உங்கள் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துங்கள்!

 


உங்கள் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துங்கள்!

உங்கள் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துங்கள்


திருக்குர்ஆனின் மொத்த அத்தியாயங்கள்?


114 அத்தியாயங்கள்


திருக்குர்ஆனின் இதயம்?


சூரத்துல் யாஸீன்


திருக்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதி?


சூரத்துல் இக்லாஸ்


நபி(ஸல்) எதிர்கொண்ட முதல் போர்?


பத்ர் போர்


நபி (ஸல்) அவர்ளின் தந்தை பெயர்?


அப்துல்லாஹ்


முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் உள்ள வித்தியாசம்?


தொழுகை


மீன் வயிற்றில் சிறையிருந்த இறைத்தூதர்?


யூனுஸ்(அலை)


இறைவன் எங்கே இருக்கிறான்?


வானத்தில் (66:16,17)


இறைவனின் முதல் தூதர்?


ஆதம்(அலை)


இறைவனின் இறுதித்தூதர்?




முஹம்மத்(ஸல்)


இவருடைய நாவில் அல்லாஹ் பேசுகிறான் எனப் போற்றப்பட்ட நபித்தோழர்?


உமர்(ரலி)


நபி(ஸல்) அவர்களின் தாயார் பெயர்?


ஆமினா


உயிரினங்கள் எதிலிருந்து படைக்கப்பட்டன?


தண்ணீரிலிருந்து


நரகவாசிகளின் பதிவேடு?

ஸிஜ்ஜீன்

நல்லோர்களின் பதிவேடு?


இல்லிய்யூன்


ஒரு பெண் பெயரிலுள்ள திருக்குர்ஆன் அத்தியாயம்?


மர்யம்(அலை)


இணைவைத்தவன் நுழையவே முடியாத இடம்?


சுவர்க்கம்.


அதிகமான ஹதீஸ்களை அறிவித்தவர்?


அபூஹுரைரா(ரலி)


அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெண்மணி?


ஆயிஷா(ரலி)


அதிகமாகக் கோபப்படும் இறைத்தூதர்?


மூஸா(அலை)


மூஸா(அலை) அவர்களின் வளர்ப்புத் தாய்?

ஆஸியா அம்மையார்


அணுவளவு பெருமைக்காரனின் இருப்பிடம்?


நரகம்


திருக்குர்ஆனில் பெயர் இடம் பெற்ற நபித்தோழர்?


ஜைத்(ரலி)


பெற்றோர் இன்றி பிறந்தவர்?


ஆதம்(அலை)


ஆதம்(அலை) அவர்களுக்கு இறைவன் எதற்காக சிறப்பைக் கொடுத்தான்?


கல்விக்காக


ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பிருந்த இறைத்தூதர்?


தாவூத்(அலை)


தந்தையின்றி பிறந்தவர்?


ஈஸா(அலை)


அல்லாஹ் எதன் மீது அமர்ந்திருக்கிறான்?


அர்ஷ் - அரியணை மீது


950ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இறைத்தூதர்?


நூஹ்(அலை)


தவ்ராத் வேதம் அருளப்பட்டவர்?


மூஸா(அலை)


அல்லாஹ்வை பார்த்தவர்?


எவருமிலர்


நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி முதன்முதலில் அருளப்பட்ட இடம்?


ஹிரா குகை


தன்னை மாபெரும் இறைவன் என வாதிட்டவன்?


ஃபிர் அவ்ன்


தாவூத்(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம்?


ஸபூர் வேதம்.


மறுமையில் கேட்கப்படும் முதல் கேள்வி?


தொழுகைக் குறித்து


இறைவனிடம் அங்கீகரிக்கப்பட்ட காலண்டர்?


ஹிஜ்ரா காலண்டர்


தம் சகோதரர்களால் கிணற்றில் போடப்பட்ட தூதர்?


யூசுஃப்(அலை)


இவர் இரண்டாம் கலீஃபா ஆவார்?


உமர்(ரலி)


இரும்பை இவர் தம் இஷ்டம்போல் வளைத்துவந்தார்?


தாவூத்(அலை)


ஜின்கள் வசப்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்த தூதர்?


சுலைமான் (அலை)


நபி (ஸல்) அவர்களின் பல் உடைக்கப்பட்ட போர்?


உஹத் போர்


இப்ராஹீம்(அலை) அவர்களின் தந்தை?


ஆஜர்.

சூர் - எக்காளம் ஊதும் வானவர்?


இஸ்ராஃபீல்(அலை)


நபி (ஸல்) காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற முதல் பெண்?


அன்னை கதீஜா(ரலி)


உலகில் சிறந்த இடம்?


இறைஇல்லம் - பள்ளிவாசல்


அரசராக இருந்தும் தம் கை உழைப்பை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்த இறைத்தூதர்?


தாவூத்(அலை)


உலகில் மோசமான இடம் என நபி(ஸல்) கூறியது?


கடைவீதி


யாகூப்(அலை) அவர்களின் தந்தை?


இஸ்ஹாக்(அலை)


ஒரு மனிதனுக்கு அதிகம் நெருக்கத்திற்குரியவர்?


தாய்


குழந்தைகளை ஏழு வயதில் தூண்ட வேண்டும்?


தொழுகைக்கு


இப்லீஸ் எதிலிருந்து படைக்கபட்டான்?


நெருப்பிலிருந்து


யூனுஸ்(அலை) அவர்களின் இன்னொரு பெயர்?


தூன்நூன்


யஹ்யா(அலை) அவர்களின் தந்தை?


ஜக்ரியா(அலை)

அபூ ஹுரைரா என்பதன் பொருள்?


பூனைக் குட்டியின் தந்தை


ஷுஐப்(அலை) அவர்களின் மருமகன்களில் ஒருவர் இறைத்தூதர்?


மூஸா(அலை)


திருக்குர்ஆனில் அதிகமாக இடம்பெற்றுள்ள பெயர்?


அல்லாஹ்


மூஸா(ஸல்) எதிர்கொண்ட கொடுங்கோல மன்னன்?


ஃபிர்அவ்ன்


நபி(ஸல்) காலத்தில் நயவஞ்சகர்களின் தலைவன்?


அப்துல்லாஹ் இப்னு உபை


போர்வாள் என அழைக்கப்பட்டவர்?


காலித் இப்னு வலீத்(ரலி)


திருக்குர் ஆனில் அதிகம் உள்ள பண்புப் பெயர்?


அர்ரஹ்மான்- அளவற்ற அருளாளன்


குறைகூறி புறம்பேசித் திரிபவனின் இருப்பிடம்?


ஹுதமா எனும் நரகம்


பத்ர் போர் நடந்த மாதம்?


ரமளான் மாதம்


இக்ரிமா(ரலி) அவர்களின் தந்தை?


அபூ ஜஹ்ல்


இவர் வேதம் ஓதினால் பறவைகளும் செவிதாழ்த்தும்?


தாவூத்(அலை)

எவனைக் குறித்து இறைத்தூதர்கள் அனைவரும் எச்சரித்து வந்தார்கள்?


தஜ்ஜால்


ஷைத்தானின் சகோதரன் என குர்ஆன் குறிப்பிடுவது?


வீண் விரையம் செய்பவன்


அகழ் யுத்தத்தில் அகழ் தோன்டும் யோசனை கூறியவர்?


ஸல்மான் ஃபார்ஸி(ரலி)


நரகத்தின் அடித்தட்டில் இருப்பவன்?


நயவஞ்சகன்


இறைவன் மற்றும் இறைத்தூதருடன் போர்ப் பிரகடனம் செய்யும் பாவம்?


வட்டி


யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தை அடைத்து வைத்தவர்?


துல் கர்னைன்


ஹலால் மற்றும் ஹராமைத் தீர்மானிக்கும் அதிகாரம்?


அல்லாஹ் மட்டுமே உள்ளது.


நரகத்தின் காவலர்கள் யார்?


வானவர்கள்


இஸ்லாத்தின் பக்கம் தொடர்ந்து தந்தையை அழைத்த இறைத்தூதர்?


இப்ராஹீம்(அலை)


அல்லாஹ்வின் அர்ஷை சுமந்து கொண்டிருக்கும் வானவர்களின் எண்ணிக்கை?

எட்டுப்பேர்


வானவர்கள் பூமியில் இறங்கி மனிதர்களுக்கு வாழ்த்து சொல்லும் நாள்?


லைலத்துல் கத்ர்


மிக நீண்டகாலமாக தொடர்ந்து இஸ்லாத்தின் பால் மகனை அழைத்த இறைத்தூதர்?


நூஹ்(அலை)


மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாருக்கு அளிக்கப் பட்ட உணவு?


மன்னு, சல்வா


தொழாதவன் மறுமையில் இருக்கும் இடம்?


ஸகர் என்னும் நரகம்


பறவையிடம் பேசிய இறைத்தூதர்?


சுலைமான்(அலை)


இறைமறுப்பாளர்களால் நெருப்பில் போடப்பட்ட இறைத்தூதர்?


இப்ராஹீம்(அலை)


அதிகமாக வெட்கப்பட்டு வந்த நபித்தோழர்?


உஸ்மான்(ரலி)


இவர் ஒரு வழியில் சென்றால் ஷைத்தான் இன்னொரு வழியில் ஓடிவிடுவானாம்?


உமர்(ரலி)


நல்லடியார்களுக்கு அல்லாஹ் பட்டோலையை எந்தக் கையில் தருவான்?

தன் வலக்கையால் (84:7,8)


ஹிஜ்ரத்தின்போது நபி(ஸல் ) அவர்களுடன் சென்ற தோழர்?


அபூபக்கர்(ரலி)


சிறையில் அடைக்கப்பட்ட இறைத்தூதர்?


யூசுஃப்(அலை)


நபி (ஸல்) காலத்தில் இஸ்லாத்திற்காக உயர்நீத்த முதல் பெண்மணி?


அன்னை சுமையா(ரலி)


மிகவும் அழகான தோற்றமுடைய இறைத்தூதர்?


யூசுஃப்(ஸல்)


நபி (ஸல்) காலத்தில் முதன்முதலில் இஸ்லாத்தை ஏற்ற சிறுவர்?


அலீ(ரலி)


முதன்முதலில் பாங்கொலி கொடுத்த நபித்தோழர்யார்?


பிலால்(ரலி)


ஹம்ஸா(ரலி) படுகொலை செய்யப்பட்ட போர்?


உஹத் போர்


நபி (ஸல்) அவர்களுக்கு தூதுத்துவம் கிடைத்த வயது?


40 வது வயது


இறைவனை மறுமையில் பார்ப்பவர்கள்?


சுவர்க்கவாசிகள்


நற்செயல்கள் அனைத்தையும் அழித்துவிடுவது?

ஷிர்க்-இறைவனுக்கு இணைவைத்தல்


மது அருந்தியவருக்கு நபி(ஸல்) கொடுத்த தண்டனை?


நாற்பது செருப்படி


மனித, ஜின் வர்க்கத் இறைவன் படைத்துள்ளது?


தன்னை மட்டும் வணங்குவதற்காக


இறைவனின் நண்பர் என அழைக்கப்பட்டவர்?


இறைத்தூதர் இப்ராஹிம்(ஸல்)


இறைவனின் உயிரென அழைக்கப்பட்ட தூதர்?


இறைத்தூதர் ஈஸா(அலை)


இறைவனுடன் பேசுபவர் என பெயர் பெற்ற தூதர்?


மூஸா(அலை)


அகிலத்தின் அருட்கொடை?


இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்)


ஹிஜ்ரத்தின்போது நபி(ஸல்) தஞ்சம் புகுந்த குகை?


ஸவ்ர் குகை


நயவஞ்சகர் குறித்த இரகசியங்களை அறிந்தவர்?


குதைஃபா இப்னு யமான்(ரலி)


கஅபாவின் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ள கல்?


ஹஜ்ருல் அஸ்வத்


நபி (ஸல்) அவர்களின் நேசத்தை அதிகம் பெற்றவர்?


அபூபக்கர்(ரலி)


பைத்தல் முஹத்தஸ் பள்ளிவாசலைக் கட்டியவர்?


சுலைமான்(அலை)

நபி (ஸல்) அவர்களை இரத்தம் ஓட்டி துன்புறுத்திய மக்கள்?


தாயிஃப் நகர மக்கள்


சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் தங்கும் காலம்?


நிரந்தரமானது


நியாய விலைக்கடையை அறிமுகப்படுத்தியவர்?


இறைத்தூதர் யூசுஃப்(ஸல்)


நரகத்தின் காவலாளியின் பெயர்?


வானவர் மாலிக்


சந்திரனை பிழந்து காட்டியவர்?


இறைத்தூதர் முஹம்மத்(ஸல்)


சில நாட்கள் மீன் வயிற்றில் வாழ்ந்த இறைத்தூதர்?


யூனுஸ்(ஸல்)


மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான்?


களிமண்ணிலிருந்து.


ஒளியிலிருந்து படைக்கப்பட்டவர்கள்?


வானவர்கள்


தவ்ராத் வேதம் வழங்கப்பட்டவர்?


மூஸா(அலை)


ஸபூர் வேதம் வழங்கப்பட்டவர்?


தாவூத்(அலை)


இன்ஜில் வேதம் வழங்கப்பட்டவர்?


ஈஸா(அலை)

திருக்குர் ஆன் வழங்கப்பட்டவர்?


இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்)


மன்னிப்பே இல்லாத குற்றம்?


ஷிர்க் இறைவனுக்கு இணைவைத்தல்


மறுமையில் திருக்குர்ஆனின் பரிந்துரை?


திருக்குர்ஆனை முறையாக ஓதுபவர்களுக்கு


இறைவனின் ஒருநாள் எதற்கு சமம்?


ஆயிரம் ஆண்டுகளுக்கு


திருக்குர் ஆனில் இடம்பெற்றுள்ள வேதங்கள்?


1.


தவ்ராத், 2. சபூர், 3. இன்ஜில்,


4. திருக்குர்ஆன்


முதன்முதலில் அருளப்பட்ட திருக்குர்ஆன் வசனங்கள்?


சூரத்துல் அலக் என்னும் 96 வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள்.


மனிதன் மீது இறைவனின் கருணை?


தனக்கு இணைகற்பிக்காதவனை நரகத்தில் போடாதிருப்பது.


பூமி அசையாமல் இருப்பதற்கு?


மலைகள் நடப்பட்டுள்ளன.


ஜோசியம் பார்த்தால்?


40 நாள் தொழுகை பாழாகிவிடும்.


கணவனை விவாகரத்துச் செய்த பெண்ணின் இத்தா?


ஒரு மாதவிடாய் காலம் முடியும் வரையில்; கர்ப்பிணிக்கு அவள் பிரசவம் ஆகும் வரை.


கணவனால் விவாகரத்து தலாக் கொடுக்கப்பட்டபெண்ணின் இத்தா காலம்?


மூன்று மாதவிடாய்க் காலம் முடியும் வரை. கர்ப்பிணிக்கு அவள் பிரசவம் ஆகும் வரை.


சுன்னத் என்றால்?


நபி (ஸல்) அவர்களின் வழிமுறை அதாவது அவர்களின் சொல், செயல், அங்கீகாரம்.


இரட்டை வேடம் போட்டவரின் நிலை?


மறுமையில் இரட்டை நாக்குடையவராய் வருவார்.


விதவைப் பெண்களின் இத்தா காலம்?


நான்கு மாதங்களும் பத்து நாள்களும்


கப்ருகளை தரிசிக்கும் பெண்களை?


அவர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும் என நபி(ஸல்) சபித்தார்கள்.


கால்நடைகளைவிடவும் கேவலமானவர்கள்?


உண்மையை அறிந்து கொள்ளாத செவிடர்களும், ஊமையர்களும்


வானவர்களின் பணி?


அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே நிறைவேற்றுவது.


இறைத்தூதர்களில் இருவரின் மனைவியர் நரகவாசிகள்?


லூத்(அலை), நூஹ் (அலை)


தொழுகை எவ்வாறு இருக்கக் கூடாது?


கோழிகொத்துவதைப் போன்று அவசர அவசரமான தொழுகையாக இருக்கக் கூடாது.


இறைத்தூதர்கள் அனைவரும் போதித்தது?


'லாயிலாஹா இல்லல்லாஹ்' அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை.


செயல்கள் எதன் அடிப்படையில் அமைகின்றன?


எண்ணங்களின் அடிப்படையில் அமைகின்றன.


இவன் நரகத்தில் நுழையமாட்டான்?


கடுகளவேனும் ஈமான் உள்ளவன்


உண்மை முஸ்லிம் யார்?


தன் நாவு மற்றும் கையால் மக்களுக்கு நன்மையை ஏற்படுத்துபவனே முஸ்லிம்.


யாருடைய அனுமதியின்றி வெளியில் செல்லக் கூடாது?


கணவரிடம் அனுமதியின்றி மனைவி வெளியில் செல்லக் கூடாது.


ஜமாஅத்தாக தொழுபவருக்கு?


தனியாகத் தொழுபவரை விட 27 மடங்கு நன்மைகள் அதிகம் கிடைக்கின்றன.


தொழக்கூடாத நேரங்கள்?


சூரிய உதயம், சூரியன் உச்சியில் இருக்கும்போது, சூரியன் மறையும் போதும்.


அசுத்தமாகாத தண்ணீர்?


கடல் நீர் கடலில் இருக்கும்போது.


சிறந்த தொழுகை?


தொழுகையை அதற்குரிய ஆரம்ப நேரத்தில் தொழுவது.


இணைவைத்தலாக மாற்றப்படும் வணக்கம்?

பிறருக்குக் காண்பிப்பதற்காகச் செய்பவர்களின் வணக்கம்.


பெற்றோருக்கு எதில் கட்டுப்படக் கூடாது?


இணைவைத்தலில் மார்க்கத்திற்கு எதிரானவற்றில்.


தந்தை பிள்ளைக்கு அளிக்கும் சிறந்த அன்பளிப்பு?


நல்ல கல்வியும் நல்லொழுக்கமும்.


ஷைத்தான் என்பவன் யார்?


இறைவனுக்கு மாறு செய்யும் மனிதனும் ஜின்னும் ஷைத்தான் எனப்படுவர்.


ஒன்றே குலம் ஒருவனே தேவன் என இஸ்லாம் குறிப்பது?


தவ்ஹீத்-ஏகத்துவம்-ஓர் இறைக்கொள்கை


ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குரிய நன்மை?


அன்று பிறந்த குழந்தையைப்போல் ஆகிவிடுதல்.


மூன்றாவதாக ஷைத்தான் யாருடன் இருக்கிறான்?


அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனித்திருக்கும்போது.


அனாதைகளை பராமரிக்கும் வீட்டின் நிலை?


முஸ்லிம்களின் வீடுகளிலேயே சிறந்தது


மறுமையில் மனிதக்கால்களால் எப்போது நகரமுடியும்?


1. வாழ்நாள் 2. உடல் உறுப்பு 3. கல்வி 4. பொருளாதாரம்


சம்பாதித்ததும் செலவிட்டதும் எவ்வாறு என்பதற்கான பதில் சொன்னால்தான்.


நபி (ஸல்) சுவர்க்கத்தில் கேட்ட காலடி ஓசை?


பிலால்(ரலி) அவர்களின் காலடி ஓசையை.


ஹுதைபியா உடன்படிக்கை யாருடன் யார் செய்து கொண்டனர்?


நபி (ஸல்) அவர்களும் மக்கா குறைஷிகளும்.


இவ்வாறு செய்தால் முகம் கழுதையின் முகமாக மாற்றப்படும்?


தொழுகையில் இமாமை முந்தினால்


நபி (ஸல்) அவர்களின் சிறப்புப் பெயர்கள்?


அல் அமீன் -நம்பிக்கைக்குரியவர்.அஸ்ஸாதிக்-உண்மையாளர்.


திருக்குர்ஆனை ஓதுகிற நம்பிக்கையாளரின் உதாரணம்?


ஆரஞ்சு பழத்தை போன்றது அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று.


இவரின் துஆ (பிரார்த்தனை) அங்கிகரிக்கப்படாது?


நன்மையை ஏவி தீமையை தடுக்காதவனின் துஆ.


ஜும்மா தொழுகை நிறைவேற்றியதும்?


இறையருளைத் தேடவேண்டும். சம்பாதிக்க வேண்டும்.


பெண் வெளியே செல்லும்போது செய்யக்கூடாதது?


நறுமனம் பூசிக்கொள்ளுதல்; பூ வைத்துக் கொள்ளுதல்; அலங்காரங்களை வெளிக்காட்டுதல்


அல்லாஹ்வுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமை?


அவனை மட்டுமே வணங்கவேண்டும்.


நல்லவர்களின் நிலை மறுமையில்?


சிரித்தாகவும் மகிழ்ச்சியுடையதாகவும் இருக்கும்.


சூரத்துல் பக்ராவில் இடம் பெற்றுள்ள கடமைகள்?


1. தொழுகை. 2, நோன்பு, 3. ஜகாத், 4.ஹஜ்


குர்ஆனில் இடம் பெற்றுள்ள பெரிய வசனம்?


2:285 கடன் ஒப்பந்தம் பற்றியது.


மறுமையில் இறைமறுப்பாளர்கள் என்ன சொல்லிப் புலம்புவர்?


நான் மண்ணாகி போயிருக்கலாமே எனப் புலம்புவர் (78:40).


இவ்வாறு செய்தால் பார்வை பறிக்கப்பட்டுவிடலாம்?


தொழுகையில் வானத்தின் பக்கம் பார்த்தால்.


திருக்குர்ஆன் அருளப்பட்ட இரவின் சிறப்பு?


ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. (திருக்குர்ஆன் 97:3)


கனவனின் அனுமதியின்றி வெளியே செல்லும் பெண் மணியின் நிலைமை?


அவள் மீது வானவர்களின் சாபம் உண்டாகும்.


பெற்ற பிள்ளையும் அனுமதி பெற்றப் பின்னரே வீட்டினுள் நுழையும் நேரம்?


பஜ்ருக்கு முன், லுஹருக்கு பின், இஷாவிற்கு பின்.


வானம் யாருக்காக எப்போது திறக்கப்படாது?


கெட்ட அடியானின் உயிரை வானவர்கள் எடுத்துச் செல்லும்போது அவனுக்காக.


இறந்த ஒருவரைப் பின்தொடர்வது?


அவர் செய்த நற்செயல்களும், தீயசெயல்களும்.


இறந்தவருக்குக் கிடைக்கும் நன்மைகள்?


நிலையான தர்மம், பயன் தரக்கூடிய கல்வி, நல்ல பிள்ளைகளின் துஆ-


ஹிஜ்ரி ஆண்டு எந்தச் சம்பவத்தைக் குறிக்கிறது?

முஸ்லிம்கள் மக்காவை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த சம்பவத்தை.


ஹம்ஸா(ரலி) அவர்களைப் படுகொலை செய்தவர்?


வஹ்ஷி என்பவர் ஆவார். இவர் பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.


திருக்குர் ஆனில் மக்கி என்பது எதைக் குறிக்கிறது?


மக்கா தொடர்புடைய வசனங்களைக் குறிக்கிறது.


திருக்குர் ஆனில் மதனீ என்பது எதைக் குறிக்கிறது?


திருக்குர்ஆனில் மதீனா தொடர்புடைய வசனங்களைக் குறிக்கிறது.


ரமளான் மாதம் எதனால் சிறப்பு பெற்றது?


அம்மாததத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால்.


மூஸா(அலை) அவர்களின் சமுதாயம் வேண்டிய உணவு?


கோதுமை, கீரை, பருப்பு, வெங்காயம், வெள்ளரிக்காய்.


ஹிஜ்ரத் என்றால் என்ன?


இறைச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான இடத்தை நோக்கி புலம்பெயர்தல்.


இவனின் அடிச்சுவடைக்கூடப் பின்பற்றக் கூடாது?


ஷைத்தானின் அடிச்சுவடை


ஷைத்தான் ஏவுவது?


மானக்கேடானவற்றையும் வெறுக்கத் தக்கவற்றையும்.


மறுமையில் மனிதனுக்கு எதிராக சாட்சி சொல்பவை?


மனிதனின் நாவும், கைகளும் கால்களும்.


நரகத்தில் அதிகமாக பெண்கள் உள்ள காரணம்?

பிறரைச் சபிப்பதாலும், கணவனுக்கு நன்றிகொல்வதாலும்.


பாவமன்னிப்பின் நிலை?


அல்லாஹ் அடியானை வேதனை செய்யமாட்டான்.


நபி (ஸல்) காலத்தில் மார்க்கக் கல்வியில் ஆர்வமிக்க பெண்கள்?


மதீனா பெண்கள் (அன்ஸாரி பெண்கள்).


வீரமிக்க செயல்?


பிறரின் தீங்கை பொறுத்துக் கொள்வது.


வேதத்தை கற்று அதன்படி செயல்படாதவன்?


கழுதைக்கு ஒப்பானவன்.


அல்லாஹ் நேசிக்கும் இரண்டு பண்புகள்?


சகிப்பு தன்மை, மென்மை.


முதல் பகுதியினர் சுவர்க்கத்தில் எவ்வாறு நுழைவர்?


பௌர்னமி நிலவைப் போல.


சுவர்க்கத்தில் மிகப்பெரிய அருட்கொடை?


அவர்களின் மீது அல்லாஹ் கோபப்படாதது.


மறுமைநாளில் ஒளியுடன் வருபவர்கள்?


உளுச்செய்து தொழுபவர்கள்.


அல்லாஹ் உதாரணம் கூற வெட்கப்படமாட்டான்?


கொசுவையோஅதைவிட அற்பமானதையோ.


அல்லாஹ் ஆதமுக்கு எதைக் கற்றுக் கொடுத்தான்?


ஒவ்வொரு பொருளின் பெயரையும்.


எங்களை நரகம் தீண்டாது என வாதிடுவோர்?

யூதர்களும், கிறிஸ்தவர்களும்.


மனிதனும் ஜின்னும் படைக்கப்பட்டுள்ள நோக்கம்?


அல்லாஹ்வை வணங்ககுவதற்காக.


இறைவனுக்கு பெற்றோர்கள்?


எவருமிலர்; அவன் தனித்தவன்.


திருக்குர்ஆனின் தன்மை?


சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டுவது.


உணவு குறித்து மனிதனுக்கு இடப்பட்டுள்ள கட்டளை?


தூய்மையான அனுமதிக்கப்பட்ட உணவு மட்டுமே உண்ணவேண்டும்.


பளிங்கு சலவைக் கல் கண்டு பிடிக்கப்பட்ட காலம்?


சுலைமான்(அலை) அவர்களின் காலத்தில்.


வட்டி வாங்கி உண்பவர்களுக்கான தன்டனை?


இரத்த ஆற்றில் மிதப்பார்கள்.


மென்மைத் தன்மை இழந்தவன்?


நன்மைகளை இழந்துவிட்டான்.


வாரத்தின் சுன்னத்தான் நோன்புகள்?


திங்கள் மற்றும் வியாழன்


கஅபாவை இடிக்க வந்தவர்கள் அழிந்த விதம்?


இறைக் கட்டளைப்படி அபாபில் பறவைகள் எறிந்த கற்களால் அழிந்தார்கள்.


இறைநம்பிக்கையாளர்களின் முன்மாதிரி?


ஃபிர் அவ்னின் மனைவி ஆசியா

ஈஸா(அலை) அவர்களின் தாய் மர்யம்


இஸ்லாத்தின் அடிப்படை கடமை?


1. ஓர் இறைக் கொள்கைக்கான உறுதிமொழி, நோன்பு, 4.ஜகாத், 5.ஹஜ்


2. தொழுகை, 3.


நிரந்தர நரகவாசிகள்?


1. இறைவனுக்கு இணைவைத்தவன்


2. இறைவனை மறுத்தவன் 3.


தற்கொலை செய்து கொண்டவன்


4. நியாயமின்றி ஓர் உயிரைக்


கொன்றவன் 5.வட்டி வாங்கி சாப்பிட்டவன்.


மாதத்தின் சுன்னத்தான நோன்புகள்?


ஒவ்வொரு மாதத்தின் 13,14 மற்றும் 15 தேதிகளில்.


தொழாதாவர் மறுமையில் யாருடன் இருப்பார்?


ஃபிர்அவ்ன், காருன், ஹாமான் மற்றும் உபை இப்னு ஹலப் ஆகியோருடன் இருப்பார்.


சொர்க்கத்தில் ஓடும் ஆறுகள்?


பாலாறு, தேனாறு, நீராறு, மது ஆறு


இஸ்லாத்தின் அடிப்படை?


1. ஏக இறைவனை நம்புதல்,


2. வானவர்களை நம்புதல், 3.


வேதங்களை நம்புதல், 4. இறைத்தூதர்களை நம்புதல்,


5. மறுமை


நாளை நம்புதல், 6. விதியை நம்புதல்


கடமையாக்கப்பட்ட தொழுகைகள்?



1. ஃபஜ்ரு, 2. லுஹர், 3. அஸர், 4. மக்ரிப்,


5. இஷா


இறைவனுக்கு இணைவைத்தல் என்பதன் விளக்கம்?


அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் உள்ளன. ஒவ்வொரு பெயரும் ஒரு தன்மையைக் கொண்டுள்ளது. இறைவனுக்கு இருக்கும் அதே தன்மை படைப்பினங்களுக்கும் இருப்பதாக கருதுதல்.


வானவர்களின் தன்மை?


சாப்பிடவோ, குடிக்கவோ, தூங்கவோ, மலஜலம் கழிக்கவோ மாட்டார்கள்; அவர்கள் மனைவி மக்கள் தேவையற்றவர்கள்.


முதல் நான்கு கலீஃபாக்கள்?



1 .அபூபக்கர்(ரலி), 2. உமர்(ரலி), 3. உஸ்மான்(ரலி),


4. அலீ(ரலி).


இஸ்லாத்தில் சிறந்த பன்பு?


பசித்தவருக்கு உணவு அளிப்பது; அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவது.


வானவர்கள் வராத வீடு?


நாய், உருவப்படம், சலங்கை ஒலி, குளிப்பு கடமை ஆனவர்கள் தொழுகை நேரம் கழியும் வரை குளிக்காமல் இருக்கும் வீடுகளுக்குள் வானவர்கள் வரமாட்டார்கள்.


உளூ செய்யக்கூடாத தண்ணீர்?


சுவையோ, நிறமோ, வாடையோ மாறிய தண்ணீரிலும் குறைவாக இருக்கும் தண்ணீரில் அசுத்தம் கலந்து விடுமாயின் அதிலும் உளூச் செய்யக்கூடாது.


தயம்மும் செய்வதற்கான நிபந்தனை?


தண்ணீர் கிடைக்காதபோது, தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலையில் உடல் இருக்கும்போது.


தொழக்கூடாத இடங்கள்?


ஒட்டகம் கட்டுமிடம், கழிப்பிடம், அடக்கத்தலம், வழியில், பொதுவழியில், கஅபத்துல்லாஹ்வின் கூரையில்.


புனிதமிக்க மாதங்கள்?

1. துல்கஃதா, 2. துல்ஹஜ், 3. முஹர்ரம், 4.ரஜப்


பெண்கள் மீது சாபத்தை உண்டாக்கும் செயல்கள்?


1. ஒட்டு முடி வைப்பது,


2. பச்சை குத்து வது,


3. பற்களைத்


தீட்டுவது, 4. புருவ முடியை அகற்றுவது, 5. அடக்கத் தலத்துக்கு செல்லுவது.


ஒருவருக்கு கோபம் வந்தால்?


1. நின்றிருந்தால் உட்காரவேண்டும்


2.உட்காந்திருந்தால் படுத்துக் கொள்ளவேண்டும்


3.உளுச் செய்துகொள்ள வேண்டும்.


மஹர் குறித்து இறைவனின் கட்டளை?


மணம் முடிக்கும் பெண்களுக்கு மஹரை மகிழ்வுடன் மணம் முடிக்கும்போதே கொடுத்துவிட வேண்டும். பெண் தானாக தன் கணவனைப் பிரிந்தால் தவிர அதைத் திரும்பப் பெறலாகாது.


மனைவியின் மீது கணவனின் கடமை?


உணவும் உடுத்த ஆடையும் அளிப்பது; பிறருக்கு முன்பாக அவளைத் திட்டாதிருப்பது; முகத்தில் அடிக்காதிருப்பது; அடிமையை அடிப்பது போல் அடிக்காதிருப்பது.


பித்அத் என்றால் என்ன?


இறைவனோ, தூதரோ கற்றுத் தராததைச் செய்துகொண்டு இறைவனிடம் நன்மை கிடைக்கும் என நம்புவது.


எது ஓதாதவருக்கு தொழுகையில்லை?


ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகை இல்லை என நபி(ஸல்) கூறினார்கள்.


இறைவனுக்குப் பிடித்தமான இரண்டு வாக்கியங்கள்?


அர்ரஹ்மானுக்குப் பிரியத்திற்குரிய, நாவுக்கு எளிதான,

மறுமையில் நன்மை தீமை நிறுக்கப்படும் தராசில் கனமான இறைவனைத் துதிக்கும் இரண்டு வாக்கியங்கள் உள்ளன.


1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி. இதன் பொருள்,


அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்.


2.சுப்ஹானல்லாஹில் அழீம் இதன் பொருள், கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன் என்பதாகும். இதை நபி(ஸல்) கற்றுக் கொடுத்தார்கள்.


Improve your Islamic knowledge!


Teacher


Dr. M.M. A w 2 H.H.A., M.D., (Acu).,

அப்துல் காதிர் உமரி .

கருத்துகள்