ஒவ்வொரு அடியிலும் நேர்மையுடன் இருந்தால் அதற்குப் பலன் நிச்சயம் உண்டு. இந்த வீடியோவின் முழுப் பேச்சையும் கீழே காணலாம்:
"ஒரு ₹10, ₹13 லட்சம் ஆன கதையைச் சொல்லப் போறேன். இந்த கதையைக் கேளுங்க, ரொம்ப ஆழமான கருத்து இருக்கு.
காலையில ஒரு கடைக்காரர் கடையைத் திறக்குறாரு. அப்போ ஒரு லேடி அவருக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. ஒரு ₹10-ஐ நீட்டுறாங்க. 'என்னம்மா வேணும்?'னு கேக்குறாரு. 'இல்லையா, நேத்து நான் வாங்க வந்திருந்தப்போ எனக்கு எக்ஸ்ட்ரா ₹10 கொடுத்திட்டீங்க. அதை ரிட்டர்ன் பண்ணத்தான் வந்தேன்'னு சொல்றாங்க.
கடைக்காரர் சிரிக்கிறாரு. 'நேத்து ₹5-க்கும் அவ்வளவு பார்கைன் (bargain) பண்ணீங்க, ₹10-க்காக இவ்வளவு தூரம் வந்திருக்கீங்களா?'னு கேட்கும்போது அவங்க சொல்றாங்க: 'பார்கைன் பண் வறது என்னோட உரிமை. ஆனா, ஒரு விலையை நம்ம ரீச் பண்ணதுக்கு அப்புறம், ஒரு ரூபாய் அவங்களை ஏமாத்தினாலும் அது என் மனசாட்சியை (conscience) சும்மா விடாது சார். அதுக்குத்தான் நான் வந்திருக்கேன்.
இன்பாக்ட் (in fact) நேத்து நைட்டே வந்தேன், நீங்க கடையை மூடிட்டீங்க. அதனால இரண்டாவது வாட்டியா காலையில வந்திருக்கேன்'ன்ன உடனே கடைக்காரர் ரொம்ப ஆச்சரியப்படுறாரு. '₹10 தானேம்மா, எதுக்காக இரண்டாவது வாட்டி இவ்வளவு தூரம் வந்தீங்க?'னு கேட்கும்போது, 'சார், அது உங்களுக்குப் பெரிய விஷயமா இருக்காது, ஆனா எனக்கு பீஸ் ஆஃப் மைண்ட் (peace of mind) வேணும். என் ஹஸ்பண்ட் உயிரோட இல்லை. எனக்கு சொல்லிக் கொடுத்தது ஒன்னே ஒன்னுதான் - யார்கிட்டயும் ஒரு ரூபாய் கூட நம்ம ஏமாத்தக் கூடாது. நம்ம ஏமாத்துறோம்னு நினைக்கிறோம், ஆனா மேல இருந்து பாக்குற கடவுள் இதெல்லாம் பார்த்துட்டே இருக்காரு, அக்கவுண்ட் வச்சுட்டுத்தான் இருக்காரு. இன்னைக்கு நம்ம தப்பு பண்ணினா, நாளைக்கு நம்ம குழந்தைகளை அது பாதிக்கும்'னு சொல்லிட்டு கிளம்பிடுறாங்க.
இந்த கடைக்காரர் இதைப் பார்த்துட்டே இருக்காரு. உடனே கல்லாப்பெட்டியிலிருந்து ஒரு ₹300 எடுத்துட்டு மார்க்கெட்டுக்குப் போறாரு. அங்க ஒரு கடைக்குப் போயிட்டு 'இந்தா பிரகாஷ், இந்தா உன் ₹300. நேத்து உன்னை நிறைய சார்ஜ் பண்ணிட்டேன். அது என் மனசாட்சியை ஏதோ குத்திட்டே இருந்துச்சு, ரிட்டர்ன் பண்ண வந்தேன்'னு கொடுத்திடுறாரு. பிரகாஷ் சிரிக்கிறாரு: 'நெக்ஸ்ட் மந்த் (next month) வரீங்கள்ல, அப்ப கொடுத்திருக்கலாம். எதுக்கு இப்போ அவசரப்பட்டு வந்தீங்க?'னு கேட்கும்போது, 'இல்ல இல்ல, இன்னைக்கும் நெக்ஸ்ட் மந்துக்கும் இடையில என்ன நடக்கும்னு தெரியாது. எனக்கே ஏதாச்சும் ஆயிடுச்சுனா? மேல பாக்குற கடவுள் நான் பண்ணின தப்புக்கு என் குழந்தைகளைத் தண்டிக்கக் கூடாதுல்ல. நான் யாரையும் ஏமாத்த விரும்பல'னு சொல்லிட்டுப் போறாரு.
இந்த கடைக்காரர் போன உடனே, பிரகாஷ்க்கு ஒரே ஷாக்! ரெண்டு நாள் நைட்டு தூக்கமே வரல. மூணாவது நாள் பேங்க்குப் போய் ₹13 லட்சம் வித்ரா (withdraw) பண்றாரு. என்ன கதைன்னா, 10 வருஷத்துக்கு முன்னாடி பிரகாஷ் அவர் ஃபிரண்ட் கிட்ட ₹3 லட்சம் கடன் வாங்கிருப்பார். அடுத்த நாள் அந்த ஃபிரண்ட் இறந்து போயிருப்பார். ஃபிரண்டோட ஃபேமிலிக்கு இது தெரியாததால யாருமே இந்த பணத்தைக் கேட்கல, பிரகாஷும் திரும்பக் கொடுக்கல.
ஃபிரண்டோட வைஃப் ஒரு மேய்டு (maid) வேலை செஞ்சு, தன் குழந்தைகளை ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்துட்டு வருவாங்க. அப்ப கூட பிரகாஷ் இதைப் பத்தி வாயே திறக்க மாட்டாரு. நேரா ஃபிரண்ட் வைஃப் வீட்டுக்குப் போயி, கால்ல விழுந்து என்ன நடந்ததோ அதெல்லாம் சொல்லி மன்னிப்புக் கேக்குறாரு. ஃபிரண்ட் வைஃப்க்கு ஒரே ஆச்சரியம்! ஒரு ஒரு ரூபாயும் அந்த அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாங்க, இந்த ₹13 லட்சம்கிறது பெரிய விஷயம் அவங்களுக்கு. அவங்களை ஆசிர்வதிச்சு அந்த பணத்தை வாங்கிக்குறாங்க.
இந்த லேடி யார் தெரியுமா? ஃபர்ஸ்ட் சீன்ல கடைக்காரருக்கு ₹10 ரிட்டர்ன் பண்ண ரெண்டு வாட்டி நடந்து வந்து கொடுத்தாங்கல்ல, அதே லேடிதான்!
நல்லவங்களைக் கடவுள் சோதிப்பாரு, ஆனா எப்பவுமே கைவிடமாட்டாரு. இந்த உலகத்துல ஹானஸ்டா (honest) நடந்துக்கிட்டா அதுக்குண்டான பலன் நிச்சயம் கிடைக்கும்."
நேர்மையாக இருந்தால் நிறைய பலன்கள் கிடைக்கும் .குறிப்பாக உள்ளத்தில் மன அமைதி கிட்டும். அல்லாஹ்வுக்கு பயந்து நடந்தால் , வாழ்க்கை பிரகாசிக்கும் . மறுமை பயணம் எளிதாகும். இந்த உலகத்தில் ஒன்றுமில்லை. நாம் கொண்டுவந்ததும் எதுவுமில்லை. நாம் கொண்டுபோவது என்னவாகா இருக்கும்.?

கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!