அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

ஞாயிறு, நவம்பர் 23, 2014

தாயின் சிறப்பு

 அல்லாஹ்வின் திருபெயரால் .............

தாயின் காலடியில் சுவனத்தைக் காட்டினார் சுந்தர நபி [ஸல்] அவர்கள் . நபி [ஸல்] அவர்கள், முஹாஜிரீன்களையும் , அன்சாரிகளையும் நோக்கி உங்கள் மனைவியரின் பேச்சைக் கேட்டு உங்கள் பெற்றோர் மனதை புண்படுத்தாதீர்கள் . அவ்வாறு செய்பவர்களை அல்லாஹ்வும், விண்ணவரும் சபிக்கின்றனர் . அவர்களின் ஃ பர்லான , நஃபிலான வணக்கங்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் . ஒரு மனிதர் , நாதர் நபி [ஸல்] அவர்களிடம் வந்து,   'நான் நல்லுறவு  கொண்டாட மிகவும் உரிமையுடையவர் யார்?  மும்முறை வினவியபோது ,  உன் அன்னை என்று பதிலிருத்தினார்கள் . ஆம்! தாயன்புக்கு நிகராக வேறெதுவும் இல்லை. எட்டி உதைக்கும் சேயை கட்டியணைக்கும் தாய் தியாகச் சுடர் என்பதில் சிறிதும் ஐயமில்லை .


இத்தகைய சிறப்புமிக்க அன்னையையே இன்று பல இல்லங்களில் பிரச்சனையாக்கி விட்டனர். குறிப்பாக முதுமையடைந்த நிலையில் , பெற்ற செல்வங்களே பெருஞ்சுமையாகக் கருதி, வசைபாடி வெளியேற்றுவதும்,  'தொலைந்து போ' எனத் திட்டுவதும் , முதியோர் இல்லங்களில் விட்டு விட்டு கவனிக்காமல் இருப்பதும் இன்றைய சீர்கெட்ட ஒழுங்குமுறைகளாகி  விட்டன.  இதனை தாயின் மேலான கருணையாளனான ரஹ்மான் முற்றிலும் வெறுக்கிறான். தாயிடம் பணம் கேட்டு வருத்தி குடி,  கூத்துகளில் , வீண் ஆடம்பரங்களில் தாயின் பணத்தையும் , சொத்தையும் வற்புறுத்தி  பெற்றுக் கொள்ளும் கயவர்களும் உள்ளனர். தராவிட்டால் கொலை செய்து அபகரிப்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். இவ்வாறு கேட்பதை அல்லாஹ் தடுத்துள்ளான் . தாய் வசதியற்ற  நிலையில் இருந்தால் , அவளது உயிர் ஆதாரமாய் விளங்கும் உண்டிக்கும் , உடைக்கும் , உறைவிடத்திற்கும் யாரிடம் கேட்க இயலுமா? தான் பெற்ற சீராக , நேராக வளத்த பிள்ளைகளிடம் தானே. ஆனால் பிள்ளைகள் தர மறுப்பது பாவங்களின் பட்டியலில் இடம் பெறவைக்கும்  இழி செயலாகும்.

இறுதியாக வரலாறு காணாத முன்னேற்றத்தை கண்டு வரும் சமுதாயம் , பெண் சிசுக்களுக்கு கருவறைகளை கல்லறைகலாக்கி விடும் கொடூரமும் , கள்ளிப்பாலை தாயின் பாலாக வார்த்து பெண் சிசுவின் உயிரைப் பறித்து விடுவதும் , செய்திகள் சொல்லும் சாட்சி . இதனால் ஆண் பெண் விகிதாச்சாரம் குறைந்து விட்டதால் , பாலியல் வன்கொடுமைகள் மலிந்து விட்டன . லூத் நபியால் சபிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கைக்கு உரிமம் வழங்கப்பட்டு, இயற்கையின் தன்மை நசுக்கப்பட்டு வருகிறது.

தாய் உயிருடன் இருக்கும்போது அவளின் அருமை , பெருமை பெற்ற பிள்ளைகளுக்கு தெரியாது. அந்த தாய் இறந்தபின்புதான் அவர்கள் உணர்வார்கள்  , ஒப்பாரி வைப்பார்கள் . இந்த செயல் இன்னும் நம் சமுதாயத்தில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்..
அஸ்மா [ரலி] அவர்கள் கூறினார்கள் .. நபி [ஸல்] அவர்களின் காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் அன்னை  ஒரு முறை என்னிடம் வந்திருந்தார் . இதுப்பற்றி நபி [ஸல்] அவர்களிடம் சென்று '' எனது தாய் மிக ஆவலுடன் [உதவி கேட்டு ] என்னிடம் வந்திருக்கிறார். எனது அன்னைக்கு உபகாரம் செய்யலாமா? என வினவினேன். நபி [ஸல்] அவர்கள்  ''ஆம்! உன் அன்னைக்கு உபகாரம் செய்'' என்று கூறினார்கள்.

ஒருவர் சயீது இப்னு முஸைய்யப் [ரஹ் ] அவர்களிடம்   ''நான் பெற்றோருக்கு உபகாரம் செய்வது பற்றிய  அனைத்து வசனங்களையும் புரிந்து கொண்டேன் . ஆனால் அவர்களிடம் மிக்க கண்ணியமாக பேசுவீராக! என்ற திருவசனத்தின்  பொருள் மட்டும் விளங்கவில்லை '' என்றார் . சயீது [ரஹ் ] அவருக்கு  ''அவ்விருவருடன் உரையாடும்போது ஒரு அடிமை தனது எஜமானிடம் பேசுவது போன்று உரையாட வேண்டும்  '' என்று விளக்கமளித்தார்.

இப்னு ஸீரீன் [ரஹ் ] அவர்கள் தனது தாயுடன் உரையாடும்போது கண்ணியப்படுத்தும் விதமாக மிக  மெல்லிய குரலில் பேசுவார்கள். அப்போது அவர்களது குரல் ஒரு நோயாளியின் குரலைப் போன்று இருக்கும்.
இன்னும் இதுப் போன்ற சம்பவங்கள் , அண்ணலார் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறிய பொன்மொழிகள்  இன்னும் அதிகம் அதிகம்  என்று சொல்லாம்.....

அல்லாஹ் மிக அறிந்தவன் .
நன்றி நர்கீஸ்
     

1 கருத்து:

Welcome to your comment!