அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
நோன்பின் சிறப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோன்பின் சிறப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 12, 2020

நோன்பின் முக்கியத்துவம்




வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இந்த வணக்கங்களின் வரிசையில் ஒன்றாக உள்ளதுதான் நோன்பு. நோன்பு என்னும் வணக்கம் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இது ஒரு சடங்காகக் கருதாமல் வணக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வதாகக் கொள்ளப்படுகிறது. நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.
இறையச்சம் என்பது அல்லாவிற்கு பயந்து, அவன் அறிவுறுத்தியவைகளை செய்தும், தடை செய்தவைகளை தவிர்த்தும் நடப்பதுதான். இஸ்லாம் நோன்பாளி, யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும் போதும் பசியுள்ளவராக இருந்தும் தன்னிடத்திலுள்ள உணவை உண்ணக் கூடாது. தாகமுள்ளவராக இருந்தும் எதையும் குடிக்கக் கூடாது. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றக் கூடாது.

வெள்ளி, ஏப்ரல் 10, 2020

ரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்




அல்லாஹ் இந்த உலகில் அவன் விரும்பியதை படைத்துள்ளான். அவனுடைய படைப்புகளில் அவன் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து ஒன்றைவிட ஒன்றை அவன் சிறப்பிக்கின்றான்.

அவனுடைய தூதுப் பணிக்கு மனிதர்களில் இறைத்தூதர்களை தேர்வு செய்தான். இறைத்தூதர்களில் சிலரைவிட சிலரை அவன் சிறப்பித்துள்ளான். வானவர்களிலும் ஜிப்ரீல் மீக்காயீல் ஆகிய வானவர்களுக்கு தனிச் சிறப்பு வழங்கியுள்ளான்.

பொதுவாக இடங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பு என்றாலும் அவற்றில் மக்கா மதீனா பைத்துல் முகத்தஸ் ஆகிய இடங்களை அவன் புனிதப்படுத்தியுள்ளான். இந்த மூன்று புனித ஸ்தலங்களில் ஒன்றை விட மற்றதை சிறப்பித்துள்ளான்.

செவ்வாய், ஏப்ரல் 07, 2020

ரமலான் நோன்பைப் பற்றி சில ஹதீஸ்கள்




ரமலான் நோன்பைப் பற்றி சில ஹதீஸ்கள்

 ''ஓரிரு நாட்கள் நோன்புடன் ரமளானை எதிர் கொள்ளாதீர்கள். எவரேனும் வேறு நோன்பு நோற்பவராக இருப்பின் அவர் நோற்றுக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

 ''சந்தேகத்திற்குரிய நாளில் எவர் நோன்பு நோற்றாரோ, அவர், அபுல் காஸிமுக்கு (எனக்கு) மாறு செய்தார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அறிவிக்கிறார்.

இது புகாரியில் 'முஅல்லக்' எனும் தரத்திலும், மவ்ஸூல் எனும் தரத்திலும், இப்னு குஸைமா, அஹ்மத், அபீதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, நஸாயீ ஆகிய நூல்களில் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, ஏப்ரல் 05, 2020

ஒரு மாதம் லீவு , ஒரு சுய கட்டுப்பாடு தேவை!



அல்லாஹ்வின் திருப்பெயரால்....
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன்  2:183)

“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன்  2:185)

செவ்வாய், மே 31, 2016

நோன்பின் சிறப்புகள்................

இன்ஷாஅல்லாஹ்  இனி ரமலானுக்கு
பிறகு புதிய இடுகைகள் [பதிவுகள்]
இடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்!
ரமலான் வாழ்த்துக்கள்!!!

ரமளான் நோன்புக்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

ஹதீஸ் - 1

'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்' என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும். நபிமொழி (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 761)

சிறப்புகள்: 1. எழுநூறு மடங்குக்கும் அதிகமான நன்மை 2. அல்லாஹ்வின் நேரடி கூலி 3. கேடயம் 4. கஸ்தூரியை விட சிறந்த வாய் வாசம்.