முக்கியச் செய்தி
மார்க்கப் பதிவுகள் சேகரிக்கப்படுகின்றன...

இஸ்லாமிய நூலகம்

சொடுக்கி வழிகாட்டியைத் திறக்கவும் ➔
ஆன்மீகப் பயண டிஜிட்டல் மையம்

திரைக்கதை தயாராகிறது...

முகஸ்துதியின் ஆபத்து, அதுவும் ஒரு ஷிர்க்

 


முகஸ்துதியின் ஆபத்து, அதுவும் ஒரு ஷிர்க்


அல்லாஹ் கூறுகிறான்: தொழுகையாளிகளுக்கு கேடுதான்


அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் அவர்கள் தொழுகை யில் அலட்சியமாக இருப்பார்கள். அவர்கள் பிறருக்கு காண் பிக்(கவேதான் தொழு)கிறார்கள்.மேலும் அற்பமான பொருளைக் (கொடுப்பதைத்) தடுக்கிறார்கள்(107,4,5,6,7).


ரசூல் (ஸல்) அவர்கள் சொல்ல நான்கேட்டுள்ளேனென அபூ ஸயீதுப்னு பஃளாலா (ரலி) அவர்கள் கூறினார்கள் :எந்நாளில் சந்தேகமில்லையோ, எந்த இறுதி நாளில் முன்னோர்.பின்னோர் அனைவரும் ஒன்று சேர்க்கப்படுவார்களோ அந்நாளில் அறிவிப் புச் செய்யக்கூடிய ஒருவர், எவன் தனது செயலில் அல்லாஹ் விற்கு ஒருவரை இணையாக்கினானோ அவன் அவரிடமே தனக்கு நன்மையைத் தேடிக் கொள்ளட்டும் ஏனெனில் அல்லாஹ் இணைவைப்பவனின் இணையை விட்டும் தேவை அற்றவனாக இருக்கிறான் 67601 அறிவிப்புச் செய்வார். அபூ ஸமீதில் குத்ரி (ரலி) அவர்கள் கூறினார்கள், நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது எங்களிடையே ரசூல் (ஸல்) அவர்கள் வந்து: மஸீஹுத் தஜ்ஜாலை விட உங்களின் மீது நான் மிக வும் பயப்படக்கூடிய ஒன்றை அறிவிக்கட்டுமா?எனக் கேட் டார்கள் ஆம் அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்) என்று கூறி னோம். அதற்கு (ஸல்) அவர்கள் அது மறை முகமான இணைவைப்பெனக் கூறினார்கள். அதாவது ஒருமனிதன் தொழு வதற்காக நிற்கிறான். அப்போது அவனை ஒரு மனிதன் பார்க்




கிறான் என்பதற்காக அத்தொழுகையை அவன் அழகுபடச் செய்கிறான்.எனக் கூறினார்கள்.


பயன்கள்:


1-முகஸ்துதியையும், அதைச் செய்பவர்களையும் கடுமையாக எச்சரித்தல்.


2-நிச்சயமாக மனிதன் சில சமயங்களில் தன்னையறியாமலேயே முகஸ்துதியில் விழுந்துவிடுகிறான் .


3-நிச்சயமாக பிறருக்கு காட்டுவதற்காக செய்யக்கூடியவனின் செயல் மறுக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.



இன்று சர்வசாதாரணமாக  முகஸ்த்தூதி அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. சமூகவலைத்தளங்களில் பரவிக்கொண்டு வருகிறது.   அல்லாஹ் நம் அனைவரையும் இந்த முகஸ்தூதியை விட்டு பாதுகாக்கவேண்டும். தூய எண்ணத்துடன் அல்லாஹ்வுக்காக மட்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்