அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
ஹிஜாப்-ஒரு விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிஜாப்-ஒரு விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 11, 2016

ஹிஜாப்-ஒரு விளக்கம் [இறுதி பகுதி]

ஹிஜாப்-ஒரு விளக்கம் [இறுதி பகுதி]
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
ஒரு முஸ்லிம்  பெண் எப்படி வேண்டுமானாலும் அவள் விருப்படி பர்தா அணிவது என்பது கூடாது. இஸ்லாம் எப்படி கூறியுள்ளது அதன்படிதான் பர்தா அணிய வேண்டும்.

பர்தா ஆண்களின் ஆடையை ஓத்திருக்கக் கூடாது..
பெண்களைப்  போன்று ஆடை அணிகின்ற ஆண்களையும், ஆண்களைப்  போன்று ஆடை அணிகின்ற பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் [ஸல்] சபித்தார்கள் .
சுனன்  அபூதாவூது]

பர்தா முஸ்லிம்  அல்லாத பெண்களின் ஆடைகளை ஓத்திருக்கக் கூடாது..
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவர்களைச்  சேர்ந்தவரே !
முஸ்னது அஹ்மது]

புதன், ஆகஸ்ட் 10, 2016

ஹிஜாப்-ஒரு விளக்கம்[நான்காம் பகுதி]

ஹிஜாப்-ஒரு விளக்கம்[நான்காம் பகுதி]
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இஸ்லாமிய பெண்மணிகள் அறிந்துக் கொள்ளவேண்டிய ஒரு விடயம்!
முறையான பர்தாவுக்குரிய நிபந்தனைகள்..
தலை முதல் கால்கள் வரையுள்ள உடல் உறுப்புகள் அனைத்தையும் முழுமையாக மறைக்க வேண்டும். இன்று பலர் தங்கள் முகம், கூந்தல், கழுத்துப் பகுதி, கணுக்கால் பகுதி, அணிந்துள்ள ஆடை மற்றும் அதன் நிறங்கள் ஆகியன வெளியே தெரியும்படி பர்தா அணிகிறார்கள். இது தவறாகும்.

அல்லாஹ் கூறுகிறான்..
தங்கள் துப்பட்டாக்களை [புர்காக்களை] தங்கள் மேலாடைகளின்  மீது போட்டு [தலை, முகம், கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து] கொள்ள வேண்டும்.
சூரா அந்நூர் 24..31]

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2016

ஹிஜாப்-ஒரு விளக்கம் [மூன்றாம் பகுதி]

ஹிஜாப்-ஒரு விளக்கம் [மூன்றாம் பகுதி]
அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
பர்தாவின் இன்றைய நிலைமை.
இன்று பர்தா அணிகின்ற பெண்களில் பலருக்கு அது பற்றிய சட்டங்கள் தெரியாததால் தாங்கள் விரும்பிய மாதிரியெல்லாம் பர்தா அணிகிறார்கள். அதிகமானவர்கள் தங்கள் பர்தாவில் அலங்காரமான [embroidery ] பூ வேலைப்  பாடுகளை செய்துகொள்கிறார்கள். அவை பார்ப்பவர்களின் கண்களைக் கவர்கின்றன. இன்னும் பலர் பர்தாவில் ஓரங்களைக் கிழித்து, அவற்றை நாடாக்களால் முடிச்சிட்டு, உள்ளே அணிந்துள்ள ஆடைகள் வெளியே தெரியும்படி அணிகிறார்கள்.  இத்தகையவர்கள் தாங்கள் பர்தாவே அணியவில்லை என்பதை அறிய வேண்டும்.

ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016

ஹிஜாப் -ஒரு விளக்கம் [பகுதி இரண்டு]

ஹிஜாப் -ஒரு விளக்கம் [பகுதி இரண்டு]
அல்லாஹ்வின் திருப்பெயரால்.
இன்ஷாஅல்லாஹ் தொடர்ச்சியை  பார்ப்போம்..
அல்லாஹ்வின் கட்டளை
பர்தாவை அல்லாஹ்வின் கட்டளைக்காக அணிய வேண்டும். நல்ல முஸ்லிம்  பெண்மணி பர்தாவைச் சடங்காகவோ, சம்பிரதாமாகவோ கடைபிடிக்கக் கூடாது. தன்னுடைய முன்னோர்களின் கலாச்சார ஆடை என்றும் நினைக்க மாட்டாள் . மார்கா பர்தா அணிகின்ற சட்டத்தை அல்லாஹ்வின் கட்டளை என்ற நம்பிக்கையுடனும் மனப்பூர்வமான விருப்பத்துடனுமே  பேண  வேண்டும். குழப்பங்கள் நிறைந்த இடங்களை விட்டும் இழிவான சூழ்நிலைகளை  விட்டும், வழிகேட்டின் அபாயங்களை விட்டும்  தன்னைப்  பாதுகாக்கவே தனக்கு அல்லாஹ் இப்படிப்பட்ட கட்டளையை விதித்துள்ளான் என்றும், தன்னுடைய தனித்தன்மையை இதன் மூலம் பிரித்துக் காட்டுகிறான் என்றும் முழுதிருப்தியுடன் முஸ்லிம்  பெண் ஏற்று நடக்க வேண்டும்.

ஹிஜாப்-ஒரு விளக்கம்

ஹிஜாப்-ஒரு விளக்கம்
அல்லாஹ்வின் திருப்பெயரால் ......
ஒரு நல்ல முஸ்லிம் பெண்மணி தன்  வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது மார்க்கம் அவளுக்கு  கட்டளை இட்டுள்ள ஆடை ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும். அதைத்தான் ஹிஜாப், பர்தா என்று கூறப்படுகிறது. ஒரு பெண் இந்த ஒழுங்கைக் கடைபிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது,, அந்நிய ஆண்களுக்கு முன் நிற்கக்  கூடாது. இது அல்லாஹ்வினால் திட்டவட்டமாக தடை செய்யப்பட்டதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்..
[நபியே] அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு நீர் கூறும்.. அவர்களும் தங்கள் பார்வைகளைக் கீழ்நோக்கியே வைக்க வேண்டும்,, தங்கள் கற்புகளையும்  பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், தங்கள் அலங்காரங்களில் வெளியில் இருக்கக்கூடியவற்றை தவிர மற்றதை  வெளிக்காட்ட வேண்டாம். தங்கள் துப்பட்டாக்களை தங்கள் மேலாடைகளின்  மீது போட்டு [தலை, முகம், கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை ]க்  கொள்ள வேண்டும்.