நற்குணத்தின் அடையாளங்கள்
நற்குணத்தின் அடையாளங்கள் பல்வேறு பண்புகளில் ஒன்று சேர்ந்துள்ளன. அவற்றுள் சில:
மனிதன் அதிகம் வெட்கப்படுபவனாக, தொல்லை செய்யா தவனாக, அதிகம் நன்மை செய்பவனாக, பேச்சைக் குறைப் பவனாக, உண்மையே பேசுபவனாக, நற்செயல்கள் அதிகம் செய்பவனாக, வீண் காரியங்களை விட்டும் விலகிக் கொள் பவனாக, பெற்றோருக்கு நன்மை செய்பவனாக, உறவினரு டன் சேர்ந்து வாழ்பவனாக இருக்க வேண்டும்.
அவ்வாறே அவன் பொறுமை,நன்றி பாராட்டல், பொருந் திக் கொள்ளல், சாந்தம், மென்மை, கற்பைப் பேணல், அன்பு செலுத்துதல் ஆகிய பண்புகளைக் கொண்டவனாக இருப்ப தும் அவசியமாகும்.
ஆனால் மனிதன் சபிப்பவனாக, திட்டுபவனாக, கோள் சொல்பவனாக, புறம் பேசுபவனாக, அவசரப்படுபவனாக, குரோதம் கொள்பவனாக, கஞ்சனாக, பொறாமை கொள்பவ னாக இருக்கக் கூடாது. மலர்ந்த முகம் காட்டுபவனாக, புன் னகை பூப்பவனாக இருக்க வேண்டும்.
அவனுடைய நேசமும் விருப்பும், வெறுப்பும் அல்லாஹ்வுக் காகவே இருக்க வேண்டும்.நற்குணமுடைய மனிதன் மக்க ளின் தொல்லைகளை சகித்துக் கொள்ள வேண்டும். அவர் கள் தவறிழைக்கும்போதெல்லாம் எப்போதுமே அதற்கு தக்க காரணம் இருக்கும் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.
அவர்களின் தவறுகளையும் குறைகளையும் துருவித்துருவி ஆராய்வதைத் தவிர்க்க முழு ஆர்வம் காட்ட வேண்டும். எந்த நிலையிலும் ஒரு முஃமின் தீய குணமுடையவனாக இருக்க முடியாது.இருக்கக் கூடாது.
நற்குணத்திற்குரிய முக்கியத்துவத்தையும் நற்குணங்க ளை மேற்கொள்ளக்கூடியவன் அடையக்கூடிய மகத்தான கூலியையும் நபி (ஸல்) அவர்கள் பல்வேறு இடங்களில் உறுதி படக் கூறியுள்ளார்கள்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது சில மக்கள் வந்து, 'அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவர் யார்?" என்று கேட்டனர். அதற்கு 'குணத்தால் சிறந்தவரே' என்று நபி (ஸல்) பதிலளித் தார்கள். உஸாமா பின் ஷரீக் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் தப்ரானியில் உள்ளது.
உங்களில் எனக்கு மிகப் பிரியமானவரை மறுமையில் எனக்கு மிக நெருக்கமானவரை நான் உங்களுக்கு அறிவிக் கட்டுமா? என்று நபி (ஸல் )கேட்டார்கள். நபித் தோழர்கள் ஆம் என்றதும் 'உங்களில் நற்குணமுடையவரே' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அஹ்மத்) மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணத்தை விடவும் கனமானது எதும் கிடையாது. (அஹ்மத்)
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!