வாழ்க்கையில் ஏற்படும் தடைகள்
ஒரு நபர் ஏற்கனவே முஸ்லிமாக இருந்தால் அல்லது அவரது ஈமானை பலவீனப்படுத்தினால் அவரை இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றக்கூடிய தடைகள் இடையூறுகள் வாழ்க்கையில் உள்ளன. அவர் ஒரு முஸ்லிமாக இல்லாவிட்டால், இந்த தடைகள் அவரை இஸ்லாத்தில் நுழைவதை விட்டுத் தடுக்கும்.
ஒரு நபர் எதிர்கொள்ளும் பெரும் சோதனைகள் உள்ளன, எனவே அவர் அவற்றைப் பற்றிய அறிவைக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாகும், இதனால் அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டால் அவர் தெளிவாக இருக்க முடியும் மற்றும் அவற்றைக் கடக்க முடியும்.
இந்த நிலைப்பாட்டில் இருந்துதான் மதிப்பிற்குரிய தோழர் ஹுதைஃபா இப்னு அல்-யமான் கூறினார்:
மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால்தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) (புகாரி 3606)
எனவே, முதலில் இஸ்லாம், அதன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய அறிவையும் விரிவான புரிதலையும் பெற்றிருக்க வேண்டும். இஸ்லாத்தில் இருந்து நம்மைத் தூரமாக்கி விடும் விஷயங்களையும், உயர்ந்தோனான அல்லாஹ்வை அவனது அடியார் வணங்குவதை விட்டுத் தடுக்கக்கூடிய தடைகளையும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். பாவங்கள் போன்ற அவர்களின் ஈமானை பாதிக்கும் விஷயங்களை ஒருவர் அறிந்திருக்க வேண்டும்; அவைகளின் தீங்குகளிலிருந்து விலகி, (உறுதியாக இருப்பதன்) பலன்களைப் பெறுவதற்காக. ஒருவருக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் தவறாக வழிநடத்தும் அந்தக் காரியங்களைப் பற்றி தெரியாவிட்டால், அவைகள் அவரை அழித்து விடக்கூடும்.
இறக்கும் வரை இந்த மார்க்கத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். மிக உயர்ந்தோனான அவன் கூறினான்:
وَلَا تَمْوْتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُّسْلِمُوْنَ
நிச்சயமாக (முற்றிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லீம்களாகவே
தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன்: 3:102)
தூதருக்கு (ஸல்) மாறுசெய்தல்
இஸ்லாத்தின் மீது ஒருவர் நிலைத்திருப்பது அல்லாஹ்வின் கைகளில் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. நாம் இறக்கும் வரை இஸ்லாத்தில் நிலைத்திருப்போமா இல்லையா என்பதை எம்மால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும், அதை நிறைவேற்ற உதவும் காரணிகளான நடைமுறை ரீதியான மற்றும் பாதுகாப்பு ரீதியான ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டு வர வேண்டும்; அவற்றை நாம் பற்றிக் கொண்டால், அல்லாஹ் தனது அருளைக் கொண்டு நமக்கு அறி வொ ளி யூ ட்டி, மேலும் அவனுடைய பேரருளை நம்மீது முழுமைப்படுத்துவான். இதனால் நாம் இஸ்லாத்தின் மீது மரணிக்கலாம். ஏனென்றால் நாம் அந்த வழிமுறைகளைக் கொண்டு இரட்சிப்பைப் பெறுவதற்கான பாதையில் கடுமையாகப் பாடுபட்டோம், உண்மையில் அல்லாஹ் கருணையாளனாகவும் தாராளமானவனாகவும் இருக்கிறான். தன் அடியாருக்கு நற்செயல்களின் மீது அக்கறையும் விருப்பமும், தீமையின் மீது வெறுப்பும், தீமையில் விழும் பயமும் இருப்பதைக் கண்டால்; பின்னர் மிக உயர்ந்தவனான அவன் தனது அடியாரைப் பலப்படுத்தி, பாதுகாத்து, காவல் காத்து மேலும் அவருடைய மார்க்கத்தை நல்லதைக் கொண்டு பாதுகாப்பானதாகவும் முழுமையானதாகவும் ஆக்குகிறான்.
இன்னும், அல்லாஹ் தனது அடியான் தீமையை வெறுக்காமலும் நன்மை செய்ய விரும்பமில்லாமலும் விலகிச் செல்வதைக் கண்டால், அவன் தனது நீதியிலிருந்து தண்டனையாக அவ்வடியான் தேர்ந்தெடுத்த பாதையிலேயே அவனை விட்டுவிடுகிறான். உயர்ந்தோனான அவன் சொல்வது போல்:
இன்னும், நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர் எவர், (நம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து விசுவாசிகளின்
வழியல்லாத (வேறுவழியான)தைப் பின்பற்றுகிறாரோ அவரை நாம், அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பிவிடுவோம், (பின்னர்) அவரை நரகத்தில் புகுத்திவிடுவோம், அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது.
(அல்குர்ஆன்: 4:115)
எனவே, அடியான் இறைத்தூதருக்கு மாறு செய்ததும், இறை ந ம்பிக்கையாளர்களின் வழியைத் தவிர வேறு வழியைப் பின்பற்றியதும்தான் காரணம். அடியானாகிய அவன் காரணத்தைத் தொடங்கிவைத்தான் அதன் பிறகு அல்லாஹ்விடமிருந்து தண்டனை கிடைத்தது என்பதை இது காட்டுகிறது:
அவரை நாம், அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பிவிடுவோம், (பின்னர்) அவரை நரகத்தில் புகுத்திவிடுவோம், அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது.
(அல்குர்ஆன்: 4:115)



கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!