உன்னால் என்ன செய்ய முடியும்?

 


உன்னால் என்ன செய்ய முடியும்?


மனித ஆற்றல், அறிவுத்திறன், வல்லமை என்றெல்லாம் புகழ்கிறாயே! அவற்றை வைத்து உன்னால் என்னதான் செய்யமுடியும்?


உன்னால் ஒன்றுமே செய்ய இயலாது.


பொறு! பொறு! ஒன்றுமே செய்ய இயலாது என்றவுடன் கொதித்து விடாதே!


விண், விண்மீன்கள், மண் போன்றவற்றை உண்டாக்கும் திறன் உனக் குண்டா? உன்னால் முடியாதென்றால் உலகிலுள்ள அனைவரை யும் உனக்குத் துணைக்கு அழைத்துக் கொள்!


ஆம்! அது உங்களில் யாருக்குமே எட்டாச் செயல்தான்.


பூமியில் வாழும் உயிரினங்களில் சில உருவத்தால் பெரிதாக உள்ளன. இன்னும் சில பலத்தால் உயர்ந்துள்ளன. பலமற்றதாகவும் சில உள்ளன.


நீ அற்பமாகக் கருதும் எறும்பு,  போன்றவற்றில் ஏதாவது ஒன்றை உன்னால் படைக்கமுடியுமா?


அப்படி உன்னால் படைக்க முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் அவை இறந்துபோனால் அவற்றிற்கு உயிர் தரமுடியுமா?


ஆமாம்! நீ கூறுவதும் சரிதான். கொசு எறும்பு போன்றவை மனிதர் களுக்குத் தீங்கிழைக்கக் கூடியவையே அவற்றை நீ படைக்கக்கூடாது தான். ஆனால், செய்யவியலாததைச் செய்யத் தூண்டியதால் தானே இப்பதிலைக் கூறுகிறாய்?


சரி, உன் போக்கின்படியே போகலாம்.


உனக்குத் தீங்கிழைப்பவற்றை நீ வாழவிடலாமா?


கூடாதல்லவா?


ஒன்று செய் எங்குமே கொசு எறும்பு போன்றவை இல்லாமல் சுத்தமாக அழிந்துவிடு!


அதுவும் முடியாதா?


அப்படியானால் உன்னால் என்னதான் செய்யமுடியும்?


உயிரினங்களின் ஜீன்களிலிருந்து மட்டுமே உன்னால் உருவாக்க இயலும். எதுவுமே இல்லாமல் உன்னால் ஒன்றைப் படைக்க முடியுமா?


 சிந்தனைசெய் மனமே!


மரம், செடி, கொடி போன்றவற்றை உன்னால் உருவாக்க இயலுமா?


நீ அற்பமாகக் கருதும் துரும்பு இருக்கிறதே. அதையாவது உன்னால் உண்டாக்க முடியுமா?


ஏன்? திருதிருவென விழிக்கிறாய்? "எல்லாமே தாமாகத் தோன்றின, என் அறிவாற்றலால் வந்தன" என்றெல்லாம் பிதற்றுகிறாயே, அவற்றை உருவாக்கிக் காண்பி பார்க்கலாம்.


உன் அறிவுத்திறனைத் தட்டி எழுப்பு!


ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் உணவான புல், தவிடு, பிண் ணாக்கு, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, ஆட்டிப் பிழிந்து கால்நடைகள் தருவதைப் போன்ற பாலை உருவாக்கி விடுவாயா?


பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராகவும், தெருத் தெருவாகவும் பாலுக்காக அலைந்து கால்நடைகளை ஏன் தேடுகிறாய்? பால் உற்பத்தித் தொழிற்சாலை என்ற பெயரில் ஓர் ஆலையைத் திறந்து, பாலைத் தயாரித்து, பால் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு அனுப்பி பயன்பெறலாம்தானே?


ம்.. சாத்தியமே இல்லையா?


உலகிலுள்ள எப்பொருளையும் படைக்கவோ அழிக்கவோ உன்னால் இயலவில்லை!


நீ மானமுள்ள மனிதனல்லவா? எங்கே இதையாவது செய் பார்க்கலாம்.


ஒரு தாளில் ரொட்டித் துண்டை உன்னிடம் கொடுத்து இதை அழித்துவிடு எனக் கூறினால் அதை நீ அழித்துவிடுவாயா?


கையிலிருக்கும் தாளைத் தீயில் போட்டுக் கரித்துவிட்டு, ரொட்டியை வாயில் போட்டு சாப்பிட்டுவிட்டு அழித்து விட்டேன் என்பாயோ!


ஆமாம் உன்னால் வேறென்ன செய்யமுடியும்!


நன்றாகத் தெரிந்துகொள்!


எரிந்தது அழியவில்லை. சாம்பலாக மாறிவிட்டது.


நீ உண்டது என்னவாய் ஆகியிருக்குமென்பதைக் கூறவேண்டியதில்லை.


மனிதா! உனக்கு யாதொரு வல்லமையும் கிடையாது; எந்தப் பொருளையும் உன்னால் உருவாக்கவும் இயலவில்லை; அழிக்கவும் இயலவில்லை.


ஏன் உன்னையே நீ அழித்துக் கொள்ளவும் இயலாது! மரித்து விட்டால் மண்ணோடு கலந்து வேறு ஒரு வேதியியல் பொருளாக மாறிவிடுவாய். அழியமாட்டாய்?


இப்பொழுது சொல்! உன்னால் என்னதான் செய்யமுடியும்?


எழு.!


நேராக தேன் கூடு இருக்குமிடம் செல்!


கூட்டை நன்றாகப் பார்!


தேனைப் பற்றிய அற்புதங்களை நீ அறிவாயா?


தேன் என்னவென்று உனக்குத் தெரியுமா?


பல தாவரங்களின் மலர்களிலிருந்து உணவருந்திய தேனீ, தன் கூட்டையடைந்து, தன் வயிற்றிலிருந்து வெளியாக்கும் பல நிறங்களைக் கொண்ட திரவம்தான் தேன்! பல நோய்களுக்கு அதில் மருந்துண்டு அதை நீ அருந்தி அதன் மருத்துவ குணங்களை அறிந்துகொள்!


தேனீக்களின் ரகசியத்தை நீ அறிவாயா?


தேன் கூட்டிற்குக் கீழே பார்!


சில ஈக்கள் உயிரற்றுக் கிடக்கின்றன. அவற்றிக்கு ஏன் இந்நிலை?


அவற்றைக் கொன்றது யார் என்ற வினா உன்னுள் எழுந்திருக்குமே?


தேனீக்கள் மலர்களிலிருந்து உணவருந்திவிட்டுத் திரும்பிய உடன், நல்ல தாவரங்களின் மலரிலிருந்து உணவருந்தி வந்த ஈக்களை ராணி தன் கூட்டுடன் சேர்த்துக் கொள்ளும் நச்சுப் பூக்களிலிருந்து உணவருந்தி வரும் ஈயைத் தன் வாயாலே வெட்டிக் கொன்றுவிடும்!


மரித்துக் கிடக்கும் ஈக்களை எடுத்துப் பார்! அதன் உடல்களில் காயத்தைக் காண்பாய்!


தேனீக்களை வழி நடத்துவதற்கென்று எப்படி ராணி ஈ ஒன்று இருந்து வழி நடத்துகிறதோ, அதே போலத்தான் இவ்வுலகை உனக்கப்பாற்பட்ட ஆற்றல் ஒன்று வழி நடத்திச் செல்கிறது. ஆக்கம். அழிவு போன்ற அனைத்தையும் செய்யக் கூடிய அந்த ஆற்றலே உன்னையும், உன் சாராரையும், உனக்குத் தேவையான அனைத்தையும் படைத்த மாபெரும் ஆற்றல்! அந்த ஆற்றல் இன்றி எதுவும் தானாக வந்ததில்லை.


 சிந்தனை செய் மனமே!


இப்போது ஒன்று செய்!


நீ இந்நூலை எடுத்துக் கொண்டு ஒருவரிடம் சென்று, "பாருங்களேன்! நேற்று நான் வீட்டில் அமர்ந்திருந்தபோது இந்நூல் பூமியிலிருந்து அப்படியே எழுந்து மேலே வந்து விட்டது. எடுத்துப் பார்த்தேன் எதுவுமே எழுதப்படாமல் இருந்தது. சிறிது நேரத்தில் எழுத்துக்கள் பறந்து வந்து ஒட்டிக் கொண்டன. நானும் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன்' எனக் கூறினால் அவர் உன்னைப் "பைத்தியம்" என்றுதானே கூறுவார்? அல்லது வேறொருவர் உன்னிடம் அப்படிக் கூறினால் தீ அவரை பைத்தியம் என்றுதானே கூறுவாய்? ஒருபோதும் அவர் சொல்வதை நம்பமாட்டாய்தானே!


ஒரு சாதாரண நூலை உருவாக்குவதற்கே ஒரு மனிதனின் ஆற்றல் தேவையென்றால், உலகமும், அதில் அடங்கியுள்ள கருவூலங்களும், இன்னும் நீயும், உன்னில் அடங்கியுள்ள கருவூலங்களும் பெரும் ஆற்றல் ஒன்று இல்லாமல் எப்படி தானாக வந்திருக்கமுடியும்?


சற்று எண்ணிப்பார்.


ஏதாவது தானாக வருமா?


நீ காணும் யாவையும் படைத்த அந்த ஆற்றலை உன் கண்களால் காண முடியாது!


கண்கள் காணாததை நம்பமாட்டாய். அது உன் பழக்கம்தானே? ஏன் உள் கண்களால் அதைக் காணமுடியவில்லை என்பதைச் சிந்திக்


காததும் உன் தவறுதானே!


நன்கு சிந்தனை செய்!


உனக்கு அறிவு உள்ளதா?


கோபம் கொள்ளாதே!


உன்னைச் சிறுமைப்படுத்துவதல்ல என் நோக்கம்.


என் கேள்விகளுக்கு பதில்களை மட்டும் கூறு!


உனக்கு அறிவு இருக்கிறதா?


இருக்கிறதென்கிறாயே அதை நீ பார்த்திருக்கிறாயா?


அறிவெனும் ஆற்றல் ஒன்று உண்டென்றால், அதை நீ என் பார்க்கவில்லை?


சரி.. உன்னால்தான் அதைப் பார்க்க முடியவில்லை. பிறரின் கண்களுக்காவது காண்பிக்க முடியுமா?


இருக்கிறதென உறுதியாக நம்புகிறாயே? ஏன் காண்பிக்க மறுக்கிறாய்?


முடியாது! முடியவே முடியாது! அதைக் கண்களுக்கு காண்பிப்பது என்பது உன்னால் மட்டுமல்ல, உன்னைவிட தேர்ந்த யார் வந்தாலும் முடியாது!


ஆனால் வாள் முனையில் நீ நிறுத்தப்பட்டுக் கேட்கப்பட்டாலும் அறிவு எனும் ஆற்றல் ஒன்று உண்டு என்றுதான் வீரக்குரல் கொடுப்பாய்!


சாதாரண ஆற்றல்!


பிரிந்து செல்லும் உயிரைத் தடுத்து நிறுத்தும் வல்லமையற்ற ஆற்றல்!


எதையுமே படைக்கும் திறனற்ற ஆற்றல்!


குறைந்த அளவு சிறு துரும்பையேனும் அழிக்கும் ஆற்றலற்ற திறன்! இதையே உன் கண்களால் காணமுடியவில்லை என்றால் விண், வீண் மீன்கள், மண், மரம், செடி, கொடி, தானியங்கள், பழ வகைகள், காய் வகைகள், மலர் வகைகள், கால்நடைகள், பால், தேன், தண்ணீர் கடல் அதிலுள்ளவை. அப்பப்பா! எண்ணவே முடியாது. இப்படிப்பட்ட அதிசயமானவற்றைப் படைத்துப் பாதுகாத்துவரும் அப்பெரும் ஆற்றலை உன் கண்கள் எப்படிக் கண்டு கொள்ளும்?


பதில் கூறு!


ஆமாம்! ஒருபோதும் அதைக் கண்களால் காணவே முடியாது. ஆனால் இதயக் கண்கள் நிச்சயம் கண்டுகொள்ளும்!


நீ எழுதுவது, படிப்பது, பல சாதனைகளையும் சாகசங்களையும் செய்வது அறிவு இருப்பதற்கான அடையாளங்கள் தானே? இவை யாவும் ஒருவனிடம் இல்லையாயின் அவனை அறிவிலி என்றுதானே வருணிப்பாய்? சாதாரண இச்சிறிய செயல்களைச் செய்வதற்கு அறிவெனும் ஆற்றலின்றி முடியாது என்றால், உலகையும் அதில் உள்ளவை அனைத்தையும் படைத்துப் பாதுகாப்பதற்கு பெரும் திறன் ஒன்று இல்லையாயின் எப்படித்தான் அவை உருவாகி இருக்க முடியும்? உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் உன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் இருப்பதற்கான அடையாளங்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லையே.

கருத்துகள்