மண்ணறை வெற்றிக்கான காரணங்கள்
இறை நம்பிக்கை வேண்டும்
அல்லாஹ்வை நம்புகின்ற விஷயத்தில் தவறிழைக்காமல் அவனை நம்ப வேண்டிய முறைப்படி நம்பியவர்களுக்கு வெற்றி கிடைப்பகதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே அல்லாஹ்வுக்கு யாரையும் இணையாக ஆக்காமல் அவனை மட்டுமே விசுவாசம் கொண்டு வணங்கி வர வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கப்ரில் ஒரு இறை நம்பிக்கையாளர் (முஃமின்) எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரு வானவர்களைக்) கொண்டு வரப்பட்டு கேள்வி கேட்கப்ப) டும். பிறகு (அவர் களிடத்தில்) அந்த இறைநம்பிக்கையாளர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்" என சாட்சியம் கூறுவர். இதையே அல்லாஹ், "எவர் நம்பிக்கை கொள்கிறாரோ அவர் களை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான்” (14:27) எனக் குறிப்பிடுகிறான்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி (1369)நற்காரியங்கள் செய்ய
வேண்டும்
இறந்த பிறகு நாம் சம்பாதித்த செல்வமோ பெற்றெடுத்த குழந்தைகளோ நமக்குத் துணையாக வரமாட்டார்கள். மாறாக நாம் இந்த உலகில் செய்த நல்ல காரியங்கள் மட்டும் தான் நம்முடன் துணைக்கு வரும். எனவே நல்ல காரியங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகிறது. அவரை அவருடைய குடும்பமும், செல்வமும் அவர் செய்த பாவங் களும் பின் தொடர்ந்து செய்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும், செல்வமும் திரும்பி விடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கி விடும்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்:புகாரி (6514)
குறிப்பாக இறந்த பிறகும் நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய நல்லறங்களைச் செய்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல் களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன. 1. நிலையான அறக்கொடை. 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
அறிவிப்பவர்: அபூஸுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (3084)சிரமங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்
மறுமையில் நல்ல பலன்களை அடைய வேண்டும் என்பதற்காக இந்த உலகத்தில் அல்லாஹ் நமக்கு நோய்களையும், சிரமங்களையும் தருகிறான். இதை சகித்துக் கொள்ளாதவர்கள் இறைவனை ஏசி நன்றி கெட்ட தனமாக நடந்து கொள்கிறார்கள். இது தவறாகும்.
எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு மருத்துவம் செய்பவர்களுக்கு இறைவனின் அன்பும் அருளும் கிடைக்கிறது. வயிற்று வலியால் இறந்தவர்கள் கப்ரில் வேதனை செய்யப்பட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
சுலைமான் பின் ஸுரத் மற்றும் ஹாலித் பின் உர்ஃபுதா ஆகியோருடன் நான் அமர்ந்திருந்தேன். வயிற்று நோயால் இறந்து போன ஒருவரை (புதைப்பதற்காக) பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்று அவ்விருவரும் எண்ணிக் கொண்டி ருந்தார்கள். அப்போது வயிற்று நோயால் இறந்து விடுபவர் மண்ணறையில் வேதனை செய்யப்பட மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இல்லையா? என்று அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார். அதற்கு ஆம் என்று இன்னொருவர் பதிலளித்தார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸார் (ரலி)
நூல்: அஹ்மத் (17591)
அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தல்
அல்லாஹ்விற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு தனிச் சிறப்பு மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மரணத்திற்குப் பிறகு சந்தோஷமான வாழ்வு இவர்களுக்குக் கிடைக்கிறது. மண்ணறை வேதனையிலிருந்து இவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந் தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவ னிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். அவர்களுடன் (இதுவரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
அல்குர் ஆன் (3:169)
இந்த வசனத்திற்குரிய விளக்கத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் எவ்வளவு இன்பமாக வாழ்கிறார்கள் என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலம் அறியலாம்.
நாங்கள் அப்துல்லாஹ்பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், ''(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர்" (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள். தெரிந்து கொள்க. இந்த வசனத்தைப் பற்றி முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டு விட்டோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப் பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறை அரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்து விட்டு பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.
அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, "நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?" என்று கேட்பான். அதற்கு அவர்கள், "நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பிய வாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!" என்று கூறுவர்.
இவ்வாறே மூன்றுமுறை (கேள்வியும் பதிலும்) நடை பெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்பட மாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, "இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் கொல்லப்பட வேண்டும்" என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில் ) விடப்படுவார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரலி)
நூல் : முஸ்லிம் (3834)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஷஹீதிற்கு (உயிர் தியாகி ) ஆறு சிறப்புகள் வழங்கப்படுகிறது. அவருடைய இரத்தத்தில் முதல் சொட்டு (பூமியில் விழும் போதே) அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது. சொர்க்கத்தில் அவருடைய இருப்பிடம் அவருக்குக் காட்டப்படுகிறது. ஹூருல் ஈன்களை அவருக்கு மணமுடித்து வைக்கப்படும். மாபெரும் திடுக்கத்திலிருந்து அவர் பாதுகாக்கப்படுகிறார். மண்ணறை வேதனையிலிருந்தும் அவர் பாதுகாக்கப்படு கிறார். ஈமான் என்ற ஆடை அவருக்கு அணியப்படுகிறது.
அறிவிப்பவர்: கைஸ் ஜூதாமீ (ரலி)
நூல்: அஹ்மத் (17115)
அல்லாஹ்வின் வழியில் உயிர் தியாகம் செய்தவர்கள் உலகி லேயே சிரமங்களை அனுபவித்து விட்டதால் மண்ணறையில் அவர் கள் விசாரணை செய்யப்பட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! உயிர் தியாகியைத் தவிர மற்ற இறை நம்பிக்கையாளர்கள் மண்ணறைகளில் (விசாரணை யின் மூலம்) சோதனை செய்யப்படுகிறார்களே ஏன்? என்று ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (போரின் போது) மின்னுகின்ற வாட்கள் ஷஹீதுடைய தலையில் ஏற்படுத்திய சோதனையே போதுமானமாகும். (எனவே அவர் மண்ணறையில் சோதனை செய்யப்பட மாட்டார்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : நஸயீ (2026)
உயிர் தியாகம் செய்யாதவருக்கும் ஷஹீதுடைய அந்தஸ்து
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட வேண்டிய நிலை வந்தால் உயிரை தியாகம் செய்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அல்லாஹ்விற்காக போரிட்டு மரணிக்கும் பாக்கியத்தை மனப்பூர்வமாக இறைவனிடம் கேட்க வேண்டும்.
இதனால் போரிட்டு இறக்காமல் சாதாரணமாக இறந்தாலும் கூட அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர் களுக்குக் கிடைக்கும் சிறப்புகள் நமக்குக் கிடைக்கும். விசாரணை இல்லாமல் மண்ணறை வேதனையிலிருந்து ஷஹீதுகள் பாதுகாக்கப் படுவதைப் போல் நாமும் பாதுகாக்கப்படுவோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் உண்மையான மனதுடன் இறைவழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்து கொள்வார். அவரை வீரமரணம் தழுவாவிட்டாலும் சரியே!
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் (3869)நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் உண்மையான மன துடன் இறைவனிடம் வீரமரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர் தியாகிகள் தகுதிக்கு அல்லாஹ் உயர்த்துவான். அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே!
அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஹுனைஃப் (ரஹ்)
நூல் : முஸ்லிம் (3870)
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!