அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
இஸ்லாமிய கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாமிய கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 21, 2020

போதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்




போதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்
இன்று எங்கும் பணம், எதிலும் பணம் என்று பணப் பேராசையும் பணத்திற்காகக் கொலை, கொள்ளை போன்றவை பெருகி வருவதையும் நாம் காண்கிறோம். இதற்குக் காரணம், இருப்பதை வைத்து வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்யாமல், அடுத்தவரின் சொத்துக்கோ, பணத்துக்கோ ஆசைப்படும் எண்ணம் தான்.பெரும் பணக்காரர்கள், தங்களிடம் உள்ள சொத்து போதாதென்று மக்களை ஏமாற்று வேலைகள் பலவற்றால் கொள்ளையடிகிறார்கள். இவை நமது நாட்டில் அன்றாடச் செய்திகளாகி விட்டன. இது போன்ற சமூகத் தீமைகளைத் தடுப்பதற்காகவும் இன்னும் பிற நன்மைகளுக்காவும் நபி (ஸல்) அவர்கள் ஓர் உபதேசத்தை உதாரணமாகக் கூறுகிறார்கள்.

ஞாயிறு, டிசம்பர் 22, 2013

பெண்களே அல்லாஹ்வை அஞ்சிகொள்ளுங்கள்!




தமது பார்வைகளைத்  தாழ்த்திக் கொள்ளுமாறும் , தமது கற்புகளைப்  பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட  பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம் . தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும் . தமது கணவர்கள் ,தமது தந்தையர் ,தமது கணவர்களுடைய தந்தையர் , தமது புதல்வர்கள் ,தமது சகோதர்களின் புதல்வர்கள் ,தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் , ஆண்களில் (தள்ளாத வயதின் கரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள் , பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம் .அவர்கள் மறைந்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்க்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே ! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள் ! இதனால் வெற்றியடைவீர்கள் !
திருக்குர் ஆன் 24:31)

வெள்ளி, நவம்பர் 22, 2013

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர்!







அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம்செய்கிறேன்...
நாம் மார்க்கத்தை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும்! நமக்கு மத்தியில் நிறைய குழப்பங்கள் , கருத்து வேறுபாடுகள் இருக்கிறது , இருப்பினும் நாம் நிதானமாக சிந்திக்க வேண்டும்.  யார் சொல்வது உண்மை அல்லது பொய் என்று நாம் குழப்பிக்க கூடாது நடுநிலையாக இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்! இவரா அல்லது அவரா ? இந்த இயக்கமா ? அந்த ஜமாத்தா ? எதுவும் நமக்கு தேவையில்லை நாம் பொதுவான ஜமாஅத் ! நடுநிலையாக இருக்க வேண்டும் ! எல்லோரு முஸ்லிம்கள்தான் , சகோதரர்கள்தான் என்பதை நாம் மதிக்க வேண்டும் !
இது என் தாழ்வான கருத்து .

இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு.





அமீருல் அன்சார் மக்கி

ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்வது இளைஞர் சமூகம்தான். ஒரு சமூகத்தின் வெற்றியும் வீழ்ச்சியும் அவர்கள் கையிலேயே உள்ளது.

புதன், நவம்பர் 13, 2013

தவிர்ந்து கொள்ளுங்கள்


தவிர்ந்து கொள்ளுங்கள்
கஞ்சத்தனம்

இறைவன் நமக்குத் தந்திருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளித்து, நாமும் இன்பம் பெற்று மற்றவர்களையும் மகிழ்விக்கும் எண்ணம் எல்லா மனிதர்களிடமும் இருக்கவேண்டும். ஆனால் பணத்தை நல்வழியில் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து நல்வாழ்க்கை வாழலாம் என்பவர்களுக்கு திருக்குர்ஆனும் நபிமொழியும் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றன.

புதன், அக்டோபர் 23, 2013

தர்கா வழிபாடு

 தர்கா வழிபாடு
இஸ்லாத்தின் அடிப்படை

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாரும்மில்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும் .இஸ்லாத்தின் கொள்கை இது தான் என்பதை முஸ்லிம் அல்லாதவர்களும் கூட அறிந்து வைத்துள்ளனர் .

ஆனாலும் தமிழகத்தில் வாழும் கனிசமான முஸ்லிம்கள் இக்கொள்கையைச் சரியாக புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளனர் .
"வணக்கத்திற்குரியவன்  அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை " என்பதில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன .
1. அல்லாஹ்வை வணங்க வேண்டும்.
2. அல்லாஹ்வை தவிர எவரையும் வணங்க கூடாது.
இதில் முதலாவது செய்தியை ஓரளவு ஏற்று நடக்கும் முஸ்லிம்கள் இரண்டாவது செய்தியை அறியாதவர்களாக உள்ளனர் .இதன் காரணமாகத் தான் ஒரு பக்கம் அல்லாஹ்வை வணங்கி கொண்டு  இன்னொரு பக்கம் இறந்தவர்களையும் , அவர்களை அடக்கம் செய்துள்ள சமாதிகளையும் மகான்கள் என்று உலா வரும் போலிகளையும் வணங்கி வருகின்றனர் .

இவ்விரண்டு செய்திகளில் இரண்டாவது தான் முக்கியமானதாகும் .இதைச் சொல்வதற்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள் .

அல்லாஹ்வை வணங்குகள் என்று சொல்லித் தருவர்தர்க்காகவோ அல்லாஹ்வின் பண்புகளைச் சொல்லிக் கொடுப்பதர்க்காகவோ மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பபடவில்லை ஏனெனில் அம்மக்கள் அல்லாஹ்வை நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள் . அல்லாஹ்வை வணங்குவதிலும் அவர்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்ததில்லை .

அல்லாஹ்வை தவிர எவரையும் எதனையும் வணங்க கூடாது என்பது தான் அவர்களால் எதிர்க்கப்பட்டது .

இது கற்பனை அல்ல , தக்க சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்....

திங்கள், அக்டோபர் 21, 2013

முத்தான முத்துக்கள்

 


முஃமின் என்பவன் நேசத்தின் சிகரமாவான் . மக்களை நேசிக்காதவநிடமும் , மக்களால் நேசிக்கபடாத வநிடமும் எந்த நன்மையும் இல்லை என ரசூல் (ஸல்) கூறினார்கள்
ஆதாரம்: அஹ்மது

பேராசை

Post image for பேராசை

இறைத்தூதர் அவர்களிடம்  நான் (நிதயுதவி) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் (நிதியுதவி)  கேட்டேன். அப்போதும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், ‘ஹகீமே!  இச்செல்வம் (பார்க்கப்) பசுமையானதும் (சுவைக்க) இனிப்பானதும் ஆகும்.  கொடையுள்ளத்துடன் இதை(க்கொடுப்பவர் கொடுக்க, தானும்) பேராசையின்றி எடுத்துக்  கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படும். பேராசையுடன்  இதை எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் (நிறையத்)  தின்றும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவராவார். மேலும், (கொடுக்கும்) உயர்ந்த கை தான்  (வாங்கும்) தாழ்ந்த கையை விட மேலானதாகும்” என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர்  அவர்களே! தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவன் மீது சத்தியமாக!  தங்களுக்குப் பின், நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும் வரை வேறெவரிடமிருந்தும்  எதையும் பெற மாட்டேன்” என்று கூறினேன்.  அறிவிப்பவர்:  ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி)  , நூல்:புகாரி

ஞாயிறு, அக்டோபர் 20, 2013

பெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் ?



யாரேனும் ஒருவர் பெரும் பாவம் செய்து விட்டால் அதிலிருந்து அவர் மீட்சி பெற கீல்க்கண்டன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
1-வது தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்த வேண்டும் .2-வது தாம் செய்த குற்றத்தை உடனடியாக விட்டு விட வேண்டும். 3-வது இனிமேல் அக்குற்றத்தை செய்யமாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும். பிற மனிதர்களுக்கு ஏதேனும் தீங்கிளைத்திருந்தால் அவரிடம் சென்று மன்னிப்பு கோர வேண்டும் ; பிறகு அல்லாஹ்விடம் அழுது துஆ கேட்க்க வேண்டும் . இவற்றுக்குத்தான் தவ்பா என்று சொல்லப்படும் இதில் ஒன்றை விட்டாலும் தவ்பா உண்டாகாது .

ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013

முனாஃபிக் யார்..?

 முனாஃபிக் யார்..?

பொதுவாக நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம் காணப்படும் பண்புகள் பலவாக இருக்கலாம். சிலரிடம் நற்பண்புகள் தீயபண்புகள் ஒருங்கே அமைந்தும் இருக்கலாம். நற்பண்புகள் நம்மை சுவனம் அழைத்துச்செல்லும். தீய பண்புகள் நரகம் இட்டுச்செல்லும்..! அவ்வாறு, நரகத்துக்கு இழுத்துச்செல்லும் ஒரு பண்புதான் இந்த நயவஞ்சகம்..! அதாவது, உள்ளத்தில் உள்ளதை உலகுக்குத்தெரியாமல் மறைத்து, தம்மைச்சார்ந்திருப்போர் மனம் மகிழும்படி நடித்து, அவர்களை வழிகெடுத்து, தம் வழிக்கு கொண்டு வரும் இந்த நாசகார பண்புதான் நயவஞ்சகம்..! இத்தீய பண்பை  கொண்டவனை 'முனாஃபிக்' (நயவஞ்சகன்) என்று அரபியில் அழைபார்கள்..! சுருக்கமாக சொன்னால், வெளிப்பார்வைக்கு தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்களிடம் உள்ளத்தில் இஸ்லாம் இருக்காது..! உள்ளங்களை அறிபவன் அல்லாஹ் மட்டுமே..!

திங்கள், ஜூலை 29, 2013

பெண்ணே! பொறாமை வேண்டாம்! கண்ணே!

பொறாமை என்னும் நெருப்பு அது விறகை தின்பது போல நன்மைகளை தின்றுவிடும் . பொறாமை சமந்தமாக நிறைய அல்லாஹ்வின் திரு வசனமும் , அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் உள்ளன .பொறாமை விட்டு நம் அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக !
இருப்பதை கொண்டு திருப்தி கொள்வது ஒரு முஃமின்க்கு அழகு !

ஞாயிறு, ஜூலை 21, 2013

பெண்களும் நோன்பும் !

பெண்களும் நோன்பும் !
இஸ்லாமியப் பெண்களுக்கு இபாதத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக நோன்பு நோற்பதில் அளப்பரிய அக்கறை உண்டு. ரமழானுக்கு முன்னரே இல்லங்களைக் கழுவி தூய்மைப்படுத்தி, நோன்பிற்கும் அதனோடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் தம்மைத் தயார் படுத்திக் கொள்வர். இத்தகைய சகோதரிகளுக்காக நோன்பு நோற்பதுடன் தொடர்புபட்ட சில சட்டங்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன்.

முகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு

முஹம்மது நபி (570-632)

முகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு
Islamic prophet Muhammad இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும்; மற்றும் சிலர் "ஏன் அப்படி ?" என்று வினாவும் தொடுக்கலாம்; ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம். எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமான இன்றும் விளங்ககிறது.

செவ்வாய், ஜூலை 02, 2013

எது நிலையானது ?


அல்லாஹு தஆலா கூறுகிறான் :
....(முஃமின்களே !) நன்மைகளுக்கு நீங்கள் விரைந்து செல்வீர்களாக!....
                                    (அல்குர்ஆன் 2:148)
(முஃமின்களே !) நீங்கள் உங்கள் இரட்சகனின் மன்னிப்பின் பக்கமும் சுவனத்தின் பக்கமும் விரைவீர்களாக ! அதன் (சுவனத்தின்) விசாலமாகிறது, வானங்களும் பூமியுமாகும் ; பயபக்தியாளர்களுக்காக அது தயார் செய்யப்பட்டுள்ளது .
                                     (அல்குர்ஆன் 3:133)

ஒரு அழகிய உபதேசம் !

ஒரு அழகிய உபதேசம் !

அண்டை வீட்டாரின் உரிமைகளும் நலம் நாடுதலும் :
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
அல்லாஹ்வை வணங்குங்கள் ! அவனுக்கு எப்பொருளையும் இணைவைக்காதீர்கள்!  தாய் தந்தையர்க்கும் ,உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் , உறவினரான அண்டை வீட்டார்களுக்கும் ,உறவினரல்லாத அண்டை வீட்டார்களுக்கும், (தொழில் ,பிரயாணத்தில்) கூட்டாளிகளாக இருப்பவருக்கும் , வழிப் போக்கருக்கும் , உங்கள் வலக்கரங்கள் சொந்த்தமாக்கிக் கொண்டவர்களுக்கும் உபகாரம் செய்யுங்கள்!... (அல்குர்ஆன் 4:36)

ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ,ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) பகர்ந்தார்கள்: அண்டை வீட்டுக்காரரை எங்கு வாரிசாக ஆக்கி விடுவாரோ என்று நான் பயப்படுமளவு அண்டை வீட்டாரின் நலன்களைப் பேணுவதைப் பற்றி ஹஜ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் (தொடர்ந்து) எனக்கு உபதேசம் செய்து கொண்டேயிருந்தார்கள் .

திங்கள், ஜூலை 01, 2013

ஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் !!!!

நபியவர்கள் நவின்றதாக அபூ ஸயீது (ரலி) ,அபூ ஹுர்ரைரா (ரலி) ஆகிய இரு நபித் தோழர்களும் அறிவிக்கிறார்கள் : ஒரு முஸ்லிமை வந்தடையும் கஷ்ட்டம் , நோய் ,கவலை ,நோவினை ,துக்கம்-அவரது காலில் குத்திவிடும் முள்ளின் வேதனை வரை -அவை அனைத்துக் கொண்டும் அவர் பிழைகளை அல்லாஹ் அழித்தே தவிர வேறில்லை  .ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :அல்லாஹ் எவருக்கு நலவை நாடுகிறானோ அவரை அவன் சோதிக்கிறான்.
 ஆதாரம்: புகாரி)

பெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு



பிஸ்மில்லாஹ் ..
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
நன்நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக நீங்கள் அனைவரும் தவ்பா செய்து அல்லாஹ்வின் பால் மீளுங்கள்!  (அல்குர்ஆன்  24:31)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: யார் தம் இரு பெண் பிள்ளைகளை அவர்கள் பருவமெய்தும் வரை நன்கு பரிபாலித்து நல்லொழுக்கப்படுத்துகிறாரோ , அவர் கியாமத் நாளில் வருவார் ; அவரும் நானும் இவ்வாறு இருப்போம் எனக் கூறி அண்ணல் நபி (ஸல்) தங்கள் விரல்களை இணைத்துக் காண்பித்தார்கள். (முஸ்லிம்)

ஞாயிறு, ஜூன் 30, 2013

நேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல்



அல்லாஹு தஆலா கூறுகிறான்:
நன்மையின் மீதும்  பயபக்தியின் மீதும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வீர்களாக!
(முஃமின்களே ) உங்களின் நன்மையின் பக்கம் அழைக்கும் ஒரு கூட்டத்தினர் இருந்து வரட்டும்....

ஹதீஸ்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ மஸ்வூது உக்பா பின் அம்ரில் அன்சாரி அல்  பத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எவரொருவர் யாதொரு நன்மையை (பிறருக்கு ) அறிவித்துக் கொடுக்கிறாரோ அவருக்கு அதைச் செய்பவரின் நன்மை போன்றது உண்டு . (முஸ்லிம்)

வாழ்கையின் உண்மை அறிவோம்!

வாழ்கையின் உண்மை அறிவோம்!

அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமை வாழ்வில்) அவரது இருப்பிடம் (எதுவென்று) காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக் காட்டப்படும் .அதாவது,அவர் சொர்கவாசியாக இருந்தால் , சொர்க்கவாசிகளின் இருப்பிடமும் , நரகவாசியாக இருந்தால் , நரகவாசிகளின் இருப்பிடமும் (எடுத்துக் காட்ட்டப்படும்)
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது ) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் . அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன் . நரகத்தையும் எட்டிப் பார்த்தேன் . அதில் குடியிருபோரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன்.
இதை இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் தம் தாயார் இறந்து விட்டதாகக் கூறி விட்டு , ,, அவர் சார்பாக நான் தருமம் (ஏதும்) செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா? என்று கேட்டார் . நபி (ஸல்) அவர்கள் ஆம் (பலனளிக்கும்)என்று பதிலளித்தார்கள் . அந்த மனிதர் என்னிடம் மிக்ராஃப் எனும் தோட்டம் ஒன்று உள்ளது . அதை நான் அவர் சார்பாக தருமம் செய்து விட்டேன் என்பதற்கு , தங்களை சாட்சியாக ஆக்குகிறேன் ,, என்று கூறினார்.


ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.

ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழ...ைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது
கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், “முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்.” என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.
அதன் பிறகு, அவ்வப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, “நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.
அவன் கண்களை மூடினான். அப்பொழுது “நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்” என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான்.
உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.
1. நான்காவது மனைவி நம்முடைய உடல் அழகு . அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது.
2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.
3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.
4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.
எனவே வாழ்க்கையின் உண்மை அறிவோம்.


 

வெள்ளி, ஜூன் 28, 2013

வணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே!

வணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே!


(நபியே!) உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)


அல்லாஹ்வையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன்: 17:23)


அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதில் கஞ்சத்தனம் கூடவே கூடாது!

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள். ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் – அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் – நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், நீங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தை அவன் பகரமாகக் கொண்டு வருவான். பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன்: 47:38)

அல்லாஹ்வை வணங்குவதில் ஏற்படும் கஷ்டங்களை சகித்து பொறுமையுடன் இருத்தல்!

அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும், பூமியையும் படைத்தவன். இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான். தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன்: 35:1)

பிரார்த்தனை என்பது அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே!

நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன். மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன். என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் நிர்ப்பாக்கியவனாகாமல் இருக்கப் போதும்" (என்று இப்றாஹீம் சொன்னார்). (அல்குர்ஆன்: 19:48)

பெருமை பொருந்திய இறுதி இறை வேதம்!

(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும். (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாதுகாக்கப்பட்டதாக இருக்கிறது. (அல்குர்ஆன்: 85:21-)

மன்னிப்பே இல்லாத இணைவைப்பு எனும் பெரும்பாவம்!

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48).