அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
இறையச்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறையச்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 16, 2020

அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுகை !

அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுகை !
அல்லாஹ்வின் திருப்பெயரால்....

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இவ்வுலகில் மனிதன் பல தருணங்களில் அழுகின்றான். கணவர், மனைவி, தாய், தந்தை, சகோதரர், சகோதரிகள் போன்ற உறவுகள் துண்டிக்கப்பட்டால் அழுகின்றனர். அதேப்போன்று தான் செய்கின்ற வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டால் அதற்காகவும், பொருளாதார மோசடி போன்றவைக்கும் அழுகிறான். மேலும், வயதில் சிலர் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றாலோ, தனக்கு ஆசைப்பட்ட பொருள் கிடைக்காவிட்டாலோ இயற்கை சீற்றம் ஏற்பட்டு பாதிப்பிற்குள்ளானாலோ, உணர்ச்சிவசப்படும் போதோ போன்ற பல்வேறு தருணங்களில் கண்ணீர் வடிக்கின்றான்.

அதிலும் சிலர் சந்தோசம் அடைந்தாலோ ஆனந்த கண்ணீர் வடிக்கின்றான். ஆனால், நாம் அழுகின்ற அழுகை அல்லாஹ்விற்காக எத்தனை பேர் அழுது இறுக்கின்றோம். அல்லாஹ்விற்காக அழுத கண்கள் என்ற தலைப்பில் இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

திங்கள், பிப்ரவரி 08, 2016

இறையச்சம்

இறையச்சம் .....
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
இந்த  உலகத்தில் யார் அல்லாஹ்வுக்கு பயந்து வாழ்கிறார்களோ , அவர்களுக்கு  சிரமங்களிலிருந்து கஷ்ட்டங்களிளிருந்து பிரச்சனைகளிலிருந்து அல்லாஹ்  வெளியேறக் கூடிய வழியைத் தருவான். மறுமையிலும் அவர்களுக்கு எந்த துக்கமும் கவலையும் இருக்காது. இந்த உலகத்தில் அவர்கள் அறியாதப் புறத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ்  வாழ்வாதாரம் அளிப்பான்.

அல்லாஹ்  தனது திருமறையில் கூறுகிறான்.
இந்த உலகத்தில் யார் [அல்லாஹ்வை ] அஞ்சி வாழ்கிறார்களோ அவருக்கு சிரமங்களிலிருந்து வெளியேறக் கூடிய வாய்ப்பை தருவான்.