இறையச்சத்தின் யதார்த்தம்

 


இறையச்சத்தின் யதார்த்தம்


இறையச்சத்தின் கருத்துக்களையும், அதன் படித்தரங்களையும் வரையரை செய்ய முயற்சித்த அறிஞர்களின் கருத்துகள் வேறு பட்டதாக உள்ளன. ஆயினும் அவர்கள் எல்லோரும் அல்லாஹ்வினால் தடைசெய்யப் பட்டவைகளை பயந்து நடப்பவரின் அச்சம் புகழுக்குரியது என்றும், அவ்வாறு அச்சம் கொள்ளாத அவனுக்கு வழிப்படாத நம்பிக்கை இழந்தவர் இகழ்ச்சிக்குரியவர் என்றும் ஏகோபரிக்கத் தக்க கருத்தை வெளியிட்டுள்ளனர்.




அபூ உஸ்மான் கூறினார்; (இறை) அச்சத்தின் யதார்த்தம் யாதெனில் அகத்தாலும் புறத்தாலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்யாதிருக்கும் பேனுதல் நிலையாகும்.


- அபுல் காஸிம் அல் ஹகீம் கூறினார்; வஸ்துக்களுக்கு அஞ்சுபவர் அவைகளை வட்டும் ஓடிவிடுவார் ஆனால் அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர் அவன் பக்கம் விரைந்து செல்வார்.


இப்ராஹீம் இப்னு ஷைபான் கூறினார்; இறையச்சம் குடிகொள்பவருடைய இதயத்தில் இருக்கும் மனோஇச்சை களையும், உலக ஆசையையும் அது எரித்து விடும்.


ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) கூறினார்; புகழுக்குரிய (உண்மையான)இறையச்சம் உடையவரை அது பாவச் செயல்களில் இருந்து பாதுகாக்கும்.


அன்பின் சகோதரா! நீ இறையச்சம் உள்ளவனா? அல்லாஹ்வை புறக்கனித்து எப்போதும் அவனுக்கு மாறு செய்வதில் உன் ஆயுலை கழிக்கும் நீ அவனை அஞ்சுகிறாயா?


அல்லாஹ் தடை செய்த இடங்களில் சமுகம் கொடுத்தும், அவன் அனுமதித்த இடங்களில் விழகியும் இருக்கும் உன்னை, எவ்வாறு அல்லாஹ்வை அஞ்சுபவன் எனக் கூறலாம்?.


இறையச்சமுள்ளவரின் அடையாளங்கள்


பகீஃ அபுல் லைஸ் அஸ்ஸமர்கன்தீ கூறினார்; இறையச்ம் உள்ளவரை அறிய ஏழு அடையாளங்கள் உள்ளன;


ஒன்று, நாவு; (இறையச்சமுடைய) அவர் பொய், புறம், வீண் பேச்சுக்கள் பேசமாட்டார். எப்பொழுதும் அல்லாஹ்வை நினைவுகூறுவதிலும், திருக்குர்ஆனை ஓதுவதிலும், அறிவை கற்பதலும் தன் நாவை ஈடுபடுத்துவார்.


இரண்டு, வயிறு; (இறையச்சமுடைய) அவர் ஹலாலான உணவுகளை, தேவைக்கு ஏற்ற அளவே உட்கொள்வார்.


மூன்று, பார்வை; (இறையச்சமுடைய) அவர் ஹராமானவைகளை பார்வையிடமாட்டார், மேலும் இவ்வுலகை படிப்பினைக்காகவே அன்றி திருப்தியோடு நோக்கார்.


நான்கு, கரங்கள்; (இறையச்சமுடைய) அவர் தன் கரங்களினால் அல்லாஹ் அனுமதித்த வைகள் அன்றி அவன் தடை செய்தவை களைத் தொடமாட்டார்.


ஐந்து, பாதங்கள்; (இறையச்சமுடைய) அவர் தன் பாதங்களால் பாவமான காரியங்களுக்கு நடந்து செல்ல மாட்டார்.

ஆறு, இதயம்; (இறையச்சமுடைய) அவர் பகைமை, கோபம், பிற சகோதர்களுடன் பொறாமை கொள்ளல் பேன்றவைகளில் இருந்து நீங்கி, இறக்கம், முஸ்லிம்களுக்கு உபதேசித்தல் போன்ற நற்குணங்களை கடைபிடிப்பார்.


ஏழு, (இறையச்சமுடைய) அவர் அல்லாஹ் வை உள்ளச்சத்துடன் வழிபடுவார், எப்பொழுதும் நயவஞ்சகம், முகஸ்துதி போன்றவைகளை விட்டு அவனிடம் பாதுகாவல் தேடிக்கொள்வார். இத்தகையவர் களுக்கே அல்லாஹ் சுவனத்தை சித்தப்படுத்த வைத்துள்ளான்.


அல்லாஹ் கூறுகின்றான்;


‎‫وَالْآخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِينَ - الزخرف ٣٥‬‎

(இறைவனை) அஞ்சுவோருக்கு உமது இறைவனிடம் மறுமைஇருக்கிறது.


அஸ்ஸுகுருப் ௩௫.


அல்லாஹ் கூறுகின்றான்;


‎‫إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَعِيمِ الطور ١٧.‬‎


அல்லாஹ்வை அஞ்சிய சில முன்னோர்கள்.


லஹ்ஹாக் (ரஹ்) கூறினார்; (நபித்தோழர்) அபூ பக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் ஒரு மரத்தில் அமர்ந்திருந்த பறவைக்கு பக்கத்தால் நடந்து சென்றார்கள், அப்போது அப்பறவையை நோக்கி "பறவையே உனக்கு சோபனங்கள் உண்டாகட்டும். (சுதந்திரமாக) பறந்து திரிந்து விட்டு பின்னர் இந்த மரத்தில் அமர்ந்து கனிகளையும் புசிக்கின்றாய், (மறுமையில்) விசாரணை, வேதனை போன்ற எதுவும் உனக்கு இல்லையே! நானும் உன்னைப்போன்று (பறவையாக) இருக்கக் கூடாதா"! எனக் கூறுவார்களாம்.


அன்பின் சகோதரா!


(நபித்தோழராகிய) அபூ பக்கர் ஸித்தீக் (ரலி) இப்படிக் கூறுவார்களாயின், நானும் என்னைப் போன்ற நீயும் என்ன தான் கூறுவது?


அல்லாஹ்வின் கோபத்திலிருந்து பாதுகாவல் தோடுகிறோம்.


அப்துல்லாஹ் இப்னு ஈஸா கூறினார்; (நபித் தோழர்) உமர் (ரலி) அவர்களின் வதனத்தில் அழுகையால் இரு கரு நிறத்தழும்புகள் காணப்பட்டன.


ஹஸன் (ரலி) கூறினார்கள்; (நபித் தோழர்) உமர் (ரலி) அவர்கள் தனது நாளாந்த அவ்ராதுகளில் வரும் திருக்குர்ஆன் வசனம் ஒன்றை ஓதியதும் அதன் அச்சத்தால் சில நாட்களுக்கு நோயுற்று விழுந்து விடுவார்கள்.


ஒரு முறை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் அமர்திருந்த ஒரு மனிதர், "நான் வலது கரத்தவர்களில் ஒருவராக இருக்க விரும்பவில்லை, அல்லாஹ்வுக்கு மிக நெறுக்கமானவர்களில் ஒருவராக இருப்பதே என்னிடத்தில் மிகவும் மேலானது” என்றார். இதைக் கேட்ட இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தம் ஆத்மாவை நோக்கியவராக, "இங்கு ஒரு மனிதர் இருக்கிறார். அவர் மரணித்தால் (மறுமையில்) எழுப்பப்படாமல் இருக்கவே விரும்புகிறார்" எனக் கூறினார்கள்.


ஆயிஷா (ரலி) கூறினார்கள்; முன்பே இறந்து, "நான் இதற்கு அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?


யஸீத் இப்னு ஹவ்சப் கூறினார்; ஹசன் (ரலி) உமர் (ரலி) ஆகிய இருவரையும் விடஇறையச்சம் உடையவர்களை நான் கண்டதே இல்லை, காரணம் அவர்கள் இருவருக்கு மென்றே நரகம் படைக்கப்பட்டுள்ளதைப் போன்று அல்லாஹ்வை அஞ்சுவார்கள்.


அன்பின் சகோதரா!


அல்லாஹ்வின் நல்லடியார்களின் இறையச்சம் இவ்வாறு தான் இருந்தது, அவர்கள் அமல்களை சரிவரச் செய்தாலும் அவை அல்லாஹ்வினால் அங்கீகரிக்ப் படுமா? என அஞ்சுவார்கள். ஆனால் எங்களில் சிலர் (அமல்கள் விடயத்தில்) கவனக்குறைவாக இருந்து விட்டு, (அல்லாஹ்வின் மீது) ஆதரவு வைக்கிறார்கள். (சகோதரா!) இன்னும் உனக்கு சந்தர்ப்பம் இருக்கிறது, எனவே (இறையச்சத்துடன்) நடந்து செல்லத் துணிந்தெழு.


அன்பின் சகோதரா! நீ அல்லாஹ்வை அஞ்சி வழிபடக் கடமைப்பட்டுள்ளாய், (வெட்டியாக இருந்து) பிறகு அவனிடம் திரும்பிச் சென்று வெகுமதிகளைப் நினைத்து விடாதே! பெற்றுக்கொள்ளலாம் என


- அல்லாஹ்வின் பயத்தால் அழுவதற்கு நேரத்தை ஒதுக்கிக் கொள்.


- எச்சரிக்கையுடன் (ஆன்மாவை) கண் காணிக்க நேரத்தை ஒதுக்கிக் கொள்.


- அல்லாஹ்வைப் பயந்து நடுங்குவதற்கு நேரத்தை ஒதுக்கிக் கொள்.


- அல்லாஹ்விடம் பட்சாதாபப்பட்டு இறைஞ்ச நேரத்தை ஒதுக்கிக் கொள்.


- அல் குர் ஆனை ஓதுவதற்கும், அல்லாஹ்வை திக்ர் செய்வதற்கும் நேரத்தை ஒதுக்கிக் கொள்

- அல்லாஹ்வை இரவின் நின்று வணங்கி அவனுடன் சம்பாஷனை செய்ய நேரத்தை ஒதுக்கிக் கொள்.


இறையச்சத்தை உண்டாக்கும் காரணிகள்


அன்பின் சகோதரா!


பாவங்களை விட்டொழித்து இறையச்சத்தை உண்டாக்கும் சில காரணிகள் உள்ளன அவையாவன;


1-அல்லாஹ்வுடைய பண்புகள், பெயர்கள் சகிதம் அவனை அறிந்து கொள்வது.


2-எப்பொழுதும் மனிதனை அல்லாஹ் அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வை ஏற்படுத்திக் கொள்வது.


3-மார்க்க அறிவை கற்றுக் கொள்வது. இறைவனை அஞ்சுவதற்கும், அவன்அவதானிப்தை உணர்வதற்கும் அது உதவியாக இருக்கும்.


4-இரட்சகனாகிய அல்லாஹ்வின் மகத்து வத்தை அறிவதுடன், அவனுடைய கட்டளைகள் மீறப்படும் பட்சத்தில் அவனுக்கு ஏற்படும் கோபம் குறித்து சிந்தித்தல்.


5-(அல்லாஹ்வுக்கு முன்னால்) அடியானின் இழிவு, சிறுமை, பலவீனம், ஏழ்மை போன்றவை பற்றியும், மறுமையில் சகிக்க முடியாத அவனுடைய வேதனை குறித்தும் சிந்தித்தல்.


6-பாவங்களின் அவலட்சணத்துக்குரிய விளைவுகள் குறித்து சிந்தித்தல்.


7-"தங்களுடைய நற்செயல்கள் அல்லாஹ் வினால் ஏற்கப்படுமா?" என அச்சம் கொண்ட நபிமார்கள், ஸஹாபாக்கள், தாபிஈன்கள், அவர்களுக்குப் பின் வந்த இறை பக்தர்கள் போன்றோரின் சம்பவங் களை வாசித்துப் பார்த்தல்.


8-உலகத்தின் இழிவையும், அதன் அழிவையும், இங்கு நிலைத்திருக்காத இன்பங்களையும் அறிதல்.


9-அல்லாஹ்வைப் பயந்து மறுமைக்காக நற்செயல் செய்யும் நல்லோர்களுடன் நட்பு   வைத்தல்.


10-அல் குர்ஆனை ஓதுதல். அ து இறையச்சத்தை உண்டாக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

கருத்துகள்