அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, டிசம்பர் 15, 2013

சுவாரஸ்யமான சில கதைகள் :

சுவாரஸ்யமான சில கதைகள் :கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை.
பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான்.பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்...திரத்தில் போட்டான்.பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான்.அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. சிறுவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான்.நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன? எதனால் இம்முறை நிறையப் பேர் பிச்சை இட்டனர்.இரண்டாம் வாசகத்தில் " இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை" என்று இருந்தது.இரண்டு வாசகங்களுமே சிறுவன் குருடன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன. ஆனால், முதல் வாசகம் சிறுவன் பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது. இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது......

.நீதி :

உங்களுக்கு எது கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள்.

வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்றுக் காட்டுங்கள்.
எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள்.
எதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள்.
உங்கள் வாழ்க்கை அழகாகும்.


ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.

அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் த...ுண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.

புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்றது நாக்கைச் சுழற்றியபடியே

அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.

இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.

குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார்" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.

குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...

பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...

- வேகமான சிந்தனை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்கும் '


ஏழை தம்பதிகள்...

மனைவிக்கு அழகான கூந்தல்....
அதை அழகாக வாரி முடிய ஒரு சீப்பு வாங்கக் கூட வழியில்லாத அளவுக்கு வறுமை

இருந்தும் ஒரு நாள் தன் கணவனிடம்
ஒரு சீப்பு வாங்கித் தருமாறு கேட்கிறாள்.

"நானே என் தாத்தா எனக்குத் தந்த கைக் கடிகாரத்திற்கு ஸ்ட்ராப் போடுவதற்கு கூட பணமில்லாமல் அதைச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டுடிருக்கிறேன் ..சீப்பு வாங்க பணமில்லை" என்கிறான் ..

கடைவீதியில் திரியும் போது அவன் மனம் குறு குறுக்க தன் கைக்கடிகாரத்தை விற்று ஒரு சீப்பு வாங்குகிறான்.

மனைவி சந்தோஷப் படுவாள் என்று சீப்புடன் வீட்டிற்கு வந்தவனுக்கு அதிர்ச்சி..மனைவி முடியை வெட்டி பாப் செய்திருக்கிறாள்.

தன் அழகான முடியை விற்று அவன் கைக்கடிகாரத்திற்கு
ஒரு வெள்ளி ஸ்ட்ராப் வாங்கி இருக்கிறாள் மனைவி.

நீதி: அன்பு செய்வது ஒரு தவம்
அன்பு செய்யப் படுவது ஒரு வரம்
அன்பு செய்பவரால் அன்பு செய்யப்படுவது ஒரு யோகம் ...


சிலநேரங்களில் உண்மைதான் பலியாகிறது!

ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான்.அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன.

ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது....
அதனால், அந்த விவசாயி குதிரைக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான்..
மருத்துவர் அந்த குதிரையின் நிலையைப் பார்த்து, “நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச் சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனைக் கொன்றுவிட வேண்டியது தான்” என்று சொல்லியபடி குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது.
விவசாயியும் அந்தக் குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக் கொடுத்தான்.
மறுநாள் வந்த மருத்துவர், குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார். அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான் அந்த விவசாயி.பின்பு சிறிது நேரம் கழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக் குதிரையிடம், "நண்பா, நீ எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார்.அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில்,
அதனைக் கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கும் பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார்.இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர் சென்றதும், குதிரையிடம் வந்து, “நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய்.
நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள்” என்று சொல்லியது.அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கியது.தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து போகும்படியாக குதிரை ஓடியது.மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான்.அவன் மருத்துவரிடம், "என் குதிரை நன்றாகக் குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத் தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த மருந்துதான் காரணம். என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து கொண்டாடி விடுவோம்” என்றான்.குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து நடந்தாலும் மருத்துவர் கொடுத்த மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாகத்தான் விவசாயி நினைத்தான்....

இப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்தது என்பதை உணராமல், பலரும் உண்மையைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சுவாரஸ்யமான சில கதைகள் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!