அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2020

நபிகளார் சந்தித்த சங்கடங்கள்..!



ஒவ்வொரு மனிதனும் அவரவர் வாழ்கையில் ஏராளாமான சங்கடங்களை சந்தித்து இருக்கிறோம்.சில சங்கடங்கள் நம்மையே பாதித்து இருக்கிறது என்றாலும் அதிலிருந்து ஏராளாமான பாடங்களை கற்று இருப்போம். அதே போன்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வாழ்கையிலும் சில நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன. அந்த நிகழ்வுகள் உண்மையில் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன.? என்பதை  காண்போம்..


நவிகளாரின் நற்குணம் 


முஹம்மதே.! நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.


(திருக்குர்ஆன்:68:4.)


கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள்…

ஞாயிறு, பிப்ரவரி 23, 2020

பசியோடு கழித்த பொழுதுகள்!


= நபித்தோழர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நான் இறைத்தூதர் {ஸல்} அவர்களின் வீட்டிற்கு அவரைக் காண்பதற்காகச் சென்றேன். அப்போது, அண்ணலார் வீட்டில் உட்கார்ந்து தொழுது கொண்டிருந்தார்கள்.

வெள்ளி, செப்டம்பர் 22, 2017

ரஸூலுல்லாஹி [ஸல்] அவர்களின் அற்புத உணவு வகைகள் ...

ரஸூலுல்லாஹி [ஸல்] அவர்களின் அற்புத உணவு வகைகள் ...

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிட முடியாது. ரஸூலுல்லாஹ் s.a.w ஆரோக்கியமான உணவு உட்பட எல்லா அம்சங்களிலும் அனைத்து முஸ்லிம்களுக்கும் சிறந்த முன்மாதிரியாக உள்ளது. நமது நபி அவர்களின் உணவைக் கவனித்துக்கொள்ள விரும்பும் முஸ்லீம்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். ரசூலுல்லாஹ்   s.a.w அவரது வாழ்நாளில் ஒரு முறை கூட வயிற்றுப் பிழை ஏற்பட்டத இல்லை ,  ஏனென்றால் அவர் ஒரு நல்ல ஊட்டச்சத்து பாதுகாப்பு.

திங்கள், ஆகஸ்ட் 14, 2017

அண்ணலார் கூறிய அழகிய உவமைகள் ...

அண்ணலார் கூறிய அழகிய உவமைகள் ...
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
மலருக்கு மனம் அழகு ! மங்கைக்கு நாணம் அழகு! மொழிக்கு உவமை அழகு!
உவமைகள் இல்லாத மொழி ஊமை மொழி  என்று துணிந்து சொல்லி விடலாம்..

தமிழைத் போலவே அரபியும் தொன்மையான மொழிகளில் ஒன்று .

இறைத்தூதர் கூறிய இனிய உவமைகள் இரண்டை மட்டும் இங்கு எடுத்துக் கொள்வோம்.
 இந்த உலகில் தாம் இறைத்தூதராய் அனுப்பப்பட்டதின் நோக்கம் குறித்தும் தம்முடைய பணி எத்தகையது  என்பதையும் எவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள்  பாருங்கள்!

புதன், டிசம்பர் 14, 2016

நபிகளாரின் நற்குணங்கள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! 
நான்கு எழுத்து படித்து, பணமும் அதிகாரமும் வந்து விட்டால் அவர்களிடம் இருக்கும் பெருமையும் ஆணவமும் கேட்க வேண்டியதில்லை. ஆனால் இவ்வுலகத்தில் சிறப்புமிக்க இறைத்தூதராக இருந்த நபிகளார் எந்தக் கட்டத்திலும் பெருமை கொண்டதில்லை. பணிவும் தன்னடக்கமுமே அவர்களிடம் வெளிப்பட்டது.

தன்னடக்கம்
ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அத்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அந்த யூதர், உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அத்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்கடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்ததையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், மூசாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நால் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர் களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நான் தான் முதலாவதாக மயக்கம் தெந்து எழுவேன். அப்போது, மூசா (அலை), (அல்லாஹ்வுடைய) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் விதி விலக்கு அத்திருப்பானா என்று எனக்குத் தெரியாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2411)

சனி, நவம்பர் 05, 2016

சொன்னதைச் செய்தவர் , செய்ததைச் சொன்னவர் ..

சொன்னதைச் செய்தவர் , செய்ததைச்  சொன்னவர் ..
இந்த வாசகம் அரசியல்வாதிகளுக்கு மனனமான ஒன்று. மக்களைத் தம் பக்கம் இழுப்பதற்குப் போடப் படும் கோஷம் . ஆனால் இதன்படி செயல்படுவார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

பாலாறு ஓடும், குடிசை கோபுரமாக, பசி பட்டினி நீங்கும் என்று வாக்குறுதியை அள்ளி வீசுவார்கள் . ஆனால் வெற்றி பெற்றபின் .... தம் குடிசையைக்  கோபுரமாக மாற்றிக் கொள்வார்கள் . தம் வீட்டில் பாலாறை ஓடச் செய்வார்கள். தாம் பசி பட்டினி  இன்றி இன்பமாக இருப்பார்கள். இப்படி அடியோடு மக்களை மறந்து விடுவர் இன்றைய அரசியல்வாதிகள் [வியாதிகள், மக்களை பீடித்த நோயிகள் ]

ஆனால் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் இதைச் சொன்னார்களோ , அதை அப்படியே செய்து காட்டினார்கள். ஊருக்கு உபதேசம்  தமக்கு இல்லை என்று அவர்கள் இருந்ததில்லை. தம் தோழர்களை உலகப் பற்றற்று இருக்கும்படி வலியுறுத்தினார்கள் . அதைப்போன்று தாமும் உலக ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல்  இருந்து கொண்டார்கள்.

புதன், செப்டம்பர் 28, 2016

எது உண்மையான அன்பு?

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
எது உண்மையான அன்பு?

''[நபியே!] நீர் கூறும் நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களாயின், என்னைப்  பின்பற்றுங்கள்,, அல்லாஹ் உங்களை நேசிப்பான்,, உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்,, மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்கக்  கருணையுடையவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் .. 3..31]

ஒருமுறை ஹஜ்ரத் உமர் [ரலி] அவர்கள் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் திருச்சமூத்தில்  ''அல்லாஹ்வின் தூதரே! நான் எனது உயிரைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் தங்களுக்காகத் தியாகம் செய்து விட்டேன்'' என்றார்கள். அப்பொழுது அண்ணல் நபி [ஸல்] அவர்கள்  உமர் [ரலி] அவர்களை நோக்கிக் கூறினார்கள்..  ''தமது பெற்றோர் , குழந்தை மற்றும் அனைத்து மனிதர்களையும் விட உங்களில் எவரும் மிகுதியாக என்னை அன்பு கொள்ளாதவரை எவரும் உண்மையான ஈமான் கொண்டவராக முடியாது'' என்று கூறினார்கள்.
 அதைக் கேட்ட ஹஜ்ரத் உமர் [ரலி] அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என் உயிரையும் தங்களுக்கு நான் அளித்து விட்டேன்'' என்றார்கள். அதை கேட்டு அண்ணல் நபி [ஸல்]  அவர்கள்  ''உமரே ! இப்பொழுதுதான் நீர் முழுமையான ஈமானைப் பெற்றுக் கொண்டீர் ,'' என்று புன்முறுவல் பூத்தவர்களாகக் கூறினார்கள்.

சனி, ஆகஸ்ட் 06, 2016

மாமனிதர் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் பொறுமை!

மாமனிதர் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் பொறுமை!
''மக்களிடம் சர்வ சாதாரணமாக முஹம்மது பழகுகிறார் , யாரும் அவரைநெருங்கலாம்; எப்படி வேண்டுமானாலும் கோரிக்கையை முன் வைக்கலாம்; நீண்ட நாள் பழகிய நண்பனுடன் எடுத்துக் கொள்ளும் உரிமையை எடுத்துக் கொள்ளலாம்; எப்படி நடந்தாலும் அவர் கோபம் கொள்ள மாட்டார் தேவைக்கேற்ப வாரி வழங்குவார் என்றெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததால் தான் அறிமுகமில்லாத கிராமவாசிக்கு இப்படி நடக்க முடிந்தது. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசல் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசன் மையப்பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர்களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பிடரி சிவந்து விட்டது. முஹம்மதே எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களைத் தருவிராக! உமது செல்வத்திருந்தோ, உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ நீர் தரப்போவதில்லை என்று அந்த மனிதர் கூறினார். இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களைத் தர மாட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் விட மாட்டேன் என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறை நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது மூன்று முறையும் அவர் விட மாட்டேன் என்றார். அந்தக் கிராம வாசியின் கூற்றை நாங்கள் செவியுற்ற போது அவரை நோக்கி விரைந்தோம். நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் கூட்டத்திருந்த ஒருவரை நோக்கி இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவிராக என்றார்கள். பின்னர் மக்களை நோக்கி நீங்கள் புறப்படுங்கள் என்றார்கள். இதை நபிகள் நாயகத்தின் தோழர் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்.
நூற்கள்.. நஸாயீ , அபூதாவூத் ]

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2016

உதவி [அண்ணல் நபி[ஸல்]அவர்கள் ]

உதவி [அண்ணல் நபி[ஸல்]அவர்கள் ]
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
ஏழைகளுக்கு உதவுவதில் அண்ணல் நபி [ஸல்] அவர்களைப்  போன்றவர்களை நாம் காணவே முடியாது! அவர்களின் நபித்துவ வாழ்க்கை துவங்குவதற்கு முன்பே, இதில் அவர்கள் முன்னோடியாகவே திகழ்ந்தார்கள். பண வசதி மிக்க பெண்மணியான கதீஜா [ரலி] அவர்களைத் திருமணம் முடித்தும் கூடச் சில நாட்களில் அவர்கள் ஏழையாகவே காட்சியளித்தார்கள் . எவ்வளவு செல்வம் இருந்தாலும் அது இல்லாதவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளைக் கொண்டதால்தான் அவர்களின் அனைத்துச் செல்வங்களும் செலவழிந்தன.

இப்படி அவர்களின் வாழ்க்கையையே ஏழைகளுக்காக அற்பணித்தார்கள் . அவர்களின் வாழ்க்கையை நாம் மேலோட்டமாக பார்த்தால் கூட இதை விளங்கலாம்.

வியாழன், ஆகஸ்ட் 04, 2016

உலகப் பற்று ![அண்ணல் நபி [ஸல்]அவர்கள்]

உலகப் பற்று ![அண்ணல் நபி [ஸல்]அவர்கள்]
அல்லாஹ்வின் திருப்பெயரால் ....................
தாமரை தண்ணீரில் தான் இருக்கும் , ஆனால் அந்த தண்ணீர் தாமரை மீது படாது. ஒரு முஃமின் இந்த உலகத்தில் வாழ்வான், ஆனால் அவன் தாமரைப் போன்று இந்த உலகத்தில் வாழ்வான்.
இவ்வுலக வாழ்க்கையின் ஆடம்பரத்தை விரும்பாத மனிதனே கிடையாது! உலக ஆசைதான் மனைதனைத் திருடவும் பொய் பேசவும் ஏமாற்றவும் வாக்கு மாறவும் செய்கிறது. இதற்கு விதிவிலக்கான எந்த மனிதரையும் நாம் பார்க்க முடியாது.  உங்களின் செருப்பாக உழைப்போம்,, உங்கள் மகிழ்ச்சி எங்கள் மகிழ்ச்சி என்றெல்லாம் தேன்சுவை வார்த்தைகளைக் கொட்டும் தலைவர்களைக் கூட இதற்கு விதி விலக்காகக்  கூற முடியாது.

ஞாயிறு, டிசம்பர் 20, 2015

ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்...

நபிவழி ! நல்வழி ! இஸ்லாத்தில் பிறந்த நாள், இறந்த நாள், மற்றும் திருமண நாள்
இப்படி கொண்டாடுவது கூடாது!
அல்லாஹ்வின் திருபெயரால்....................

சிந்திக்க சில வரிகள்...

ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்...

ரபீஉல் அவ்வல் மாதம் வந்தாலே முஸ்லிம்களில் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியும் சந்தோசமும் வந்துவிடும். காரணம் இது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம். இது அருள் நிறைந்த மாதம். உலகத்தை ஒளிபெறச் செய்யும் மாதமாகும், ஆகவே இந்த மாதத்தை கொண்டாடும் மாதமாக எடுத்துக் கொள்வது நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் அடையாளமாகும் என்று எண்ணி மீலாது விழாக்களும் மவ்லிது ஷரிபுகளும்? வெகு கோலாகலமாக பல முஸ்லிம்களின் விடுகளிலும் பள்ளிகளிலும் நடைபெறும். இஸ்லாத்திற்கும் இச்செயலுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

செவ்வாய், நவம்பர் 24, 2015

நபி வழி! நல் வழி ![தொடர்ச்சி]

நபி வழி! நல் வழி ![தொடர்ச்சி]

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்..

அருமை நபியவர்களின் அறிவாழத்தை  ஹஜ்ரத் வஹபு பின் முனப்பஹ்  [ரலி] அவர்கள் தெரிவிக்கின்றார்கள்..
''உலகம் தோன்றியது முதல், கியாமநாள் முடிவு வரை தோன்றும் மனிதர்கள் அனைவரது அறிவையும் , அறிவுக்கரசர்  எம்பெருமானார் ஒருவரது அறிவாற்றலையும் , இருபக்கம் வைத்து நிறுத்துப் பார்த்தால் உலகெங்கும் குவித்துள்ள மணர் பரப்புக்கு முன், ஒரேயொரு குவியலை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு சமமாகும். அண்ணலாரின் அறிவுக் கூர்மை அந்தளவு பரந்த ஒன்றாகும் .''

ஞாயிறு, நவம்பர் 22, 2015

நபி வழி! நல் வழி !

நபி வழி! நல் வழி !

அல்லாஹ்வின் திருபெயரால் .......
நன்றி..மௌலவி  A . முஹம்மது இஸ்மாயீல் பாஜில் பாகவி
நன்றி..நர்கிஸ் .

அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கின்றார்கள்  '' அண்ணல் நபியவர்கள்  நாகரிகமின்றி நடப்பவர்களாகவோ, வெளிவேஷம் போடுபவர்களாகவோ , தெருக்களில் இரைச்சல் இடுபவர்களாகவோ, இன்னா செய்தோருக்கு இடர் அளிப்பவர்களாகவோ நடந்து கொள்ளவில்லை  . மாறாக சகிப்புடனும் , பெருந்தன்மையுடனும் நடந்து கொள்வார்கள் .'' ஆதாரம்.. திர்மிதி]

இன்றைய நிலையில் தலைவர்களின் குணமும் , நடப்பும் நகைப்புக்கிடமாகவும் , விரசமானதாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றது .ஒரு தலைவன் என்றால் அறிவும் , விவேகமும் , தீட்சண்யமும் சிறப்பம்சங்களாக  இருக்க வேண்டும். தூய்மையும் , தன்னடக்கமும் , எதார்த்தமும் , பிறர் நலம் பேணுதலும் கண்டிப்பாக இருக்க வேண்டும் . சொன்னப்படி வாழ்வது, வாழ்ந்து காட்டுவதை சொல்வது இதையே சிறந்த அணிகலனாகக் கொண்டிருக்க வேண்டும் . இந்த லட்சணங்கள் இன்று எந்த தலைவனிடமும் ஒப்புக்கும் எண்ணிப் பார்க்க முடியாததாகும் .

வியாழன், செப்டம்பர் 17, 2015

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி ''உமர் ரலி '' யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்பு வருகிறது ! [அவசியம் படியுங்கள் ]

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி ''உமர் ரலி '' யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்பு வருகிறது ! [அவசியம் படியுங்கள் ]
கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்,தனக்குஇரண்டு நாள் அவகாசம் வேண்டும்"நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது. அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என்மகனை என் குடும்பத்தில் யாராவதுஒரு பொறுப்பானவரிடம்ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்...

வியாழன், ஆகஸ்ட் 20, 2015

வீரத்தோடு வாழ்ந்திடுவோம்

அல்லாஹ்வின் திருபெயரால் .............
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக..!!

அருமை நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ,, ''யார் உண்மையில் அல்லாஹ்விடம் வீர மரணத்தைக் கேட்கின்றாரோ , அல்லாஹ் அவரை வீர தியாகிகளின் மேலான படித்தரங்களுக்கு அடையச் செய்வான். அவர் படுக்கையில் வைத்து மரணமுற்றாலும் சரி!
ஆதாரம்.. முஸ்லிம்]

காலம் பூராவும் பூனையாக வாழ்வதைவிட ஒருமணி நேரமாயினும் சிங்கமாக வாழ்ந்து மடி என்று பெரியவர்கள் அறிவுரை பகர்வார்கள்.

சனி, மே 30, 2015

ஏழைப்பங்காளர் ஏந்தல் நபி [ஸல்] அவர்கள்

ரமலான் நம்மை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது!
அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் துஆச் செய்வோம்!
ரமலானை அடைவதற்காக !!!**
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்....
அண்ணலாரின் வாழ்க்கையில் அரிய நிகழ்ச்சிகள்..
அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்க்கையை உலகமே வியக்கும் அளவுக்கு , அவர்கள் வாழ்ந்துக் காட்டினார்கள் . ஆனால் , முஸ்லிமாகிய நாம் , நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது..? அண்ணலாரின் வாழ்க்கையில்  அரிய நிகழ்ச்சிகளில் ஏதாவது ஒன்று நம் வாழ்க்கையில் நடந்து இருக்கிறதா ? அப்படி நடந்து இருந்தாலும் , அண்ணலாரைப் போல் நாம் நடந்து கொண்டமா? 

ஒரு வீட்டில் ஒரு பேரீத்தம் மரம் நின்றிருந்தது,, அதன் கிளைகளில் ஒன்று அடுத்தவீட்டில் வளைந்திருந்தது. அண்டைவீட்டுக்காரர் ஓர் ஏழை. மரத்தின் உரிமையாளர் பழங்களை உலுக்கும்போது சில பழங்கள் அண்டைவீட்டிலும் விழுந்துவிடும் .

புதன், மே 27, 2015

இல்லறத்தில் முன் மாதரி

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
அண்ணலாரின் வாழ்க்கையில் அரிய நிகழ்ச்சிகள் ..தொடர்ச்சி....

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் மஸ்ஜிதே நபவியில் அமர்ந்து தம் தோழர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். அதுசமயம் , சல்மான் ஃ பார்சீ [ரலி] அவர்கள் அங்கு வந்து, அண்ணலார் [ஸல்] அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! நான் தங்கள் அருமை மகளார் ஃபாத்திமா [ரலி] அவர்களின் வீட்டின் பக்கமாக வந்து கொண்டிருந்தேன். வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது.'' என்று கூறினார்கள்.

திங்கள், மே 25, 2015

அண்ணலாரின் வாழ்க்கையில் அரிய நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
''அல்லாஹ்வையும் , மறுமை நாளையும் உறுதியாக நம்புகின்ற உங்களுக்குரிய அழகிய முன் மாதரி நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது...

வணிகத்தின் முன் மாதரி 

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் ஒரு சிறந்த வணிகராகவும் இருந்து, வணிகர்களாகிய வியாபாரிகளுக்குச் சிறந்த வழிகாட்டுதலைச் செய்து காட்டிச் சென்றுள்ளனர்.

அவர்கள் வியாபாரத்தில் நேர்மை, நாணயம் முதலியவற்றைக் கைகொண்டு ஒழுகி வந்ததன் காரணமாகத் தான் அன்னை கதீஜா [ரலி] அவர்கள் அண்ணலாரை இல்லறத் தலைவராக ஏற்றுக் கொள்ளுகின்ற ஏற்றத்தைப் பெற முடிந்தது.

ஞாயிறு, மே 17, 2015

மனதை நெகிழ வைத்த நிகழ்வுகள் .. அமானிதம் பேணல்


மனதை நெகிழ வைத்த நிகழ்வுகள் .. அமானிதம் பேணல்
23 ஆண்டு போராட்டத்திற்கு பின் கஅபாவிற்கு செல்கிறார்கள் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்). கஅபாவின் சாவி யாரிடம் இருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர்
வினவினார்கள். அதற்கு உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடம் இருக்கிறது என்று
சொல்லப்பட்டது.
அந்த சாவியை வாங்க அலீ (ரலி) அவர்களிடம் கட்டளையிட்டார்கள் அண்ணலார்.
அப்பொழுது உஸ்மான் பின் தல்ஹா அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அலீ (ரலி)
அவர்கள் உஸ்மானிடம் சாவியை கேட்டார். அனால் உஸ்மான், “நான் இஸ்லாத்தை
ஏற்கவில்லை. ஆகையால் சாவியை தரமாட்டேன்” என்றார். பின் அலீ (ரலி) அவர்கள்
சாவியை உஸ்மானிடம் இருந்து பிடுங்கி வந்தார். சாவி அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களின் கரங்களில் கொடுக்கப்பட்டது.

ஞாயிறு, மே 03, 2015

நபிகள் நாயகத்தின் போதனைகள்!


நபிகள் நாயகத்தின் போதனைகள்!

 நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், இறைவனால் தூதராக அறிவிக்கப்பட்டதும்,
“”நமது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! நான் அவனுடைய தூதனாக
இருக்கிறேன்,” என்றார்கள். இதைக் கேட்ட மெக்காவாசிகள் அவரைத்
துன்புறுத்தினர். 53 வயது வரை அவர்கள் இந்தக் கொடுமையை அனுபவித்தார்கள்.
இதன் காரணமாக மெக்காவில் இருந்து 450கி.மீ., தூரத்தில் உள்ள மெதீனாவுக்கு
அவர்கள் குடிபெயர வேண்டியதாயிற்று. மெதீனாவில் நாயகம்(ஸல்) அவர்களை
ஆதரித்த மக்களின் எண்ணிக்கை பெருகியது. இதன்பிறகு பலயுத்தங்களை செய்து,