அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
குஸ்ல் (கட்டாயக் குளிப்பு) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குஸ்ல் (கட்டாயக் குளிப்பு) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 16, 2017

குஸ்ல் (கட்டாயக் குளிப்பு)

குஸ்ல் (கட்டாயக் குளிப்பு)............................................
ரமலான் நெருங்கிகொண்டியிருக்கிறது.........இன்ஷாஅல்லாஹ் இறுதி பதிவு ரமலானை பற்றிய கட்டுரை அடுத்த இதழில் பதிவுசெய்யப்படும்.....


குஸ்ல் எனும் அரபுச்சொல்லுக்கு முழு உடம்பையும் தண்ணீரின் மூலம் கழுவிக்கொள்வது என்று பொருள். இஸ்லாமிய வழக்கில் குஸ்ல் என்றால் தண்ணீரின் மூலம் முழு உடம்பும் நனைய குளிப்பதாகும். முழு உடம்பையும் கழுவிக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண்ணின் மீதும் கட்டாயமாகும். இது உடலுறவு கொள்தல், விந்து வெளியாகிவிடுதல், மாதவிடாய்க் காலம் முடிந்துவிடுதல், பிரசவித்தல், இயற்கையாக மரணமடைதல் ஆகிய நிலைகளுக்குப் பின்பு கடமையாகும்.



மேலும் வெள்ளிக்கிழமை தொழுகை, இரண்டு பெருநாட்களின் தொழுகைகள் ஆகியவற்றுக்கு முன்பும், ஹஜ்ஜுக்காக இஹ்றாம் அணிவதற்கு முன்பும், ஒருவர் முஸ்லிமான பின்பும் குஸ்ல் செய்துகொள்வதை இஸ்லாம் விரும்பத்தக்கதாக ஆக்கியுள்ளது. குஸ்லையும் வுளூவையும் சேர்த்து குழப்பிக்கொள்ளக் கூடாது. வுளூ என்பது முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்பு குறிப்பிட்ட உடல் உறுப்புகளைக் கழுவிக்கொள்வதாகும்.