அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
இதுதான் உலகம் ....! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதுதான் உலகம் ....! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 28, 2020

சிந்தனை துளிகள்.....

இந்த உலகம் ஒரு சோதனை கூடம்!
இந்த உலகத்தின் மீது பற்று வைக்காதீர்கள்!
அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மனிதர்களுக்கு பணம் என்பது தேவையான ஒன்று தான்! அதற்காகத் தன்னையே அழிக்கும் துறையில் இறங்கி விடக்கூடாது .பணம் இல்லாதவன் பிணத்துக்குச் சமம் . பணம் பந்தியிலே! குணம் குப்பையிலே! என்ற பழமொழியை பெரியோர்கள் சொல்வார்கள். எண்ணெய்யை பூசிக்கொண்டு தரையில் எவ்வளவுதான் உருண்டாலும் ஓட்டுகிற மண் தான் உடலில் ஓட்டும் என்பதை ஞாபகப்படுத்த வேண்டும்!

சனி, ஏப்ரல் 16, 2016

இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும் வேடிக்கையும்தான்!

இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும் வேடிக்கையும்தான்!
அல்லாஹ்வின் திருபெயரால் ...
இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும் வேடிக்கையும்தான் அன்றி வேறில்லை என அல்லாஹூ தஆலா  கூறுகின்றான். உணமையிலேயே இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி நன்றாகச் சிந்தித்துப் பார்க்கின்றபோது சிறு பிள்ளைகளின் விளையாட்டு போன்றுதான் தோன்றுகிறது. சில கிராமங்களில் சிறு பிள்ளைகள் ஒன்றுக்கூடி விளையாடுவதை நாம் பார்க்க முடியும். அப்பிள்ளைகள் சிறு சிறு பானைகளையும் சட்டிகளையும் அடுப்புகளையும் வைத்திருப்பார்கள். அப்பிள்ளைகள் இரு கூட்டமாகப் பிரிந்து மாப்பிளை வீட்டாரென்றும் , பெண் வீட்டாரென்றும்  தனித்தனியாக இருந்து சமைத்து சாப்பிடும் விளையாட்டை விளையாடுவார்கள்.

புதன், ஏப்ரல் 13, 2016

இதுதான் உலகம் ....!

 இதுதான்  உலகம் ....!
அல்லாஹ்வின் திருபெயரால் ...
ஒரு சமயம் பெருமானார் [ஸல்] அவர்கள் அபூஹுரைரா [ரலி] அவர்களை நோக்கி  ''அபூஹுரைராவே! உமக்கு இவ்வுலக நிலைமையைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? '' என்று வினவியபோது , ''அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! அறிவித்துத் தாருங்கள்'' என்று கூறினார்கள். எனவே நபிகள் நாயகம்  [ஸல்] அவர்கள் அந்த சஹாபி [ரலி] அவர்களை ஒரு மைதானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு மனிதர்களின் மண்டை ஓடுகளையும், எலும்புத் துண்டுகளையும், மலக் குழிகளையும், கிழிந்து போன கந்தல் துணிகளையும் கண்டார்கள்.