🌐 மொழியைத் தேர்ந்தெடுக்கவும் / Select Language
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்
Useful Islamic Sections & Site Guide

Posts

Loading...

சவுதி அரேபியா அல்ல நமது முன்மாதிரி!

 


சவுதி அரேபியா அல்ல நமது முன்மாதிரி!


சவுதி அரேபியாவில் பாப் இசை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாப் பாடகி வந்திருக்கிறாள்; ஆக இத்தனை காலம் இசை ஹராமான ஒன்றாக கருதப்பட்ட சவுதி அரேபியாவில் இன்று இசை பொதுவெளியில் இசைக்கப்படுகிறது. சவுதி அல்ல நமது இஸ்லாம் நமது முன்மாதிரி. நான் சவுதி அரேபியாவில் வசித்த பொழுது அங்கு இருந்த சில சவூதி அரேபிய நாட்டினர் மூலம் கேட்டிருக்கிறேன்.


முகமது பின் சல்மான் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பாக அவர் செய்த முதல் நடவடிக்கை மூத்த அறிஞர்கள் சபையை (alalells andநிராகரித்ததுதான் அவர்கள் தங்களுடைய கருத்துகளை அரசாங்கத்திற்கு எதிராகப் பதிவு செய்யக் கூடாது. மீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்பது; அதற்கும் மீறி தங்கள் கருத்துகளை மார்க்கத்திற்காக பதிவு செய்த சத்திய உலமாக்கள் இன்று இருட்டு அறையில் சிறைச்சாலையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.


நான் கேட்கும் ஒரே கேள்வி நீங்கள் விரும்பும் இசையை இஸ்லாம் தடை செய்திருக்கிறது. அதைத் தவறாக ஆய்வுசெய்து குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சில அறிஞர்களின் வார்த்தைகளை நம்பி மறுமையில் இறைவன்முன் பதில் சொல்ல வேண்டுமே என்ற இறை விசுவாசிகளின் நம்பிக்கையை வீணாக்கப் போகிறீர்களா?


தங்களின் பதிவுகளினால் சமூக வலைதளங்களில் இசையை ஹராம் என்று சொல்பவர்களை கேலி, கிண்டல்கள் செய்வது நக்கல், நையாண்டிகள் செய்வது நயவஞ்சகத்தின் அடையாளம் என்பதை மறந்துவிட வேண்டாம் இதுதான் நீங்கள் கற்ற இஸ்லாமா?


இதுதான் நீங்கள் எழுதிக்கொண்டிருந்த இஸ்லாமா?


ஆக இன்னும் நீங்கள் முறையான இஸ்லாத்தால் பக்குவப்பட வில்லை என்றுதானே அர்த்தம்!


இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ஒரு சமூகத்தில் மானக்கேடான விஷயங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும்போது (செய்யப்படும்போது) அவர்களின் முன்னோர்கள் கேட்டிராத வேதனைகளும் நோய்களும் அவர்களிடையே பரவும்.


(நூல்: இப்னு மாஜா)


இம்ரான் இப்னு ஹுசைன் (ரழி) அவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக கூறுகிறார்கள்: "என்னுடைய உம்மத்தில் பூமி விழுங்குவதும் உருமாற்றம் நிகழ்வதும் வானத்திலிருந்து வேதனைகள் இறங்குவதும் நடக்கும். அப்பொழுது முஸ்லிம்களில் இருந்து ஒருவர் அது எப்பொழுது நிகழும் என்று கேட்டார். நபியவர்கள் சொன்னார்கள்: பாடகிகள், இசைக் கருவிகள்.


மதுபானங்கள் வெளிப்படும்போது. (நூல்: திர்மிதீ, தரம்: ஸஹீஹ்)


‎‫إِنَّ الَّذِينَ يُحِبُّوۡنَ أَنۡ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوْا لَهُمۡ عَذَابٌ الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُوْنَ‬‎


இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர். மேலும், அல்லாஹ்


அறிகின்றான்; நீங்கள் அறிவதில்லை. (திருக்குர்ஆன், 24:19)     


💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠



தனிநபர் வழிபாட்டை இட்டுச் செல்லும் கண்மூடித்தனமான நம்பிக்கைகள்!


அரசியல்வாதிகள் முதல் பாமர குடிமக்கள் வரை அனைவரும் இன்று இந்த தனிநபர் வழிபாடு' என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிறந்த எழுத்தாளர்கள் இன்னும் நல்ல சிந்தனை யாளர்கள் என்று யாரும் இதில் விதிவிலக்கு இல்லை.


என் தலைவர் கூறிவிட்டார். எனது ஆசிரியர் சொல்லிவிட்டார். எனது இயக்கம் இவ்வாறு கூறிவிட்டது என்று தங்களின் அறிவுக் கண்களை மூடி, ஏன், எதற்காக என்று எந்த பகுத்தறிவும் இல்லாமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவது. தன் தலைவனோ அல்லது தான் நம்பிக்கொண்டிருக்கும் அறிஞனோ சொன்னால்தான் இறைக் கட்டளைகளைக்கூட நம்புவது, எதிர் கருத்துக்கள் வரும்போது வலுக்கட்டாயமாக சண்டைக்குச் செல்வது போன்ற மடமைத்தனமான செயல்கள் பல்கிப் பெறுகிவிட்டன.


அந்தளவுக்கு அவர்களின் தனிநபர் வழிபாடு, சத்தியத்தை விட்டும் அவர்களை தூரமாக்கிவிட்டது. வெள்ளைக் காகம் பறக்கிறது என்று அவர்களின் அறிஞர்கள் கூறினால், ஆம்! என்று முன்மொழிவார்கள்.


அதுபோல இறைவனால் விலக்கப்பட்ட ஹராமை அவர்களின் அறிஞர்கள் ஹலால் என்று சொன்னால் கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றும் செம்மறி ஆட்டு மந்தைகள்.

ஆனால் நமது ஸலஃபு ஸாலிஹீன்களாகிய சத்திய சஹாபாக்களின் பாதையில் நடந்து சென்ற சங்கையான இமாம்கள் நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள்.


இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தங்களின் "பிதாயா வன் நிஹாயா" என்ற புத்தகத்தில், எனது ஆத்மீக குருவாகிய ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவருக்கும் எனக்கும் சில மார்க்கச் சட்ட திட்டங்களை தொகுக்கும் விஷயங்களில் கருத்து முரண்பாடுகள் உள்ளன என்று கூறுகிறார்


இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் ஆசிரியரான இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள், இமாம் அபூஹனீஃபா (ரஹ்) தமக்கு முந்திய கால அறிஞராக இருந்தாலும், அவர்களுடைய சில ஆய்வுகளை விமர்சனம் செய்துள்ளார்கள். அவர்களுக்கு மாற்றமான தன்னுடைய ஆய்வுகளை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் தனது புத்தகமாகிய "அர்ரிஸாலாவில்" பதிவு செய்திருக்கிறார்கள்.


இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:


ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனின் உதாரணம்: இரவில் விறகு சுமப்பவனின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் ஒரு கட்டு விறகைச் சுமக்கின்றான். அதில் ஒரு கடும் விஷப் பாம்பு இருக்கிறது. அவன் அறியாத நேரத்தில் அவனைத் தீண்டிவிடும். (இதுபோன்றுதான் ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனை அக்கல்வி அவன் அறியாத விதத்தில் அவனை வழிதவறச் செய்துவிடும்) (மத்கல் - இமாம் பைஹகீ, பாகம்: 1, பக்கம்: 211)


ஆதாரப் பூர்வமான ஹதீஸை மட்டும் பின்பற்று!


ஷாஃபிஈ அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபிஈ அவர்களிடம், நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம் ஷாஃபிஈ அவர்கள் "எப்போது நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டு நான் அதை பற்றிப் பிடிக்கவில்லையோ (அப்போது) என்னுடைய அறிவு மழுங்கி விட்டது என்று நான் உங்களிடம் சான்று பகர்கிறேன்' என்று கூறி தன்னுடைய கரத்தால் தம்முடைய தலையை நோக்கி சுட்டிக் காட்டினார்கள். (முஹ்தஸர் அல்முஅம்மல், பாகம்: 1 பக்கம்: 57)


தவறு இல்லாத நூல்கள் இல்லை!


ஷாஃபிஈ இமாம் அவர்கள் கூறினார்கள்.


"நான் இந்தப் புத்தகங்களை தொகுத்துள்ளேன். நான் ஆய்வு செய்வதில் குறைவைக்கவில்லை. என்றாலும் இதில் கட்டாயம் தவறுகள் பெற்றுக் கொள்ளப்படும். ஏனென்றால் அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து விலகிவிட்டேன். அதிலே அவர்கள் அதிகமான முரண்பாடுகளை பெற்றிருப்பார்கள்' என்று தன் திருமறையில் அல்லாஹ் கூறுகிறான். என்னுடைய இந்தப் புத்தகங்களிலே திருமறைக் குர்ஆனுக்கும். நபிவழிக்கும் மாற்றமாக நீங்கள் கண்டால் நிச்சயமாக நான் அதை விட்டும் விலகிவிட்டேன். (அதாவது என்னுடைய கருத்து தவறானது. நபிவழிதான் சரியானது என்பதாகும்)


(முஹ்தஸர் அல்முஅம்மல், பாகம்: 1 பக்கம்: 57)


இஸ்லாமிய மூலஆதாரங்கள் தெளிவாக இருந்தாலும் நாம் பின்பற்றும் அறிஞர்களின் கருத்துகளில் மட்டுமே தேடுகிறோம். இஸ்லாத்தை


இஸ்லாம் இதை வேறிலேயே கிள்ளி எறிகிறது, தனி நபரை பின்பற்ற ஒரு அளவுகோளை வைத்திருக்கிறது.


அதுதான் பகுத்தறிவான இஸ்லாமிய ஆதாரங்கள், என்னை பின்பற்றுவதாக இருந்தால் நான் ஆதாரங்கள் தரும்வரை நீர்என்னிடம் கேட்க கூடாது என்று இறைநேசர் ஹிழ்ர் (அலை) நபி மூஸா (அலை) அவர்களுக்கு சொன்னார்கள். அதைத்தான் திருக்குர்ஆன் நமக்கு ஒரு வழிகாட்டலாக பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறது


‎‫قَالَ فَإِنِ اتَّبَعْتَنِي فَلَا تَسْأَلۡنِي عَنْ شَيْءٍ حَتَّى أُحْدِثَ لَكَ مِنْهٍْ‬‎


அதற்கு அவர் கூறினார்: "சரி, நீர் என்னுடன் வருகிறீர் என்றால், நானே உம்மிடம் கூறும் வரை எதைப் பற்றியும் நீர் என்னிடம் கேட்கக் கூடாது."


(திருக்குர் ஆன் 18:70)

கருத்துரையிடுக

0 கருத்துகள்