பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் ஏற்றுக்கொள்ளப்படாததற்குமான காரணங்கள்!


 பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் ஏற்றுக்கொள்ளப்படாததற்குமான காரணங்கள்!


மக்களே! பரிசுத்தமானவனும் உயர்ந்தவனுமாகிய அல்லாஹ்வின் மீது தக்வாவைக்கொணடிருங்கள். மேலும் பிரார்த்தனை கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும், அவை ஏற்றுக்கொள்ளப்படாததற்கும் காரணங்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மிகப் பெரிய காரணம், உயர்ந்தவனும், மேலானவனுமான அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதும் மற்றும் (அவனுடைய கட்டளைகளை ஏற்று) பதிலளிக்கக்கூடிய இதயம் இருப்பதும் ஆகும்.


பரிசுத்தமான அல்லாஹ் கூறினான்:




மேலும், (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், (அதற்கு நீர் கூறுவீராக:) “நிச்சயமாக நான், (அவர்களுக்கு) மிகச் சமீபமாகவே இருக்கின்றேன்; அழைப்பவரின் அழைப்புக்கு அவர் என்னை அழைத்தால் நான் பதிலளிப்பேன்; ஆகவே, அவர்கள் நேரான வழியை அடைவதற்காக, அவர்கள் (என்னுடைய கட்டளைகளை ஏற்று)




எனக்கு பதில் அளிக்கவும்; மேலும், அவர்கள் என்னை யே


விசுவாசிக்கவும். (அல்குர்ஆன்: 2:186)


அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் இருக்கும் இதயத்திலிருந்து வரும் பிரார்த்தனையைப் பொறுத்தவரை, நபியவர்களின் (ஸல்) ஹதீஸில் பதிவாகியிருப்பது போல் அதற்குப் பதிலளிக்கப்படமாட்டாது.


(திர்மிதி 3545, ஸஹீஹ் ஜாமி 245, ஸில்ஸிலத்து ஸஹீஹா 596, ஸஹீஹ் திர்மிதி 3745)


அதேபோல், பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்குப் பின்னால் உள்ள காரணங்களிலிருந்து உள்ளதுதான்; ஒருவரின் உணவும் ஊட்டமும் ஹலாலாக இருக்க வேண்டும் என்பதாகும். மேலும் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கப்படுவதிலிருந்து தடைகளாக இருக்க கூடியவைகளில் உள்ளதுதான்: ஒருவரின் உணவு ஹராமாக இருப்பது.


ஒரு நீண்ட பயணத்தில் இருந்த ஒருவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) கூறியது போல்: அவர் தலைவிரி கோலத்துடனும், புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி என் இறைவா, என் இறைவா என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு ஹராமானதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் ஹராமானதாக இருக்கிறது; அவர் அணியும் உடை ஹராமானதாக இருக்கிறது; ஹராமான உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?


(முஸ்லிம் 1015, திர்மிதி 2992, முஸ்னத் அஹமத் 2/328, தாரிமி அர்ரிகாக் 2720)மேலும் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில் உள்ள தடைகளில் இருந்து உள்ளதுதான் அல்லாஹ்வை அழைக்கும் போது வரம்பு மீறுவது. பரிசுத்தமானவனான அல்லாஹ் கூறினான்:


‎‫


(ஆகவே, விசுவாசிகளே!) உங்கள் இரட்சகனை மிக்க பணிவாகவும், (தாழ்ந்த குரலில்) மெதுவாகவும் (உங்களுக்கு வேண்டியவைகளைக் கோரிப் பிரார்த்தனை செய்து) நீங்கள் அழையுங்கள், நிச்சயமாக அவன் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 7:55)


பிரார்த்திக்கும் போது 'வரம்புமீறல்' என்பதன் அர்த்தங்களில் இருந்து உள்ளதுதான், மற்றவர் தன்னை காண வேண்டும் அல்லது கேட்க வேண்டும் என்ற விருப்பத்தை தூண்டும் வரை ஒருவர் பிரார்த்தனையில் தனது குரலை உயர்த்துவது. இந்த காரணத்திற்காக அவன், மிக உயர்ந்தவன், கூறினான்:


‎‫


மெதுவாகவும்...


மேலும், பிரார்த்தனை செய்யும் போது ஒருவரின் குரலை உயர்த்துவது, அவரைச் சுற்றி வணக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கும், குர்ஆன் ஓதுபவர்களுக்கும், அல்லது பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஒருவர் துஆ அல்லது பாவமன்னிப்புக் கோரும் போதோ அல்லது திக்ரைக் கொண்டோ தனது குரலை உயர்த்தக் கூடாது. மாறாக, குரல் ஒரு நபருக்கு மட்டுமே கேட்கும் அளவிற்கு உயர்த்தப்பட வேண்டும்.


துஆ செய்வதில் வரம்புமீறல்களாக பித்அத்களும் உள்ளன அதாவது, குர்ஆனிலும் சுன்னாவிலும் காணப்படாத பிரார்த்தனைகளைக் கொண்டு அல்லாஹ் அழைக்கப்படுவது, அல்லது அது ஒரு புதுமையான (பித்அத் ஆன) பிரார்த்தனையாக இருக்கலாம். தூதர் (ஸல்) கூறினார்:


நம்முடைய இந்த விவகாரத்தில் இல்லாத (அதாவது இஸ்லாம் அல்லாத) ஒரு செயலை யார் செய்தாலும் அது நிராகரிக்கப்படும். (புஹாரி, முஸ்லிம்)


அதுபோல், நெறி பிறழ்ந்த சூஃபி பித்அத்வாதிகளால் ஜமாஅத் திக்ர் செய்வதன் மூலம் பிரார்த்தனைகளில் ஏற்படுத்தப்பட்ட பித்அத்கள். அவர்கள் பிரார்த்தனை செய்யும் போது சபையில் தங்கள் குரல்களை உயர்த்துகிறார்கள், அதேபோல் சஃபாவிற்கும் மர்வாவிற்கும் இடையில் கஅபா மற்றும் ஸயீயைச் சுற்றி தவாஃப் செய்யும் போது கோரஸான குரல்களின் பிரார்த்தனை செய்பவர்கள். இந்த நடைமுறைகள் அல்லாஹ்வாலும், அவனது தூதராலும் (ஸல்) சட்டமாக்கப்படவில்லை. மாறாக இவை பிரார்த்தனை செய்வதில் மாறுபட்ட பித்அத்வாதிகளின் நடைமுறைகளாகும், மேலும் இது பிரார்த்தனை ஏற்கப்படாமல் இருக்கும் வரம்புமீறுதல்களில் இருந்து உள்ளதாகும்.


பிரார்த்தனையின் 'வரம்புமீறுதலில்' இருந்து வரும் மற்றொரு விஷயம் என்னவென்றால், அல்லாஹ்விடம் பாவமான விஷயங்களைக் கொண்டு பிரார்த்திப்பது, அல்லது உறவை துண்டிக்கும்படி அல்ல து முஸ்லிம்களிடமிருந்து அழைக்கப்படுவதற்கு உரிமை இல்லாத ஒருவரை அழைக்கும்படி கேட்டுப் பிரார்த்திப்பது. எனவே, உங்கள் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் பொருட்டு, இறை சட்டத்தின் நடத்தை மற்றும் நெறிமுறைகளுடன், அல்லாஹ்வை நினைவு கூர்வதிலும், பிரார்த்தனை செய்வ திலும் சரியான நடத்தை மற்றும் நெறிமுறை களைக் கொண்டிருங்கள்.


மேலும் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை, மேலும் அல்லாஹ்வின் ஈடேற்றமும் அருளும் அவனது தூதர் மீது உண்டாவதாக.

கருத்துகள்