அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
அமல்களின் சிறப்பு ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமல்களின் சிறப்பு ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 26, 2020

அதற்காக அவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது

தினமும் பன்னிரண்டு ரக்அத் தொழுகை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தினமும் பன்னிரண்டு ரக்அத்கள் கூடுதல் தொழுகையை தினமும் தொழுது வந்தார்கள் . அவற்றின் சிறப்புகளை தம் தோழர்களுக்கு கூறக்கூடியவர்களாகவும் இருந்தார்கள் . இந்த பன்னிரண்டு ரக்அத் தொழுகைகள் வலியுறுத்தப்பட்ட ஸூன்னத்துகள் ( ஸூன்னத்து முஅக்கதா ) ஆகும் . இவை அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்களின் அறிவிப்பின்படி , லுஹ்ருடைய ஃபர்ளுக்கு முன்பாக நான்கு ரக்அத்கள் , அதற்குப் பின் இரண்டு ரக்அத்கள் , மஃக்ரிபிற்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் , இஷாவுக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் , பஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் , ஆக மொத்தம் பன்னிரண்டு ரக்அத்கள் . " யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் ( ஸூன்னத் ) தொழுகின்றாரோ அதற்காக அவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது " என்று நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பவர் : அன்னை உம்மு ஹபீபா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள் , ஆதாரம் : முஸ்லிம் .

வியாழன், ஆகஸ்ட் 25, 2016

குறைவாக இருப்பினும் நிரந்தரம் தேவை !

குறைவாக இருப்பினும் நிரந்தரம் தேவை !
ஓ மக்களே! உங்கள் சக்திக்கு உட்பட்டதையே  செய்து வாருங்கள்.. ஏனெனில் நற்கூலி தருவதில் அல்லாஹ் தளர்வதில்லை ! ஆனால் நீங்கள் நல்ல செயல்கள் புரிந்து, புரிந்து தளர்வடைந்து  விடுவீர்கள் ! [கொஞ்சமாக இருந்தாலும் ] நிரந்தரமாகச் செய்து வருவதையே அல்லாஹ் விரும்புகிறான் -அது எவ்வளவு குறைவாக இருந்தாலும் சரியே!
ஆதாரம்.. புகாரி , முஸ்லீம், திர்மிதி, நஸயீ  இப்னு மாஜா மற்றும் அபூதாவூத் ]

நம்மில் சிலர் இருக்கிறார்கள் , அவர்கள் ஒவ்வொரு வெள்ளி கிழமை இரவுகளில் சில நல்ல அமல்கள் செய்வார்கள் , தர்காக்கு போவார்கள் அங்கு சென்று யாசின் ஓதுவார்கள் .  ஒவ்வொரு வெள்ளி இரவும் மட்டும் தான் செய்வார்கள் .இது நபிகள் நாயகம் [ஸல்]காட்டித் தந்த வழிமுறை அல்ல! அல்லாஹ்வின் திருமறையை ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய பகுதி ஓதினாலும் அது நிரந்தரமாக செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை என்று அல்லாமல் இன்ஷாஅல்லாஹ் ஒவ்வொரு நாளும் நாம் நல்ல அமல்கள் செய்ய வேண்டும் அது எவ்வளவு குறைவாக இருந்தாலும் நிறைவாக செய்ய வேண்டும்!  
எவன் கைவசம்  எனது உயிர் இருக்கிறதோ , அவன் மீது சத்தியம் [செய்து கூறுகிறேன்]  மக்களை நற்செயலின்  பால் அழைத்துக் கொண்டே இருங்கள்.. தீயச் செயல்களை விட்டுத் தடுத்துக் கொண்டே இருங்கள். இப்படிச் செய்யா விடில் , விரைவில் அல்லாஹ்வின் வேதனை உங்களை சூழ்ந்து கொள்ளும்! பிறகு நீங்கள் [மன்னிப்பு வேண்டி அல்லாஹ்வை] அழைத்தாலும் . அவன் கேட்கமாட்டான் .
ஆதாரம்.. திர்மிதி]-25]

புதன், மார்ச் 30, 2016

இந்த அந்தஸ்த்து நமக்கும் கிடைக்கவேண்டுமா..!

அல்லாஹ்வின் நல்லடியார்களே!
ஏப்ரல் ஒன்று வருகிறது.
கவனமாக இருக்கவும்.ஏமாறாதீர்கள்!
ஏமாற்றாதீர்கள்!
அல்லாஹ்வைச் அஞ்சிக் கொள்ளுங்கள்!
இந்த அந்தஸ்த்து நமக்கும் கிடைக்கவேண்டுமா..!
அல்லாஹ்வின் திருபெயரால்..........
மறுமையில் நல்லடியார்களுக்கு கிடைக்ககூடிய  நற்கூலிகளும் , அந்தஸ்த்துக்களும்  பற்றி நிறைய ஹதீஸ்கள் உள்ளன. அவைகளை அடைவதற்கு சகாபாக்கள் ஒருவொர்கொருவர்  போட்டிப் போட்டார்கள். நாம் இந்த உலகத்தை அடைவதற்கு ஒருவொர்கொருவர்  போட்டிப் போடுகிறோம் தவிர, மறுமையில் கிடைக்கும் பல அந்தஸ்த்துக்கள்  பற்றி நமக்கு கவலையில்லை, அக்கறையும் இல்லை!

திங்கள், செப்டம்பர் 14, 2015

ஜும்ஆ தொழுகை ****************** படித்ததில் பிடித்தது!

ஜும்ஆ தொழுகை ******************

படித்ததில் பிடித்தது!
படித்த மனமே ! ஜும் ஆ  தொழுகையைப் பற்றி நீர் தெரிந்திருக்க மாட்டாய் என்று நினைக்கிறேன் . அதன் தத்துவத்தையும் மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால் இமாம் அவர்கள் குத்பா பிரசங்கம் முடித்து தொழுகைக்காக மிம்பர் படியை விட்டு கீழே இறங்கும்போது இதைவிட பெரிய காரியத்தை முடித்து சாதனை புரிந்து வருவது போல் அவசர அவசரமாக அரையும் குறையுமாக ஒழு செய்துவிட்டு லுங்கி தரையை கூட்டி சுத்தப்படுத்தும் அளவுக்கு லுங்கி உடுத்திக்கொண்டு கட்பனியன் அதாவது ஸ்டைல் பனியன் போட்டுக்கொண்டு தொழுகையில் வந்து நிற்கமாட்டாய் . முழுக்கையுள்ள சட்டை போடா உனக்கு வசதி இல்லையா ? நீர் என்ன ஏழையின் மகனா ? நம்மை படைத்து  வளர்க்கும் எஜமானனின் முன் அலங்காரமாக நிற்க வேண்டாமா? ஒரு பெரிய அதிகாரியை காண வேண்டுமானால் எப்படி உன்னை அலங்கரித்து செல்வாய் . உன் ஆங்கிலப் படிப்பின் இலட்சணம் இது தானா? இதனை நீர் உற்று  உணர்ந்து பார்த்தால் தானே உனக்கு உன்னுடைய அறிவீனம் விளங்கும் . உதவாத உருப்படாத வேலைகளுக்கே உனக்கு நேரமில்லாமல் இருக்கும்போது மார்க்க விடயத்தில் தெரிந்து கொள்ள உனக்கு எங்கே நேரம் இருக்க போகிறது!

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2015

ஆபத்துக்கு உதவுவது யார் ??

சொற்ப கால வாழ்க்கை !
மாய உலகம் ! மயக்கும் ஷைத்தான்!
ஷைத்தானின் வலையில் விழுந்து
விடாதீர்கள்!
அல்லாஹ்வை அஞ்சி வாழ்வோம்!
அல்லாஹ்வின் திருபெயரால் ..........
எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!
இந்த கட்டுரையின் மூலம் நாம் பெறக் கூடியப் படிப்பினைகள் என்ன என்பதை இந்த கட்டுரையைப் படித்த பிறகு உங்களுக்கு விளங்கும்! சொற்பக் கால வாழ்க்கை . அந்த வாழ்க்கையில் நமக்கு ரொம்ப முக்கியம் நல்ல [சாலிஹான ] அமல்கள் செய்வது, அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை அடைவது . அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி வாழ்வது. இவைகள் தான் ரொம்ப முக்கியம். இவைகள் தான் மறுமை நாளில் நமக்கு பலன் தரும்.

திங்கள், ஜூலை 20, 2015

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.

 ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.
ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.
ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.

வியாழன், நவம்பர் 13, 2014

வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்

1) நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சுபஹ் தொழுகையில் அத்தியாயங்களான அஸ் ஸஜ்த, அல் இன்ஸான் என்ற இரண்டையும் ஓதுபவராக இருந்தார்கள். இவ்வத்தியாயங்களில் மனிதனின் பிறப்பு மற்றும் கப்ரிலிருந்தும், மறுமை நாளிலும் எழுப்பப்படுவன சம்பந்தமான விஷயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2) ஜும்ஆவுக்கு நேரத்தோடு செல்வது: இந்த விஷயத்தில் முஸ்லிங்கள் அதிகம் பொடுபோக்காக இருக்கின்றனர். வெள்ளிக்கிழமை காலையில் சிலர் தூங்கிக் கொண்டும், இன்னும் சிலர் ஜும்ஆ ஆரம்பமான பின்னரும், மேலும் சிலர் இமாம் ஜும்ஆவுக்கு மின்பருக்கு ஏறுவதற்கு ஒரு சில நிமிடத்துக்கு முன்னருமாகவே செல்கின்றனர். இதில் கூடிய கவனம் செலுத்தி வெள்ளிக்கிழமை தினத்தில் நேரத்தோடு பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டும் என்பதற்கான ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பின்வருமாறு பார்ப்போம்:

செவ்வாய், நவம்பர் 04, 2014

ஆர்வப்படு; ஆதங்கப்படாதே!



ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் சுறுசுறுப்பானவனாக இருக்க வேண்டும். முழுப் பிரபஞ்சத்தின் முக்கியமான அங்கமாகிய முஸ்லிம், பிரபஞ்சப் பொருட்களிடம் காணப்படுகின்ற சுறுசுறுப்பான இயக்கத்தைத் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவனிடம் இயலாமையும் சோம்பலும் இருக்கக் கூடது. உத்வேகமான செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி ஒரு மனிதனை விரக்தியின் விளிம்புக்குக் கொண்டு சென்று விடக் கூடிய கொடிய விஷமே இயலாமையும் சோம்பலுமாகும். இவ்விரண்டும் கண்டிக்கத்தக்க பண்புகள் ஆகும். இவ்விரு குண இயல்புகளிலிருந்தும் தன்னைப் பாதுகாக்குமாறு அண்ணலார் (ஸல்) இறைவனிடம் பாதுகாவல் தேடியுள்ளார்கள்.

"யா அல்லாஹ்! இயலாமை, சோம்பல் முதலானவற்றிலிருந்தும்; உலோபித்தனம், கோழைத்தனம், தள்ளாமை போன்றவற்றிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்" (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், நஸாயி).

வெள்ளி, அக்டோபர் 17, 2014

அல்லாஹ்விற்கு கடன் வழங்குங்கள் !

அல்லாஹ்விற்கு கடன் வழங்குங்கள் !


அல்லாஹ்வின் திருபெயரால் ........


''அல்லாஹ்வுக்கு அழகிய கடனளிப்பவர் யாருளர் ? [அவ்வாறாயின்] அல்லாஹ் அவருக்கு அதனைப் பன்மடங்காகப் பெருக்கிக் கொடுக்கிறான்.''
அல்குர் ஆன் 2..245]

சனி, ஏப்ரல் 26, 2014

மண்ணறை வேதனை

அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

மனிதன் இறந்தபின் அவனை மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டு . பிறகு அவனுக்கு அங்கே என்ன நடக்கும் ? என்ன ஆகும் ? என்பதை நபிமொழிகள் மூலமாக நாம் அறிய முடியும். மண்ணறையில் வேதனை செய்யப்படுபவர்களும் உண்டு , வேதனையிலிருந்து பாதுக்காப்பு பெற்றவர்களும் உண்டு. அண்ணல் நபி [ஸல்] அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து  [அல்லாஹ்விடம்] பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை  என்று ஒரு நபிமொழி  கூறுகிறது. நாமும் ஒவ்வொரு தொழுகையிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் அல்லாஹ்விடம் கோரவேண்டும்.

செவ்வாய், பிப்ரவரி 04, 2014

மறுமையில் மனிதனிடம் இறைவன் வினவுவது என்ன ?

மறுமையில் மனிதனிடம் இறைவன் வினவுவது என்ன ?


கியமாத் நாளன்று கீழ்க்கண்டவாறு மனிதனிடம் இறைவன் கேட்பான் என்று பெருமானார்  (ஸல் ) அவர்கள் நவின்றுள்ளார்கள் :"ஆதமுடைய மகனே !  நான் நோயுற்றிருந்தேன்

சனி, டிசம்பர் 07, 2013

வாக்களிப்பட்ட நன்மைகள்..!



எவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி...

மனித உற்பத்தி மண்ணில் தொடங்கும் நாள் முதலே விண்ணில் விதைக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம். அது இவ்வுலகத்தில் தமது கொள்கைக்கோட்பாடுகளை தெளிவாக பிரகடனப்படுத்தி ஓரிறையை வணங்க சொல்லியது. அதில் மட்டுமே ஈடேற்றமும் உண்டெண்கிறது. அவ்வாறு எடுத்துயம்பிய ஏகத்துவ பட்டியலில் இறுதியாக வந்த வேதமான திருக்குர்-ஆன் ஒரு தெளிவான பிரகடனத்தை மனித சமூகத்தில் முன்மொழிகிறது.

ஞாயிறு, நவம்பர் 03, 2013

அமல்களின் சிறப்பு !


நீங்கள் ஆடை அணிந்தாலும் , நீங்கள் -ஒழு செய்தாலும் வலது பக்கங்களைக் கொண்டே ஆரம்பியுங்கள் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :அபூஹுர்ரைரா (ரலி)