அல்லாஹ்வை இறைஞ்சி அழைத்துப் பிரார்த்திப்பது
துஆவைப் பொறுத்தவரை, அதாவது அல்லாஹ்வை இறைஞ்சி அழைத்து அவனிடம் மன்றாடி பிரார்த்திப்பதைப் பொறுத்தவரை, அப்போது அது வணக்கமாகும், உயர்ந்தவனும் மற்றும் மேலானவனுமான அல்லாஹ் கூறியது போல்:
وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِي أَسْتَجِبْ لَكُمْ ۖ إِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ இன்னும், உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், "நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன், நிச்சயமாக, என்னை வணங்குவதைவிட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள்”.
(அல்குர்ஆன்: 40:60)
அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை எவர் வெறுக்கிறாரோ அல்லது ஏளனம் செய்கிறாரோ, அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார், மேலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவருக்கு அல்லாஹ் பதிலளிப்பான், மேலும் அவர் சொர்க்கவாசியாக இருப்பார். நபி (ஸல்) கூறினார்:
"துஆ (பிரார்த்தனை ஓர்) வணக்கமாக இருக்கிறது."
(அஹமத் 4/267, அபூதாவூத் 1479, திர்மிதி 2969, இப்னு ஹிப்பான் 3/172, ஸஹீஹ் ஜாமிஈ 3407)பரிசுத்தமானவனும் உயர்ந்தவனுமாகிய அல்லாஹ், அவனுடைய அடியார்கள் தன்னை (பிரார்த்தித்து) அழைப்பதையும், அவனிடம் தங்கள் தேவைகளைக் கேட்பதையும் விரும்புகிறான், மேலும் தன்னை இறைஞ்சி அழைக்காதவர்கள் மீது கோபப்படுகிறான், அதற்குக் காரணம், பரிசுத்தமானவனும் உயர்ந்தவனுமாகிய அவன் மிக்க தாராளமானவனாக இருப்பதும், அருட்கொடையாளனாக இருப்பதும், அளவற்ற கருணையாளனாக இருப்பதும் ஆகும். அவனுடைய அடியார்கள் அவனை நோக்கி (பிரார்த்தித்து) அழைப்பதை அவன் விரும்புகிறான். அதன் காரணமாக அவன் அவர்களுக்குப் பதிலளிப்பான், அவர்களிடம் கருணை, இரக்கம் மற்றும் தாராள தன்மையைக் காட்டுவான், அவர்களுக்கு மறுமொழியளிப்பான், இவை அனைத்தும் அவனுடைய சிறந்த, பரிசுத்தமான உயர்வான தன்மைகளிலிருந்து உள்ளவையாகும்.
துஆ (பிரார்த்தனை) இரண்டு வகைகளில் உள்ளது: 'வணக்கத்தின் பிரார்த்தனை' (துஆ இபாதா) மேலும் அது பரிசுத்தமான மற்றும் மிக உயர்வான அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிப்பதாகும். இரண்டாவது வகை 'கோரிக்கையின் பிரார்த்தனை' (துஆ மஸ்அலா) ஆகும். மேலும் அது ஒருவரின் தேவைகளை பூர்த்தி செய்ய அல்லாஹ்விடம் கோருவதாக இருக்கிறது. மேலும் (துஆவின்) இந்த (இரண்டு) வகைகள் சூரத்துல் ஃபாத்திஹாவில் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. எனவே அதன் முதல் பகுதி அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிப்பதைக் கொண்டுள்ளது, அதுவே 'வணக்கத்தின் பிரார்த்தனை' ஆகும். அதன் கடைசி பகுதி அல்லாஹ்விடம் மன்றாடி பணிவுடன் கோரிக்கை வைத்தலைக் கொண்டுள்ளது, நேரான பாதைக்கான வழிகாட்டுதலை அல்லாஹ்விடம் தேடுதல், மேலும் அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றவர்கள் மற்றும் வழிகெட்டவர்களின் பாதையில் செல்வதிலிருந்து பாதுகாக்குமாறு வேண்டுதல் என்பனவற்றை அது கொண்டுள்ளது, அதுவே 'கோரிக்கை பிரார்த்தனை' ஆகும். இது (அதாவது சூரா அல் ஃபாத்திஹா) ஒரு மகத்தான சூரா ஆகும், இது 'வணக்கத்திற்கான பிரார்த்தனை' மற்றும் 'கோரிக்கை க்கான பிரார்த்தனை' ஆகிய இரண்டு வகையான பிரார்த்தனைகளையும் உள்ளடக்கியது ஆகும். இந்த காரணத்திற்காக அல்லாஹ் ஒவ்வொரு ரக்அத்திலும் தொழுகையின் தூண்களில் இருந்து அதை (சூரா அல் ஃபாத்திஹாவை) ஒரு தூணாக ஆக்கினான், ஏனெனில் அது இரண்டு வகையான பிரார்த்தனைகளையும் உள்ளடக்கியிருப்பதாலும், அதன்பாலான அடியாரின் தேவையின் காரணமாகவும் ஆகும்.
எனவே உங்கள் இரட்சகனிடம் ஏராளம் பிரார்த்திப்பவர்களாக இருங்கள். உயர்ந்தவனும், மேலானவனுமான அல்லாஹ், ஒவ்வொரு இரவிலும், இரவின் கடைசி மூன்றில் ஒரு வேளையில், உலகின் வானத்திற்கு இறங்குகிறான், இறங்கி:
என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன், யாரேனும் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னக்கிறேன் என்று கூறுகிறான். (ஸஹீஹுல் புகாரி 1145):
எனவே இந்த நல்ல தருணங்களைப் பயன்படுத்தி, உங்கள் இரட்சகனுக்கு முன்பாக பணிவாக இருந்து அவனை அழையுங்கள். அல்லாஹ்வை அழைக்காதவன், நிச்சயமாக அவனது உள்ளம் கடினப்பட்டு, பரிசுத்தமானவனும் உயர்ந்தவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விலகி இருக்கிறான்.
فَلَوْلَا إِذْ جَاءَهُمْ بَأْسُنَا تَضَرَّعُوْا وَلَكِنْ قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَنُ مَا كَانُوْا يَعْمَلُوْنَ நம் வேதனை அவர்களுக்கு வந்தபோது அவர்கள் (அதிலிருந்து காத்துக் கொள்ள பிரார்த்தனைகள் செய்து) பணிந்திருக்க வேண்டாமா? ஆனால், அவர்களுடைய இதயங்கள் கல்நெஞ்சாகிவிட்டன, இன்னும், அவர்கள் செ ய்து கொண்டிருந்தவைகளை, ஷைத்தான் அவர்களுக்கு அலங்காரமாகக் காண்பித்துவிட்டான்.
(அல்குர்ஆன்: 6:43)எனவே அல்லாஹ்வின் அடியாரே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! மேலும், அல்லாஹ்விடம் மன்றாடி பிரார்த்திப்பதையும், அவனை நினைவில் கொள்வதையும் ஏராளமாக செய்துவாருங்கள், அதனால் உயர்ந்தவனும், மேலானவனுமான உங்களுடைய இரட்சகனுடன் நீங்கள் ஒரு தொடர்பைப் பெற்று, அவனிடம் உங்களது தேவைகளை முறையிடலாம், அதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் நீங்கள் விரும்பியதை அடையலாம். எனவே, நிச்சயமாக, அல்லாஹ்வைக் கொண்டேயல்லாது நீங்கள் எதையும் அடைய முடியாது. அவனை நினைவு கூர்வது கொண்டும் அவனிடம் பிரார்த்திப்பது கொண்டுமே இவற்றை அடைய முடியும். அதற்குமேலாக, அவனைக்கொண்டேயல்லாது நீங்கள் எதுவும் செய்ய முடியாது, அது ஒரு கண் சிமிட்டலாக இருந்தாலும் சரி.
அல்லாஹ்வின் அடியாரே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! திக்ரிலும் துஆவிலும் ஏராளமாக இருங்கள், பரிசுத்த மானவனும் உயர்ந்தவனுமாகிய அல்லாஹ்விடம் விடாமுயற்சியுடன் கெஞ்சிப் பிரார்த்தியுங்கள் அதனால் அல்லாஹ் உங்களுக்கு உங்கள் -பாவங்களை மன்னித்தும், உங்களுக்கு நல்ல உணவை வழங்கியும் பதிலளிக்கலாம். மேலும் நீங்கள் மகிழ்ச்சியானவர்களில் ஒருவராக ஆகிவிடுவீர்கள். மேலும் புறக்கணித்து அலட்சியமானவர்களில் ஒருவராக
இருக்காதீர்கள்:
وَاذْكُرْ رَّبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُوْنَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغَفِلِينَ (நபியே!) உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், பயத்தோடும் (மெதுவாக) சொல்லில் உரத்த சப்த மின்றியும், காலையிலும் மாலையிலும் உமதிரட்சகனை நினைவு கூர்வீராக! (அவனை) மறந்திருப்போரில் நீர் ஆகியும் விடாதீர். (அல்குர்ஆன்: 7:205)
إِنَّ الَّذِيْنَ عِنْدَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهِ وَيُسَبِّحُوْنَةُ وَلَۡنَهُ
நிச்சயமாக உமதிரட்சகனிடத்தில் இருக்கின்றார்களே அத்தகையவர்கள், அவனை வணங்குவதில் இறுமாப்புக் கொள்ள மாட்டார்கள், இன்னும், அவனை (எப்பொழுதும்) துதி செய்து கொண்டும், அவனுக்குச் சிரம்பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருப்பர்.
(அல்குர்ஆன்: 7:206)
அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் கண்ணியமிக்க குர்ஆனைக் கொண்டு அருள்புரிவானாக.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!