தீய செயல்களுக்குரிய தண்டனை

 


தீய செயல்களுக்குரிய தண்டனை(பகுதி 2 )


ஏனைய கடவுள்களை வணங்க கூடிய அனைவரும், அந்தந்த கடவுள்களுடன் நரகத்திற்கு செல்வார்கள். இறுதியாக நயவஞ்சகர்களும், தீயவர்களும் எஞ்சியிருக்கும் போது அவர்கள் மிகப்பிரமாண்டமான, மிகக் கொடூரமான பாலங்கைள கடந்து செல்ல வேண்டும். அவர்கள் பாலங்களை கடக்கும் போது அவர்களுடைய பாவங்களுக்கு ஏற்றவாறு


பாலத்தில் கொடுமைகள் செய்யப்படுவார்கள். இவ்வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்.


மக்கள் (நபி ஸல் அவர்கüடம்) “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று வினவினர். அதற்கு நபி (ஸல்)


அவர்கள், “பௌர்ணமி இரவில் கீழே மேகம் சூழாத (வானில்) சந்திரனைக்


காண்பதில் நீங்கள் ஐயம்கொள்வீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை (ஐயம் கொள்ள மாட்டோம்), அல்லாஹ்வின் தூதரே!” என்றார்கள்.


மீண்டும் நபி (ஸல்) அவர்கள், “கீழே மேகம் சூழாத சூரியனைக்


காண்பதில் நீங்கள் ஐயம்கொள்வீர்களா?”எனக் கேட்டார்கள்.


அதற்கும் மக்கள், “இல்லை” என்று பதிலüத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறுதான் உறுதியாக நீங்கள் இறைவனைக் காண்பீர்கள்” என்று கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறினார்கள்:


மறுமை நாளில் மக்கள் அனைவரும் ஒன்று குவிக்கப்படுவார்கள்.  அப்போது “(உலகத்தில்) யார் எதனை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அதனைப் பின்பற்றிச் செல்லட்டும்” என்பான் (இறைவன்). ஆகவே, சிலர் சூரியனைப் பின்பற்றிச் செல்வர். இன்னும் சிலர் சந்திரனைப் பின்பற்றிச் செல்வர். வேறு சிலர் தீய சக்தி(களான சாத்தான்கள், சிலைகள், மந்திரவாதிகள் போன்ற வழிகேடர்)களைப் பின்பற்றிச் செல்வர். இறுதியில் (எனது) இந்த சமுதாயம் மட்டும் தங்கüடையே நயவஞ்சகர்கள் இருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும். அப்போது வலிவும் மான்பும் உடைய இறைவன்


(அவர்கள் அறியாத தோற்றத்தில்) அவர்கüடம் வந்து, “நான் உங்கள் இறைவன்” என்பான். உடனே அவர்கள் “எங்கள் இறைவன் எங்கüடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம்; எங்கள் இறைவன் எங்கüடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்” என்று கூறுவார்கள்.


அப்போது அல்லாஹ் (அவர்கள் அறிந்த தோற்றத்தில்) அவர்கüடம் வந்து, “நானே உங்கள் இறைவன்” என்பான். அப்போது அவர்கள், “நீ எங்கள் இறைவன் தான்” என்பார்கள். பிறகு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் அமைக்கப்படும். (இறைத்தூதர்கள். தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். நானே


அ(ந்தப் பாலத்)தை முதலாவதாகக் கடப்பவன் ஆவேன். அன்றைய தினத்தில் இறைத்தூதர்களைத் தவிர வேறுயாரும் பேசமாட்டார்கள். அன்றைய தினத்தில் “இறைவா! காப்பாற்று! காப்பாற்று!’ என்பதே இறைத்தூதர்கüன் பிரார்த்தனையாகும். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், “அந்நரகத்தி(ன் பாலத்தி)ல்


கொக்கிகள் அமைந்திருக்கும். அவை (ஊமத்தங்காயின் முள்வடிவில்) “சஅதான்’ செடியின் முள்ளைப் போன்றிருக்கும்” என்று கூறிவிட்டு, “”சஅதான்’ செடியின் முள்ளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (பார்த்திருக்கிறோம்)” என்று பதிலüத்தார்கள். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் சஅதான் செடியின் முள்ளைப் போன்றிருந்தாலும் அதன் பருமனை


அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அப்போது அந்த கொக்கி மக்களை அவர்கüன் (தீய) செயல்களுக் கேற்ப பற்றிப் பிடிக்கும். அவர்கüடம் தம் (தீய) செயல்களை முன்னிட்டு பேரழிவுக்கு உள்ளாபவர்களும் உண்டு. (அந்தப் பாலத்தில்) தட்டுத்தடு மாறிய பின் தப்புபவர்களும் உண்டு.


இறுதியாக இறைவன் நரகத்திற்குரியவர்கüல் தான் நாடிய சிலர் மீது கருனை காட்ட நினைக்கும் போது வானவர்கüடம், அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகத்திலிருந்து வெüயேற்றுமாறு கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெüயேற்றுவார்கள். சஜ்தாச் செய்த அடையாளங்களை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள். சஜ்தா செய்ததினால் (ஏற்பட்ட) அடையாளங்களைப் புசிக்கக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துவிட்டான். ஆகவே


(அல்லாஹ்வை வணங்கியவர்கள்) நரகத்திலிருந்து வெüயேற்றப்படுவார்கள். சஜ்தா செய்த(தால் ஏற்பட்ட) வடுக்களைத் தவிர ஆதமின் மைந்த(னான மனித)ர்களுடைய முழு உடம்பையும் நரகம் புசித்துவிடும். இந்த நிலையில் அவர்கள் கருகிப்போன நிலையில் நரகத்திலிருந்து வெüயேறுவார்கள். அப்போது அவர்கள் மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீரை ஊற்றப் படும். உடனே அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று செழிப்புடன் எழுவார்கள்…..


அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 806


செய்யாததை செய்ததாக சொல்பவனுக்குரிய தண்டனை


நாம் ஐவேளை கடமையான தொழுகைகளை தொழுவதில்லை. ஆனால்


பிறரை தொழுமாறு கட்டளையிடுவோம், அல்லது தீமையான காரியங்களில் மூழ்கியிருப்போம். ஆனால் தீமையை விட்டு பிறரை தடுப்போம். இதுப் போன்ற செயல்களை செய்பவர் மிகக் கடுமையான வேதனை செய்யப்படுவார். அதாவது நன்மையை ஏவிக்கொண்டு தாம்


அதைச் செய்யாமலும், தீமையைத் தடுத்துக்கொண்டு தாமே அதைச் செய்துகொண்டும் இருப்பருக்கு மறுமையில் கழுதை செக்கை இழுத்து வருவதைப் போன்று நரகத்தில் சுற்றிவருவார்.


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.


அல்குர்ஆன் 61:2,3


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மறுமை நாüல் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள்


அவரைச் சுற்றி ஒன்று கூடி, “இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர், “நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால்,


அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்” என்று கூறுவார்.


நூல்கள் : புகாரி 3267, 7098, முஸ்லிம் 5713


குர்ஆனை கற்று அதனை செயல்படுத்தாமல் இருப்பவர்களுக்குரிய தண்டனை


சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை குர்ஆனை கற்பதற்கு மிக அதிகமாக ஆர்வம் காட்ட கூடியவர்களை நாம் காண்கிறோம். ஆனால்


குர்ஆனுடைய வரிகளை நாம் தெளிவாக அறிந்தாலும் அதனை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடிப்பதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். அல்லாஹ்வுடைய வார்த்தைக்கு மாறாக அனைத்து செயல்களையும் செய்ய கூடியவர்களாக இருக்கிறார்கள்.


உதாரணமாக : வட்டி வாங்க கூடாது, பொய் சொல்ல கூடாது, விபச்சாரம் செய்ய கூடாது, பெற்றோர்களை துன்புறுத்தக் கூடாது என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால் குர்ஆனுக்கு மாற்றமாக பெயர் தாங்கி முஸ்லிம்கள் இதனை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதே போல் அல்லாஹ்வுக்கு இணைவைக்கக் கூடாது என்றும், கடமையான தொழுகைகளை தொழ வேண்டும் என்றும், பர்ளான நோன்பை கடைபிடிக்க வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது. இதனை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடிக்காமல், குர்ஆனை அலட்சியம் செய்கிறார்கள். இவ்வாறு செய்பவர்களுக்கு மறுமையில் மிகக் கொடுமையான வேதனையை அல்லாஹ் தயார் செய்துள்ளான்.


……ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலை மாட்டில் பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார்.


……தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு


அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும், அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.


அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி), நூல் : புகாரி 1386


விபச்சாரம் செய்தவர்களுக்குரிய தண்டனை


விபச்சாரம் என்பது தனி மனித ஒழுங்கீனம் மட்டுமல்ல, சமூகத்தையும் நாட்டையும் பாதிக்கின்ற மிகப் பெரிய சமூகத் தீமையாகும். விபச்சாரத்தால் குடும்ப உறவு, இல்லற அமைதி, மானம், பொருளாதாரம், சுகாதாரம் என எல்லாம் மட்டங்களிலும் பாதிப்பு உண்டாகும். எய்ட்ஸ் என்ற உயிர்கொல்லி நோய்களுக்கும் பாலியல் குற்றங்களே காரணம். எனவே விபச்சாரத்திற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது.


விபச்சாரம் செய்யும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தண்டிக்கப்பட வேண்டும். கற்பு நெறி இரு பாலருக்கும் பொதுவானது. எனவே, விபச்சாரம் செய்யும் நபர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவருக்கும் சமமான தண்டனை மறுமையில் உண்டு என்பதை நாம் அறிய வேண்டும்.


……அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பின் சூடு அதிகமாகும் போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள்.


…… அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்.


அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி),


நூல் : புகாரி 1386


வட்டி வாங்குபவர்களுக்குரிய தண்டனை


வட்டித் தொழில் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும். இதிலிருந்து வங்கிகளில் பணியாற்றுவது கூடாது என்று அறியலாம். வட்டியை கொடுப்பதும், வட்டியை வாங்குவதும், அதற்கு சாட்சியாக இருப்பதும், அதற்கு கணக்குகளை எழுதுவதும் தடை செய்யப்பட்டது.


வட்டியில் பல வகை உண்டு. தவணை வட்டி, கொடுத்த வட்டியை விடக் கூடுதல் தொகை பெறுவதே தவணை வட்டி ஆகும், அதாவது குறிப்பிட்ட தவணையில் கடன் (அசல்) தொகையை விடக் கூடுதல் தொகை பெறுவதாகும்.


வட்டி வங்கியில் கடன் பெறும் ஏழை ஒருவன் மருத்துவச் செலவு, அரிசி மற்றும் பருப்பு, பாடப் புத்தகம் போன்ற அவசியத் தேவைகளுக்காகவே கடன் வாங்குகிறான். அவனிடம் போய் அசலையும் கொடு, கூடுதலாக ஒரு தொகையை வட்டியாகவும் கொடு என்று கேட்பது எவ்வளவு பெரிய கொடுமை. மனிதாபிமானமற்ற இந்தச் செயலை மனித உள்ளம் படைத்த எவரும் ஆதரிக்கமாட்டார்கள்.


வசதி படைத்தவர்களும் வட்டிக்கு கடன் வாங்குவது உண்டு. புதிய தொழில் ஆரம்பிக்க பழைய தொழிலில் முதலீடு செய்ய எனப் பல நோக்கங்களுக்காக அவர்களும் கடன் வாங்குகிறார்கள். இந்த முதலைப் போட்டு அவர்கள் அடையும் இலாபத்தில் ஒரு பங்கை வட்டியாக வங்கிக்குச் செலுத்துவதால் அவர்களுக்கு என்ன பாதிப்பு என்று சிலர் கேட்கலாம்.


உண்மை அதுவன்று. கடன் கொடுத்த வங்கி இலாபத்தில் பங்கும் கேட்கும் அதே வேளையில் நஷ்டம் ஏற்பட்டால் அதையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமல்லவா? யாரும் அப்படிச் செய்வதில்லை. இது என்ன நியாயம்?


ஆக வட்டி முறையில் ஏராளமான பாதிப்புகளும் தவறுகளும் நடக்கின்றன. உழைப்பே இல்லாமல் பணம் சேர்த்தல் வசதி படைத்தவர்களிடம் மட்டுமே செல்வம் குவிதல், சந்தையின் இயல்பான போக்குத் தடைபடல், பணம் கொடுத்தவர்களுக்கு வறியவர்கள் அடிமை ஆகுதல். ஈவிரக்கமில்லாத முறையில் வட்டி வசூல், வட்டி கட்டமுடியாமல் மானத்துக்குப் பயந்து தலை மறைவு ஆகுதல். அல்லது தற்கொலை செய்து கொள்வது எனப்


பல சமூகத் தீமைகள் வட்டியை அனுமதிப்பதால் சட்ட அங்கீகாரம் பெறுகின்றன. இஸ்லாம் இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து, வட்டிக்கு தடை விதித்தது. இந்த செயல்களில் ஈடுபடக்கூடியவர் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு தள்ளப்படுவார்கள்.


……நடந்து ஓர் இரத்த ஆற்றின் பக்கம் வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு முன்பாகக் கற்கள் கிடந்தன. ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்றுகொண்டிருந்தார். அந்த


மனிதர் ஆற்றை விட்டு வெளியேற முயலும்போது இவர் அவரது வாயில் கல்லை எறிந்தார். அக்கல் பட்டதும் கரையேற முயன்றவர் முன்னிருந்த இடத்திற்குத் தள்ளப்பட்டார். இவ்வாறே அவர் வெளியேற முயலும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லால் அடிக்க, அவர் மீண்டும் பழைய இடத்திற்கே சென்றார்.


……(இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித்தின்றவர்கள். அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி), நூல்:புகாரி 1386


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர்.


நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது, அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!


அவர் யார்? என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன்: அதற்கவர்கள் ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்! எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : ஹமுரா (ரலி), நூல்:புகாரி 2085


வட்டித் தொழில் நடத்தி அதன் மூலம் வரும் வருமானத்தை சாப்பிடுவர்கள் நிரந்தரமாக நரகத்தில் கிடப்பவர்கள்.


வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.


அல்குர்ஆன் 2:275


 


கருத்துகள்