அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, டிசம்பர் 31, 2016

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?

“பொம்பள சிரிச்சாப் போச்சு” என்ற பேச்சு தமிழ் பேசும் மக்களிடம் சர்வ சாதாரணமாகச் சுற்றி வருகின்ற ஓர் எச்சரிக்கைச் சொல்லாகும். இது எதைக் குறிக்கின்றது? ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.
ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்தப் பழமொழி தெரிவிக்கின்றது.

வெள்ளி, டிசம்பர் 23, 2016

விருந்தில் சீரழியும் சமுதாயம்

விருந்தில் சீரழியும் சமுதாயம்
நமது சமுதாயத்தில் பல்வேறு விருந்துகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. பெயர் சூட்டு விழா விருந்து, கத்னா விருந்து, சடங்கு விருந்து, கல்யாண விருந்து, புதுமனைப் புகுவிழா விருந்து, பிள்ளைப் பேறு விருந்து, இறந்தவர் வீட்டில் அவர் அடக்கம் செய்யப்பட்டதும் விருந்து, மூன்றாம் நாள் பாத்திஹா விருந்து, ஏழாம் நாள் பாத்திஹா விருந்து, நாற்பதாம் நாள் பாத்திஹா விருந்து, ஹஜ்ஜுக்குச் செல்லும் விருந்து என விருந்து மழைகள் பொழிந்து கொண்டிருக்கின்றன. மக்கள் அம்மழையில் நனைந்த வண்ணமிருக்கின்றனர்.

இந்த விருந்துகளில் திருமணம் மற்றும் புதுமனை புகுவிழா விருந்துகள் மார்க்கம் அனுமதிக்கின்ற விருந்துகளாகும். மற்ற விருந்துகள் மார்க்கத்திற்கு முரணானவையாகும். அதிலும் குறிப்பாக இறந்தவர் வீட்டில் அன்றைய தினமே நடத்தப்படும் விருந்து ஈவு இரக்கம் ஆகியவற்றுக்கு எதிராக விடுக்கப்படும் சவாலாகும்.

புதன், டிசம்பர் 21, 2016

செல்போனில் சீரழியும் பிள்ளைகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை. இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.

செவ்வாய், டிசம்பர் 20, 2016

இசையில் மயங்கும் இளைய சமுதாயம் தொடர் 2📺📻

இசையில் மயங்கும் இளைய சமுதாயம் தொடர் 2📺📻

செல்வந்தர்களின் அந்தஸ்தை அடைய…
பணம் இருக்கும் செல்வந்தர்களில் அதிகமானவர்களுக்குக் கொடுக்க மனம் இருக்காது. பணம் இல்லாத ஏழைகளிடம் கொடுக்க வேண்டும் என்ற மனம் இருக்கும். இன்னும் சிலரோ தங்களுக்குக் கிடைக்கும் செல்வத்தை வீண் விரயம் இல்லாமல் செலவழித்து, அதில் மீதம் இருப்பதைத் தர்மம் செய்து விடுவார்கள். என்றாலும் இவர்களது எண்ணம் இன்னும் அதிகமாகத் தர்மம் செய்ய வேண்டும் என்றே இருக்கும்.
தர்மம் செய்பவர்களைப் பார்க்கும் ஏழைகளுக்கு, இது போன்று நமக்கும் செல்வம் தரப்பட்டால் நாமும் தர்மம் செய்து அதிக நன்மைகளைப் பெறலாமே! இவர்கள் மட்டும் அதிகமான நன்மைகளைப் பெறுகிறார்களே! என்று நினைப்பார்கள்.

இது போலத் தான் சத்திய ஸஹாபாக்களும் வருத்தப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த திக்ருகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

இசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻[தொடர் 1

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!இசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻[தொடர் 1
இயந்திரமயமாகி விட்ட மனித வாழ்க்கையில் மக்கள் தமது வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு மனம் நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக டி.வி. பார்ப்பது, இசை கேட்பது, இன்னும் இது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இசை தான் மனதுக்கு அமைதியைத் தந்து, கவலைகளை மறக்கச் செய்யும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இசை கேட்கும் போது அது ஒரு பொழுது போக்காகவும், உற்சாகத்தைத் தூண்டுவதாகவும் இருக்கின்றது; எனவே இசை அமைதியளிக்கின்றது; மகிழ்ச்சியைத் தருகின்றது என்று எண்ணுகின்றார்கள். அதனால் தான் தங்களுக்கு ஏதேனும் மன இறுக்கம் ஏற்படும் போது அல்லது சலிப்பு ஏற்படும் போது இசை கேட்க விரும்புகின்றார்கள்.
இசை நம்முடைய உடலுக்கும் உள்ளத்திற்கும் அமைதி, ஓய்வைத் தருகின்றது என்ற எண்ணம் பரவலாக இருந்து வருவதும் இதற்குக் காரணம்.
பெண்களும் கூட வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது வேலையில் சிரமம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இசையைக் கேட்டுக் கொண்டே வேலை செய்வார்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல. மார்க்கம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருமே இந்த இசையில் மூழ்கியுள்ளனர்.

திங்கள், டிசம்பர் 19, 2016

ஜமாஅத் தொழுகை

ஜமாஅத் தொழுகை





நயவஞ்சகரின் அடையாளம்

சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு நான் முஅத்தினுக்குக் கட்டளையிட்டு, பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுவிக்குமாறு கூறி அதன் பின்பு யாராவது தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (657)

சனி, டிசம்பர் 17, 2016

திருக்குர்ஆனை ஓதுவோம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த நற்செயல்களைச் செய்யும் போது ஏராளமான நன்மைகளை அல்லாஹ் பரிசாக வழங்குகின்றான். இந்த நன்மைகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று குர்ஆனை ஓதுவது.
நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். “உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம், புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்” என்று பதிலளித்தோம். “உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதா? அவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல் : முஸ்லிம்

வெள்ளி, டிசம்பர் 16, 2016

உபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠

உபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠
அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்குத் தண்டனையும் வழங்குகின்றான்.
ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வமூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

புதன், டிசம்பர் 14, 2016

நபிகளாரின் நற்குணங்கள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! 
நான்கு எழுத்து படித்து, பணமும் அதிகாரமும் வந்து விட்டால் அவர்களிடம் இருக்கும் பெருமையும் ஆணவமும் கேட்க வேண்டியதில்லை. ஆனால் இவ்வுலகத்தில் சிறப்புமிக்க இறைத்தூதராக இருந்த நபிகளார் எந்தக் கட்டத்திலும் பெருமை கொண்டதில்லை. பணிவும் தன்னடக்கமுமே அவர்களிடம் வெளிப்பட்டது.

தன்னடக்கம்
ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அத்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அந்த யூதர், உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அத்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்கடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்ததையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், மூசாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நால் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர் களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நான் தான் முதலாவதாக மயக்கம் தெந்து எழுவேன். அப்போது, மூசா (அலை), (அல்லாஹ்வுடைய) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் விதி விலக்கு அத்திருப்பானா என்று எனக்குத் தெரியாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2411)

திங்கள், டிசம்பர் 12, 2016

அருள் வளம் (பரக்கத்) பெறுவது எப்படி?

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாம் என்பது இறைவனால் மனித குலத்திற்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட மார்க்கம். இந்த மார்க்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களாகிய நமக்கு இறைவன் வழங்கி இருக்கிற அருட்கொடைகளில் ஒன்றான பரக்கத்தைப் பற்றியும், அதனை பெறுவதைப் பற்றியும் இந்த உரையிலே பார்க்க இருக்கிறோம்.

அபிவிருத்தியின் அவசியம்
இவ்வுலுகில் வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒரு வழியை பின்பற்றி மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் எல்லாருடைய வாழ்விலும் மகிழ்ச்சி நிலைத்திருப்பதில்லை. வரும் வருமானம் போதுமானதாக இருப்பதில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் இல்லாமல் இருப்பதில்லை. இப்படி ஏராள மானோர் வாழ்ந்து வருகின்றனர்.
நம் வாழ்வில் இந்த குறைகளை இல்லாமல் ஆக்குவதற்கு என்ன வழி முறை இருக்கிறது. இந்த குறை எவ்வாறு போக்குவது? படைத்தவனின் உதவியின்றி இக்குறையை போக்க முடியாது. அவனின் அருள்வளம் (பரக் கத்) நமக்கு கிடைத்துவிட்டால் நம் வாழ்வில் நன்மையை காணலாம். இறை வனின் மறைமுகமான அந்த அருள்வளம் (பரக்கத்) கிடைப்பதற்குரிய வழி என்ன? அவனின் பரக்கத் கிடைக்காமல் போவதற்குரிய வழி என்ன? என்பதை அறிந்தால் பரக்கத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள நாம் முயற்சிக்கலாம். இதற்கு மக்களிடம் இருக்கும் வழிமுறைகள் என்ன? நபிகளார் காட்டிய வழி முறைகள் என்ன?

ஞாயிறு, டிசம்பர் 11, 2016

மலக்குகளின் துஆவைப் பெறுவோர்கள்


அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
இறைவனின் படைப்புகளில் மிக அற்புதமான படைப்பு மலக்குகள் ஆவார்கள். என்னதான் மனிதன் சிறந்த படைப்பாக இருந்தாலும், சிந்திக்கும் திறன் இருந்தாலும் இறைவனுக்கு மாறுசெய்யும் குணம் அவனிடம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் மலக்குமார்கள் இறைவனின் கட்டளையை அப்படியே பின்பற்றி நடப்பவர்கள். இறைவனுக்கு மாறு செய்யவே தெரியாதவர்கள்.
திருக்குர்ஆனில் இறைவன் இவர்களைப் பற்றி கூறும்போது தங்கள் இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்ய மாட்டார்கள் என வர்ணிக்கின்றான். இவர்கள் இறைவனின் வேலையாள்கள். இந்த நல்லோர்கள் நமக்காக துஆ செய்தால் எப்படி இருக்கும். மலக்குகள் நமக்காக துஆ செய்வது சாதாரண விஷயமா? அவர்களின் துஆவில் நாம் இடம்பெறுவது நமக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமே. ஏனெனில் இறைவன் நமக்காக துஆ செய்யுமாறு கட்டளையிட்டால் மட்டுமே மலக்குகள் துஆ செய்வார்கள். தாமாக துஆ செய்ய மாட்டார்கள்.
நம் மக்கள் ஹஜ்ரத்மார்களின் துஆவில் இடம்பிடிப்பதை பாக்கியமாக கருதி அவர்களிடம் கூனிக்குறுகி ஹஜ்ரத் எனக்காக துஆ செய்யுங்கள் என்று கொஞ்சுகிறார்கள்; குழைகிறார்கள். மக்களை ஏமாற்றி வயிற்றுப்பிழைப்பு நடத்தும் தொழிலில் முதல் இடம் வகிக்கும் தரங்கெட்ட முரீதுகளின் துஆ தங்களுக்கு கிடைப்பதற்காக அவர்களின் காலடியில் தவமாய் தவம் இருக்கி றார்கள். இவர்களின் துஆவை அல்லாஹ் கண்டுகொள்வானா? என்பது தனி விஷயம்.

புதன், டிசம்பர் 07, 2016

இவ்வுலகம் முதல் மறுமை வரை

👨🌍🌔மனிதன் இவ்வுலகில் தோன்றியதிலிருந்து தான் முக்கியமாக கருதும் அனைத்தையும் எழுதி வைக்கும் பழக்கம் அவனிடத்தில் இருந்தது. தான் பேசும் மொழியை எழுதி வைத்து மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தான். நிலங்கள் மற்றும் சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்பதை ஆரம்ப காலத்தில் கற்களிலும் பின் தோல்களிலும் பிறகு பேப்பரிலும் எழுதிவைத்தார்கள்.
இவ்வாறு ஒவ்வொன்றையும் பதிவு செய்யும் பழக்கம் விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துவிட்ட இக்காலத்தில் எல்லா விஷயங்களும் மிக இலகுவாக கம்யூட்டர் மூலம் மற்றும் சிப்பிலும் (ஸ்ரீட்ண்ல்) லும் பதியப்படுகின்றன . அதிலும் குறிப்பாக குற்றச்செயல்கள் புரிபவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்காக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு பதியப்படுகிறது.
இதை கொண்டு குற்றம் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர். இது இவ்வுலகில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கண்காணிக்கும் வழிமுறைகளாகும்! ஆனால் (முஸ்லிம்களுக்கு) இறைவன் மனிதன் செய்யும் அனைத்தையும் பதிவு செய்ய ஒரு இனத்தையே படைத்துள்ளான். அவர்கள் மலக்குமார்கள் எனும் வானவர்கள் ஆவர் .

புதன், நவம்பர் 30, 2016

ஸகாத் கொடுப்போம் 💰..தொடர் 3

ஸகாத் கொடுப்போம் 💰..தொடர் 3  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் பற்றி இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். இன்று ஜகாத் வழங்குவோரின் சிறப்புகளையும், கொடுக்காதவர்களின் மறுமை தண்டணைகளையும் பார்க்க இருக்கிறோம்.
ஸகாத் கொடுப்போம் 💰..தொடர் 3
மறுமைக்கான டெபாஸிட்
தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
அல்குர்ஆன் 2:110

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் 74:20

ஸகாத் கொடுப்போம் 🌿..தொடர் 2

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் பற்றி இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். இன்று ஜகாத் வழங்குவோரின் சிறப்புகளை பார்க்க இருக்கிறோம்.
ஸகாத் கொடுப்போம் 🌿..தொடர் 2
ஸகாத் வழங்குவோரின் சிறப்புகள்
செல்வ வசதியைப் பெற்ற ஒருவன் ஸகாத்தை நிறைவேற்றுவதன் மூலமே அவன் உண்மையான இறை நம்பிக்கையாளனாகவும், இறையச்சமுடையவனாகவும், நேர்வழி பெற்றவனாகவும், இறையருளுக்குச் சொந்தக்காரனாகவும், மறுமையில் வெற்றியாளனாகவும், நிரந்தரமான சொர்க்கத்திற்குரியவனாகவும் ஆகமுடியும் என்பதைப் பல்வேறு வசனங்களில் திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது. இதன் மூலம் ஸகாத்தை நிறைவேற்றுபவர்களுக்குரிய சிறப்புகளை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

செவ்வாய், நவம்பர் 29, 2016

ஸகாத் கொடுப்போம்💲 தொடர் 1

முன்னுரை.......ஸகாத் கொடுப்போம்💲 தொடர் 1
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் ஆகும். கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொறுத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இந்த தொடர் உரையில்,
1. ஸகாத் கட்டாயக் கடமை
2. ஸகாத்தின் இம்மை மறுமை பயன்கள்
3. ஸகாத் வழங்காதோரின் மறுமை நிலை ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் காணவிருக்கின்றோம்.

ஸகாத் என்ற அரபி வார்த்தைக்கு வளர்ச்சியடைதல், அதிகமாகுதல், தூய்மைப்படுத்துதல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. ஒருவன் கடமையாக்கப்பட்ட இந்த ஸகாத்தை வழங்குவதின் மூலம் அவனுடைய செல்வமும் உள்ளமும் பரிசுத்தமாகிறது.
அல்லாஹ் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் பாக்கியங்களை அதிகப்படுத்துகிறான். இதன் காரணமாகத் தான் முஸ்லிம்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து கணக்கிட்டு குறிப்பிட்ட விகித்தாச்சார அடிப்படையில் வழங்க வேண்டிய கட்டாய தர்மத்திற்கு ஸகாத் என்று இறைவன் பெயர் சூட்டியுள்ளான்.

ஞாயிறு, நவம்பர் 27, 2016

பயிரிடப்பட வேண்டிய காலம்👌👍🚀🚓 [படிக்க தவறாதீர்கள்!]

பயிரிடப்பட  வேண்டிய காலம்👌👍🚀🚓 [படிக்க தவறாதீர்கள்!]
மனித வாழ்வு, ஏற்றத் தாழ்வுகளை கொண்டது. வாழ்க்கையில் சில நேரங்களில் சிலவற்றை இழப்போம், சிலவற்றை பெறுவோம். ஆனால், ஒரே ஒரு இறைவனின் அருள் மட்டுமே இழந்தால், மீண்டும் பெற முடியாமல் போய் விடுகிறது. அது தான் காலம் என்பதை நாமெல்லாம் மிகவும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். எனவே தான் மனிதன் மிகவும் மதிக்கும் செல்வமான பொன்னோடும், கண்ணோடும் ஒப்பிட்டு, காலம் பொன் போன்றது எனவும், கண் போன்றது எனவும் சித்தரிப்பதை பார்க்கிறோம்.
பல நாட்கள் செய்து கொண்டிருந்த பணிகளை சில நோடி பொழுதுகளில் செய்யக்கூடியளவிற்கு காலத்தை சுருக்கி விட்ட நவீன உலகத்தில், தினங்களை கொண்டாடுவதில் தான் காலத்தை கழிக்கின்றனர். பெரும்பாலோர். அனுதினமும் ஏதாவது ஒரு பெயரில் தினங்களை கொண்டாடும் மனிதர்கள், இந்த காலத்தை உரிய வகையில் பயன்படுத்தாவிட்டால் திண்டாடும் நிலை தான் ஏற்படும் என்பது தான் நிதர்சனம்.

சனி, நவம்பர் 26, 2016

இஸ்லாமும் மருத்துவமும் 🍍🌿🌲🐥

இஸ்லாமும் மருத்துவமும் 🍍🌿🌲🐥
செல்வங்களிலே மிகப்பெரும் செல்வமாக மக்களால் கருதப்படுவது நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு. நிழலின் அருமை வெயிலில் அவதியுறுபவனுக்குத்தான் தெரியும் என்பார்கள். அதுபோல் நோயாளிகளிடம் கேட்டால்தான் நோயற்ற வாழ்வின் அருமை பெருமை புரியும்.
பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருந்தும் தங்களைப் பீடித்துள்ள நோய்களின் காரணத்தால் தாங்கள் விரும்பியதை உண்டு அனுபவிக்க முடியாத அவஸ்தையை அவர்களிடம் கேட்டால் மனம் வெதும்பி அது பற்றி விவரிப்பார்கள்.

விரும்பியதை உண்டு மகிழ முடியாது என்பது மட்டுமல்ல, நோயினால் விரும்பிய செயல்களை ஆற்றவும் இயலாது போகும்.
எனவேதான் இஸ்லாமும் நோயற்ற வாழ்வை பெரும் பாக்கியம் என்று சொல்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
1. ஆரோக்கியம்
2. ஓய்வு
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 6412

இன்றைக்கு நோயில்லா வாழ்க்கை என்பது பகல் கனவு என்று கருதுமளவு அரிய விஷயமாகி விட்டது.

வியாழன், நவம்பர் 24, 2016

வெட்கம் அனுமதியும் தடையும் தொடர் 3🎇🀄

செய்த தவறை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது[வெட்கம் அனுமதியும் தடையும் தொடர் 3🎇🀄
செய்த தவறை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது, இறைவனுக்கு செய்யும் விஷயத்தில் தவறிழைத்துவிட்டால் இறைவனிடத்தில் தம் தவறுகளை தனிமையில் அமர்ந்து வெட்கப்படாமல் சொல்லி மனமுருகி மன்னிப்புத் தேடுவது கூடும். சமுதாயத் தலைவர்களாகவோ அல்லது அரசியல் தலைவர்களாகவோ அல்லது பிரமுகர்களாகவோ அல்லது இயக்கமோ அல்லது பொதுவாழ்வில் ஈடுபடுகிற எதுவோ, எவருமோ செய்த தவறை, மக்களிடம் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டோ அல்லது பயந்துகொண்டோ அல்லது வேறொரு காரணத்திற்காகவோ மறைப்பது எந்த விதத்திலும் கூடாது.
நமது நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளமான பாபரி மஸ்ஜிதை இந்துத்துவ பாசிச வெறியர்கள் இடித்துத் தரைமட்டமாக்கி இந்தியாவின் இறையாண்மையையும் கட்டுக்கோப்பையும் தகர்த்தெறிந்தனர். அப்போதிருந்த காங்கிரஸ் கட்சியின் பிரதமர், நரசிம்மராவ் சிறுபான்மை மக்களிடம் மன்னிப்புக் கேட்டதை யாரும் மறந்திருக்கமாட்டோம். மன்னிப்பு மட்டும் கேட்காமல் இடித்த இடத்திலேயே கட்டித் தருவோம் என்றும் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி அதை நிறைவேற்றவே இல்லை. இருந்தாலும் வெட்கப்படாமல் அல்லது ஐந்துக்கும் பத்துக்கும் அலைகிற ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்காவது மன்னிப்புக் கேட்டதை தலைப்புக்கான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

புதன், நவம்பர் 23, 2016

வெட்கம் அனுமதியும் தடையும் தொடர் 2

சத்தியத்தைச் சொல்வதற்கு வெட்கம் கூடாது[வெட்கம் அனுமதியும் தடையும் தொடர் 2
இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கியமான இந்த சத்தியப் பிரச்சாரக் கொள்கையை எவரிடமும் எடுத்துச் சொல்வதற்கு வெட்கம் தடையாக இருக்கவே கூடாது. அப்படி சத்தியப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடும்போது வெட்கம் தடையாக இருப்பின், அல்லது ஆள்பார்த்து ஆளுக்குத் தகுந்தமாதிரியெல்லாம் நமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டால் நாம் வழிகெட்டு விடுவோம். எனவே யார் முகத்தையும் பாராமல் தயவுதாட்சண்யமின்றி ஒளிவுமறைவு இல்லாமல் காய்தல் உவத்தலின்றி சொல்லவேண்டிய செய்தியை இறைவனுக்குப் பயந்து சொல்லிவிட வேண்டியதுதான். இதுதான் சத்தியப் பிரச்சாரம் செய்கிற, சத்தியக் கொள்கையைக் கடைபிடிக்கிற ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய பண்பு. இதில் வெட்கப்படுவது நூறு சதம் தவறானதாகும்.

இப்படித்தான் நம்முடன் இருந்தவர்களில் எத்தனையோ பேர் வெட்கப்பட்டோ அல்லது தயவுதாட்சண்யத்திற்காகவோ அல்லது ஒருமாதிரியாக இருப்பதற்காகவோ சத்தியத்தை மறைத்ததினால் இன்று வழிகேட்டில் இருப்பதை நாம் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதேபோன்று நிர்வாகத்திலோ குடும்பத்திலோ ஒரு தவறு நடப்பதை வெட்கப்பட்டோ அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காகவோ தட்டிக்கேட்காமல் இருந்தால், நாளடைவில் அந்தத் தவறை நாமும்கூட செய்துவிடுவோம். அல்லது நமது மேற்பார்வையிலேயே அந்த தவறு நடைபெறுவதற்கு உறுதுணையாகிவிடுவதையும் நடைமுறை வாழ்க்கையில் பார்க்கத்தான் செய்கிறோம்.

வெட்கம் அனுமதியும் தடையும்! தொடர் 1👍💢

வெட்கம் அனுமதியும் தடையும்! தொடர் 1👍💢
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கை மனிதன் கடவுளை வணங்குவதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை என்பதாகும். எனவேதான் கடவுளுக்காக மட்டுமே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மனைவி மக்கள் தேவையில்லை என்று துறவறம் செல்வதை இஸ்லாம் தடுக்கிறது. மேலும் துறவிகள் இஸ்லாமிய மார்க்கத்தின் பார்வையில் நல்லவர்கள் அல்ல என்றும் சொல்லுகிறது. அதே நேரத்தில் மனிதனிடம் இருக்கவேண்டிய பண்புகளைப் பற்றியும், ஒருவன் பிறரிடத்தில் நடந்து கொள்ளும் முறை பற்றியும் ஆழமாகப் பேசுகிறது.

ஒருவன் தன் தாயிடத்தில், தந்தையிடத்தில், மனைவியிடத்தில், பிள்ளைகளிடத்தில், குடும்பத்தினர்கள், உறவினர்களிடத்தில், அண்டை வீட்டாரிடத்தில், இப்படி தன்னைச் சுற்றியுள்ளவர்களிடத்திலும் எல்லாரிடத்திலும் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? என்பதைப் பற்றியும் எதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கிறது. இந்த வகையில் இஸ்லாமே மனிதனுக்கான நேரான வழிகாட்டுதலாகும். மனிதனுக்குத் தேவையான அனைத்தையுமே இஸ்லாம் கற்றுக் கொடுக்கும்.

வெள்ளி, நவம்பர் 11, 2016

தொழுகையில் தொடரும் நன்மைகள்..

தொழுகையில் தொடரும் நன்மைகள்..


ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட பிறகு அடுத்தபடியாக செய்ய கூடிய அமல்களில் சிறந்த அமல் தொழுகையாகும். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பிறகு ஏன் முதலில் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். பெற்றோர்களை பேணுதல், ரமலான் மாதத்தில் நோன்பு வைத்தல், ஹஜ் செய்தல், ஜகாத் கொடுத்தல் இதுபோன்ற பல சிறந்த அமல்கள் இருந்தாலும் அல்லாஹ் தொழுகைக்குத்தான் முன்னுரிமை வழங்கிறான்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொழுகைக்கு மட்டும் பல நன்மைகளை வழங்குகிறான். தொழுகைக்காக உளூ செய்தால், தொழுவதற்கு பள்ளிக்கு நடந்து வந்தால், பாங்கு கூறினால். பாங்குக்கு பதில் கூறினால், பாங்கு முடிந்த உடன் துஆ ஒதினால் என்று எல்லாவற்றுக்கும் நன்மை, நன்மை என்று வாரி வழங்குகின்றான்.

சனி, நவம்பர் 05, 2016

சொன்னதைச் செய்தவர் , செய்ததைச் சொன்னவர் ..

சொன்னதைச் செய்தவர் , செய்ததைச்  சொன்னவர் ..
இந்த வாசகம் அரசியல்வாதிகளுக்கு மனனமான ஒன்று. மக்களைத் தம் பக்கம் இழுப்பதற்குப் போடப் படும் கோஷம் . ஆனால் இதன்படி செயல்படுவார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

பாலாறு ஓடும், குடிசை கோபுரமாக, பசி பட்டினி நீங்கும் என்று வாக்குறுதியை அள்ளி வீசுவார்கள் . ஆனால் வெற்றி பெற்றபின் .... தம் குடிசையைக்  கோபுரமாக மாற்றிக் கொள்வார்கள் . தம் வீட்டில் பாலாறை ஓடச் செய்வார்கள். தாம் பசி பட்டினி  இன்றி இன்பமாக இருப்பார்கள். இப்படி அடியோடு மக்களை மறந்து விடுவர் இன்றைய அரசியல்வாதிகள் [வியாதிகள், மக்களை பீடித்த நோயிகள் ]

ஆனால் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் இதைச் சொன்னார்களோ , அதை அப்படியே செய்து காட்டினார்கள். ஊருக்கு உபதேசம்  தமக்கு இல்லை என்று அவர்கள் இருந்ததில்லை. தம் தோழர்களை உலகப் பற்றற்று இருக்கும்படி வலியுறுத்தினார்கள் . அதைப்போன்று தாமும் உலக ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல்  இருந்து கொண்டார்கள்.

வியாழன், நவம்பர் 03, 2016

நான் தொழுகையாளியாக இருக்கவில்லையே ...!

நான் தொழுகையாளியாக இருக்கவில்லையே ...! என்று [மறுமையில் ] புலம்பு மனிதர்களில் ''நாம் இருக்கக் கூடாது என்பதற்காக ... ஒரு நினைவுவூட்டுதல் .....!

எல்லோரும் தொழுக வேண்டும்மென்றுதான் ஆசைப்படுவார்கள் , ஆனால், அவர்களை தொழவிடாமல் தடுப்பது  எது...? உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன் ...!!!

நிச்சயமாக தொழுகை, மானக்கேடானதை விட்டும் வெறுக்கப்பட்டதை விட்டும் [தொழுபவரைத் ] தடுக்கும்.
[அல் அன் கபூத் 45]

ஒருவர் தொழுகிறார் என்றால் , அவரை இந்த தொழுகை மானக்கேடானதை விட்டும் வெறுக்கக்கூடிய காரியங்களை விட்டும் தடுக்கவில்லை என்றால் , நிச்சயமாக அவரின் தொழுகை சரியில்லை என்று பொருள். அல்லாஹ் அவரின் தொழுகையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.
நிச்சயமாக எவர்கள் (ஓரிறை) நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்கள் செய்து தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தையும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய (நற்) கூலி அவர்களுடைய ரப்பிடத்தில் இருக்கிறது - இன்னும் அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
[அல் பகரா 277]

செவ்வாய், நவம்பர் 01, 2016

தஃவத் தப்லீஃக் - தஃவத்தும், அதன் சிறப்புகளும்






 அல்லாஹுதஆலாவுடைய கட்டளைகளுக்கு உட்பட்டு நடப்பவருக்கும், அல்லாஹுதஆலாவுடைய கட்டளைகளை மீறுபவருக்கும் உதாரணம், கப்பலில் பயணம் செய்யும் மக்களைப் போன்று! சீட்டுக்குலுக்கிப் போட்டு பயணிகளின் இடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, சிலர் கப்பலின் மேல் தளத்திலும், சிலர் கப்பலின் கீழ் தளத்திலும் உறுதி செய்யப்பட்டது. கீழ் தளத்திலுள்ளோருக்குத் தண்ணீர் தேவைப்பட்டால், மேல் தளத்துக்கு வந்து, அங்குள்ளோரைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. நாம் நமது (கீழ்ப்) பகுதியில் துவாரம் போட்டுக் கொண்டால் (மேலே போவதற்குப் பதிலாக அந்தத் துவாரம் வழியாக தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்), மேலும் மேள்தளத்தில் உள்ளோருக்குச் சிரமம் கொடுக்காமல் இருக்கலாம், (இப்படிச் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!) என்று கீழ் தளத்தினர் தங்களுக்குள் ஆலோசனை செய்தனர். மேள்தளத்திலுள்ளவர்கள், கீழ் தளத்திலுள்ளவர்களை அவர்களுடைய விருப்பத்திற்கேற்ப விட்டுவிட்டால், (அவர்கள் துவாரம் போட்டுக் கொண்டால்) கப்பல் மூழ்கி எல்லோருமே அழிந்து போவார்கள். அவர்களை (கப்பலில் துவாரம் போடவிடாமல் தடுத்துவிட்டால்) அவர்களும், மற்ற பயணிகளும் காப்பாற்றப்படுவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் நுஃமானிப்னு பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

சனி, அக்டோபர் 29, 2016

ஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் !

ஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் !
அல்லாஹ்வின் திருப்பெயரால்......

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
''எவன் அல்லாஹ்வின் திருமறையைப் பின்பற்றுகின்றானோ அவன் இம்மையிலும் வழிகெட மாட்டான்,, மறுமையிலும் நஷ்டம் அடைய மாட்டான்''. பின்னர், இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள் ''எவன் எனது நேர்வழியைப் பின்பற்றுவானோ அவன் வழி  தவறவும்  நஷ்டமடையவும் மாட்டான்'' [20..123] எனும் திருமறை வசனத்தை ஓதினார்கள்.
[மிஷ்காத் ]

ஒரு தாய் தன்  பிள்ளையை நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்று விரும்புவாள். ஒரு தாய் தன் பிள்ளையை அதட்டவும் செய்வாள், அடிக்கவும் செய்வாள் , அணைக்கவும் செய்வாள்.  தாய்க்கு பிடிக்காத காரியத்தை பிள்ளை செய்யும்போது , அப்பொழுது லேசாக அதட்டுவாள் , பிள்ளை கேட்காமல் மீறிச்  செய்யும்போதும் , அந்த தாய் அடிக்கவும் செய்வாள்.  பிள்ளை பயந்து அழும்போது , அந்த பிள்ளையை தூக்கி நெஞ்ஜோடு  நெஞ்சாக அனைத்து  கொஞ்சி இரக்கம் காட்டுவாள்.  அந்த பிள்ளையின் அழுகையை நிறுத்த சிரிப்பூட்டுவாள். இது தாயின் இயல்பான குணம்!

வியாழன், அக்டோபர் 27, 2016

இறைவன் காட்டிய வழிமுறையா ..? மனிதன் காட்டிய வழிமுறையா ..?

இறைவன் காட்டிய வழிமுறையா ..? மனிதன் காட்டிய வழிமுறையா ..?
இறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..?

மனிதனை படைத்த இறைவன்  ஒருவனுக்குத்தான்  தெரியும்! மனிதனுக்கு என்ன தேவை என்பது. மனிதனே மனிதனுக்கு சட்டம் வகுக்க முடியுமா ? இது சத்தியம் இல்லை.

ஒரு அருமையான கதை...

ஒரு முஸ்லீம் சகோதரரும் ஒரு ஹிந்து சகோதரரும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள், இருவரும் விவாதம் செய்கிறார்கள்   ''இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தைப் பற்றி'' .  முஸ்லீம் சகோதரர் கூறுகிறார்  ''  ஒருவர் திருடிவிட்டால் அவர் கரத்தை துண்டிக்க வேண்டுமென்று இஸ்லாம் கூறுகிறது என்று சொல்கிறார் . அதற்கு அந்த ஹிந்து சகோதரர் கூறுகிறார் '' இது மிகப் பெரிய தண்டனை , திருடியவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுப்பது என்பது எனக்கு சரியாகப்படவில்லை''.  அவர் மேலும் கூறுகிறார் .. திருடியவனை தண்டிக்கவேண்டும் அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. இருப்பினும் அவனுக்கு சிறை தான் சரியான தண்டனையாக இருக்கும் என்று கூறி முடிக்கிறார் . அதற்கு அந்த முஸ்லீம் சகோதரர் எதுவும் பதில் கூறவில்லை. இருவரும் சென்றுவிடுகிறார்கள்.

திங்கள், அக்டோபர் 17, 2016

அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!



நோன்பு 17 அல்லது 18 இருக்கும்..அன்று இஃப்தார் முடித்து சற்று ஓய்வில் இருக்கும் நேரம்..கதவு தட்டப்படும் சத்தம். அதை தொடர்ந்து சலாம் கூறியபடி ஒரு பெண்மணி வீட்டிற்குள் வந்தார். எனக்கு சரியாக அடையாளம் தெரியாததால் யாரும்மா? என்ன விஷயம் என்று கேட்டதும், ” வாப்பா! நான் தான்


வாப்பா” என்றதும் பொறி தட்டியது போல் ஒரு நினைவு. ஆம் அந்த பெண் வேறு யாருமில்லை. போன வருடத்திய என் பதிவின் மூலகர்த்தாவான அதே பெண்..உலகம் முழுவதும் அனைவரையும் அழ வைத்த அதே பெண்..அந்த ஏழை மகள் தான்.

செவ்வாய், அக்டோபர் 11, 2016

இறைவா! சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்?

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
   ''தாயின் பாதத்தின் கீழ் சொர்க்கலோகம் இருக்கிறது தாயின் அன்பைப் பெறாதவன் இறையன்பைப் பெற முடியாது. தந்தையின் கோபத்திற்குள்ளானவன் இறைவனின் கோபத்திற்குள்ளாகிறான். (நபிமொழி)

'இறைவா! சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்?' என நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்டார்கள்.

''அதோ அங்குச் சென்று பாருங்கள். அங்கிருப்பவர் தான் உங்களுடன் இருப்பார்'' என இறைவன் கூறினான். அங்கு சென்று பார்க்கிறார்கள்.

ஒரு வயதிய மூதாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவள் அருகில் தட்டில் உணவை வைத்துக்கொண்டு ஒருவர் நிற்கிறார்.

ஞாயிறு, அக்டோபர் 09, 2016

தவ்பாச் செய்து மீளுதல் ...

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தவ்பாச்  செய்து மீளுதல் ...

அனைத்துப் பாவங்களிலிருந்தும் தவ்பா - பாவமீட்சி பெறுவது அவசியமாகும் என மார்க்க மேதைகள் கூறுகிறார்கள்.

மனிதர்களின் உரிமைகள் சம்மந்தப்படாது, அல்லாஹு தஆலாவின்  கட்டளைகள் விஷயத்தில் ஒருவர், மாறு செய்து பாவம் இழைத்திருப்பாராயின் , அவர் அதனை விட்டுத் தவ்பா செய்து மீளுவதற்கு பின்வரும் மூன்று நிபந்தனைகள் உள்ளன. 1] தாம் இதுவரை செய்து வந்த பாவத்தைவிட்டு முற்றிலும் நீங்கி விடுவது [2] தமது பாவம் குறித்து உண்மையில் வருந்திக் கைசேதமுறுவது [3] இனிமேல் எப்பொழுதும் அப்பாவத்தைச் செய்வதில்லை என உறுதி பூணுவது.

சனி, அக்டோபர் 08, 2016

ஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..?

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
ஸிராத்  பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..?

இந்த ஹதீஸின் மூலம் நாம் அறிவது.. அமானிதம், மற்றும் உறவு பந்தத்தை சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ''ஸிராத் '' எனும் மெல்லிய நுட்பமான பாலத்தின் இரு ஓரங்களிலும் அவையிரண்டும் நின்று கொண்டு இருப்பதென்றால், 'அவ்விரு அமல்களின் சிறப்பும் பெருமையும் எவ்வளவு உயர்வாக இருக்க முடியும்!  வல்ல நாயனான அல்லாஹ் நம் அனைவருக்கும் அமானிதத்தைப் பேணிப் பாதுகாத்து வரும் பண்பையும் உற்றார் உறவினரை அரவணைத்து ஆதரித்துவரும் பண்பையும் நிறைவாய் தந்தருள்வானாக, ஆமீன்...

சோதிக்கப்பட்ட மூவர்

அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
சோதிக்கப்பட்ட மூவர் ..............

நபி [ஸல்] நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அறிவிக்கிறார்கள்.. பனூ இஸ்ராயீல் கூட்டத்தாரில்  ஒரு வெண்தோல் நோயுடையவர், ஒரு வழுக்கைத் தலையுடையவர் , ஒரு குருடர் ஆகிய மூவர் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடி, அவர்களிடம் ஒரு மலக்கை அனுப்பி வைத்தான். அவர் [முதலில்] வெண்தோல் நோயுடையவரிடம் வந்து, உமக்கு மிக உவப்பானது எது என வினவினார். அதற்கவர் அழகிய நிறம், அழகிய தோல், மக்கள் அறுவருக்கும்  இந்நிறம் என்னை விட்டுப் போய்விடுவது ஆகியவை என்றார். அவரை அம்மலக்கு  தமது கரத்தால் தடவவே , அவரது அறுவறுப்பான  நிறம் போய்விட்டது அழகிய நிறம் கொடுக்கப்பட்டார். பின்னர் உமக்கு எச்செல்வம் மிக உவப்பானது? என அவரிடம் அம்மலக்கு  வினவினார். அவர் ஒட்டகை எனக் கூறவே, அவருக்கு ஒரு சின்ன ஒட்டகை வழங்கப்பட்டது. அல்லாஹ் உமக்கு அபிவிருத்தி அருள்வானாக! என  [அவருக்கு] அம்மலக்கு  [வாழ்த்துக்] கூறினார்.

வெள்ளி, அக்டோபர் 07, 2016

சூனியக்காரனும், ஈமான் உறுதிமிக்க சிறுவரும்.[தொடர் 2]

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சூனியக்காரனும், ஈமான் உறுதிமிக்க சிறுவரும்.[தொடர் 2]

இன்ஷாஅல்லாஹ் இதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்..
கண் ஒளி பெற்ற  அரசவையைச் சேர்ந்தவர் அரசவைக்கு கொண்டு வரப்பட்டு நீ உமது மார்க்கத்தை விட்டு விலகி விடும் என்று அவரிடம் கூறப்பட்டது. அதற்கவர் மறுக்கவே ஓர் இரம்பத்தை அவரது தலையின் நடுவில் வைத்து அறுக்கப்பட்டது . அவரும் இரண்டு துண்டாகக்  கீழே விழுந்தார். பின்னர் அச்சிறுவர் கொண்டு வரப்பட்டு உமது மார்க்கத்தை விட்டு நீர் விலகிவிடும் என்று அவரிடம் கூறப்பட்டது. அதற்கு அவர் மறுத்துவிடவே, உடனே அரசர் தமது ஆட்களில் சிலரை அழைத்து இவரை இன்ன மலையின் உச்சிக்குக்  கொண்டு செல்லுங்கள்! அம்  மலையின் உச்சியை நீங்கள் அடைந்ததும், அவர் தம் மார்க்கத்தை விட்டு விலகி விட்டால் அவரை விட்டு விடுங்கள்! இல்லையென்றால் அவரை அங்கிருந்து தூக்கி வீசி எரிந்து விடுங்கள்! என்று கூறினார்.

திங்கள், அக்டோபர் 03, 2016

சூனியக்காரனும், ஈமான் உறுதிமிக்க சிறுவரும்[தொடர்1]

அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
சூனியக்காரனும், ஈமான் உறுதிமிக்க சிறுவரும்.

படிப்பினை பெறுவதற்கான ஒரு அழகான சம்பவம்! இது கதை அல்ல , உள்ளத்தில் விதைக்கும் ஈமானின் விதை!

ஹஜ்ரத் ஸூஹைப்  [ரலி] அறிவிக்கிறார்கள்.. அண்ணல் நபி [ஸல்] கூறினார்கள்..  உங்களுக்கு முன்னால்  வாழ்ந்த மக்களில் ஓர் அரசர் இருந்தார். அவரிடம் ஒரு சூனியக்காரர் இருந்தார். அவர் வயது முதிர்ந்த பொழுது எனக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆகவே ஒரு சிறுவரை அனுப்பி வைப்பீராக! நான் அவனுக்குச் சூனியக் கலையைக் கற்றுத் தருகிறேன் என அவர் அரசரிடம் கூறினார். அதனை அரசர் ஏற்றுக் கொண்டு அவரிடம் சூனியத்தை கற்றுக் கொள்ள ஒரு சிறுவரை அனுப்பி வைத்தார்.

நற்செயல்களை விரைவுபடுத்துவதும் ! நற்செயல்கள் புரிய ஆர்வமூட்டுவதும்!

நற்செயல்களை விரைவுபடுத்துவதும் ! நற்செயல்கள் புரிய ஆர்வமூட்டுவதும்!
அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அல்லாஹுதஆலா  கூறுகிறான்..

.........[முஃமின்களே!] நன்மைகளுக்கு நீங்கள் விரைந்து செல்வீர்களாக!...
[அல்குர்ஆன்.. 2..148]

[முஃமின்களே!] நீங்கள் உங்கள் இரட்சகனின் மன்னிப்பின் பக்கமும் சுவனத்தின் பக்கமும் விரைவீர்களாக! அதன் [சுவனத்தின்] விசாலமாகிறது, வானங்களும் பூமியுமாகும்  ,,  பயபக்தியாளர்களுக்காக அது தயார் செய்யப்பட்டுள்ளது.
[அல்குர்ஆன்.. 3..133]

திருக்குரானில் ஆரம்ப வசனத்தில் இந்த இறைவேதம்  [முத்தகீன்]  அல்லாஹ்வை பயப்படக்கூடியவர்களுக்கு தான் நேர்வழிகாட்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்..

வியாழன், செப்டம்பர் 29, 2016

எல்லா நேரங்களிலும் மன அமைதியா ?

அல்லாஹ்வின் திருப்பெயரால்...[அவசியம் படியுங்கள் ]
எல்லா நேரங்களிலும் மன  அமைதியா ?

தீனுடைய வாழ்க்கையை பின்பற்றக் கூடியவர்களுக்குக்  கிடைக்கக்கூடிய பாக்கியங்கள்.

1. இவ்வுலகில் , தன்னுடைய வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டபோதிலும் தாங்கிக்  கொள்ளும் மனநிலை .

2. மற்றவர்கள் இவர்களை எவ்வளவு இழிவாகவும் மோசமாகவும் பேசியபோதிலும் அதற்காக அவர்கள்மீது கோபப்படாமலிருத்தல்.

3. மிகக்  குறைவான வருமானமாக இருந்தபோதிலும் போதுமாக்கிக் கொள்ளும் மனநிலை.

4. இவர்களுடைய எதிரிகள் கூட இவர்களை கண்டா உடன் பயப்படுத்தல்.

5. நல்லோர்கள் இவர்களை நேசிப்பதுடன் இவர்களின் இரு உலக வாழ்க்கையின் வெற்றிக்காக துஆச் செய்தல்.

6. ஏதாவது சிறிய அல்லது பெரிய இலாபம் கிடைத்தால் அதற்காக அதையளித்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவனுடைய பாதையில் அதைச் செலவு செய்தல்.

புதன், செப்டம்பர் 28, 2016

எது உண்மையான அன்பு?

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
எது உண்மையான அன்பு?

''[நபியே!] நீர் கூறும் நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களாயின், என்னைப்  பின்பற்றுங்கள்,, அல்லாஹ் உங்களை நேசிப்பான்,, உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்,, மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்கக்  கருணையுடையவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் .. 3..31]

ஒருமுறை ஹஜ்ரத் உமர் [ரலி] அவர்கள் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் திருச்சமூத்தில்  ''அல்லாஹ்வின் தூதரே! நான் எனது உயிரைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் தங்களுக்காகத் தியாகம் செய்து விட்டேன்'' என்றார்கள். அப்பொழுது அண்ணல் நபி [ஸல்] அவர்கள்  உமர் [ரலி] அவர்களை நோக்கிக் கூறினார்கள்..  ''தமது பெற்றோர் , குழந்தை மற்றும் அனைத்து மனிதர்களையும் விட உங்களில் எவரும் மிகுதியாக என்னை அன்பு கொள்ளாதவரை எவரும் உண்மையான ஈமான் கொண்டவராக முடியாது'' என்று கூறினார்கள்.
 அதைக் கேட்ட ஹஜ்ரத் உமர் [ரலி] அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என் உயிரையும் தங்களுக்கு நான் அளித்து விட்டேன்'' என்றார்கள். அதை கேட்டு அண்ணல் நபி [ஸல்]  அவர்கள்  ''உமரே ! இப்பொழுதுதான் நீர் முழுமையான ஈமானைப் பெற்றுக் கொண்டீர் ,'' என்று புன்முறுவல் பூத்தவர்களாகக் கூறினார்கள்.

சனி, செப்டம்பர் 24, 2016

மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா? தொடர் – 4[இறுதி பகுதி]

மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா? தொடர் – 4[இறுதி பகுதி]

51. சுன்னாவைப் பின்பற்று! மார்க்கத்தில் நடு நிலையைப் பேணு! நடுப்பாதையில் செல்! வரம்பு மீறி விடாதே!!


52. தவ்ஹீதை பரிசுத்தமாக வைத்துக் கொள்! உனது நெஞ்சம் விசாலமாக இருக்கும், உனது தவ்ஹீதும் இக்லாசும் சுத்தமாக இருக்கும் அளவுக்குத்தான் உனது மகிழ்ச்சி இருக்கும்.



53. வீரனாக இரு! உள்ளம் உறுதியுடையவனாக இரு! திடமான மனதுடன் இரு! உன்னிடம் உறுதியும்! வீரமும், பிடிப்பும் இருக்கவேண்டும். மயங்கி விடாதே! பயந்து விடாதே!

54. கொடை கொடு! கொடையாளி என்றும் உள்ளம் விரிந்தவன், மகிழ்ச்சியானவன். கஞ்சன் நெஞ்சம் நெருக்கடியானவன், உள்ளம் இருண்டவன், உள்ளம் அசுத்தமானவன்.

வெள்ளி, செப்டம்பர் 23, 2016

மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா? தொடர் – 3

மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா? தொடர் – 3

31. அல்லாஹ் உனக்கு தேர்ந்தெடுத்ததைக் கொண்டு மகிழ்ச்சியுறு! உனது நலன் எது

என்பதை நீ அறிய மாட்டாய். சில வேளை வசதியைவிட வறுமையே சிறந்ததாக அமையலாம்.

(சிலர் ஏழையாக இருக்கும் போது இறைவழிபாடு, இறை அச்சத்துடன் இருக்கின்றனர். பிறகு,

செல்வம் வந்தவுடன் அல்லாஹ்வை மறந்து விடுகின்றனர்.)

32. சோதனை உனக்கும் அல்லாஹ்விற்கும¢ இடையில் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது;

உன்னை விட்டும் பெருமை, ஆணவம், கர்வத்தை போக்கி விடுகிறது.

33. “நீ உனக்குள் அருட்கொடைகளின் குவியல்களையும் அல்லாஹ் உனக்கு வழங்கிய

எத்தனையோ செல்வங் களின் பொக்கிஷங்களையும் சுமந்திருக்கிறாய்’’ என்பதை மறந்து

வியாழன், செப்டம்பர் 22, 2016

மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா? தொடர் – 2

மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா? தொடர் – 2



11. நெஞ்சம் திறந்து வெளிக்கு வா! பூஞ்சோலைகளைக் கொஞ்சம் பார்! அல்லாஹ்வின்

அற்புத படைப்பு களைப் பார்த்து மன அழுத்தங்களை குறைத்துக் கொள்!

12. நடைப் பழக்கம் மிக அவசியம். உடற்பயிற்சி மிக நல்லது. சோம்பேறித்தனம், முடங்கிக்

கிடப்பது, சோர்ந்து போவது வேண்டாம். வேலையின்றி இருப்பதையும் வீணாக பொழுதைக்

கழிப்பதையும் முற்றிலும் தவிர்த்து விடு!

13. முடிந்தால் வரலாற்றைப் படி! நடந்து போன ஆச்சரியமான நிகழ்வுகளை, அற்புதமான

சம்பவங் களை சிந்தித்து ஆராய்ந்து பார்! அதில் பதிவான செய்திகள், சம்பவங்களைப் படித்து

செவ்வாய், செப்டம்பர் 20, 2016

மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா? தொடர் – 1



(லா தஹ்ஸன் – கவலைப்படாதே! என்ற நூலிலிருந்து)
தமிழில்: முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி
பலர் மகிழ்ச்சி என்ற வார்த்தையை காதால் கேட்டிருப் பார்கள். ஆனால், வாழ்க்கையில் அதை
உணர்ந்திருக்க மாட்டார்கள். பிறர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து, இவர் கவலையாக
இருப்பார். பிறர் சிரிப்பதைப் பார்த்து இவர் மனதுக்குள் அழுவார். நாம் மகிழ்ச்சியாக வாழ
முடியவில்லையே என்ற ஏக்கம் பலரை துக்கக் கடலில் மூழ்கடித்திருப்பதை காண்கிறோம்.
உலக வாழ்வை பொறுத்த வரை அதில் இன்பமும் துன்பமும் மகிழ்ச்சியும் துக்கமும் இரட்டைக்
குழந்தை களைப் போல் இணைந்தே பிறந்திருந்தாலும் அல்லாஹ் வின் மார்க்கம் கவலைகளை
களைவதற்கும் துன்பங்களை மறப்பதற்கும் இன்னல்களிலும் இன்முகத்தோடு இருப்ப தற்கும்
உடலுக்கு வலியும் வேதனையும் இருந்தாலும் – குடும்பத்தில் வறுமையும் சிரமங்களும்

திங்கள், செப்டம்பர் 19, 2016

சிந்தனை துளிகள்

சிந்தனை துளிகள்
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
[நபியே!] சோதிப்பதற்காக அவர்களில் சிலருக்கு நாம் வழங்கிய வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்கள்! உமது இறைவனின் செல்வம் சிறந்ததும், நிலையானதுமாகும்.
அல்குர்ஆன்.. 20..131]

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும் எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழல் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும். இவ்வுலகத்துக்கும் உள்ளது எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள். இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்.

சனி, செப்டம்பர் 17, 2016

ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!

ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!

செல்பியும் செல்போனும் பேஸ்புக்கும் வந்ததில இருந்து இந்த வருசம் வரை நம்ம சமுதாயம் உம்ரா வித் செல்பி, ஹஜ் வித் செல்பின்னு ஹரம் ஷரீபில் நின்னு கஃபா பின்னணில செல்பி நன்மைகளை (?) வாரி குவிச்சிட்டு இருந்தது.

இஹ்ராம் கட்டுனதில இருந்து, கால் டாக்சில ஏறுனது முதல் ஏரோப்ளேன்ல ஏறி உட்கார்றதுன்னு ஒரே அப்டேட் அலப்பறைதான் போங்க.

இப்ப முத்திப் போச்சோ இல்ல முன்னேறிப் போச்சோ தெரியல,

இந்த வருசம் செல்பி இப்தார் ஆரம்பிச்சுட்டாங்க.

பள்ளிவாசலோ, பக்கத்துவீடோ, தனது வீடோ எங்க நோம்பு திறந்தாலும் போட்டோ தான்.

அவங்க நோம்பு திறக்க யாராவது ஸ்பான்சர் பண்ணியிருந்தாலோ, அல்லது  பள்ளி வாசல்ல  பக்கத்துல யாராவது இருந்தாலோ,  ஆறு அம்பதுக்கு போட்டோ அப்லோடு ஆகியிருக்கும்.

வெள்ளி, செப்டம்பர் 16, 2016

எந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்

எந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் .....
அல்லாஹ்வின் திருப்பெயரால்............

[பூமியில்] உள்ளயாவரும்  அழிந்து போகக்  கூடியவரே- மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம்  இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
அல்குர்ஆன் ..55..26,27]

நான்கு விஷயங்களின் மீதுள்ள நம்பிக்கையை உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டு அல்லாஹ்வின் மீது மட்டும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது '' எங்கள் பிள்ளைகள் நாங்கள் வயதானால் அவர்கள் எங்களை காப்பாத்துவார்கள் என்று கூட சொல்லக் கூடாது.

செவ்வாய், செப்டம்பர் 13, 2016

விதியின் மீது நம்பிக்கை


 விதியின் மீது நம்பிக்கை  விதியின் மீது நம்பிக்கை  .......  அல்லாஹ்வின் திருப்பெயரால்..........
நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''உங்களில் ஒவ்வொருவரின் சொர்க்கமும் நரகமும் முன்னரே எழுதப்பட்டுவிட்டன.'' மக்கள் வினவினார்கள்..  ''அல்லாஹ்வின் தூதரே! அப்படியென்றால் நாங்கள் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை நம்பிக்கைக்கொண்டு செயல்படுவதை விட்டுவிடலாமல்லவா?''

அண்ணலார் ..  ''இல்லை ! செயல்படுங்கள்! ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எதற்காக படைக்கப்பட்டுள்ளானோ அதற்கான தவ்ஃபீக்  [இறைவன் அருளும் பேரு ] அளிக்கப்படுகிறது.  எவன் பாக்கியவானோ அவனுக்குச் சுவனத்துக்குரிய செயல்கள் புரியும் வகையில் இறையுதவி அளிக்கப்படுகிறது. மேலும், எவன் துர்பாக்கியவானோ  [நரகவாசியோ] அவனுக்கு நரகத்துக்குரிய செயல்கள் புரியும் வகையில் பேரு  அளிக்கப்படுகிறது.

சனி, செப்டம்பர் 10, 2016

துஆ கேட்கும் முறை.

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

[விசுவாசிகளே!] நீங்கள் உங்கள் இறைவனிடமே மிகப் பணிவாகவும் அந்தரங்கமாகவும் [வேண்டியதைக் கோரி] பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் [பிரார்த்தனை செய்யாததின் மூலம்] வரம்பு மீறியவர்களை  விரும்புவதில்லை''.
அல்குர்ஆன் .. 7..55]

மேலும், வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்..  ''[நபியே!] உம்முடைய மனத்திற்குள்ளாகவே மிக்க தாழ்மையுடன், பயபக்தியோடு உரத்தக் குரலின்றி [மெது மெதுவாக] காலையிலும் மாலையிலும் உமது இறைவனை [பிரார்த்தித்து] துதி செய்து வருவீராக! அவனை மறந்தவர்களில் நீர் ஆகிவிட வேண்டாம்.
அல்குர்ஆன்.. 7..205]

தளர்ரு  அன் -வகுஃயா - தாழ்மையாகவும் மெதுவான குரலிலும்'' எனபது இவற்றின் பொருளாகும். அல்லாஹ்விடம் அடியான் இறைஞ்சிடும் பொழுது அவன் தனது பணிவையும், இயலாமையையும் வெளிப்படுத்தி உள்ளச்சத்துடனும் பயபக்த்தியுடனும் துஆ இறைஞ்ச வேண்டும் என்பதே மேற்காணும் சொற்களுக்குரிய விளக்கமாகும்.

வியாழன், செப்டம்பர் 08, 2016

தம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது!

தம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது!
அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நீங்கள் வீடுகளில் நுழைந்தால் அல்லாஹ்விடமிருந்துள்ள அபிவிருத்திக்குரிய மணமான காணிக்கையாக நீங்கள் உங்களின் மீது ஸலாம் கூறிக்கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் .. 24..61]

ஸலாம் கூறுவது சுன்னத்து , அதற்கு பதில் கூறுவது கட்டாயம்!
நாம் ஒருவருக்கு ஒரு தடவை ஸலாம் சொன்னால் , அவர் அதற்கு பதில் ஸலாம் கூறுவார். கொஞ்சம் நேரம் கழித்து அதே நபர் திரும்பி வந்து ஸலாம் கூறினால் '' நாம் என்ன சொல்வோம்? ''இவர் இப்பத்தானே  ஸலாம் சொன்னார் மறும்படியும்  ஸலாம் கூறுகிறார் என்று நம் மனதிற்குள் நினைப்போம்!

செவ்வாய், செப்டம்பர் 06, 2016

அண்ணலாரின் அழகான பொன்மொழிகள்

அண்ணலாரின் அழகான பொன்மொழிகள் .......
அல்லாஹ்வின் திருப்பெயரால்......

குரோதம் கூடாது****
ஹஜ்ரத் நுஃமான் இப்னு பஷீர் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..
''ஒரு தடவை எனது தந்தை, என்னை அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம் அழைத்துச் சென்று  ''நான் , எனது மகனுக்கு ஓர் அடிமையைக் கொடுத்துள்ளேன் என்றார்கள்.''  ''உமது மற்ற மகன்களுக்கும் இப்படிக்  கொடுத்துள்ளீரா? '' என்று கேட்டார்கள், அண்ணலார். ''இல்லை'' என்றார் எனது தந்தை.  ''அந்த அடிமையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்! என்றார்கள் அண்ணலார்.
ஆதாரம்... புகாரி, முஸ்லிம் , நஸயீ அபூதாவூத், இப்னுமாஜா]

விளக்கம்***
ஒரு மகனுக்கு கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு [அதாவது மற்ற மகன்களுக்கு]  கொடுக்காமல் இருக்கக் கூடாது எனபதற்கு இந்த ஹதீஸின் மூலம் அறியலாம்.  எல்லோரையும் சமமாக தான் நடத்த வேண்டும் என்கிறது இந்த ஹதீஸின் கருத்து!

வெள்ளி, செப்டம்பர் 02, 2016

அரஃபா நாளின் நோன்பு!

அரஃபா நாளின் நோன்பு! 
அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இறையச்சமுடைய முஸ்லிம்  ரமலான் அல்லாத மாதங்களிலுள்ள நஃபிலான  நோன்புகளைத் தவறவிடக்கூடாது.  அரஃபா நாள் [துல்ஹஜ் பிறை 9] மற்றும் முஹர்ரம் பிறை 9,10 போன்ற காலங்களில் நோன்பு நோற்பது பாவங்களைத் துடைத்தெறியும் சிறந்த அமலாகும்.

இது குறித்து நபிமொழிகள்..

அபூகதாதா [ரலி] அவர்கள் கூறினார்கள்.. நபி [ஸல்] அவர்களிடம் அரஃபா நாளின் நோன்பைப்பற்றி கேட்கப்பட்டபோது , 'அது கடந்த ஒரு வருடம் மற்றும் வரக்கூடிய ஒரு வருடம் பாவங்களுக்கு பரிகாரமாகும்'' என்று கூறினார்கள்.
நூல் ஸஹீஹ் முஸ்லிம் ]

திங்கள், ஆகஸ்ட் 29, 2016

ஒரு முஸ்லிமின் அடையாளம் எது...?

ஒரு முஸ்லிமின் அடையாளம் எது...?

''நீர் முஸ்லிம் என்பதற்கு என்ன அடையாளம் ''என்று ஒருவரிடம் கேட்டால் அதற்க்கு அவரின் பதில் என்னவாயிருக்கும் ..? என் பெயர் அப்துல் ரஹ்மான்  பெயரை வைத்து உனக்கு தெரியாதா ''நான் ஒரு முஸ்லிம் என்று சொல்வார்.

ஒருவரின் பெயரை வைத்து ''இவர் முஸ்லிம் என்று கணிக்க முடியுமா ? பெருமானார் [ஸல்] அவர்களின் காலத்தில் எத்தனை பேர்கள்  ''முஸ்லிம் பெயர்களை தாங்கி கொண்டார்கள் '' ஆனால் அவர்கள் முஸ்லிமாக இல்லை.

ஒருவர் முஸ்லிம் என்பதற்கு  ''அவர் அணிந்த தொப்பியை வைத்து கூறமுடியுமா ?   நிச்சயமாக அப்படியும் சொல்லிவிட முடியாது! ஒரு முஸ்லிம் தொப்பி போடுவார் , போடாமலும் இருப்பார்.

சனி, ஆகஸ்ட் 27, 2016

இறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு]

இறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு]

பெறோர்களில் ஒருவர் அல்லது இருவரும் இறந்துவிட்டால் அவர்களுக்கு பிள்ளைகள் என்ன செய்யவேண்டும்..? மையத்து கிடக்கும்போதே , அப்பொழுது குரானை ஓதவேண்டுமா ..? மையத்தை அடக்கம் செய்தபிறகு  ஹத்தம் ஃ பாத்திஹா  ஓதவேண்டுமா ..?  இந்த இரண்டு விடயங்களும் பெரும்பாலும் வீட்டில் செய்யப்படுகிறது. இந்த பழக்கம் நம் உள்ளத்தில் வேரூன்றி   விட்டது! இன்ஷாஅல்லாஹ் வருங்களாத்தில் வரக்கூடிய புதிய தலைமுறைகள் மாறலாம்..