அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 08, 2020

சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும் விதம்


























சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும் விதம்
• இன்றைய காலத்து பெண்கள் தொடர்ந்து காலை, மாலை என நேரம் காலம் அறியாமல் இரவில் தூக்கம் இன்றி இந்த சமூக வலைத்தளங்களுடன் இணைந்து இருக்கிறார்கள். ஆகவே இதற்காக நேரத்தை வீண் விரயம் செய்யாது இதற்கான நேர காலத்தை நாம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் . 

• தூங்கும் போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துதல் கூடாது. ஏனெனில் விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி ஒரு மனிதன் ஒரு நாளைக்கு இடைவெளி விடாமல் 6 மணிநேரம் தூங்க வேண்டும். இது எதிர்காலம், நோய் எதிர்ப்பு சக்தி, மனோ நிலை, மூளை செயல்படும் வீதம் போன்ற பல விதமான செயல்பாடுகளுக்கு உதவும்.

• நிகழ்ச்சிகள், இறப்பு செய்திகள் வரும் பட்சத்தில் அதை உடனடியாக பகிராமல் அதேசமயம் அந்த செய்தியின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மைகளை அறிந்த பிறகே பகிர வேண்டும். 

வெள்ளி, மார்ச் 27, 2020

வதந்தியை பரப்புவது மிகப் பெரிய பாவம்!


முமின் களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக்கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேச வேண்டாம்” (49:12) என்பது திருக்குர்ஆன் வசனமாகும்.

இறைவன் இங்கே மூன்று விதமான அம்சங்களை பட்டியல் போடுகிறான். 1) ஊகம், 2) துருவித்துருவி ஆராய்வது, 3) புறம்.

இம்மூன்று அம்சங்களிலும் நன்மையைவிட பாவமே மிகைத்து நிற்கும். இம்மூன்றுமே ஒன்று மற்றொன்றுடன் தொடர்புடையவையாகும்.

வியாழன், மார்ச் 19, 2020

ஆபாசமும் , சரசமும் மலிந்துவிட்டது !


அல்லாஹ்வின் திருப்பெயரால்..
இன்று எங்கு பார்த்தாலும் ஆபாசம் காட்சி அளிக்கிறது . டீவியை பார்த்தால் ஆபாசம் , விளம்பரம் அதிலும் ஆபாசம் , பத்திரிக்கைகள் அதிலும் ஆபாசம் , எங்கும் ஆபாசம், எதிலும் ஆபாசம் . இச்சையை தூண்டக்கூடிய விஷயங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சில பெண்கள் டிக் டாக் மூலம் செய்யும் சேட்டைகள் சொல்லிமாளாது, அந்தளவுக்கு மிக மோசமாக  ஆபாசமாக  ஆடி , பாடி மற்றவர்களை ஈர்க்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்! இந்த கேலிக்கூத்தை ஒரு பொழுபோக்காக தான் செய்கிறார்கள் என்றும், தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்காக தான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ஒரு  மொக்கை காரணத்தை சொல்கிறார்கள் . இதனால் என்ன நடக்கிறது என்று சொல்லித்தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஒழுக்கமுள்ள ஒருவனை , ஒழுக்கம்கெட்டவனாக ஆக்கும் செயல் தான் இந்த மோசமான செயல்! காம இச்சைகளை தூண்டும் விதமாக இந்த டிக் டாக் மாறிவிட்டது! இப்படியெல்லாம் இருந்தால் , என்ன நடக்கும் ? பாலியல் குற்றம்தான் அதிகரிக்கும் . கற்பழிப்பு பெருகும். கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கும். பெண்களை கற்பழித்தவனுக்கு தண்டனை எங்கே கொடுக்கப்படுகிறது ?  அவன் பாதுகாக்கப்படுகிறான் என்றுதான் சொல்லவேண்டும்! ஆபாசமும், சரசமும்  அதிகரிக்க , பெண்களுக்கு தான் ஆபத்து என்பதை சில ஒழுக்கம் இல்லாத  பெண்களுக்கு ஏன் புரியவில்லை ? ஒவ்வொரு வீடுகளிலும் இந்த ஆபாசமும் , சரசமும் ஆக்கிரமித்து கொண்டுயிருக்கிறது தொலைக்காட்சி , செல்போன் மூலம்!

ஞாயிறு, அக்டோபர் 08, 2017

அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள்

அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள்
அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!

அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
    அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.
 وَإِذْ قَالَ لُقْمَانُ لابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيم
   இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ''என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,"" என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக) (அல்குர்அன் 31:13)