நபித் தோழர்கள் மற்றும் தூதர் அவர்களுடைய பசி
ஒரு இரவின் போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தங்களுடைய வீட்டிலிருந்து) புறப்படுகிறார்கள். அப்போது அவர்கள். அபூபக்கர் அவர்களுடன் உமர் ஆகிய இருவரும் அவ்விருவருடைய வீட்டிற்கு வெளியில் அமர்ந்து இருக்கின்றனர்.
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: இந்நேரத்தில் உங்களிருவரின் வீடுகளிலிருந்து உங்களிருவரையும் வெளியேற்றியது எது?
அபூபக்கர் மற்றும் உமர்: அல்லாஹ்வின் தூதர் அவர்களே! பசி!
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: நானும்தான், என் உயிர் எவன் கைவசமிருக்கிறதோ அத்தகையவனின் மீது சத்தியமாக உங்கள் இருவரையும் வெளியேற்றியதுவே என்னையும் வெளியேற்றிவிட்டது!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களை எழுந்திருக்குமாறு கட்டளையிட அவர்களுடன் அவர்கள் எழுந்து அன்ஸாரிகளிலுள்ள ஒரு தோழரின் வீட்டிற்கு அவர்கள் செல்கின்றனர், (அவர் பெயர் அபூல்ஹைஸம் மாலிக் பின் அத்தைஹான்) அவரை அவருடைய வீட்டில் (காணப்) பெறவில்லை (அப்போது வீட்டிலிருந்த) ஒரு பெண்: வருக! உங்கள் வரவு நல்வரவாகுக! (என்று தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பேசியது).
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: (வீட்டாராகிய) இன்னவர் எங்கே?
அப்பெண்: சுவையான தண்ணீரை எங்களுக்காகக் கொண்டு வரச் சென்றுள்ளார். (இதற்கிடையில் வீட்டின் உரிமையாளராகிய) அபுல் ஹைஸம் மற்றும் அவர்களுடைய இரு தோழரைப் பார்த்துவிட்டு, நபி அவர்களைக் கட்டித் தழுவி, தன்தாய் தந்தை ஆகியோரை அவர்களுக்கு அர்ப்பணமாக்குகிறார்.
அபுல் ஹைஸம்: புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே! இன்றையத்தினம்
விருந்தினர்களால் என்னை விட மிகந்த சிறப்புடையவர் எவருமில்லை! (என்று கூறிவிட்டு) அபுல்ஹைஸம் அங்கிருந்து சென்று ஈச்சமரத்தின் ஒரு கொப்பைக் கொண்டு வருகிறார்; அதில் காய்ந்த, ஈரமான, தொலிசுருங்கிய (அனைத்து வகையான ஈத்தம் பழங்களான வையும் இருந்தன.
அபுல் ஹைஸம்: இவற்றிலிருந்து புசியுங்கள். (என்று கூறிவிட்டு)
அவர்களுக்காக ஒரு ஆட்டை அறுப்பதற்காக தன்னுடைன் கத்தியை எடுத்துக் கொண்டு நடக்கிறார்.
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: பால் கொடுக்கும் ஆட்டைத் தவிர்ப்பீராக! (என்று அவரை எச்சரித்து விட்டு) தூதர் மற்றும் அவர்களுடைய இரு தோழர்கள் வயிறு நிறையும் வரை ஈத்தம் பழத்தையும் இறைச்சியையும் உண்டுவிட்டு தாகம் தீர சுவையான தண்ணீரையும் பருகுகிறார்கள்.
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அபூபக்கர், உமர் ஆகியோரிடம்) "என் உயிர் எவன் கையிலிருக்கிறதோ, அத்தகையவனின் மீது சத்தியமாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள், உங்களுடைய வீடுகளிலிருந்து பசியானது உங்களை வெளியேற்றியது, பின்னர் நீங்கள் இந்த அருட்கொடைய அடைந்து கொண்டே திரும்புகிறீர்கள்.
இந்த ஹதீஸானதை முஸ்லிம், மாலிக், திர்மிதி ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
ஹதீஸிலிருந்து பெறப்படும் கருத்துக்கள்:
1. தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் அவர்களுடைய தோழர்கள் பசியின் கொடுமை அவர்களுக்கு கடுமையாகிறது அப்போது அவரவர்களின் வீடுகளிலிருந்து வெளியேறுகிறார்கள் எனெனில் (எங்காவது) அவர்கள் உணவைப் பெறலாம்.
2. ஓர் ஆடவர் தன் தோழர்களில் எந்த ஒருவரின் வீட்டிலும் உணவைப் பெறுவதற்காகச் செல்வது குற்றமல்ல.
3. அருட்கொடையின் சிறப்பு அதைப்படைத்தவனுக்கு நன்றி செய்தல் அதன் மூலம் அருட்கொடை செய்தவனைப் புறக்கணித்து விடாது நினைவில் வைத்தல் ஆகியவை பற்றி தெரிந்து கொள்ளுதல்.
4. ஒருபெண்ணிடம் திரைக்கு அப்பாலிருந்து கேள்வி கேட்பது ஓர் ஆடவருக்கு (மார்க்கத்தில்) ஆகுமானதாகும்.
அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய வாழ்க்கை
1. உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்:
"மேலும், தேவையுடையவராக அவன் உம்மைக் கண்டான் ஆகவே, உமது தேவையை நிறைவேற்றி (உம்மை) தேவையற்ற வராக ஆக்கிவிட்டான்” (அள்ளுஹா அத்தியாயம் வசனம் -7)
2. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்து கூறுகிறார்கள்:
முஹம்மதின் குடும்பத்தினராகிய நாங்கள் எங்களை மாதம் கடந்துவிடும் (இந்நிலையில்) நெருப்பை மூட்டாதவர்களாக இருந்தோம். அவை இரண்டு கருத்தவைதான்; உலர்ந்த ஈத்தம்பழம் மற்றும் தண்ணீர், என்றாலும் எங்களைச்சுற்றி அன்ஸார்களிலுள்ள வீட்டார்கள் இருந்தனர். அவர்களுடைய ஒட்டகங்கள் அல்லது ஆடுகளிலிருந்து (கறந்த பாலை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக அனுப்பிக் கொடுப்பவர்களாக இருந்தனர் அந்தப்பாலிலிருந்து அவர்கள் குடித்து, எங்களுக்கும் குடிக்கக் கொடுப்பார்கள்.
இதனை புகாரீ மற்றும் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள்.
3. "அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்வை அவர்கள் அடையும் (மரணிக்கும்) வரை உயர்வகையில் தயார் செய்யப்பட்ட ரொட்டியையோ, முழுமையாக பொரிக்கப்பட்ட ஆட்டையோ கண்டதாக நான் அறியேன்" என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துக் கூறுகிறார்கள்.
இதனை புகாரீ பதிவு செய்துள்ளார்கள்
4. மேலும், தரங்குறைந்த உலர்ந்த ஈத்தம்பழத்திலிருந்து தங்களுடைய வயிறு கொள் அளவிற்கு வைத்துச் சுற்றிக் கொண்டிருக்க அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் திண்ணமாகக் கண்டேன் என உமர் பின் அல்கத்தாபு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள்.
5. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக கோதுமை ரொட்டி மற்றும் (அதைத்தொட்டுத் திண்ணுவதற்காக) மணம் மாறிய (சிக்கடித்த) எண்ணையை, தான் கொண்டு சென்றதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், இன்னும் அவர்களுடைய கவசத்தை ஒரு யூதனிடம் அடமானம் வைத்து(ப் பெற்ற பணத்திலிருந்து) தங்களுடைய குடும்பத்தினருக்காக தொலிக் கோதுமையை (வாங்கி)எடுத்தார்கள்: முஹம்மதின் குடும்பத்தாரிடம் உலர்ந்த ஈத்தம் பழத்தில் ஒரு மரக்கால் இருந்தோ மற்றும் நல்ல கோதுமையிலிருந்து ஒரு மரக்கால் இருந்தோ ஒரு மாலைப் பொழுது கடக்கவில்லை" என அவர்கள் கூற அவர்களிடம் திண்ணமாக நான் செவியேற்றேன்.
இதனை புகாரீ பதிவு செய்துள்ளார்கள்.
6. தொடர்ந்து பல இரவுகள் இரவு உணவைப் பெறாதவர்களாகவும், அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் (வயிற்றைச்) சுருட்டியவர்களாக இரவைக் கழித்துள்ளனர் அவர்களின் (உணவான) ரொட்டி அதிகமாக தொலிக் கோதுமையினால் இருந்தது.
தரம் ஹஸன், அஹ்மது மற்றும் அவரல்லாதோர் அதைப்பதிவு செய்துள்ளனர்
7. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்துக் கூறுகிறார்கள்.
"முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினர் மதினாவை வந்தடைந்தது முதல், அவர்கள் மரணிக்கும் வரை தொடந்து மூன்று நாட்கள் நல்ல கோதுமை ரொட்டியினால் வயிறு நிறைய உணவுண்டதில்லை".
8. யா அல்லாஹ்! முஹம்மதுடைய குடும்பத்தினரின் உணவை (அவர்களின்) பசியைத் தீர்க்கின்ற அளவிற்கு ஆக்குவாயாக என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவார்கள்.
இதனை புகாரீ மற்றும் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள்.
இன்று நமக்கு விசாலமாக உணவுகள் இருக்கிறது. நம்மில் சிலர் அந்த உணவை வீணடிக்கிறார்கள் . குப்பையில் கொட்டப்படுகிறது. பத்து பேர்கள் சாப்பிடும் உணவுகள் , ஒரே ஆள் போட்டிபோட்டுக்கொண்டு சாப்பிடும் காட்சியை பார்க்கின்றோம்.
அங்கே சாப்பிட்டேன் , இங்கே சாப்பிட்டேன் என்று வீண் பெருமை அடிக்கும் ஒரு கூட்டம்.
சிந்திப்பதற்காக இந்த பதிவை பதிவு செய்கிறேன்.
அல்ஹம்துலில்லாஹ் !
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!