RECENT POSTS

வஸ்வாஸ் எனும் நோயும் தீர்வும்

 




வஸ்வாஸ் எனும் நோயும் தீர்வும்


வஸ்வாஸ் ஓர் வரைவிலக்கணம்:-



வஸ்வாஸ் என்பது உள்ளத்தில் ஏற்படும் ஒரு வகை தடுமாற்றம், தயக்கம், உறுதி இல்லாத ஒரு குழப்பம் அதாவது(வெறித்தனம்) மேலும் செய்யும் செயல்களில் உறுதியின்மை, செய்யும் செயல் சரியா? பிழையா? ஏற்றுக் கொள்ளப்படுமா? ஏற்றுக் கொள்ளப்படாதா? என்ற குழப்ப நிலை போன்றவற்றை குறிப்பிடலாம்.



வஸ்வாஸ் ஏற்படுவதற்கான கரணங்கள்:-



1- அறிவுக் குறைபாடு :- 



உள்ளத்தின் நோயிலிருந்து உள்ளதுதான், சந்தேகமும் வஸ்வாசூமாகும். எனவே அறிவுடையோரிடம் சென்று தனக்கு சந்தேகமான, தெரியாத ஒன்றை கேட்டு தெரிந்து தெளிவு பெற்று சந்தேகத்தை நீக்கி கொள்ள வேண்டும். இல்லா விட்டால் வஸ்வாஸ் நீங்காது. ஆனால் அறிவு, மனிதனுக்கு நிம்மதியையும் சந்தோசத்தையும், அமைதியையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். மேலும் அறிவு ஒருவனுக்கு அவன் மனதில் தோன்றும் எதையும் நீக்குகிறது, அறியாமை மனிதனுக்கு பயணற்றதையும், தீங்கையும் கொண்டு வரும். இதனால் சத்தியத்தை, சரியான விளக்கத்தை தெளிவை பெற்று சந்தேகத்தை (அளவுக்கு மிஞ்சிய பக்தியை ) தடுத்துக் கொள்ள வேண்டும்.



2- ஈமானிய பலவீனம்:- 



இது அதிகமான காரியங்களால் உருவாகிறது. மிக குறைவாக (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்தல், மேலும் அதிகமான பாவங்கள் செய்தல் இதனால் ஷைத்தான் அதிகமாக பாவம் செய்கின்றவர்களை தனது காட்டுப்பட்டிக்குள் கொண்டு வந்து அவன் மீது அவன் ஆதிக்கம் செலுத்துகிறான். ஆனால் நல்லமல்கள் செய்வோரின் மீது ஈமானிய பலம் உள்ளோர் மீது ஷைத்தான் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஷைத்தான் இவர்களை விட்டும் விரண்டு ஓடுகிறான். இவர்களை வழி கெடுக்க எந்த வழியையும் அவன் காணமாட்டான். 


இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :- 


﴿إِنَّهُۥ لَیۡسَ لَهُۥ سُلۡطَـٰنٌ عَلَى ٱلَّذِینَ ءَامَنُوا۟ وَعَلَىٰ رَبِّهِمۡ 


یَتَوَكَّلُونَ﴾ [النحل ٩٩]


எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை (அல் குர்ஆன் 16:99)



 اِنَّمَا سُلْطٰنُهٗ عَلَى الَّذِيْنَ يَتَوَلَّوْنَهٗ وَالَّذِيْنَ هُمْ 


بِهٖ مُشْرِكُوْنَ


திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அல்லாஹ்வுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் (செல்லும்). (அல் குர்ஆன் 16:100).



3- ஆவேசங்களால் கொண்டு செல்லப்படுதல்:



தேவையில்லாத ஆவேசங்களும், தேவையில்லாத சிந்தனை மிகுதியும், வஸ்வாசை சந்தேகத்தை கொண்டு வரும். இதனால் எந்தப் பயனும் பெறாததால், மனிதனை வெறிபிடிக்கச் செய்து, ஷைத்தானின் பாதையை இது எளிதாக்குகிறது.



4- அல்லாஹ்வை நினைவு கூருவதை விட்டும் புறக்கணித்தல் :-



அல்லாஹ்வை நினைவு கூறுவது ஷைத்தனை விரட்டி அடிக்கும் ஆயுதம். இது மனிதர்களில் ஒருவருக்கு ஒரு வழியை உருவாக்குகிறது. அல்லாஹ்வை திக்ர் நினைவு கூறுவதை விட்டு விட்டால் ஷைதான் அவனது 


உள்ளத்தில் நுழைந்து வெறித்தனத்தையும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கி விடுகிறான். முஸ்லிம் மற்றும் அல்-பைஹாகியில் எனும் நூலில் இடம் பெற்ற ஹதீஸில் தொழுகைக்கான அழைப்பைக்( அல்லாஹ்வின் பெயரை) கேட்கும் போது, ஷைதான் விரண்டு தப்பி ஓடுவதும், துர்நாற்றம் (காற்று) வீசுவதும் ஹதீஸில் உள்ளது. 



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கான அறிவிப்புச் செய்யப்பட்டால் அதான் ஒலி தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் வாயு வெளியேறியவனாகத் திரும்பி ஓடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்துவிட்டால் அவன் திரும்பிவருகிறான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் மீண்டும் ஓடிவிடுகிறான். இகாமத் சொல்லி முடியும்போது திரும்பிவந்து, (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதரின் உள்ளத்தில் ஊடுருவி "இதை இதையெல்லாம் நினைத்துப்பார்" என்று கூறுகிறான்; அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டுகிறான்; (அதன் விளைவாக) அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை அறியாதவராகிவிடுகிறார். உங்களில் ஒருவருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பது தெரியாவிட்டால் அவர் (தொழுகையின் இறுதியில்) அமர்வில் (மறதிக்குப் பரிகாரமாக) இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (நூல் முஸ்லிம் 988)



எனவே (அன்றாடம் ஓதும் திக்ருகளை ஓதி வந்தால் ஷைதான் ஓடி விடுவான். காலை மாலை திக்ருகள். தூங்கும் போது, சாப்பிடும் போது...... இது போன்ற...மற்ற நேரங்களில் ஓதும் திக்ருகளை ஓதி வர வேண்டும் )



5- மக்களுடன் கலக்காமல் இருப்பது:



ஏனென்றால் ஷைதான் தனிமையில் இருக்கும் ஒருவனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான். மேலும் அவனுடைய கட்டுப்பாட்டைப் இப்படிப்பட்வர்களிடம் ஆதிக்கம் செலுத்துவதும் மற்றும் சோதனைகுள்ளாக்குவதும் அவனுக்கு எளிதானது.




ஒரு மனிதனிடம் வஸ்வாஸ் ஏற்பட்டதிற்கான அதன் வெளிப்பாடுகள்:-



1- உழு செய்யும் போது அல்லது குளிக்கும் போது உழு செய்யும் இடத்தில் குளியலறையில் நீண்ட நேரம் இருந்தல். இந்நிலை மிகப்பெரிய வஸ்வாஸாகும். இது அறியாமையின் காரணமாக ஏற்படும் ஒன்றாகும்.



2- தொழுகையை மீட்டி தொழுதல். ஏனென்றால் தனது தொழுகை சரியாக தொழுப்படவில்லை என்று எண்ணுவது. தொழுகைக்கு இம்மாமுடன் அல்லது தனித்து தொழ நிண்டால் கூட தக்பீரை கட்டுவது பின்பு விட்டு விடுவது மீண்டும் தக்பீர் கட்டுவது விட்டு விடுவது இப்படி மாறி மாறி செய்து கொண்டே இருப்பது. இவ்வாறு செய்பவர்கள் அதை விட்டு விட வேண்டும். ஏனனில் " அல்லாஹ்வை உங்களால் சக்தி உள்ள வரை அஞ்சி நடவுங்கள் "(சூரா தஆபுன் 16) என்று அல்லாஹ் கூறுகிறான்.



3- எழுத்துக்களை திரும்ப திரும்ப கஷ்டப்பட்டு மொழிய முற்படுதல். அதாவது எழுத்து சரியாக உச்சிரிக்கப்பட்டதா? இல்லையா? என்ற ஒரு வஸ்வாஸ். 


உதாரணம் :- அல்லாஹு அக்பர்... என்று தக்பீர் காட்டும் போது.. (الله اكبر) அல்லாஹு அக்.. அக்.. அக்.. என்று திரும்ப திரும்ப மொழிதல். 


அதே போன்று.. அத்தஹிய்யாத்தில் (التحيات) அத்... அத்.. என்று கஷ்டப்படுத்தல்.. 


அதேபோன்று ஸலாம் கொடுக்கும் போது..(السلام عليكم) அஸ்... அஸ்.. இப்படி எல்லாவற்றிலும் ஒரு வகை சந்தேகம் கொள்ளல்..




வஸ் வாஸ்தனம் வஸ்வாஸ் படக்கூடியவர்களின் வகைகள்



1- அகீதாவில் சந்தேகத்தை ஏற்டுத்துதல் :-



ஷைத்தான் உங்களில் ஒருவரிடம் வந்து, இதைப் படைத்தது யார்? இதை உருவாக்கியது யார்? ஷைதான் உங்களிடம் கூறும் வரை: உங்கள் இறைவன் யாரைப் படைத்தான்? இப்படி ஒரு வகை சந்தேகம் அகீதாவில் ஷைதான் ஏற்படுத்துவான். இப்படியான எண்ணங்கள் வந்தால் இதனை தடுப்பதற்க்கு நபி ஸல் அவர்கள் வழி காட்டினார்கள்امنت بالله ورسوله الله احد الله 


الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد


என்று கூறி விட்டு இடது பக்கம் துப்பிக் கொள்ள வேண்டும்.ஷைதான்னிடமிருந்து பாதுகாப்பு தேடிக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் அவன் வழிபட்டு விட்டான். ஷைதான் அவனை விட்டும் ஓடி விடுவான்



2- சுத்தம் செய்யும் போது சந்தேகித்தல் இது அதிகமானவர்களிடம் பரவி காணப்படுகிறது. இப்படியான நேரத்தில் ஷைதான் மக்களிடம் அதிகம் வருகிறான் ஏனனில் சுத்தம் பற்றிய கல்வி அறிவு குறைவு, மற்றும் அறியாமை போன்ற காரணங்களால். குறிப்பாக உழு செய்யும் போது அல்லது குளிக்கும் போது நிய்யத் வைக்கும் விடயத்தில் சந்தேகம் ஏற்படுதல். எந்தளவுக்கு என்றால் தண்ணீரை முகத்தில் ஊற்றி, ஊற்றி அதிக நேரம் இருப்பார்கள். நிய்யத் சேர்ந்திச்சா? இல்லையா? இப்படி ஒரு வெறித்தனம் ஏற்படும். பொதுவாக நிய்யத்தை வாயால் மொழிவது பித்அத் ஆகும். நபியவர்கள் இப்படி காட்டித்தரவில்லை. மனதினால் எண்ணுவதே நிய்யத் என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும்.



3- மல, சல தேவையின் போது சந்தேகம் கொள்ளல் நீண்ட நேரம் மலசல கூடத்தில் நேரத்தை கழிப்பது. சிறு நீரை வெளியேற்ற முயற்சி செய்வது அதாவது கனைத்தல். உருவிவிடுதல். குந்துதல், எழும்புதல். சிறு நீர் சொட்டு சொட்டாக செல்கிறதே என்று சந்தேகித்தல், சிறு நீர் முழுமையாக வெளியேற வேண்டும் என்று நடக்குதல் இப்படி செய்வது இவ்வாறு நபி ஸல் அவர்களோ அல்லது நபித்தோழர்களோ யாரும் நடந்து கொள்ளவில்லை



4- உழு வின் போது தண்ணீர் சுத்தமாக இருக்கா? இல்லையா? இது குள்ளதைனா இல்லையா என்று வஸ் வாஸ் கொள்ளல். இப்படியான எண்ணங்கள் வர காரணம் தண்ணீர் பற்றிய போதிய அறிவு இல்லாமையே



5- ஆடையில் சந்தேகித்தல் :- ஆடையை கழுவும் போது அதை பல முறை கசக்கி கசக்கி நீண்ட நேரமாக கழுவுதல். அதை முகர்ந்து பார்த்தல். நஜீஸ் இருக்குமோ என்று எண்ணுதல்..




வஸ்வாசினால் ஏற்படும் தீங்குகள்



1- அல்லாஹ்வின் கோபம் கிடைக்கும் வஸ்வாசின் மூலம் இபாதத்கள் சீர்க்குலைக்கப்படுகிறது மேலும் எல்லை கடந்து நேரத்தை செலவழித்து இபாதத்தை சிரமமாக காட்டுதல் இதனால் இறைவனின் கோபம் கிடைக்கும். இவ்வாறான வணக்கங்கள் அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்படாது



2- மார்க்கம் சீரகுலைந்து ஈமான் பலவீனமடைதல் :-காரணம் யாதெனில் ஷைதான் இவ்வடியார்கள் மீது ஒரு ஓட்டையை கண்டு அதன் மூலம் ஒரு வழியை அடைந்து கொண்டு அவனை சந்தேகத்தில் ஆழ்த்தி விடுகிறான். பெரும்பாலும் வஸ்வாஸ் ஈமான் பலவீனமானவர்களிடம் காணப்படும். அந்த அடையாளத்தின் வெளிப்பாடு தான் மார்க்கம் சீரகுலைந்து ஈமான் பலவீனமடைகிறது. இதானல் தொழுகையில் ஜமாஅத் தொழுகை தப்பிபோகிறது. தொழுகை நேரம் பிந்தி தொழுதல் எல்லாம் ஏற்படுகிறது.



3- நபி ஸல் அவர்கள் காட்டிய வழி முறை போதாது என்ற நிலை உருவாகி. அதிலிருந்து வெளியேறி விடுகிறார். ஒருவர் வஸ்வாசின் காரணமாக உழு செய்யும் போது மூன்று முறைக்கு மேல் உறுப்புக்களை கழுவினால். நபியின் வழி முறைக்கு அது மாற்றமாகும். மாறாக வஸ் வாஸை அதிகப் படுத்திக்கொண்டார்.



4- நன்மைகள் அழிந்து விடும் அல்லது குறையும்: 


ஒருவர் நபி வழிக்கு மாற்றமாக மூன்று தடைவைக்கு மேல் உழு வின் உறுப்பைக் கழுவினால் அது நபி வழிக்கு மாறு செய்து விட்டார் பாவம் செய்து விட்டார். நபி ஸல் அவர்களிடம் ஒரு நாட்டுப் புர அரபி ஒருவர் வந்தார் வந்து அல்லாஹ்வின் தூதரே உழு செய்து எப்படி என்று கேட்டார். அதற்க்கு நபியவர்கள் ஒவ்வொரு உருப்பையும் மூன்று முறை நீர் ஊற்றி கழுவிக் காட்டினார்கள் பின்பு கூறினார்கள் இப்படிதான் உழு செய்ய வேண்டும் என்றார்கள். இதனை விட யார் அதிகமாக செய்கிறாரோ அவர் பாவம் செய்து விட்டார் அல்லது எல்லை மீறி விட்டார் அல்லது அவர் அநியாயம் செய்து விட்டார் என்றார்கள் (நூல்: இப்னு மாஜா)



5- தனக்கும் மற்றவர்களுக்கும் ஒரு துன்பமாக இது அமைத்து விடுகிறது எந்த காரியத்தை எடுத்தாலும் ஒரு வகை தடுமாற்றம். செய்யும் காரியத்தில் திருப்தி இன்மை. அதே போல் மற்றவர்களும் இதனால் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.



6- இஸ்லாம் தடை செய்ததை செய்யவும் ஏவல்களைவிட்டு விடவும் இது வழி வகுக்கிறது.



7- நேரமும் வாழ்நாலும் வீணாகிறது.



8- மக்கள் இவ்வாறான வஸ்வாஸ் உடையவர்களை கணக்கெடுக்க மாட்டார்கள் ஒதுக்கி விடுவார்கள்.



9- ஷிர்க், வழி கேடு போன்ற செயற்பாடுகளுக்கு இது ஒரு மனிதனை இட்டுச் செல்லும்



10- உலக காரியங்களை செய்வதில் தாமதம் ஏற்படும். தொழிலுக்கு செல்வது.. போன்ற மற்ற காரியங்கள்




வஸ்வாஸை நீக்குவதற்கான தீர்வுகள்



1- மார்க்க அறிவை தேடிப் படிக்க வேண்டும். மார்க்க அறிவை தேடிப் படிப்பதினால் மார்க்கதின் பெயரால் உருவாக்கப்பட்ட, மார்க்கதில் இல்லாத விடயங்களை அமல் செய்வதில் இருந்து அவனை தடுத்து வஸ்வாஸை நீக்கி விடுகிறது. வஸ்வாஸ் உருவாக காரணம் இஸ்லாத்தின் வணக்க வழி பாடுகளை எவ்வாறு செய்வது அதன் சரியான வடிவம் யாது என்பது பற்றிய அறிவு இன்மையே.



2- ஈமானை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் :-அதாவது தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற வணக்கத்தில் நின்றும் அல்லாஹ்வை நெருங்கக் கூடிய. அவனை வழிப்படக்கூடிய. கடமையான உபரியான வணக்கங்களை அதிகமாக செய்தல். இதனால் ஈமான் உறுதியாகி ஷைதான் ஆதிக்கம் செலுத்துவதில் இருந்து பாதுகாக்ப்படுகிறான்.



3- அல்லாஹ்வை நினைவு கூறுவதில் தொடர்ச்சியாக இருத்தல் காலை மாலை திக்றுகள் மற்றும் ஏனைய அன்றாட வாழ்வில் சந்தர்ப்ப துஆக்களை வழமையாக்கி கொள்ளல்.



4- அல் குர் ஆன், நபி ஸல் அவர்கள் காட்டியதை மட்டும் பின்பற்றல். இது தவிரந்த மூன்றாவது ஒன்றை தேடும் போது அது சரியா இது சரியா என்று குழம்பி ஷைத்தாணும் ஆதிக்கம் செலுத்தி விடுவான். எனவே நபி (ஸல்) கொண்டு வந்தது சத்தியமானது அதை பின்பற்றினால் வஸ்வாஸ் விரண்டோடி விடும்.



5- ஷைதான் ஒரு போதும் மனிதர்களுக்கு நலம் நாடமாட்டான் என்பதை தெளிவாக அறிந்து இருக்க வேண்டும். வஸ்வாஸ் சரியாக அமல் செய்ய தேண்டிப்பது போல் தெரியும், ஆனால் அது வழிகேடு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஷைதான் இப்படி மாயத்தை அவன் ஏற்படுத்துவான் ஏமாற்றுவான். அல்லாஹ் கூறும் போது :-



وَقَاسَمَهُمَآ إِنِّى لَكُمَا لَمِنَ ٱلنَّصِحِينَ“


நான் உங்களுக்கு நலம் நாடுவோரில் உள்ளவனே!” என அவ்விருவரிடமும் (ஷைத்தான்) சத்தியம் செய்தான்.


فَدَلَّىٰهُمَا بِغُرُورٍۢ


 ۚஅவன் அவ்விருவரையும் ஏமாற்றத்தில் வீழ்த்தினான். எனவே ஷைதான் விடயத்தில் எச்சரிக்கை யாக இருங்கள்.



6- வஸ் வாஸ் வருவதை விட்டும் தடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.அமல் செய்யும் போது வஸ்வாஸ் வந்தால் அதை கணக்கெடுக்காமல் விட்டுவிட வேண்டும். ஏனனில் ஷைதானின் சூழ்ச்சி பலவீனமானது. தோல்வி அடையக் கூடியது


.اِنَّ كَيْدَ الشَّيْطٰنِ كَانَ ضَعِيْفًا‏


நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.(அல்குர்ஆன் : 4:76)



7- அல்லாஹ்விடம் அதிகமாக ஷைதானை விட்டும் பாதுகாப்புத் தேடுங்கள்.


وَاِمَّا يَنْزَغَـنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ‌ اِنَّهٗ سَمِيْعٌ 


عَلِيْمٌ‏


ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 7:200)


பாதுகாப்புத் தேடும் போது ஷைத்தான் சிறுமை அடைத்து அவன் நுழம்பு போல் ஆகி விடுவான்.



8- அதிகம் துஆ செய்யுங்கள் இது ஷைத்தானை விரட்டி அடிக்க முக்கியமான ஒரு வழி. அல்லாஹ்விடம் பிராத்தனை செய்தால் அல்லாஹ் நம்மை வெறுங் கையாக விட வெட்கப்படுவான் அதனால், துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் நேரத்தில் அல்லாஹ்விடம் கேளுங்கள் " யா அல்லாஹ் என்னை வஸ் வாஸில் இருந்து பாதுகாப்பாயாக! " நிச்சயம் அல்லாஹ் தீர்வு தருவான். அவன் இரக்கமுள்ளவன். எனவே வஸ்வாஸ் எனும் நோயில் இருந்து எம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்



                            -முற்றும்-      



அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.



-நஸீர் அந்நூரி


நன்றி இஸ்லாமியபுரம் வலைத்தளம் .

கருத்துகள்