நற்குணங்களை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகள்
பழகிப்போன குணங்களை மாற்றுவது என்பது மனித இயல் புக்கு மிகச் சிரமமான ஒன்று என்பதில் ஐயமில்லை.ஆனால் இது ஒன்றும் முடியாத காரியமல்ல. மாறாக இதற்கு பல்வேறு வழிமுறைகள், காரணங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் மனிதன் நற்குணங்களை வளர்த்துக் கொள்ள முடியும். அவை வருமாறு:
1. சரியான கொள்கை:
கொள்கை மிகப் பெரிய விஷயமாகும். ஒரு மனிதனின் குணநலன்கள் பெரும்பாலும், அவன் கொண்டிருக்கின்ற கொள்கை, சிந்தனை மற்றும் அவன் சார்ந்திருக்கின்ற மார்க்கம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இருக்கும். மட்டுமல்ல கொள்கைதான் நம்பிக்கை - ஈமான் ஆகும். முஃமின்களில் பரிபூரணமான ஈமானை உடையவர்கள் நற்குணங் கொண்டவர்களே.
கொள்கை சரியாக இருந்தால் அதன் விளைவால் குணமும் அழகானதாக இருக்கும். சரியான கொள்கை அக்கொள்கைவாதியை வாய்மை, ஈகை, சகிப்புத் தன்மை, வீரம் போன்ற நற்குணங்களின் பால் தூண்டும். அதுபோல பொய்,உலோபித்தனம், அறியாமை போன்ற தீய குணங் களை விட்டும் அவனைத் தடுக்கும்.
2. க்ராஷு
துஆ மிகப் பெரிய வாயிலாகும். அவ்வாயில் ஒரு அடியா னுக்குத் திறக்கப்பட்டு விட்டால் அதன் வழியாக நன்மை கள், பரக்கத்துகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்.
நற்குணங்களை மேற்கொள்வதற்கும் தீய குணங்களை விடுவதற்கும் யார் ஆசைப்படுகிறாரோ அவர் அல்லாஹ் வின் பக்கம் திரும்ப வேண்டும். அவன் அவருக்கு நற்கு ணங்களை வழங்குவான். தீயகுணங்களை விட்டும் அவ ரைத் தடுத்து விடுவான். ஆகவே இதுவிஷயத்திலும் சரி மற்ற விஷயங்களிலும் சரி துஆ பயனுள்ளதாக இருக்கும்.
இதனால்தான் நபி (ஸல் ) அவர்கள் தம் இறைவனிடம் பணிந்து தமக்கு நற்குணங்களை வழங்குமாறு அதிகம் இறைஞ்சுவார்கள். அவர்கள் தொழுகையின் ஆரம்ப துஆ வில் இவ்வாறு கேட்பார்கள்: இறைவா! நற்குணங்களின் பால் எனக்கு வழிகாட்டுவாயாக! நற்குணங்களின் பால் வழிகாட்டுபவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.தீய குணங்களை என்னை விட்டும் அகற்றுவாயாக! தீய குணங்களை என்னை விட்டும் அகற்றுபவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. (முஸ்லிம்)
3.போராடுதல்:
போராடுவது இது விஷயத்தில் மிகவும் பலன் தரும். நற்குணங்களை மேற்கொள்வதற்கும் தீய குணங்களை விடுவதற்கும் தன் மனதோடு யார் போராடுகின்றாரோ அவ ருக்கு அதிக நன்மைகள் வந்து சேரும். அவரைச் சூழ்ந்தி ருக்கும் தீமைகள் அவரை விட்டும் விலகும்.
நற்குணங்களில் இயற்கையிலேயே உள்ள நற்குணங் களும் உண்டு.பயிற்சியின் மூலம் தாமே வளர்த்துக் கொள் ளக்கூடிய நற்குணங்களுமுண்டு. போராடுவது என்றால் ஒருவன் தன் மனதோடு ஒரு முறையல்ல பல முறையல்ல சாகும் வரைப் போராடுவதாகும். ஏனெனில் போராடுவ தும் ஒரு வணக்கமாகும். 'உமக்கு மரணம் வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக' என அல்லாஹ் கூறு . (15:99)
4. சுயபரிசோதனை:
அதாவது தீய குணங்களை நாம் மேற்கொண்டு வீட் டால் நாம் செய்தது சரிதானா என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இதுபோன்ற குணங்களின் பால் இனி திரும்பக் கூடாது என நம் மன தைத் தூண்ட வேண்டும்.
5. நற்குணங்களால் விளையக்கூடிய நன்மைகளை எண்ணிப் பார்த்தல்:
சில விஷயங்களின் பலன்களை அறிந்து கொள்வதும் அவற்றின் நல்ல முடிவுகளை நினைவில் கொள்வதும் அவற்றை எடுத்து நடப்பதற்கும் அதற்காக முயற்சிப்ப தற்கும் பெரும் காரணமாக ஆகிவிடும்.
6.தீய குணங்களின் முடிவுகளை எண்ணிப்பார்த்தல்:
அதாவது தீய குணங்களால் விளையக் கூடிய நிரந்தர கைசேதம், விலகாத கவலை, பேரிழப்பு, துக்கம் மற்றும் மக்களின் உள்ளங்களில் ஏற்படும் வெறுப்பு ஆகியவற் றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
7. மனதைப் பக்குவப்படுத்துவதை விட்டும் நம்பிக்கையிழந்திடாதிருத்தல்:
நம்பிக்கை இழந்து விடுவது ஒரு முஸ்லிமுக்கு அழ கல்ல. ஒருபோதும் அவனுக்கு அது ஏற்றதுமல்ல. மாறாக அவன் தனது நாட்டத்தைப் பலப்படுத்தி மனதைப் பரிபூ ரணமாக்குவதற்கும் தன்னுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் முயற்சிப்பது அவனுக்கு அவசியமாகும்.
8. மலர்ந்த முகம் காட்டுவதும் முகம் சுளிப்பதைத் தவிர்ப்பதும்:
ஒருவன் தன் சகோதர முஸ்லிமை மலர்ந்த முகத்துடன் பார்ப்பது தர்மமாகும். அதற்குக் கூலி கொடுக்கப்படும். 'உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் பார்ப்பதும் உனக்கு தர்மமாகும்' என்பது நபிமொழி. (திர்மிதி) உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பது உட்பட எந்த நன்மையையும் நீ அற்பமாகக் கருதிவிடாதே!' என வும் நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
9. தவறுகளைக் கண்டும் காணாமலும்
கவனித்தும் கவனிக்காமலும் இருத்தல்
இவ்விரண்டு குணங்களும் பெரியார்கள், சான்றோர்க ளின் குணங்களிலுள்ளதாகும். நேசத்தை வளர்ப்பதற்கும் அதை தக்கவைத்துக கொள்வதற்கும் மேலும் வீரோதத் தைக் குழிதோண்டி புதைப்பதற்கும் இவ்விரண்டும் உதவி யாக இருக்கும்.
10. சகிப்புத் தன்மை:
இது குணங்களிலேயே மிகச் சிறந்ததும் அறிவுடை யோருக்கு மிக ஏற்றதுமாகும். சகிப்புத் தன்மை என்பது கோபம் பொங்கியெழும்போது மனதைக் கட்டுப்படுத்துவ தாகும். ஆனால் சகிப்புத்தன்மையுடையவர் கோபப்படக் கூடாது என்பது இதன் ஷரத் அல்ல. மாறாக அவருக்கு கோபம் பொங்கியெழும்போது தனது சகிப்புத் தன்மை யால் அதை அடக்கிக்கொள்வார்.
சகிப்புத் தன்மையை ஒருவர் மேற்கொள்ளும்போது அவரை நேசிக்கக்கூடியவர்கள் அதிகமாவார்கள். வெறுக் கக்கூடியவர்கள் குறைந்து விடுவார்கள். மேலும் அவரு டைய அந்தஸ்து உயர்ந்துவிடும்.
11. அறிவீனர்களை விட்டும் விலகியிருத்தல்:
யார் அறிவீனர்களை விட்டும் விலகியிருக்கிறாரோ அவர் தனது கண்ணியத்தைக் காத்துக்கொள்வார். மனதுக்கு நிம்மதி கிடைப்பதோடு தனக்கு துன்பம் தரக்கூடியவை களைக் கேட்பதை விட்டும் நீங்கிவிடுவார்.
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) மென்மையையும் மன் னிக்கும் போக்கையும் மேற்கொள்வீராக! மேலும் நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும அறிவீனர்களை விட்டும் வில கியிருப்பீராக! (7:199)
12. திட்டுவதைத் தவிர்ப்பது
13. துன்பம் மறப்பது:
அதாவது உனக்குத் தீங்கிழைத்தவரின் துன்பத்தை மறந்திட வேண்டும்- அதனால் அவனைக் குறித்து உன் உள்ளம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக. மேலும் அவனை அந்நியனாகக் கருதாதே! ஏனென்றால் தன் சகாக்கள் செய்த தீங்கை நினைத்துப் பார்ப்பவ ருக்கு அவர்களை அவர் மெய்யாக நேசிக்க முடியாமல் போய்விடும். பொதுவாக தனக்கு பிற மக்கள் செய்த தீங் கை எண்ணிப் பார்ப்பவருக்கு அவர்களுடன் ஒழுங்காக வாழ முடியாது. எனவே முடிந்த அளவிற்கு அதை மறந்து விட வேண்டும்.
14. பொருத்தல்,மன்னித்தல்,தீமைக்குப் பகரம் நன்மை செய்தல்:
இவ்வாறு செய்வது அந்தஸ்து உயர்வதற்குக் கார ணமாக அமையும். இதில் மனதுக்கு அமைதி ஏற்படும்.பழி வாங்கும் எண்ணத்திலிருந்து விலகவும் முடியும்.
15. :
ஈகை சிறந்த குணமாகும்- உலோபித்தனம் இழிந்த குணமாக இருப்பதைப் போல. ஈகைக் குணம் அன்பைத் தோற்றுவிக்கும். வெறுப்பை அகற்றும். மேலும் அழகிய புக ழைத் தேடித்தரும். குற்றங்குறைகளை மறைத்து வீடும்.
16. அல்லாஹ்விடத்தில் கூலியை எதிர்பார்த்தல்:
இது நற்குணங்களை வளர்த்துக்கொள்வதற்கு உத வக்கூடிய காரியங்களில் மிக முக்கியமானதாகும். மேலும் இது பொறுமை,மனதோடு போராடுதல்,மக்களின் தொல் லைகளைச் சகித்துக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கும் உத வியாக இருக்கும். தான் மேற்கொள்றும் நற்குணங்களுக் கும் மனதுடன் போராடுவதற்கும் நிச்சயம் அல்லாஹ் கூலி வழங்குவான் என்பதை உறுதியாக நம்பினால் நற்குணங் களை வளர்த்துக் கொள்ள அவன் ஆர்வம் காட்டுவான். இதற்காக அவன் சந்திக்கின்ற அனைத்தும் அவனுக்கு இலகுவாகும்.
17. கோபத்தைத் தவிர்த்தல்:
ஏனெனில் கோபம் உள்ளத்தில் எரிகின்ற கனலாகும். இது தண்டிக்கவும் பழிவாங்கவும் தூண்டும். மனிதன் கோ பப்படும்போது தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண் டால் தன்னுடைய கண்ணியத்தையும் மதிப்பையும் காத் துக்கொள்வான்.சாக்குப்போக்கு சொல்லும் இழிவிலிருந் தும் கைசேதத்திலிருந்தும் விலக முடியும்.
ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். நபி (ஸல் ) அவர்கள் 'கோபம் கொள்ளாதே!' என்றார்கள். அவர் பலமுறை இவ்வாறு கேட்கவும் ஒவ்வொரு முறையும் கோபம் கோள்ளாதே என்றே நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூ ஹூரைரா (ரலி), நூல்: புகாரி
18. அர்த்தமுள்ள அறிவுரைகளையும் உருப்படியான விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வது:
ஒருவனிடம் குறைகளைச் சுட்டிக்காட்டப்படும்போது அதிலிருந்து விலகுவது அவனுக்கு அவசியமாகும். ஏனெ னில் தன்னுடைய குறைகளைத் தெரியாததுபோல நடிப் பதன் மூலம் மனதைச் சீர்படுத்த முடியாது.
19. ஒப்படைக்கப்படும் பணியை பரிபூரணமாக நிறைவேற்றுதல்:
இதன் மூலம் பழிப்பு, கண்டனம், சாக்குப்போக்குச் சொல்லும் இழிவு ஆகிவற்றிலிருந்து விலகிட முடியும்.
20. தவறை ஒப்புக்கொள்ளுதல், அதை நியாயப்படுத்தாதிருத்தல்:
இது நற்குணத்தின் அடையாளமாகும். அதுமட்டுமல்ல இதில் பொய்யை விட்டும் விலகுதல் இருக்கிறது. தவறை ஒப்புக்கொள்வது சிறந்த பண்பாகும். இவ்வாறு நடப்பவ ரின் மதிப்பை இது உயர்த்திவிடுகின்றது.
21. வாய்மையைப் பற்றிப் பிடித்தல்:
உண்மையில் வாய்மைக்குச் சிறந்த பலன்களுண்டு. வாய்மையைக் கொண்டுதான் ஒருவருடைய அந்தஸ்து, மதிப்பு உயர்கின்றது. வாய்மையுடையவரை அக்குணம் பொய்யின் அவஸ்தைகளிலிருந்தும்,மனஉறுத்தல் மற்றும் சாக்குப்போக்கு கூறும் இழிவிலிருந்தும் காக்கின்றது. மேலும் மனிதர்களின் தீங்கை விட்டும், அவரைக் குறித்த நம்பிக்கை விலகிப்போவதை விட்டும் அவரைப் பாதுகாக் கிறது. அதுபோல அவனுக்கு கண்ணியம், வீரம், நம்பிக்கை ஆகியவற்றைத் தேடித் தரவும் செய்கின்றது.
22. தவறு செய்தவரை பழிப்பதை.கடுஞ்சொல் கூறுவதைத் தவிர்ப்பது:
அதிகம் பழிப்பது கோபத்தைத் தூண்டுவதாகவும் பகைமையை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் அது துன்பம் தரக்கூடிவற்றை செவியேற்கும்படிச் செய்துவிடும். எனவே புத்திசாலி சிறிய, பெரிய எவ்விதத் தவறுக்காகவும் தனது சகாக்களைப் பழிக்கமாட்டான். மாறாக சமாதானங்களைத் தேடிக்கொள்வான். கண்டித் துதான் ஆகவேண்டும் என்றிருந்தால் மென்மையான முறையில் கண்டிப்பான்.
23. நல்லவர்கள், நற்குணமுள்ளவர்களுடன் தோழமை கொள்ளுதல்:
இது நற்குணங்களைப் பயிற்றுவிப்பதற்கும் அவற்றை மனதில் இறுத்திக் கொள்வதற்கும் மிகச் சிறந்த வழிமு றையாகும்.
24. உரையாடல் மற்றும் சபை ஒழுக்கத்தைப் பேணுதல்:
உரையாடுபவரின் பேச்சை செவி தாழ்த்திக் கேட்பது, பேச்சைத் துண்டிக்காமல் இருப்பது, அவரின் பேச்சைப் பொய்ப்படுத்துவது அல்லது அதை அற்பமாக நினைப் பது, அவர் பேச்சை முடிப்பதற்கு முன்னால் எழுந்து செல் வது ஆகியவை அவசியம் பேணவேண்டிய ஒழுக்கங்களில் உள்ளதாகும்.
மேலும் சபைக்குள் நுழையும் போதும் சபையை விட்டு வெளியேறும் போதும் சலாம் சொல்வது, சபையில் மற்றவ ருக்காக இடத்தை விசாலப்படுத்துவது, ஒருவரை எழுப்பி அவரது இடத்தில் அமராமலிருப்பது, இருவருக்கிடையில் அவர்களின் அனுமதியில்லாமல் அமர்வது, மூவர் இருக் கும்போது இரண்டு பேர்களிடம் மட்டும் தனியாக- இரகசி யமாகப் பேசுவது ஆகியவையும் அவ்வொழுக்கங்களில் உள்ளவையே!
25. நபி(ஸல்) அவர்களின் வரலாற்றைத் தொடர்ந்து படிப்பது:
நபி (ஸல்) அவர்களின் வரலாறு அதனைப் படிப்பவர்க ளுக்கு மனிதகுலம் கண்ட முன்மாதிரிகளிலேயே மிகச் சிறந்த முன்மாதிரியையும் மனித வாழக்கைக்கு பரிபூரண மான வழிகாட்டுதலையும் நற்குணங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.
26. கண்ணியத்திற்குரிய நபித்தோழர்களின் வரலாற்றைப் படிப்பது
27. நற்குணங்கள் சம்பந்தப்பட்ட நூல்களைப் படிப்பது:
திண்ணமாக இத்தகைய நூல்கள் மனிதனுக்கு நற்கு ணங்களை மேற்கொள்ளும்படி உணர்த்துகின்றன. அதன் சிறப்புக்களை அவனுக்கு அறிவுறுத்துகின்றன . இன்னும் இந்நூல்கள் நற்குணங்களை வளர்த்துக் கொள்ளவும் தீய குணங்களைத் தவிர்ந்து கொள்ளவும் உதவுகின் றன. மேலும் அந்நூல்கள் தீய குணங்களின் தீய முடிவு களையும் அவற்றிலிருந்து விலகுவதற்கான வழிமுறை களையும் அவனுக்குத் தெளிவாக்குகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!