்து கொள்ளவும் அவனுடைய இதயத்தில் சில பிரயாணப் பொருட்களை எடுத்துச் செல்வது அவசியமாகும்.
இதற்கு அவன் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டிய இரு பிரயாணப் பொருட்களாவன, அல்லாஹ்வை அஞ்சுவதும், அவன் மீது ஆதரவு வைப்பதுமாகும்.
காரணம் அல்லாஹ்வின் அச்சம் அவனை பாவத்திலிருந்தும், அவன் மீது ஆதரவு வைப்பது அவனை நிராசை இருந்தும் பாதுகாக்கும். கொள்வதில்
இதன் முக்கியத்துவத்தை அறிந்த முன்னோர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார்கள்;
அல்லாஹ்வை நோக்கிப் பயணிப்பவர் ஒரு பறவைக்கு நிகரானவர். இறைநேசம் அப்பறவையின் சிரமாகும், அவனை அஞ்சுவதும், அவன் மீது ஆதரவு வைப்பதும் அதன் இறக்கைகளாகும். இம்மூன்றும் ஆரோக்கியமாக இருக்கும் பறவையால் தைரியமாக எழுந்து பறக்க முடியும். சிரச் சேதம்செய்யப்பட்ட பறவையாயின் (அவ்விடத்திலே ) அது இறந்து விடும். இறக்கைகளை இழந்த பறைவையாயின் அது பிற வேட்டைப் பிராணியின் விருந்துக்கு இலக்காக வாய்ப்புகள் உண்டு.
ஆரோக்கியமாக இருக்கும் மனிதர் அல்லாஹ் வை பயப்படுவதும், இவ்வுலகை பிரிந்து (மரணித்து) செல்பவர் அல்லாஹ்வின் மீது ஆதரவு வைப்பதுமே சிறந்த வழிமுறை என சில ஸாலிஹான முன்னோர்கள் கருதுகின் றார்கள். வேறு சிலரோ இவ்விரண்டில் நடுநிலையும், இறை நேசம் மிகைத்து இருப்பதையுமே சிறப்பாக கருதுகின்றார்கள்.
வாஸிதி (ரஹ்) கூறினார்; இவ்விரண்டும் ஆன்மாக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இரு மூக்கணங்கயிர்களாகவே பார்க்கப்படும்.
அபூ உஸ்மான் அல் மஃரிபி கூறினார்; அல்லாஹ்வை அஞ்சாது அவன் மீது வெறும் ஆதரவு வைப்பவர் அவனை (வழிபடாது) வெட்டியாக இருப்பார். இதற்கு எதிர் நிலையில் இருப்பவர் (அவன் அருளில்) நம்பிக்கை இழந்து விடுகிறார் ஆகவே இரண்டிலும் சமநிலையை பேணுவதே உகந்தது.
ஒன்று - அல்லாஹ்வை அஞ்சுவது
இறையச்சம் குறித்த சில குர்ஆன் வசனங்கள்.
அல்லாஹ்வை அஞ்சுவது இறை விசுவசிகளினதும், இறை பக்தர்களினதும் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
தனது நேசர்களை ஷைத்தான் தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இம்ரான் கஎரு. ஆலு
“இறையச்சம்" என்பது இறைவிசுவாசத்துடன் இணைந்த ஒரு பண்பு என அல்லாஹ் இங்கு பிரஸ்தாபித்துள்ளான்.
-"இறையச்சம்" எனும் பண்பு எல்லா முஸ்லிம்களிடமும் கண்டிப்பாக இருக்க வேண்டிய, இதயத்தால் செய்யும் ஒரு கடமையாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَإِيَّايَ فَارْهَبُونِ - البقرة : ٤٠
என்னையே அஞ்சுங்கள்! அல் பகரா ௪0.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ - المائدة ٤٤
எனவே மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! அல் மாஇதா சச.
அல்லாஹ்வை அஞ்சிய காரணத்துக் காக ஸகரிய்யா (அலை) அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினர்ளையும் அல்லாஹ் புகழ்ந்துரைத்திருப்பது போல், அவனைப் அஞ்சிய ஏனைய நபிமார் களையும், அவனுடைய நேசர்களையும் அல் குர்ஆனில் புகழ்ந்துரைத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا
لَنَا خَاشِعِينَ - الأنبياء : ٩٠
அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும் ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர். அல் அன்பியா கூ௦.
- அளவு கடந்து அல்லாஹ்வை அஞ்சும் அவனுடைய வானவர்களையும் அல்லாஹ் புகழ்ந்துரைத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَهُمْ مِنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ - الأنبياء 28
அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்கு வார்கள். அல்அன்பியா உஅ
-அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு அவன் சுவனத்தை வாக்களித்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ - الرحمن : ٤٦
தமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அர்ரஹ்மான் ச௬.
- அவர்களுக்கு பூமியில் (ஆட்சி அதிகாரங் களை வழங்கி) அவர்களை குடியமர்த்துவ தாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِن بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي
وَخَافَ وَعِيد - إبراهيم ١٤
அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்" என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்த அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!