வாழ்வின் சோதனைகள்; இஸ்லாத்தைப் புரிந்துகொள்வதே தீர்வு
அனைத்துப் புகழும் படைப்பினங்களின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரித்தானது, மனித குலத்திற்கு அருளாக அனுப்பப்பட்ட நமது நபிகள் நாயகத்தின் மீது அருளும் ஈடேற்றமும் உண்டாவதாக. மேலும் அவரது குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் அவரது சுன்னாவை உறுதியாகக் கடைப்பிடிப்ப வர்கள் மற்றும் தீர்ப்பு நாள் வரை அவருடைய வழி முறையைப் பின்பற்றுபவர்கள் மீது அருளும் ஈடேற்றமும் உண்டாவதாக,
அதன் பிறகு பின்வருமாறு:
அல்லா ஹ் இ ஸ்லா த்தை க் கொண்டு எ ங்க ளு க்கு அருள் புரிந்திருக்கிறான்.
மிக உயர்ந்தோனான அல்லாஹ் கூறினான்:
விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை-அவனைப் பயப்பட வேண்டிய முறைப்படி பயப்படுங்கள், மேலும், நிச்சயமாக (முற்றிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லீம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட
வேண்டாம். (அல்குர்ஆன்: 3:102)
மேலும், நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள், (உங்களுக்குள் கருத்துவேறுபட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம், மேலும், உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள், நீங்கள் (ஒருவர் மற்றவருக்கு) விரோதிகளாக இருந்த சமயத்தில், அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப் பிணைப்பை உண்டாக்கினான், ஆகவே., அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள், (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக்குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள், அதிலிருந்தும் அவன் உங்களை ஈடேறச்செய்தான், நீங்கள் நேர்வழிப் பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றான்.
(அல்குர்ஆன்: 3:103)
وَلْتَكُنْ مِّنْكُمْ أُمَّةً يَدْعُوْنَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَبِكَ هُمُ الْمُفْلِحُوْنَ இன்னும், (விசுவாசங்கொண்டோரே!) உங்களில் ஒரு கூட்டத்தார்-அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக்கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும், அவர்களே தாம் வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன்: 3:104)
وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ تَفَرَّقُوْا وَاخْتَلَفُوْا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَتُ ۖ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ மேலும், தங்களிடம் தெளிவான சான்றுகள் வந்ததன் பின்னரும் தங்களுக்குள் பிரிவை உண்டாக்கிக்கொண்டு, (கருத்து) வேறுபட்டுப் போனார்களே, அத்தகையோரைப்போல நீங்களும் ஆகிவிட வேண்டாம், அத்தகையோருக்குத்தான் மறுமையில் மகத்தான வேதனையுமுண்டு
(அல்குர்ஆன்: 3:105)
மிக உயர்ந்தோனான அல்லாஹ் கூறினான்:
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَا تُمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيْتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்,
(அல்குர்ஆன்: 5:3)
மிக உயர்ந்தோனான அல்லாஹ் கூறினான்:
إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ
நிச்சயமாக, அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம்
இஸ்லாமாகும். (அல்குர்ஆன்: 3:19)
மிக உயர்ந்தோனான அல்லாஹ் கூறினான்:
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَسِرِينَ “இன்னும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவராவது தேடினால், அப்பொழுது அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்படவே மாட்டாது. மேலும், மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார்
(அல்குர்ஆன்: 3:85)
மிக உயர்ந்தோனான அல்லாஹ் கூறினான்:
மற்றும் مِلَّةَ أَبِيكُمۡ إِبۡرَهِيْمَ هُوَ سَمِيكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا لَيَلِيَكُونَ عَلَيْكُمۡ وَتَكُوۡنُوۡا شُهَدَاءَ عَلَى النَّاسِ فَأَقِيمُوا الصَّلوةَ وَأتُوا الزَّکَٰوةَ بِاللَّهِ هُوَ مَوْلَكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيْرُ
(விசுவாசங்கொண்டோரே!) இன்னும் நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (உங்களுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி) அறப்போர் செய்ய வேண்டிய முறைப்படி அறப்போர் (ஜிஹாது) செய்யுங்கள்; அவனே உங்களைத் தேர்ந்தெடுத்து மேன்மையாக்கி
வைத்திருக்கிறான்; இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு யாதொரு சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; உங்களுடைய தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தை (கடைபிடியுங்கள்!) அவன்தான் (இதற்கு) முன்னர், உங்களுக்கு முஸ்லீம்கள் எனப் பெயரிட்டான்; இ(வ் வேதத்)திலும்தான் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது; இது ஏனெனில், நம்முடைய) இத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருப்பதற்காகவும், நீங்கள் மற்ற மனிதர்களுக்குச் சாட்சியாக இருப்பதற்காகவுமேயாகும்; எனவே, தொழுகையை நீங்கள் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள், அல்லாஹ்வை (அவனின் மார்க்கத்தை)ப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள், அவன் தான் உங்களுடைய பாதுகாவலன், பாதுகாவலனில் அவன் நல்லவன், மேலும்
நல்ல உதவியாளன்.
(அல்குர்ஆன்: 22:78)
அல்லாஹ்வின் அருட்கொடைகளை சிலர் சிறுமைப்படுத்தினாலும், அவற்றை அற்பமானதாகக் கருதினாலும், இஸ்லாத்தின் வழிகாட்டலுக்கு இணையான வேறு எந்த அருளும் இல்லை. மாறாக, ஒருவர் அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவு கூர்ந்து அவைகளுக்கு நன்றி செலுத்த வேண்டும். இஸ்லாம் என்பது முஹம்மது (ஸல்) அவர்களைக் கொண்டு உயர்ந்தோனான அல்லாஹ் அனுப்பி வைத்த வாழ்க்கை முறை. இதுவே ஒரு பெரிய அருள். அவர் (ஸல்) இஸ்லாத்தைத் தூதுத்துவமாக கொண்டுவந்ததிலிருந்து, அதைத் தெளிவுபடுத்தி அதன்பால் அழைத்தார். மிக உயர்ந்தோனான அல்லாஹ் கூறினான்:
لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُوْلًا مِّنْ أَنْفُسِهْمْ أَيْتِهِ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمْ
الْكِتَبَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلْلٍ مُّبِيْنٍ
அல்லாஹ் விசுவாசிகள் மீது அவர்களில் ஒரு தூதரை,(அதுவும்) அவர்களிலிருந்தே அவன் அனுப்பிவைத்த சமயத்தில் திட்டமாக பேரருள் செய்துவிட்டான். அவர், அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களைப் (பாவத்திலிருந்து) பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார், அவர்களுக்கு வேதத்தையும், (குர் ஆனையும்) ஞானத்தையும், (ஸுன்னத்தையும்) கற்றுக் கொடுக்கின்றார்,
நிச்சயமாக அவர்கள் இதற்குமுன் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
(அல்குர்ஆன்: 3:164)


0 கருத்துகள்
Welcome to your comment!