🌐 மொழியைத் தேர்ந்தெடுக்கவும் / Select Language
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்
Useful Islamic Sections & Site Guide

Posts

Loading...

நண்பன்

 


நண்பன்


அல்லாஹ் கூறுகிறான்:அன்றைய(கியாம) நாளில் அநியா யம் செய்து விட்டவன் தனது இரு கை (விரல்)களைக் கடித்துக் கொண்டு எனக்கு வந்த கைசேதமே! அல்லாஹ் வின் தூதருடன் ஒரு வழியை நான் எடுத்திருக்க வேண்டுமே எனக்கு வந்த கைசேதமே! (என்னை வழிகெடுத்தவனை)நான் நண்பனாக ஆக்கிக்கொள்ளாதிருந்திருக்க வேண்டுமே! நிச்சய மாக நேரான வழி என்னிடம் வந்த பின்னும் அதிலிருந்து




என்னைவழி கெடுத்துவிட்டானே எனக் கூறுவான்.மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிக சதி செய்பவனாகிவிட்டான் (25:27-29). மேலும் கூறுகிறான்: அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொள்வார்கள். அவர்களில் ஒருவன் எனக்கு (உலகில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவான். (மரணத்திற்குப்பின் எழுப்பப்படுவோம் என் பதை) உண்மைப்படுத்துபவர்களில் நீயும் ஒருவனா? எனக் கேட்டான். நாம் இறந்து மண்ணாகவும், எலும்பாகவும் ஆகி விட்டபின் (மீண்டும்உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்படு வோமா? (என்றும் கேட்டான்). (அவ்வாறு கேட்டவனை) நீங்கள் பார்க் (கவிரும்பு)கிறீர்களா? என்றும் கூறுவான். அவர் (கீழே)நோக்கினார். அவனை நரகில் நடுவில் பார்த்தார். (அவனிடம்) அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ என்னை அழித்து விட முற்பட்டாயே எனக் கூறுவான்.எனது இறை வனருள் இல்லாமலிருந்தால் நானும் (நரகத்திற்கு) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாக இருந்திருப்பேன். (37:50-57). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் தனது நண்பனின் மார்கத்தின் மீதே இருப்பான் எனவே உங்களில் ஒருவர் யாருடன் நட்புக் கொள்வதென சிந்தித்துப் பார்த்துக் கொள்ளட்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலேயில்லாத நாளில் அல்லாஹ் தன் அர்ஷின் நிழலின் கீழ் ஏழு நபர்களுக்கு நிழல் கொடுப்பான்: இறைவனுக்காக நேசம் கொண்டு அதன் மீதே ஒன்று சேர்ந்து அதன் மீதே பிரிந்து விட்ட இரு மனிதர்கள்(ஹதீஸின் ஒரு பகுதி).


பயன்கள்


1-எல்லா மனிதர்களுக்கும் நண்பன் அவசியம் எனவே நன்மையான  காரியங்களை அறிவித்து அதன் மீதே துணையாக இருக் கக்கூடிய நல்ல நண்பனை அடைந்து கொள்வதற்கு நீ முயற்சி செய்து கொள்.


2-நிச்சயமாக நண்பன் இறைவனுக்கு மாறு செய்வதற்கும் இறை நிராகரிப்பிற்கும் உன்னை இழுத்துச் செல்பவனாக இருந்தால் அவனே விரோதிகளில் மிகக் கடிமான விரோ தியாவான்.


3-காஃபிர்களை நண்பர்களாக்கிக் கொள்வது பற்றி எச்சரிக்கப்பட் டுள்ளது.ஏனெனில் அவர்கள் முஸ்லிம்கள் இறைவனுக்கு வழிப்படுவதையும், நன்மைகளைச் செய்வதையும் தடுப்பார்கள்.


நண்பர்கள் விடயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். ஆண்களாக இருந்தாலும் சரி , பெண்களாக இருந்தாலும் சரி. நிறைய நண்பர்கள் இருப்பதை காட்டிலும் , சில நல்ல ஸாலிஹான நண்பர்கள் இருப்பது சிறந்தது. அவர்கள் உங்களை அல்லாஹ்வின் பக்கம் கொண்டுசெல்லுவார்கள் . தீமையான காரியங்களிருந்து உங்களை தடுப்பார்கள். இவர்கள் தான் உங்கள் உண்மையான நண்பர்கள் ! 

கருத்துரையிடுக

0 கருத்துகள்