🌐 மொழியைத் தேர்ந்தெடுக்கவும் / Select Language
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்
Useful Islamic Sections & Site Guide

Posts

Loading...

ஒருவர் இன்னொருவர் நிலையைத் துருவி பார்க்க வேண்டாம்.

 


ஒருவர் இன்னொருவர் நிலையைத் துருவி பார்க்க வேண்டாம்.


‎‫قال صلى الله عليه وسلم ( لا يَفْرَك مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا مِنْهَا خُلُقًا رواه مسلم‬‎


"ஒரு முஃமின் இன்னொரு முஃமினான பெண்ணைப் பற்றி துருவிப் பார்க்க வேண்டாம். ஏனெனில் அவளின் ஒரு குணம் அவனுக்கு வெறுப்பூட்டும் படியாக இருக்குமாயின், அவளின் மற்றொரு பண்பு அவனுக்கு திருப்தி தரும்'' (முஸ்லிம்) என ரஸூல் (ஸல்) அவர்களின் வாக்கில் பதிவாகியுள்ளது. இந்நபி மொழியில் இரண்டு பயன்கள் அடங்கியுள்ளன.


1- ஒரு மனிதன், அவனுடன் தொடர்புடைய மனைவி,பந்துக்கள், தோழன், ஊழியர் போன்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கு இந்த ஹதீஸ் வழி காட்டுகின்றது. எனவே பரஸ்பரம் தொடர்புடைய வர்களுக்கிடையே அவர்கள் விரும்பாத ஏதேனும் குறைபாடு அல்லது வெறுக்கத் தக்க காரியம் நிச்சயம் இருந்தே ஆகும். ஆகையால் அவர்களின் குணங்களில் நமக்கு ஒத்துப் போகக் கூடிய வற்றையும், அல்லது தங்களுக்கிடயிலான தொடர்பை அன்பு வழியில் பலப்படுத்திக் கொள்ளஏதுவானவற்றையும் கருத்தில் கொண்டு, அவர்களிடமுள்ள மோசமான குணங்களை மறந்து, அவர்களின் நல்ல பண்புகளின் பக்கம் கவணம் செலுத்துவதன் மூலம் தங்களின் நற்பையும், தொடர்பையும் தொடரலாம். இதன் மூலம் நிம்மதியும் உண்டாகும்.


2- இந்த நபி மொழி தரும் இரண்டாவது பயன்: துக்கம் துயரங்கள் நீங்கி மனம் தூய்மை அடையும். மேலும் இரண்டு தரப்பினரும்தம் மீதுள்ள கட்டாய, மற்றும் விரும்பத்தக்க கடமைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வர். மேலும் அவர்களுக்கு மத்தியில் நிம்மதி உண்டாகும். ஆனால் நபியவர்களின் இந்த வழிகாட்டலை யார் அணுசரித்து நடக்கவில்லையோ அவரின் நிலை தலைகீழாகி விடும். அப்பொழுது அவன் மற்றவரி டமிருக்கும் நல்ல விஷயங்களை பார்க்க மறந்து விடுவான். எப்பொழுதும் அவர்களின் தீமைகளின் பக்கமே கவணம் செலுத்துவான். அவ்வமயம் கவலைகள் ஏற்படுவது நிச்சயம். மேலும் தனக்கும், தனக்குத் தொடர்புடையவர்களுக்கும் இடையி லான அன்பில் கலங்கம் ஏற்படுவதும் நிச்சயம். அத்துடன் இரு சாராரும் பரஸ்பரம் ஒருவருக் கொருவர் மேற்கொள்ள வேண்டிய கடமைகளிலும் கோட்டை விடுவார்கள் என்பதும் நிச்சயம்.


பெரிய அவலங்களும் நெருக்கடிகளும் ஏற்படு கின்ற போது அவற்றை பொருமையுடனும் அமைதியுடனும் எதிர் கொள்ளும் பல இலட்சிய வாதிகள், அற்பமான விடயங்கள் சம்பவிக்கும் போது கலக்கமும் கவலையும் அடைந்து விடுகிறார்கள். அவர்களிடம் காணப்பட்ட அன்பில் கலங்கம் ஏற்பட்டு விடுகின்றது. இதற்குக் காரணம் பாரிய விடயங்களில் தம் உள்ளங்களைக் கட்டுப் படுத்திய அவர்கள், சிறிய விடயங்களில் அப்படிச் செய்ய தவறியமையே. அதனால் அவை அவர்களுக்குத் தீமையாக அமைந்தன. அவர்களின் நிம்மதியில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. ஆனால் உறுதியான கட்டுப்பாடுடையவன் சிறிய, பெரிய சம்பவங்களின் போதும் மனதைக் கட்டுப்படுத்தி அவ்விடயத்தில் அல்லாஹ்வின் உதவியையும் வேண்டுவான். மேலும் தன் மனதின் பால் தன்னை ஒரு நொடிப் பொழுதேனும் சாட்டி விட வேண்டாமென அல்லாஹ்விடம் பாது காவலும் தேடுவான். அவ்வமயம் அவனை எதிர் கொண்ட பாரிய பிரச்சினைககள் இலகுவடைந்தது போன்று, சிறிய பிரச்சினைகளும் அவனுக்கு இலகுவானவையாக மாறிவிடும். அப்பொழுது அவனது மனம் நிம்மதி அடையும். அவன் வாழ்வில் நிம்மதி உண்டாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்