இஸ்லாம் விரும்பும் முஸ்லிம் யார் ?part 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் விரும்பும் முஸ்லிம் யார் ?part 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 28, 2020

இஸ்லாம் விரும்பும் முஸ்லிம் யார் ? (இறுதி பகுதி)

அல்லாஹ்வின் திருப்பெயரால் ....
முஸ்லிம்கள் மனிதர்களில் சிறந்தவர்களாக திகழ வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது. தங்களது நடை, உடை, பாவனையில், கொடுக்கல், வாங்கல், மற்றும் ஏனைய செயல்களில் தனித்தன்மைமிக்க அழகிய வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும்! . அப்போதுதான் மனிதர்களுக்கான தூதுத்துவத்தை சுமந்துகொள்வதற்கான சக்தியை முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

உண்மை முஸ்லிம் இவ்வுலகின் மாபெரும் கடமைகளைச் சுமக்கும் நிலையிலும் தன்னை மறந்துவிடமாட்டார். ஏனெனில் , ஒரு முஸ்லிமின் வெளிரங்கம் அவரது உள்ரங்கத்திலிருந்து மாறுபட்டிருக்க கூடாது.

திங்கள், ஜனவரி 27, 2020

இஸ்லாம் விரும்பும் முஸ்லிம் யார் ? (part 2)

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஒரு முஸ்லிம் தனது இரட்சகனுடன் எப்படி நடந்துகொள்வார் ? முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்ககைக் கையாள்வதுடன், அல்லாஹ்விடம் உதவியும் தேட வேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உண்மை முஸ்லிமின் இதயம் விழித்திருக்கும். அவரது அறிவுக்கண் திறந்திருக்கும். உலகில் அல்லாஹ்வின் படைப்பினங்களிலுள்ள நுட்பங்களின் பால் அவர் தனது சிந்தனையைச் செலுத்துவார்.

சனி, ஜனவரி 25, 2020

இஸ்லாம் விரும்பும் முஸ்லிம் யார் ?(part 1)

அல்லாஹ்வின் திருப்பெயரால் .............
part 1
ஒரு முஸ்லிம் எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறதோ அத்தகைய பண்புகளை ஒரு முஸ்லிம்  கொண்டிருக்கவேண்டும். 

முஸ்லிம்களிடையே சில செயல்களில் வரம்பு மீறுதல் அல்லது முற்றிலும் புறக்கணித்தல் , சில செயல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பது சில கட்டளைகளில் அலட்சியம் செய்வது என்ற நிலை இருக்கிறது.

உதாரணமாக சில விஷயங்களை கூறலாம்.... சிலர் அல்லாஹ்வை அஞ்சி வணங்குவார்கள் ஆனால் , இரத்த பந்துக்களுடனான உறவைப் பேணமாட்டார்கள். சிலர் தனது கல்வி மற்றும் வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்தி குழந்தை வளர்ப்பு மற்றும் அவர்களது கல்வி, நட்பு போன்ற அம்சங்களில் அலட்சியம் செய்வார்கள்.